என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "on the road"

    • ரோட்டில் திரியும் குதிரைகளால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
    • இந்த குதிரைகளால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

    அந்தியூர்:

    அந்தியூர் பகுதியில் பொதுமக்கள் பலர் ஆடு, மாடு, மற்றும் குதிரைகள் வளர்த்து வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள குதிரைகள் அடிக்கடி அந்தியூர் நகரின் முக்கிய பகுதி ரோடுகளில் சுற்றி திரிகின்றன. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தற்போது மீண்டும் அந்தியூர் பஸ் நிலையம் பகுதி, பர்கூர் சாலை, அத்தாணி சாலை, ஆப்பக்கூடல் செல்லும் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி, விளையாட்டு மைதானத்திலும் குதிரைகள் அதிக அளவில் சுற்றுகின்றன.

    ரோட்டில் திரியும் குதிரைகளால் பொதுமக்கள், மாணவ- மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி, விளையாட்டு மைதானத்திற்குள் நடை பயிற்சி செய்பவர்களும், விளையாடும் மாணவர்க ளும் எந்த நேரத்தில் இந்த குதிரை வந்து நம்மை தாக்கி விடுமோ என்ற ஒரு வித அச்சத்தோடு சென்று வருகிறார்கள்.

    இதேபோல் சாலையில் செல்லக்கூடிய இருசக்கர வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும்தங்களை கீழே தள்ளி விடுமோ என்ற பயத்திலும் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த குதிரைகளால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

    எனவே ரோட்டில் சுற்றி திரியும் குதிரைகளை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குதிரையின் உரிமை யாளர்களை எச்சரிக்க வேண்டும் என்று பொது மக்கள், தன்னார்வலர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

    • ஆசிட் வெள்ளம் போல் குட்டப்பாளையம்- கம்புளியம்பட்டி தார் ரோட்டில் வழிந்தோடியது.
    • இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், ஈங்கூர் ஊராட்சி, குட்டப்பாளையம் பகுதியில் பெருந்துறை சிப்காட் வளாகம் உள்ளது.

    இங்கு கள்புளியம்பட்டி ஊராட்சி எல்லை பகுதி அருகே தனியாருக்கு சொந்தமான கெமிக்கல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 5-க்கும் மேற்பட்ட பெரிய எவர் சில்வர் டேங்கில் ஆசிட் இருப்பு வைத்து சில்லரை விற்பனை நடக்கிறது.

    இந்நிலையில் இரவு இந்த ஆசிட் இருப்பு வைத்துள்ள டேங் ஒன்றில் சிறிய வெடிப்பு ஏற்பட்டு ஆசிட் கசிய தொடங்கியது. கசிய தொடங்கிய ஆசிட் வெள்ளம் போல் கம்பெனியின் மண் ரோடு வழியாக வழிந்தோடி குட்டப்பாளையம்- கம்புளியம்பட்டி தார் ரோட்டில் வழிந்தோடியது.

    பொதுமக்கள் செல்லும் தார் ரோட்டில் நுரையும், புகையுமாக ஆசிட் இருந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர். வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. அதன் பின்பு பொதுமக்கள் திரண்டு கம்பெனி உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உரிமையாளர் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தண்ணீர் கொண்டு வந்து பீய்சி அடித்து ஆசிட் வீரியம் குறைந்து விடுவதாவும், அதன் பின்பு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் உரிமையாளர் உறுதி கொடுத்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • தார் ரோடு போடு வதற்காக ரோட்டில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது.
    • இதுவரை தார் ரோடு போடப்படவில்லை என பொதுமக்கள் புகார் கூறினர்.

    சென்னிமலை:

    சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் எக்கட்டாம் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது புதுவலசு மற்றும் தட்டாரவலசு.

    இந்த பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் பலர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி களுக்கு செல்வதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தார் ரோடு போடு வதற்காக ரோட்டில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது.

    ஆனால் இதுவரை தார் ரோடு போடப்படவில்லை என பொதுமக்கள் புகார் கூறினர். இதனால் அந்த வழியே செல்லும் பொது மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இது குறித்து புதுவலசு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும் போது, இந்த பகுதியில் தார் ரோடு போடுவதற்காக கடந்த 70 நாட்களுக்கு முன்பு ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது.

    ஆனால் இதுவரை தார் ரோடு போடுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்களின் டயர்களை சேதம் அடைந்து வருகிறது.

    மேலும் புழுதி பறந்து புகை மண்டலமாக காட்சியளித்து வருகிறது. மேலும் இந்த வழியாக பள்ளி வேன்களில் செல்லும் குழந்தைகளும் புழுதியால் மிகவும் பாதிக்கின்றனர்.

    எனவே இந்த பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக தார் ரோடு போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • வரட்டுபள்ளம் அணை அருகே யானை கூட்டம் சாலையோரம் வந்து நின்று கொண்டிருந்தது.
    • இதனால் இருபுறங்களிலும் வாகன ஓட்டிகள் சாலையிலேயே நிற்கும் நிலை ஏற்பட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் யானைகள், மான், கரடி, காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த நிலையில் தற்போது கோடைக்காலம் தொடங்கிய நிலையில் வனப்பகுதியில் இருந்து தண்ணீரைத் தேடி வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு சாலையோரம் மற்றும் குடியிருப்பு பகுதிக ளுக்குள் வரும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாலை வரட்டுபள்ளம் அணை அருகே யானை கூட்டம் சாலையோரம் வந்து மீண்டும் வனப்பகுதிக்குள் செல்ல வழி இன்றி அரை மணி நேரத்திற்கும் மேலாக சாலையிலேயே நின்று கொண்டிருந்தது.

    இதனால் இருபுறங்களிலும் வாகன ஓட்டிகள் சாலையிலேயே நிற்கும் நிலை ஏற்பட்டது.

    எனவே இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு செல்ல வேண்டும் என்று வனத்து றையினர் தெரிவித்தனர்.

    • சாலையில் ஒரு பகுதி தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
    • இந்த பணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் முக்கியமானதாக ஈரோடு ஈ.வி.என். சாலையில் கடந்த சில மாதங்களாக மழை நீர் வடிகால் மற்றும் சாக்கடை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.

    இதற்காக சாலையில் ஒரு பகுதி தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பஸ்கள் ஊர்ந்து ஊர்ந்து செல்ல வேண்டி உள்ளது.

    ஈரோடு மாநகராட்சியின் முக்கிய போக்குவரத்து பகுதியாக இந்த சாலை விளங்கி வருகிறது. இந்த சாலையில் தான் அரசு தலைமை மருத்துவமனை, மின்வாரிய அலுவலகம், தனியார் மருத்துவமனைகள், வர்த்தக நிறுவனங்கள் இருக்கின்றது.

    இந்த சாலையில் எப்போதும் கூட்டம் அதிக அளவில் காணப்படும். தற்போது பகலில் நடக்கும் இந்த பணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நிற்கின்றன.

    தற்போது ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. 106 டிகிரி வரை வெயில் பதிவாகி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்த நேரத்தில் இந்த திட்டப் பணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சாலையில் நீண்ட தூரம் வரை அணிவகுத்து நிற்கின்றனர். அப்போது வெயிலின் தாக்கத்தால் மேலும் அவர்கள் கடும் அவதி அடைகின்றனர்.

    இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

    தற்போது நமது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வருகிறது. இந்த நேரத்தில் ஈ.வி.என் சாலையில் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.

    இதற்காக ரோடுகள் தோண்டப்பட்டுள்ளன. இதனால் இந்த பகுதியை கடந்து செல்வது எங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன.

    வெயிலின் தாக்கத்தால் எங்களால் நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. நாங்கள் சோர்வு அடைந்து விடுகிறோம். பகல் நேரத்தில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதற்கு பதிலாக இரவு நேரத்தில் பணிகள் மேற்கொண்டால் எந்த ஒரு இடையூறும் இருக்காது. இதற்கு வாய்ப்பில்லை என்றால் போக்குவரத்தை சரி செய்ய இங்கு போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அரேபாளையம் செல்லும் சாலையில் கரடி ஒன்று மெதுவாக நடந்து சென்றது
    • கரடியிடமிருந்து எப்பவுமே 200 மீட்டர் தூரம் தள்ளி இருக்க வேண்டும்.

    சத்தியமங்கலம், 

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை மான், புலி, கரடி, சிறுத்தை, காட்டெருமை, புலி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் இரண்டு நாட்களாக சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களான பண்ணாரி, ஆசனூர், அரேப்பாளையம், தாளவாடி, திம்பம், தலமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சீதோஷண நிலை நிலவி வருகிறது

    இதனால் வனவிலங்குகள் அவ்வப்போது ரோட்டை கடப்பதும் ரோட்டின் சாலை ஓரம் நடந்து செல்வதும் வாடிக்கையாகிவிட்டது.

    இதே போல் நேற்று சத்தியமங்கலத்தில் இருந்து அரேபாளையம் செல்லும் சாலையில் கரடி ஒன்று மெதுவாக நடந்து சென்றது. இதனைப் பார்த்த வாகன ஓட்டிகள் அதை செல்போனில் படம் பிடிக்க ஆரம்பித்தனர். சிறிது நேரம் நடந்து சென்ற கரடி அடர்ந்த வனபகுதிக்குள் சென்று விட்டது.

    இதை பார்த்த வனத்துறை அதிகாரிகள் கரடிகள் மிகவும் ஆபத்தானவை கரடியிடமிருந்து எப்பவுமே 200 மீட்டர் தூரம் தள்ளி இருக்க வேண்டும் எனவும் வனவிலங்குகளை தொந்தரவு செய்யாமல் பார்த்து ரசிக்கவும் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

    • குமாரபாளையம் கவுரி தியேட்டர் பகுதியில் நேற்று இரவு 7 வயது சிறுமி ஒருவர் சாலையில் அழுதபடி நடந்து வந்துள்ளார்.
    • போட்டோ எடுத்து அனைத்து வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்டார். பின்னர் ஒரு மணி நேரத்தில் இதனை கண்ட பெற்றோர் போலீசாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து நேரில் வந்தனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கவுரி தியேட்டர் பகுதியில் நேற்று இரவு 7 வயது சிறுமி ஒருவர் சாலையில் அழுதபடி நடந்து வந்துள்ளார். அதை கண்ட அப்பகுதி மக்கள் அந்த சிறுமியிடம் விபரம் கேட்க, அந்த சிறுமி எதுவும் பேசவில்லை.

    போலீஸ் நிலையம்

    உடனே அந்த சிறுமியை போலீஸ் நிலையத்திற்க்கு கொண்டு வந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி விசாரித்தும் பலனில்லை. அந்த சிறுமி எதுவும் பேசவில்லை. உடனே போட்டோ எடுத்து அனைத்து வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்டார். பின்னர் ஒரு மணி நேரத்தில் இதனை கண்ட பெற்றோர் போலீசாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து நேரில் வந்தனர்.

    ஒப்படைப்பு

    இன்ஸ்பெக்டர் விசார ணையில், நாராயண நகரில் வசிக்கும் பெற்றோர் செந்தில்குமார், பிரித்தா என்பதும், 7 வயது சிறுமியின் பெயர் பிரித்திகா என்பது தெரியவந்தது. விளையாடப் போகும் விஷயம் சம்பந்தமாக தாயார் திட்டியதாக தெரி கிறது. இதனால் கோபித்துக் கொண்டு வெளியில் வந்து விட்டார். இன்ஸ்பெக்டர் தவமணி எச்சரித்து, குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தார்.

    சேலம் அருகே சாலையில் திடீரென கவிழ்ந்த மினி டெம்போ டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
    காகாபாளையம்:

    சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே ரெட்டி மணியக்காரன் பகுதியில்  குளோபல் பிரஸசிங் என்ற  தனியார் சேலைகள் மெருகேற்றும் கம்பெனி செயல்படுகிறது.

    இந்நிலையில் கம்பெனிக்கு சொந்தமான மினி டெம்போ   சேலைகள் லோடு எடுத்து வருவதற்காக இன்று மதியம் 12 மணியளவில்  இளம்பிள்ளை பகுதியில் சென்று கொண்டிருந்தது. இளம்பிள்ளை  அரசு மருத்துவமனை அருகே உள்ள வளைவில் சென்றபோது  மினி டொம்போ திடீரென கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் லேசான காயங்களுடன்  டிம்போ டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

     இந்த பகுதியில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்து சம்பவங்கள் நடந்தவாறு உள்ளன.  எனவே இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    குமாரபாளையம் பகுதியில் சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்பட்டு வருகிறது.
    குமாரபாளையம்:

    குமாரபாளையத்தில் உள்ள சேலம் சாலை டிவைடர் வைக்கப்பட்டு மிகவும் குறுகியதாக உள்ளது. இதில் கடைகள் முன்பு வைக்கப்படும் ஸ்டாண்டிங்  போர்டுகள், நிறுத்தப்படும் வாகனங்கள், ஆகியவற்றால் ஏற்கனவே விபத்து  அபாயம் ஏற்பட்டு வருகிறது. 

    இந்நிலையில் மாடுகள், ஆடுகள் ஆகியவை சாலைகளில் திரிந்து வருகின்றன. வாகனங்களின் ஹாரன் சத்தத்தால் இவைகள் மிரண்டு அங்குமிங்கும் ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் ஓடும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் விபத்து அபாயமும் ஏற்பட்டு வருகிறது. 

    இது போன்று கால்நடைகளை சாலைகளில் நடமாட விடும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×