என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Movement"

    • சனிக்கிழமைதோறும் புறப்படும் இந்த ெரயில் திங்கட்கிழமை சென்று சேரும். முன்னதாக நவம்பர் 4-ந் தேதி, ஹஸூர்
    • நடப்பாண்டு டிசம்பர் 30-ந் தேதி வரை இரு மார்க்கத்திலும் இந்த ெரயில் இயக்கம் தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க எர்ணாகுளம் - ஹஸூர் சாஹிப் நாந்தேட் இடையே வாராந்திர சிறப்பு ெரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    நவம்பர் 5-ந் தேதி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் ஹஸூர் சாஹிப் நாந்தேட்க்கு சிறப்பு ெரயில் புறப்படுகிறது. எர்ணாகுளத்தில் புறப்படும் ெரயில் ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ரேணிகுண்டா, குண்டூர், நெல்லூர் உள்ளிட்ட ெரயில் நிலையங்களில் நின்று வடமாநிலங்கள் வழியாக பயணித்து, மகாராஷ்டிரா மாநிலம் ஹஸூர் சாஹிப் நாந்தேட் சென்றடையும். சனிக்கிழமைதோறும் புறப்படும் இந்த ெரயில் திங்கட்கிழமை சென்று சேரும்.

    முன்னதாக நவம்பர் 4-ந் தேதி, ஹஸூர் சாஹிப் நாந்தேட்டில் இருந்து எர்ணாகுளத்துக்கு சிறப்பு ெரயில் புறப்படும். நடப்பாண்டு டிசம்பர் 30-ந் தேதி வரை இரு மார்க்கத்திலும் இந்த ெரயில் இயக்கம் தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ெரயிலில்7 ஏ.சி., 7படுக்கை வசதி, இரண்டு பொது பெட்டி உள்ளிட்ட 20 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என சேலம் கோட்ட ெரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • மதுரை, விருதுநகர் கோவில்பட்டி வழியாக மைசூர்-தூத்துக்குடி இடையே சிறப்பு ெரயில் 4-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.
    • மைசூர்- தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயிலை இயக்க தென்மேற்கு ரெயில்வே முடிவு செய்து உள்ளது.

    மதுரை

    மைசூர்- தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயிலை இயக்க தென்மேற்கு ரெயில்வே முடிவு செய்து உள்ளது. அதன்படி மைசூர் - மைசூரில் இருந்து வருகிற 4, 11, 18-ந் தேதி வரும் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12.05 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்தநாள் அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து வருகிற 5, 12, 19-ந் தேதி சனிக்கிழமைகளில் மாலை 3 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்தநாள் காலை 8.30 மணிக்கு மைசூரை சென்றடையும். இந்த ரெயில்கள் யெலியூர், மாண்டியா, பெங்களூர், பெங்களூர் கண்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட நிலையங்கள் வழியாக ரெயில் இயக்கப்படும்.
    • வருகிற 8, 15-ந் தேதிகளில் இச்சிறப்பு ெரயில் இயக்கப்படும்.

    திருப்பூர்:

    வடமாநிலங்களில் தொடர் பண்டிகை எதிரொலியாக வருகிற 6, 13, 20 ஆகிய தேதிகளில், கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகருக்கு வாராந்திர சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது. கன்னியாகுமரியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 5:20 மணிக்கு புறப்படும் ரெயில் (வ.எண்:05905), புதன்கிழமை இரவு 8:50 மணிக்கு திப்ருகர் சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் செவ்வாய்கிழமைகளில் திப்ருகரில் இருந்து இரவு 7:25மணிக்கு புறப்படும் ெரயில்(05906) வெள்ளிக்கிழமை இரவு 10மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். வருகிற 8, 15-ந் தேதிகளில் இச்சிறப்பு ெரயில் இயக்கப்படும். இந்த ெரயிலில், ஏ.சி., இரண்டடுக்கு 1, மூன்றடுக்கு 5, படுக்கை வசதி 11, பொது இரண்டாம் வகுப்பு 3, சரக்கு பெட்டி ஒன்று என 21 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட நிலையங்கள் வழியாக ெரயில் இயக்கப்படும். கன்னியாகுமரி-திப்ருகர் ரெயில், திங்கட்கிழமை காலை 4:12 மணிக்கு கோவை ரெயில் நிலையம், காலை, 5:03மணிக்கு திருப்பூர் வந்து செல்லும். திப்ருகர்-கன்னியாகுமரி ரெயில் வெள்ளிக்கிழமை அன்று திருப்பூருக்கு காலை 9:43மணிக்கும் கோவைக்கு காலை 10:42மணிக்கும் வந்து செல்லும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • பொள்ளாச்சி, உடுமலை, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, நெல்லை வழியாக திருச்செந்தூருக்கு தினசரி ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • திருச்செந்தூர் செல்லும் ரெயில் வருகிற 18,19 மற்றும் 21, 22 ஆகிய தேதிகளில் கோவில்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும்.

    திருப்பூர்:

    உடுமலை வழியாக திருச்செந்தூர் செல்லும் ரெயில் வருகிற 18, 19, 21, 22ஆகிய தேதிகளில் கோவில்பட்டிவரை மட்டுமே இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, நெல்லை வழியாக திருச்செந்தூருக்கு தினசரி ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் பாலக்காட்டில் இருந்து புறப்பட்டு காலை 7.10 மணிக்கு உடுமலை ரெயில் நிலையத்திற்கு வந்து செல்லும். இந்த ரெயிலில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகிய கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம் மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்தநிலையில் ரெயில்பாதை பராமரிப்பு பணிகளுக்காக, திருச்செந்தூர் செல்லும் ரெயில் வருகிற 18,19 மற்றும் 21, 22 ஆகிய தேதிகளில் கோவில்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும்.இந்த தகவலை தென்னக ரெயில்வே மதுரை கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.
    • ெரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.

     திருப்பூர்:

    ஆலப்புழா, மங்களூரு ரெயில்கள் புறப்படும், சென்று சேரும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.தினமும் மாலை 4:05 மணிக்கு கேரள மாநிலம், ஆலப்புழாவில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் காலை 5:50 மணிக்கு சென்னை சென்று சேரும். இன்று முதல் இந்த ரெயில் மாலை 3:40 க்கு ஆலப்புழாவில் இருந்து புறப்படும். 20 நிமிடம் முன்பாக காலை 5:30 மணிக்கு சென்று சேரும். இந்த ெரயில் திருப்பூருக்கு இரவு 11 மணிக்கு பதிலாக இரவு 10:33 க்கே வந்து விடும்.இதுவரை மதியம் 1:30 க்கு மங்களூருவில் புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ெரயில் (12602) இனி மதியம் 1:55க்கு புறப்படும். சென்னைக்கு மறுநாள் காலை 5:35மணிக்கு பதில் மாலை 6:10மணிக்கு சென்று சேரும். இந்த ெரயில் திருப்பூருக்கு இரவு 10:30மணிக்கு பதிலாக10:45 மணிக்கு வரும்.

    ெரயில் பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க, ஜார்கண்ட் மாநிலம் ஹட்டியாவில் இருந்து எர்ணாகுளத்துக்கு நவம்பர் 14, 21, 28ந் தேதி சிறப்பு ெரயில் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக நவம்பர் 17, 24, டிசம்பர் 1ம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து ஹட்டியாவுக்கு ெரயில் இயக்கப்படும். இந்த ெரயில் அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக பயணித்து ஆந்திரா, ஒடிசா மாநிலங்களை கடந்து ஜார்கண்ட் மாநிலம் ஹட்டியா சென்று சேர்கிறது. 5 ஏ.சி., 11 படுக்கை வசதி, 3 பொது பெட்டி உள்ளிட்ட 22 பெட்டிகளை கொண்டதாக இந்த ெரயில் இருக்கும். ெரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.

    கேரள மாநிலம், கோழிக்கோடு - கண்ணனூர் வழித்தடத்தில், தலசேரி - எடக்கோடு இடையே மின்வழித்தடம் சிக்னல் பராமரிப்பு மேலாண்மை பணி நடக்கிறது. இதனால் சென்னை எழும்பூரில் இருந்து மங்களூரு இயக்கப்படும் ெரயில் இயக்கம் மாற்றப்பட்டுள்ளது. நேற்றிரவு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட மங்களூரு எக்ஸ்பிரஸ் ெரயில் இன்று கோழிக்கோடு வரை மட்டும் இயக்கப்படும். வடகரா, தலச்சேரி, கண்Èர், கண்ணபுரம், பையனூர்,கொடிகுலம், காசர்கோடு வழியாக மங்களூரு செல்லாது. அதே நேரம், மங்களூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் ெரயில் இயக்கத்தில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இரவு 8:45 மணிக்கு கொல்லத்தில் புறப்படும் ரெயில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1:30 க்கு ைஹதாரபாத் சென்று சேரும்.
    • ெரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி நடந்து வருகிறது என தெற்கு ரெயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக, ைஹதராபாத் - கொல்லம் இடையே சிறப்பு ெரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    வருகிற 22 மற்றும், 29ந் தேதி மதியம் 12 மணிக்கு ைஹதராபாத்தில் புறப்படும் சிறப்பு ெரயில், மறுநாள் மாலை 6 மணிக்கு சென்று சேரும். மறுமார்க்கமாக நவம்பர் 16, 23 மற்றும் 30-ந் தேதி (புதன்கிழமை) இரவு 8:45 மணிக்கு கொல்லத்தில் புறப்படும் ரெயில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1:30 க்கு ைஹதாரபாத் சென்று சேரும்.

    இந்த சிறப்பு ெரயில் காயன்குளம், மாவேலிக்கரா, செங்கனூர், திருவல்லா, செங்கனஞ்சேரி, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ெரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி நடந்து வருகிறது என தெற்கு ரெயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சிறப்பு ரெயில் அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 16-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.
    • சிறப்பு ரெயில் அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 16-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.

    திருப்பூர்:

    சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக கர்நாடக மாநிலம் பெல்காம்-கொல்லம், ஹூப்ளி-கொல்லம் இடையே சிறப்பு ரெயில் வருகிற 20-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. பெல்காம்-கொல்லம் சிறப்பு ரெயில் வருகிற 20-ந் தேதி காலை 11.30 மணிக்கு பெல்காமில் இருந்து புறப்பட்டு அடுத்தநாள் மதியம் 3.15 மணிக்கு கொல்லம் சென்றடையும். இந்த ரெயில் ஈரோடுக்கு காலை 5.10 மணிக்கும், திருப்பூருக்கு காலை 6 மணிக்கும், போத்தனூருக்கு 6.45 மணிக்கும் செல்லும்.

    கொல்லம்-பெல்காம் சிறப்பு ரெயில் வருகிற 21-ந் தேதி மாலை 5.10 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 11 மணிக்கு பெல்காம் சென்றடையும். இந்த ரெயில் போத்தனூரில் நள்ளிரவு 1 மணிக்கும், திருப்பூரில் 1.50 மணிக்கும், ஈரோடுக்கு 3 மணிக்கும் செல்லும்.

    ஹூப்ளி-கொல்லம் சிறப்பு ரெயில் வருகிற 27-ந் தேதி ஹூப்ளியில் மதியம் 2.40 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் மதியம் 3.15 மணிக்கு கொல்லத்துக்கு சென்றடையும். இந்த ரெயில் ஈரோட்டுக்கு காலை 5.10 மணிக்கும், திருப்பூருக்கு 6 மணிக்கும், போத்தனூருக்கு 6.45 மணிக்கும் செல்லும்.

    கொல்லம்-ஹூப்ளி சிறப்பு ரெயில் வருகிற 28-ந் தேதி கொல்லத்தில் மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் இரவு 8 மணிக்கு ஹூப்ளி சென்றடையும். பெல்காம்-கொல்லம் சிறப்பு ரெயில் அடுத்த மாதம் 4-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 15-ந் தேதி இயக்கப்படுகிறது. கொல்லம்-பெல்காம் சிறப்பு ரெயில் அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 16-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.

    இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் கொல்லம்-செகந்திராபாத் சிறப்பு ரெயில் (07130) கொல்லத்தில் வருகிற 19-ந் தேதி, 26-ந் தேதி மதியம் 3 மணிக்கு புறப்ட்டு சனிக்கிழமை நள்ளிரவு 12.35 மணிக்கு கோவைக்கும், 1.20 மணிக்கு திருப்பூருக்கும், 2.15 மணிக்கு ஈரோட்டுக்கும், 3.25 மணிக்கு சேலத்துக்கும் சென்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு சென்று சேரும்.

    ஆந்திர மாநிலம் நரசப்பூர்-கொல்லம் சிறப்பு ரெயில் (07131) நரசப்பூரில் வருகிற 21 மற்றும் 28-ந் தேதிகளில் மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 8.10 மணிக்கு சேலத்துக்கும், 9.10 மணிக்கு ஈரோட்டுக்கும், 10.10 மணிக்கு திருப்பூருக்கும், 11.20 மணிக்கு கோவைக்கும் சென்று இரவு 7.35 மணிக்கு கொல்லம் சென்று சேரும்.

    கொல்லம்-நரசப்பூர் சிறப்பு ரெயில் (07132) வருகிற 22-ந் தேதி மற்றும் 29-ந் தேதி கொல்லத்தில் இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு புதன்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு கோவைக்கும், 5.05 மணிக்கு திருப்பூருக்கும், 6 மணிக்கு ஈரோட்டுக்கும், 7 மணிக்கு சேலத்துக்கும் சென்று புதன்கிழமை இரவு 10 மணிக்கு நரசப்பூர் சென்று சேரும்.இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • தாம்பரம் - எர்ணாகுளம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்படுகிறது.
    • மேற்கண்ட எக்ஸ்பிரஸ் ெரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.

    மதுரை

    தாம்பரம்- எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயிலை இயக்குவது என்று தென்னக ெரயில்வே முடிவு செய்துள்ளது.

    அதன்படி எர்ணா குளத்தில் இருந்து வருகிற 28-ந் தேதி முதல் ஜனவரி 2-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில் மதியம் 1.10 மணிக்கு புறப்படும் ெரயில், அடுத்த நாள் மதியம் 12 மணிக்கு தாம்பரம் செல்லும்.மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து வருகிற 29-ந் தேதி முதல் ஜனவரி 3-ந் தேதி வரை செவ்வாய்க் கிழமைகளில் மாலை 3.40 மணிக்கு புறப்படும் ெரயில், அடுத்த நாள் மதியம் 12 மணிக்கு எர்ணாகுளம் செல்லும்.

    இந்த ரயில்கள் கோட்டயம், செங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயன்குளம், கரு நாகப்பள்ளி, சாஸ்தான் கோட்டா, கொல்லம், குண்டரா, கொட்டாரக்கரா, அவணேஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டில் நின்று செல்லும்.

    மேற்கண்ட எக்ஸ்பிரஸ் ெரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.

    • வக்பு வாரிய சொத்துக்களை மீட்க கோரி கையெழுத்து இயக்கம் நடந்தது.
    • முதல்-அமைச்சரின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

    கீழக்கரை

    கீழக்கரையில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்களை தனியார் சங்கத்தின் பெயரில் வழங்கிய பட்டாக்களை ரத்து செய்யக் கோரியும், போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாற்றி கொடுத்த அப்போதைய வருவாய் கோட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வக்பு சொத்தை முறைகேடாக விற்பனை செய்த சங்க நிர்வாகிகள் மீது குற்றவியல் வழக்கு தொடரவும், முறைகேடான பத்திரப்பதிவு ஆவண எண் 324/2370 ஐ ரத்து செய்து அந்த இடத்தை மீண்டும் வக்பு வாரியத்தின் பெயரில் பட்டா வழங்க வேண்டியும் கையெழுத்து இயக்கம் நடந்தது.

    கீழக்கரை வெல்பர் அசோசியேஷன் தலைவர் சீனி முகம்மது, சாலைத்தெரு பேங்க் அப்துல் காதர், முகமது இப்ராஹிம் ஆகியோர் தலைமையில் காட்டு வாப்பா முன்னிலையில் நடத்தப்பட்டது.

    முதல்-அமைச்சரின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதற்கான ஒருங்கிணைப்பு பணிகளை ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட துணைத் தலைவர் கீழை முகமது சிராஜுதீன் செய்தார்.

    • பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக, சென்னையில் இருந்து நாகர்கோவில், திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரெயில்களை இயக்க தென்னக ரெயில்வே முடிவு செய்துள்ளது.

    அதன்படி தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13-ந் தேதி இரவு 7.30 மணிக்கு புறப்படும் ரெயில் (வண்டி எண் 06041) அடுத்த நாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் செல்லும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 16-ந் தேதி மாலை 5.10 மணிக்கு புறப்படும் ரெயில் (வண்டிஎண்06042) அடுத்த நாள் காலை 7.30 மணிக்கு தாம்பரம் சேரும். இந்த ரெயில் வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டில் நின்று செல்லும்.

    அதே போல தாம்பரத்தில் இருந்து ஜனவரி 12-ந் தேதி இரவு 9 மணிக்கு புறப்படும் ரெயில் (06021) அடுத்த நாள் காலை 9 மணிக்கு நெல்லை செல்லும். மறு மார்க்கத்தில் நெல்லையில் இருந்து ஜனவரி 13-ந் தேதி மதியம் 1 மணிக்கு புறப்படும் ரெயில் (06022), அடுத்த நாள் அதிகாலை 3.20 மணிக்கு எழும்பூர் செல்லும். இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்பு க்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டியில் நின்று செல்லும்.

    கொச்சுவேலியில் இருந்து ஜனவரி 17-ந் தேதி காலை 11.40 மணிக்கு புறப்படும் ரெயில் (06044) அடுத்த நாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் செல்லும். மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து ஜனவரி 18-ந் தேதி காலை 10.30 மணிக்கு புறப்படும் ரெயில் (06043), அடுத்த நாள் அதிகாலை 3.20 மணிக்கு கொச்சுவேலி செல்லும்.

    இந்த ரெயில்கள் திருவ னந்தபுரம், குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்பு க்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், துறைமுகம் சந்திப்பு, விழுப்புரம், செங்கல்பட்டில் நின்று செல்லும்.

    தாம்பரத்தில் இருந்து ஜனவரி 16-ந் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் ரெயில் (06043), அடுத்த நாள் காலை 9 மணிக்கு நெல்லை செல்லும். மறு மார்க்கத்தில் நெல்லையில் இருந்து ஜனவரி 17-ந் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் ரெயில் (06058) அடுத்த நாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் செல்லும்.

    இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டியில் நின்று செல்லும். மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • 8 அடிக்கு 1 அடி இடைவெளி விட்டு பாத்தி நடவு செய்ய வேண்டும்.
    • விளக்கு பொறி அமைத்து தாய்ப்பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்து அழிக்கலாம்.

    சீர்காழி:

    சீர்காழி வட்டாரம் அகணி கிராமத்தில் புகையன் தாக்கிய வயலை பார்வையிட்டு சீர்காழி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராஜராஜன் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் புகையான் தாக்குதலில் இருந்து நெற்பயிரை காப்பாற்றும் வழிமுறை குறித்து விளக்கமளித்துள்ளார்.

    தற்பொழுது சீர்காழி வட்டாரத்தில் இரவில் வெப்ப நிலை குறைவாகவும், பகலில் மந்தமான சூரிய வெளிச்சம் இருப்பதினாலும் சம்பா, தாளடி நெற்பயிரில் பரவலாக புகையான் பூச்சி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

    பூச்சிகள் வேர்களின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் பயிர் மஞ்சள் நிறமாக மாறும் பின்னர் பழுப்பு நிறமாக மாறும்.

    பாதிக்கப்பட்ட வயல் ஆங்காங்கே வட்ட வட்டமாக புகைந்தது போல காணப்படுவது தாக்குதலின் அறிகுறியாகும். இதனை கட்டுப்படுத்த நடவு வயலில் 8 அடிக்கு 1 அடி இடைவெளி விட்டு பாத்தி நடவு செய்ய வேண்டும்.

    மண் பரிசோதனை பரிந்துரைப்படி தழைச்சத்து இடும்பொழுது 3 – 4 முறையாக பிரித்து இடவேண்டும்.

    களை செடிகளை அகற்றி விடவேண்டும்.புகையான் பூச்சி தாக்குதலுக்கு எதிர்ப்பு திறன், தாங்கும் திறன் கொண்ட ரகங்களை பயிரிடலாம்.

    விளக்குப் பொறி அமைத்து தாய்ப்பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்கா ணித்து அழிக்கலாம்.

    மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகளை ஹெக்டேருக்கு 12 என்ற அளவில் அமைக்கலாம். வயலில் புகையானின் இயற்கை விரோதிகளான சிலந்தி, பச்சை மிரிட் நாவாய்ப் பூச்சி, புள்ளி வண்டு, தட்டான், ஊசித் தட்டான் போன்ற இரை விழுங்கிகளும், அனேக்ரஸ், ஒலிகோசிட்டா போன்ற முட்டை ஒட்டுண்ணிகளும் இப்பூச்சியைப் பெரும் அளவில் கட்டுப்படு த்துகின்றன. பொருளாதார சேத நிலையை எட்டியவுடன் கீழ்க்கண்ட பூச்சிக் கொல்லிகளுள் ஏதேனும் ஒன்றை ஒரு ஹெக்டேருக்கு தெளிக்க வேண்டும்.

    குளோரன்டிரினிலிப்ரோல் 18.5 எஸ்சி – 150 மி.லி. அல்லது இமிடாகுளோபிரிட் 17.8 எஸ் எல் – 100 மி.லி. அல்லது ப்யூப்ரோபெசின் 25 எஸ்சி 652 மி.லி. புகையானின் மறு உற்பத்தியை பெருக்கும் மீதைல்பாரத்தியான் மற்றும் செயற்கை பைரித்ராய்டு மருந்துகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

    • பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 6,7-ந் தேதிகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் சார்பாக சேலத்திலிருந்து திருவண்ணாமலை மற்றும் சதுரகிரிகு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • சேலத்தி–லிருந்து சதுரகிரிக்கு மதுரை வழியாகவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட–வுள்ளது.

    சேலம்:

    சேலம் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளி–யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 6,7-ந் தேதிகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் சார்பாக சேலத்திலிருந்து திருவண்ணாமலை மற்றும் சதுரகிரிகு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    திருவண்ணாமலைக்கு அரூர், ஊத்தங்கரை வழியாகவும், திருவண்ணா–மலைக்கு கள்ளக்குறிச்சி வழியாகவும், சேலத்தி–லிருந்து சதுரகிரிக்கு மதுரை வழியாகவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட–வுள்ளது. எனவே, இந்த வழித்–தடங்களில் இயக்கப்படும் சிறப்பு பஸ்களை பயணிகள் அனைவரும் பயன்படுத்தி பயண நெரிசலை தவிர்த்து இனிய பயணம் செய்திடும்படி கேட்டுக ்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்.

    ×