என் மலர்
நீங்கள் தேடியது "நர்சிங்"
- விடுதியின் மேல்மாடியில் இருந்து வெளியே நோக்கி தூக்கிட்டு தற்கொலை செய்து பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
- மாணவர் சுமித்திரன் எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் களியக்கா விளை அருகே படந்தாலுமூடு பகுதியில் கிரேஷ் நர்சிங் கல்லூரி பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பல விதத்தில் துன்புறுத்தல் கொடுப்பதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவர் ஒருவரை ஆசிரியர் அடித்ததில் காயம் ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.
அந்த மாணவரது புகாரின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று விசாரித்த நிலையில், கல்லாரி நிர்வாகம் மாண வரிடம் இது போல் நடக்காது என்று மன்னிப்பு கேட்டு சிகிச்சைக்கு பணம் கொடுத்து வழக்கை திரும்ப பெற வைத்ததாக கூறப்படுகிறது. அதுவும் இல்லாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிர்வாகத்தின் துன்புறுத்தல் காரணமாக தொழிலாளி ஒருவர் கல்லூரி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்தது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த வீராசாமி என்பவரது மகன் சுமித்திரன் (வயது 19) கல்லூரியில் 2 ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி வளாகத்தில் மாணவர்க ளுக்கு தங்குவதற்காக விடுதி உள்ளது. இந்த விடுதியில் கடந்த 2 ஆண்டுகளாக சுமித்திரன் தங்கியுள்ளார்.
இவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் 4 மாணவர்கள் தங்கியுள்ளனர். நேற்று சுமித்திரன் படிப்பு முடிந்து விடுதி அறைக்கு வந்து உள்ளார். ஆனால் சக மணவர்களிடம் பேச வில்லை என்று கூறப்படுகிறது. எப்போதும் குதூகலமாக இருக்கும் சுமித்திரன் சக மாணவர்களிடம் பேசாத தால் சந்தேகமடைந்த வர்கள் சுமித்திரனிடம் கேட்ட போது ஒன்றும் கூறாமல் இருந்துள்ளான்.
மேலும் இரவு 1 மணியளவில் சுமித்திரன் கழிவறை போவதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். காலையில் மற்ற மாணவர்கள் எழுந்து பார்த்த போது சுமித்திரன் விடுதியின் மேல்மாடியில் இருந்து வெளியே நோக்கி தூக்கிட்டு தற்கொலை செய்து பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார். இது குறித்து மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள், களியக்காவிளை போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவர் சுசீந்திரன் தானாக தூக்கிட்டு தற்கொலை செய்தாரா? அல்லது யாராவது கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் மாணவர்க ளிடையை கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மாணவர் சுமித்திரன் எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. அதனை படித்துப் பார்த்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது.
- நர்சிங் மாணவி தங்கும் விடுதியில் உயிரிழந்து கிடந்தார்.
- இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
டெல்லியின் நியூ அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் 22 வயது நர்சிங் மாணவி மயங்கி கிடப்பதாக போலீசாருக்கு அழைப்பு வந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அறையின் உள்ளே பூட்டப்பட்டிருப்பதை கண்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
அப்போது நர்சிங் மாணவி படுக்கையில் உயிரிழந்து கிடந்தார். அப்போது பக்கத்திலிருந்து சீலிங் பேனில் 2 ட்ரிப்ஸ் பாக்கெட் தொங்கவிடப்பட்டு அவளது கையில் ஊசி சொருகி ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு இருந்துள்ளது.
இதனையடுத்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், சம்பவ இடத்தில் தற்கொலைக் கடிதம் எதுவும் கிடைக்கவில்லை.
தங்கும் விடுதியில் நர்சிங் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இதற்கு முன்னரும் ஜெய்ஸ்வால் மீது புகார் அளித்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
- ஆபீஸ் ரூமில் வைத்து மது அருந்துவதும், மாடியில் படுத்து மசாஜ் செய்து கொள்வதுமாக இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
பீகாரில் பெட்டியா [Bettiah] பகுதியில் இயங்கி வரும் அரசு நர்சிங் GNM டிப்ளமோ படிப்புகளுக்கான பறிச்சி மையத்தின் பிரின்சிபல் ஆபீஸில் மது அருந்தியும் மசாஜ் செய்தும் ஒய்யாரமாக பொழுதைக் கழிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . பிரின்சிபல் ஜெய்ஸ்வால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை படம்பிடித்து அங்கு பயின்று வரும் மாணவர்கள் அம்மாநில முதலமைச்சர் அமைச்சர் அலுவலகத்துக்கும் சுகாதார அமைச்சகத்துக்கும் புகார் கடிதத்துடன் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதற்கு முன்னரும் ஜெய்ஸ்வால் மீது புகார் அளித்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால் இவை தனது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் பொருட்டு ஜோடிக்கப்பட்டவை என்று ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். பீகாரில் மதுவிலக்கு அமலில் இருக்கும் நிலையில் அரசு பயிற்சி மையத்தின் தலைவரே ஆபீஸ் ரூமில் வைத்து மது அருந்துவதும், மாடியில் படுத்து மசாஜ் செய்து கொள்வதுமாக இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
- நர்சிங் மாணவி மாயமானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் பேரையூர் டி.மீனாட்சிபுரம் அருகே உள்ள டி.மணி நகரம் பகுதியை சேர்ந்தவர் மாரிக்காளை. இவருடைய மகள் ஜோதிலட்சுமி (19) இவர் உசிலம்பட்டியில் செவிலியர் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 12-ந் தேதி இவர், தங்கையிடம் தோட்டத்துக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் தந்தை பேரையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர வாலிபர் மாயம்
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த நாகராஜூ மகன் மணிந்திரவர்மா (32). இவருடைய மனைவி மவுனிகா. இவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ெரயில் நிலையம் முன்புள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த ஒரு வருடமாக டிசைனராக மணிந்திரவர்மா வேலை பார்த்து வந்தார். திருமங்கலம் ஆறுமுகம் 4-வது வடக்குத் தெருவில் மனைவியுடன் வாடகைக்கு குடியிருந்து வந்தார். 4 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதால் மனைவி கோபித்துக் கொண்டு விஜயவாடா சென்றுவிட்டார். இந்த நிலையில் மணிந்திரவர்மா தனது சகோதரருக்கு தன்னை யாரும் தேட வேண்டாம் என்று எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் உறவினர் ராஜேஷ்வர்மா கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.