என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் பெட்டிகள்"

    • அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகள் 157 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
    • சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர்.

    நீடாமங்கலத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு அரவைக்காக 2,000 டன் பொதுரக நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதை முன்னிட்டு நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகள் 157 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். இதனைத் தொடர்ந்து நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில் புதுக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றது.

    • ரெயில்வே துறையின், ஐ.சி.எப். தொழிற்சாலை 1955-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
    • தற்போது ஆண்டு ஒன்றுக்கு சுமார் 3 ஆயிரம் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில், இந்திய ரெயில்வே துறைக்கான ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு தயாரிக்கும் பெட்டிகள் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், மின்சார ரெயில் பெட்டிகள், விரைவு ரெயில் பெட்டிகள், விரைவு ரெயில் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள், சுற்றுலாவுக்கான ரெயில் பெட்டிகள் மற்றும் வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் ஐ.சி.எப். தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்தியன் ரெயில்வே துறையின், ஐ.சி.எப். தொழிற்சாலை 1955-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஐ.சி.எப். தொழிற்சாலை ஒவ்வொரு ஆண்டும் அதன் தயாரிப்பின் தரத்தை மேம்படுத்தி வருகிறது. ஐ.சி.எப். தொழிற்சாலையில் 1957-58-ம் காலக்கட்டத்தில், ஆண்டுக்கு 74 ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது ஆண்டு ஒன்றுக்கு சுமார் 3 ஆயிரம் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வந்தே பாரத் ரெயில், டெமு ரெயில், அதிவேக விபத்து மீட்பு ரெயில், சொகுசு ரெயிலான மகாராஜா விரைவு ரெயில் என பல்வேறு வடிவமைப்பிலான ரெயில்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில், ஐ.சி.எப். இந்திய ரெயில்வே துறைக்கான 75 ஆயிரமாவது ரெயில் பெட்டி தயாரித்து சாதனைப்படைத்து உள்ளது. நிறுவனம் தொடங்கிய 68 ஆண்டுகளில், 75 ஆயிரம் ரெயில் பெட்டிகள் என்பது பெருமைமிகு சாதனை என்று இந்திய ரெயில்வே துறை தெரிவித்துள்ளது. இதில், 875 வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ரெயில் பெட்டிகளும் அடங்கும். ஐ.சி.எப். உருவாக்கிய 75 ஆயிரமாவது ரெயில் பெட்டியை ஐ.சி.எப். பொதுமேலாளர் சுப்பராவ், நேற்று பார்வையிட்டு, ரெயில் பெட்டியை உருவாக்கிய தொழிலாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். இந்த 75 ஆயிரமாவது ரெயில் பெட்டி, 69-வது வந்தே பாரத் ரெயிலுக்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    இதுவரை, ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 75 ஆயிரம் பெட்டிகளில் 752 வந்தே பாரத் ரெயில் பெட்டி, 12 வந்தே மெட்ரோ ரெயில் பெட்டி, 6 ஆயிரத்து 895 எல்.எச்.பி. குளிர்சாதன பெட்டிகளும், 8 ஆயிரத்து 152 சாதாரண எல்.எச்.பி. பெட்டிகளும் அடங்கும். மேலும், ஐ.சி.எப். தொழிற்சாலை தொடங்கியது முதல் 1955-2015-ம் ஆண்டு வரையில் 49 ஆயிரத்து 588 பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2015 ஆண்டு முதல் தற்போது வரையில் 25 ஆயிரத்து 412 பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மறவமங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 10 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது.
    • திருக்குறள், சித்த மருத்துவ பயன்கள், பொதுஅறிவு தகவல்கள், தமிழ் ஆங்கில மாதங்கள் உள்ளிட்டவை எழுதப்பட்டுள்ளன.

    சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 10 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது.

     

    ரெயில் பெட்டிகள் போன்று வகுப்பறைகளுக்கு வண்ணம் தீட்டியதுடன், வகுப்பறைக்குள் பழமொழிகள், திருக்குறள், சித்த மருத்துவ பயன்கள், பொதுஅறிவு தகவல்கள், தமிழ் ஆங்கில மாதங்கள் உள்ளிட்டவை எழுதப்பட்டுள்ளன.

    சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் இருக்கும் வகுப்பறைகளில் கல்வி கற்க மாணவர்கள் ஆர்வம் காட்டுவதாக ஆசிரியர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

    • தமிழகத்துக்கு ரெயில்வே துறை சார்பில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
    • ரெயில் பெட்டிகளும் தயாரிக்கப்பட்டு அனைத்து சோதனைகளும் நிறைவடைய குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது ஆகும்.

    சென்னை ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்டு வரும் அம்ரித் பாரத் 2.0 படுக்கை வசதி கொண்ட ரெயில் பெட்டிகளை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று ஆய்வு செய்தார்.

    அதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் அவர் கூறியதாவது:

    நாடு முழுவதும் ரெயில் போக்குவரத்தை மேம்படுத்த மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்துக்கு ரெயில்வே துறை சார்பில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    ஏழை எளிய மக்களும் வந்தே பாரத் ரெயில்களில் பயணிக்கும் அனுபவத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக குறைந்த கட்டணத்தில் அம்ரித் பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், தற்போது படுக்கை வசதி கொண்ட அம்ரித் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ரெயில் பெட்டிகளும் தயாரிக்கப்பட்டு அனைத்து சோதனைகளும் நிறைவடைய குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது ஆகும்.

    அந்த வகையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 அம்ரித் ரெயில்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.

    • சதாரா என்ற இடத்துக்கு அருகே சென்றபோது ரெயில் திடீரென தடம் புரண்டது.
    • வழித்தடத்தில் பல மணி நேரம் ரெயில் சேவைகள் துண்டிக்கப்பட்டன.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லாகூரில் இருந்து சிந்து மாகாணம் கராச்சி நோக்கி ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. அங்குள்ள சதாரா என்ற இடத்துக்கு அருகே சென்றபோது அந்த ரெயில் திடீரென தடம் புரண்டது.

    இதில் ரெயிலின் 3 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகின. தகவலின்பேரில் அங்கு விரைந்த மீட்பு படையினர் ரெயில் பெட்டிகளை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் பல மணி நேரம் ரெயில் சேவைகள் துண்டிக்கப்பட்டன. இதனால் பயணிகள் குறித்த நேரத்துக்குச் செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.

    • ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை 4ல் இருந்து 2ஆக மத்திய அரசு குறைப்பு.
    • 26 ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை குறைத்து, அதற்கு பதிலாக ஏசி 3 டையர் பெட்டிகளை இணைக்க திட்டம்.

    நாடு முழுவதும் இயக்கப்படும் ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை 4ல் இருந்து 2ஆக மத்திய அரசு குறைத்துள்ளது.

    26 ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை குறைத்து, அதற்கு பதிலாக ஏசி 3 டையர் பெட்டிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இதேபோல், சென்னையில் இருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாகச் செல்லும் ரெயில்களின் முன்பதிவில்லாப் பெட்டிகள் இன்று முதல் குறைக்கப்படுவதாக அறிவித்தது.

    இந்நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் இது குறித்து ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது. அதில் முன்பதிவு செய்யப்படாத ரெயில் பெட்டிகள் எண்ணிக்கை குறைப்பு என்ற தகவல் ஆதாரமற்றது என ரெயில்வே துறை விளக்கம் தெரிவித்துள்ளது.

    • மாத்தூர் கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 185 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • பள்ளியில் உள்ள 1, 2, 3-ம்‌ வகுப்பறைகள் ரெயில் பெட்டிகள் போன்று வர்ணம் தீட்டி புதுப்பிக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    பூம்புகார் தொகுதி, செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம் மாத்தூர் கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 185 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு 8 ஆசிரியர்கள் கல்வி கற்பித்து வருகின்றனர்.இந்நிலையில் கோடை விடுமுறை நாட்கள் முடிவடைந்தது.

    பள்ளியில் உள்ள 1, 2, 3ம்‌ வகுப்பறைகள் ரெயில் பெட்டிகள் போன்று வர்ணம் தீட்டி புதுப்பிக்கப்பட்டது. இதனை பார்த்த மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.விடுமுறை முடிந்த நிலையில் நேற்று புதுப்பி க்கப்பட்ட வகுப்பறைகள் திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு ஒன்றிய குழுத்தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.

    தலைமை ஆசிரியர் மங்கை, ஊராட்சி மன்ற தலைவர் ராஜலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில் பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் கலந்துகொண்டு புதுப்பி க்கப்பட்ட வகுப்பறைகளை திறந்து வைத்தார். தொட ர்ந்து மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    இதில் ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் செல்வ ராஜ், வட்டார கல்வி அலுவலர்கள் பூவராகவன், டேவிட் பிரேம்குமார், தி.மு.க மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ஸ்ரீதர், பொதுக்குழு உறுப்பினர் அமுர்தவிஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×