என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைகாசி"

    • கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது
    • வருடந்தோறும் தை, ஆவணி மற்றும் வைகாசி மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    சாமிதோப்பில் அய்யா வைகுண்ட சுவாமி தலை மைப்பதி அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் தை, ஆவணி மற்றும் வைகாசி மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த வருட வைகாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் கொடியேற்று நிகழ்ச்சியான இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், 5 மணிக்கு சிறப்பு பணிவிடையும், அதனைத்தொடர்ந்து கொடிபட்டத்துடன் அய்யா வழி பக்தர்கள் அய்யா சிவசிவ அரகரா அரகரா என்ற கோஷத்துடன் தலைமைப்பதியை சுற்றிலும் வலம் வந்து 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    திருக்கொடியை குரு பால ஜனாதிபதி ஏற்றி வைத்தார். குருமார்கள் பால லோகாதிபதி, ராஜ வேல், பையன் கிருஷ்ணராஜ், பால் பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியறை பணிவிடை களை குருமார்கள் ஜனா.யுகேந்த், கிருஷ்ண நாமமணி ஆனந்த், ஜனா.வைகுந்த், நேம்ரிஷ் ஆகியோர் செய்தி ருந்தனர். பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெற்றது. இன்று இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    2-ம் நாள் இரவு அய்யா வைகுண்ட சுவாமி பரங்கி நாற்காலியில் வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 3-ம் நாள் விழாவில் அய்யா அன்னவாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 4-ம் நாள் பூஞ்சப்பர வாகனத்தில் அய்யா வலம் வரும் நிகழ்ச்சி யும், 5-ம் நாள் பச்சை சாத்தி சப்பர வாகனத்தில் பவனி யும், 6-ம் நாள் கற்பக வாகன பவனியும், 7-ம் நாள் சிவப்பு சாத்தி கருட வாகனத்தில் வாகன பவனியும் நடைபெறுகிறது.

    வருகிற ஜூன் மாதம் 2-ந்தேதி மாலை 8-ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்ட சுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று மக்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    தொடர்ந்து இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சியும், தொடர்ந்து அன்ன தானமும் நடைபெறு கிறது. 9-ம் திருவிழாவில் அனுமன் வாகனத்திலும், 10-ம் நாள் இந்திர வாக னத்திலும், அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அடுத்த மாதம் 5-ந்தேதி 11-ம் திருவிழா நடைபெறு கிறது. அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும், மதியம் உச்சிப்படிப்பும், இரவு வாகன பவனியும், அன்னதானமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறு கிறது.

    திருவிழா நாட்களில் அய்யா வைகுண்டர் அற நெறி பரிபாலன அறக்கட்ட ளை சார்பில் தலைமை பதி வளாகத்தில் காலை, மதியம் இரவு என 3 வேளைகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    • ஊஞ்சலூர் அருகே காவிரியில் தீர்த்தம் எடுத்து சென்னிமலை வந்தடைந்து,
    • சந்தன காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடக்கிறது.

    சென்னிமலை,

    'கந்த சஷ்டி கவச' அரங்கேற்ற தலமாகவும், ஆதி பழனி என போற்ற ப்படும் சென்னி மலை முருகன் கோவிலில் முருக பெருமானின் அவதார தின மான வைகாசி விசாகத்தை முன்னிட்டு, 67 வது வருட வைகாசி விசாக பெரு விழா, வருகிற 2-ந் தேதி கோலாகலமாக கொண்டா டப்படுகிறது.

    அதைத் தொடர்ந்து 1-ந் தேதி மாலை 5 மணிக்கு ஊஞ்சலூர் அருகே காவிரியில் தீர்த்தம் எடுத்து சென்னிமலை வந்தடைந்து, 2-ந் தேதி காலை 7.30 மணிக்கு சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவி லில் இருந்து மேளதாளம் முழங்க காவிரி திருமஞ்சன தீர்த்தம் ஊர்வலமாக புறப்பட்டு மலை கோவிலை சென்று அடைத்தல். மலை மீது முருகன் கோவிலில் 2-ந் தேதி 11 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் தொடங்கி கலச ஸ்தாபனம், 108 சங்குஸ்தாபனம், ஜெபம், ஓமம் நடக்கிறது.

    தொடர்ந்து மதியம் 2 மணிக்கு முருகப்பெரு–மானுக்கு பஞ்சாமிருதம், தேன், பழங்கள், பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து மாலை 5 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடக்கிறது.

    அதை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடக்கிறது. 2-ந் தேதி காலை 9 மணிமுதல் இரவு 9 மணி வரை மலை அடிவாரத்தில் உள்ள அருணகிரிநாதர் மடத்தில் அன்னதானம் வழங்கப்ப டுகிறது. இதற்கான ஏற்பாடு களை கோவில் செயல் அலுவலர் சரவணன் தலை மையில் அருணகிரிநாதர் மடம் மற்றும் கிருத்திகை விசாக குழுவினர் செய்து வருகின்றனர்.

    • கலசஸ்தாபனம், 108 சங்குஸ்தாபனம், ஜெபம், ஓமம் நடந்தது.
    • சந்தன காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடந்தது.

    சென்னிமலை,

    'கந்த சஷ்டி கவச' அரங்கேற்ற தலமாகவும், ஆதி பழனி என போற்றப்படும். சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று மாலை முருகப்பெருமானின் அவதார தினமான வைகாசி விசாக விழா கோலாகலமாக நடந்தது.

    முருக பெருமானின் அவதார தினமான வைகாசி விசாகத்தன்று முகப்பெருமானை வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். 67-வது வருட வைகாசி விசாக பெரு விழாவினை முன்னிட்டு நேற்று முன்தினம் ஊஞ்சலூர் அருகே காவிரியில் தீர்த்தம் எடுத்து சென்னிமலை வந்தடைந்தது.

    நேற்று காலை 10 மணிக்கு சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க காவிரி திருமஞ்சன தீர்த்தம் ஊர்வலமாக புறப்பட்டு மலை கோவிலை சென்று அடைந்தது.

    சென்னிமலை மலை மீது முருகன் கோவிலில் மதியம் 3 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கி கலசஸ்தாபனம், 108 சங்குஸ்தாபனம், ஜெபம், ஓமம் நடந்தது.

    தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு முருகப்பெருமானுக்கு பஞ்சாமிருதம், தேன், பழங்கள், பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து மாலை 6.30 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடந்தது.

    வைகாசி விசாக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சரவணன் தலைமையில் அருணகிரிநாதர் மடம் மற்றும் கிருத்திகை விசாக குழு அன்பர்கள் செய்திருந்தனர்.

    வைகாசி விசாகத்தினை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் மலை கோவிலில் குவிய தொடங்கினர். அதிகாலை காங்கேயம் அருகே உள்ள வரதப்பம்பாளையம் கிராம மக்கள் காவடி தீர்த்த குடங்களுடன் வருகை தந்து முருகப்பெருமான வழிபட்டு சென்றனர். கந்தசாமி அன்பர்கள் குழுவினர் படி பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    • அலங்காநல்லூர் அருகே வைகாசி களரி விழா நடந்தது.
    • ஊர் சுற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வலசை கம்மாளப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஆல்பாடி கருப்புசாமி, ஆண்டிச்சாமி, வீரம்மாள், சோனைபட்டசாமி, சின்னகருப்புசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் வைகாசி மாத களரி உற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது.

    இந்த விழாவானது கடந்த மே மாதம் 25-ந் தேதி முதல் தொடங்கி சாமியாடி ஊர் சுற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை பட்டசாமி கோவில் புறப்படுதல், பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல், கோவில் வீட்டில் சாமி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து வானவேடிக்கை முழங்க மேளதாளங்களுடன் கிடாய் வெட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கூலாத்திகுடுத்தான் 2வது வாரிசு கருப்பு கோவில் பங்காளிகள் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • தை மாதம் 2 ஆம் தேதி திருவள்ளுவர் தினமாக விடுமுறை நாளாக கொண்டாடப்படுகிறது.
    • தமிழ் அறிஞர்கள், வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் திருவள்ளுவர் பிறந்ததாக குறிப்பிட்டதாக மனுதாரர் வாதம்

    தமிழ் மாதம் தை 2 ஆம் தேதி திருவள்ளுவர் தினமாக விடுமுறை நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளை செல்லாது என அறிவித்து வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தை திருவள்ளுவர் பிறந்தநாளான அறிவிக்க வேண்டும் என்று திருவள்ளுவர் திருநாள் கழகத்தின் தலைவர் பேராசிரியர் சாமி தியாகராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு நீதிபதி எம். தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "1935 ஆம் ஆண்டு நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட மறைமலை அடிகள் போன்ற தமிழ் அறிஞர்கள், வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் திருவள்ளுவர் பிறந்ததாக குறிப்பிட்டதாகவும் 600 ஆண்டுகள் முன்பு மயிலாப்பூரில் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலில் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் தான் பிறந்தநாள் கொண்டாடப்படுவதாகவும் தெரிவித்தார்.

    பின்னர் அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், தை 2ந் தேதி திருவள்ளுவர் தினம் தானே கொண்டாடப்படுகிறதே தவிர, திருவள்ளுவர் பிறந்தநாளாக கொண்டாடவில்லை என்று விளக்கம் அளித்தார். ஆதலால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திருவள்ளுவர் வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    மேலும், மனுதாரர் தரப்பு, வைகாசி, அனுச நட்சத்திர நாளில் திருவள்ளுவர் பிறந்தநாள் கொண்டாட எவ்வித தடையில்லை என்று நீதிபதி தெளிவுபடுத்தி இருக்கிறார்.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாக விழா, காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
    திருப்பரங்குன்றம், 


    முருகனின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டா டப்படும் திருவிழாக்களில் வைகாசி விசாகத்திருவிழா பிரசித்தி பெற்றது. 

    வைகாசி மாதம் 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த திருவிழா நேற்று காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சுப்பிரமணிய சுவாமி- தெய்வானைக்கு உற்சவர் சன்னதியில் பால், பன்னீர், சந்தனம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று புஷ்ப அங்கி அலங்காரத்தில் உற்சவர் சன்னதியில் இருந்து புறப்பாடாவார்கள். 

    மேளதாளங்கள் முழங்க கோவிலுக்குள் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் இரவு8 மணிக்கு எழுந்தருளி  மண்டபத்தை 3 முறை வலம் வந்து நீர் நிரப்பப்பட்ட தொட்டியில் உள்ள ஊஞ்சலில் எழுந்தருளுவார்கள். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீப, தூப ஆராதனைகள் நடைபெறும். 

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 12-ந் தேதி வைகாசி விசாகத்தன்று, சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு பாலாபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து காலை 9 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தை 3 முறை வலம் வந்து விசாக குறடு மண்டபத்தில் எழுந்தருளும் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு பக்தர்கள் கொண்டுவரும் பால்குடங்கள் மூலம் சிறப்பு பாலாபிஷேகம் நடைபெறும். இந்த பாலாபிஷேகம்  அன்று காலை தொடங்கி மாலை வரை நடைபெறும். 

    விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக 13 -ந் தேதி சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் சட்டத்தேரில் புறப்பாடாகி மொட்டையரசு திருவிழா நடைபெறும். விழா ஏற்பாடு களை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    ×