என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணிகள்"

    • பயறு அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • கிலோ ரூ.70 வரை கிடைக்கிறது

    கரூர்:

    கடந்த ஜூலை மாத இறுதியில், கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆற்றுப் பகுதிகளான புகழூர், வாங்கல், நெரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை மற்றும் வெள்ளியணை, ராஜபுரம், சின்னதாராபுரம், க.பரமத்தி, அரவக்குறிச்சி, கடவூர் உள்ளிட்ட பகுதிகளில், மானாவாரி நிலங்களில் பயிறு வகைகள் சாகுபடி செய்யப்பட்டன. அதில், ஊடுபயிராக தட்டை பயறு அதிகளவில் சாகுபடி செய் யப்பட்டது. காய் பிடிக்கும் பருவத்தில், மழை பெய்ததால் தட்டை பயிறு நல்ல மகசூலை அடைந்துள்ளது. அதனை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக உள்ளனர்.

    இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது,

    கடந்த மூன்று மாதங்களாக காவிரி ஆற்றில் தண்ணீர் செல்கிறது. இதனால், கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், கரூர் மாவட்டத்தில் கடந்த, இரண்டு மாதங்களாக மழை, திருப்திகரமாக உள்ளதால், நிலத் தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாய கிணறுகளில் தண்ணீர் அதிகரித்துள்ளது.

    இதனால், மானாவாரி நிலங்களில் பயிறு வகைகள் நல்ல விளைச்சலை அடைந்துள்ளது. தற்போது, தட்டை பயிறு அறுவடை துவங்கியுள்ளது. விவசாய நிலங்களை தேடி மொத்த வியாபா ரிகள் வருகின்றனர். ஒரு கிலோ தட்டை பயிறுக்கு, 80 ரூபாய் முதல், 90 ரூபாய் வரை கேட்கிறோம். ஆனால், 60 ரூபாய் முதல், 70 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. அடுத்த மாதத்தில் கிராம சந்தைகளில், பயிறு வகைகள் அதிகளவில், விலை மலிவாக விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • இந்த பணிகள் பெதப்பம்பட்டி செல்லும் சாலையின் இரண்டு புறமும் தீவிரமாகநடந்து வருகிறது.
    • இந்த பணிகளுக்காக அந்த இடத்திற்கு அருகில் வாகனங்கள் சென்று வருவதற்காக தற்காலிக பாதை விடப்பட்டுள்ளது.

    உடுமலை:

    மத்திய அரசின் 'பாரத் மாலா பிரயோஜனா' திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் கமலாபுரம் வரை நான்கு வழிச்சாலைஅமைக்கப்படுகிறது.

    உடுமலையில் இருந்து பெதப்பம்பட்டி செல்லும் சாலையில் குறிஞ்சேரி அருகே சாலையின் குறுக்கே நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.இந்த பணிகள் பெதப்பம்பட்டி செல்லும் சாலையின் இரண்டு புறமும் தீவிரமாகநடந்து வருகிறது.இந்த நிலையில் பெதப்பம்பட்டி செல்லும் சாலையின் குறுக்கே அமையும்நான்கு வழிச்சாலையின் இரண்டு புறங்களையும் இணைக்கும் வகையில்உயர்மட்டபாலம்கட்டும் பணிகள் தீவிரமாகநடந்து வருகிறது.இதில் தற்போது உயர் மட்டபாலத்தின் இருபுறங்களையும் இணைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.இந்த பணிகளுக்காக அந்த இடத்திற்கு அருகில் வாகனங்கள் சென்று வருவதற்காக தற்காலிக பாதை விடப்பட்டுள்ளது. பஸ், லாரி, கார், வேன், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் அந்த தற்காலிக பாதை வழியாக சென்று வருகின்றன.பெதப்பம்பட்டி செல்லும் சாலையின் குறுக்கே சாலையின் மேல்பகுதியில் நான்கு வழிச்சாலைக்கான உயர்மட்டபாலம் கட்டும் பணிகள் நிறைவடைந்நதும், அதன் கீழ்பகுதியில் வழக்கம் போல் வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படும்.

    • கபிஸ்தலம் ஊராட்சியில் 100 சதவீத வரிவசூல் செய்யப்பட்டிருப்பதை பாராட்டினார்.
    • அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் நெற்களம் அமைக்கும் பணிகள் ஆய்வு.

    கபிஸ்தலம்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கபிஸ்தலம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவரை ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

    பின்னர் ஊராட்சி பதிவேடுகளை ஆய்வு செய்து பார்வையிட்டு அதனை தொடர்ந்து பி.எல். எப், மற்றும் சுய உதவி குழுக்கள், சுயதொழில் செய்பவர்கள் ஆகியவுடன் கலந்து ஆலோசனை நடத்தினார்.

    அப்பொழுது சுயதொழில் செய்யும் நபர்களை அழைத்து அவர்கள் செய்த மண்பாண்டங்கள், அகல் விளக்குகள், ஆகியவற்றை பார்வையிட்டு சிறப்பாக செய்துள்ளதாக அவர்களை ஊக்குவித்து தொழில் முனைவோரில் தஞ்சை மாவட்டம் தலைசிறந்த மாவட்டமாக திகழ வேண்டும் என அவர்கள் மத்தியில் உரையாற்றினார். அதனை தொடர்ந்து கபிஸ்தலம் ஊராட்சியில் 100 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டிருப்பதை பாராட்டி நல்ல முறையில் செயல்பட்டு கொண்டுள்ள இந்த ஊராட்சி மேலும் சிறப்பாக செயல்பட வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

    ஊராட்சியில் தனியார் வசமுள்ள குளங்களை ஊராட்சி நிர்வாகத்திற்கு கீழ் கொண்டு வந்தால் ஊராட்சிக்கு வருமானத்தை பெருக்க வழிவகை செய்ய முடியும் என ஊராட்சி மன்ற தலைவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க குளங்களை பராமரித்து வரும் தனியாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதன் பிறகு முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து சோமேஸ்வரபுரம் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சிமெண்ட் சாலை பணி, மற்றும் நெற்களம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்து விரைவில் பணிகளை முடிக்க அறிவுறுத்தினார்.

    இந்த ஆயுள் போது பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சிவகுமார், ஆனந்தராஜ், வட்டார துணை வளர்ச்சி அலுவலர் கண்ணன், ஒன்றிய பொறியாளர்கள் சாமிநாதன், சரவணன், வருவாய் ஆய்வாளர் சுகுணா, கிராம நிர்வாக அலுவலர் சிவப்பிரகாசம், ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன், ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள், ஊராட்சி பணியாளர்கள், சுய உதவி குழுவினர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • அவினாசி சாலையில் அமைந்துள்ளது பரி.பவுலின் ஆலயம்.
    • ஆலயம் கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் அவினாசி சாலையில் அமைந்துள்ளது பரி.பவுலின் ஆலயம். இந்த ஆலயம் கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு ஆலயத்தின் செயலாளர் ஜெபரூபன் ஜான்சன் தலைமையில் வெள்ளை அடித்தல் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது.

    • இது போன்ற இயக்க பணிகளில் ஈடுபடும்போது தனிப்பட்ட மகிழ்ச்சி கிடைக்கிறது.
    • மேட்டூர் நீர் நிலைகள் குறித்து அறிந்து கொள்ள வாட்ஸ்அப் குரூப்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருளானந்தம் நகரில் மாநகர தி.மு.க. அலுவலகம் புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவில் தஞ்சை மாநகர தி.மு.க. செயலாளரும் மாநகராட்சி மேயருமான சண்.ராமநாதன் வரவேற்றார்.

    தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான துரை. சந்திரசேகரன் , எம்.எல்.ஏ.க்கள் டி.கே.ஜி.நீலமேகம் , அண்ணாதுரை, துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மாநகர தி.மு.க. அலுவலக புதிய கட்டிடத்தை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணா சொன்னது போல் எங்கு சென்றாலும் தி.மு.க‌.விற்க்கென்று அலுவலகம் இருப்பது அவசியம். மாவட்டங்களில் மாவட்ட கழக அலுவலகங்கள் இருப்பது போல் தஞ்சையில் மாநகர தி.மு.க‌.வுக்கென்று புதிய அலுவலகம் திறப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    நாள் முழுவதும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டாலும், இது போன்ற இயக்கப் பணிகளில் ஈடுபடும்போது தனிப்பட்ட மகிழ்ச்சி கிடைக்கிறது.

    கனமழை, மேட்டூர் நீர் நிலைகள் குறித்து அவ்வப்போது அறிந்து கொள்ள வாட்ஸ்அப் குரூப் ஒன்று உள்ளது.

    அதை கவனித்து வருவோம். மழைகாலங்களில் தேவைக்கேற்ப்ப பள்ளிகள், மற்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். புதிய அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
    • கீழ பட்டினச்சேரிக்கும் தடுப்புச்சுவர் அமைக்க ரூ.7 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    மாண்டஸ் புயலின் தாக்கத்தால் நாகப்பட்டினம், நாகூர், பட்டினச்சேரியில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு, கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் குடியிருப்புகள் பாதிக்கப்பட்டன. தென்னை மரங்கள் விழுந்தன. ஆடுகள் பலியாயின.

    இதையடுத்து அங்குள்ள மக்கள் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    கடல் அரிப்பினால் ஏற்பட்ட பாதிப்புகளை நாகை எம்.எல்.ஏ ஷா நவாஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது,

    பட்டினச்சேரியில் கடல் அரிப்பு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் வேண்டும் என்று சட்டப்பேரவையில் பேசினேன்.

    அப்போது பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாகப்பட்டினத்தில் கடல் அரிப்பால் ஏற்படும் பிரச்சனைகளின் தீவிரத்தை அரசு உணர்ந்துள்ளதாகவும் எனவே விரைவில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

    அதன்படி விரைந்து அதை நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    ஏற்கெனவே நம்பியார் நகர் பகுதியில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தேன்.

    அதன் அடிப்படையில் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    அதுபோல் கீழப் பட்டினச்சேரிக்கும் தடுப்புச் சுவர் அமைக்க ரூ.7 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இந்தக் கோரிக்கையும் விரைவில் நிறைவேறும். இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, நாகை நகர்மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், நகர்மன்ற உறுப்பினர் அஞ்சலைதேவி, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • 100 அடி அகலத்துக்கு சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
    • வணிக வளாக வாகனம் நிறுத்தும் பகுதியில் பூச்சந்தை தற்காலிக இடமாற்றம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பூக்கார தெருவில் பூச்சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு தினமும் திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படும்.

    மேலும் இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படும். எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.

    இந்த நிலையில் பூக்கார தெருவில் சாலை குறுகியதாக உள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் மாநகராட்சி சார்பில் பூக்கார தெருவில் 100 அடி அகலத்துக்கு சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இதற்கான பணிகள் தொடங்க உள்ளது. பூக்கார தெருவில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை விரிவாக்கம் செய்யப்படுகின்றன.

    இதனால் இங்கு பல ஆண்டுகளாக இயங்கி வரும் பூச்சந்தையை தற்காலிகமாக வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள வணிக வளாக வாகனம் நிறுத்தும் பகுதியில் இன்று முதல் பூச்சந்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.

    இதனையொட்டி ஏற்கனவே இயங்கி வந்த இடத்தில் கடை வைத்திருந்தவர்களில் பெரும்பாலானோர் தங்களது கடைகளை மாற்றினர். இன்னும் சில கடைகள் மட்டும் பூச்சந்தையில் உள்ளது. அதுவும் வரக்கூடிய நாட்களில் இடமாற்றம் ஆகி விடும். 

    • வேதாரண்யம் நகராட்சியில் ரூ. 28 லட்சத்தில் 95 தனி நபர் கழிவறைகள் கட்டப்படுகிறது.
    • விரைந்து பணிகள் முடிக்கபட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சியில் ரூ. 31 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் பொது கழிவறைகளை கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.

    மேலும், நகராட்சி சார்பில் 95 தனிநபர் கழிவறை கட்டும் பணிகளையும் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    இது குறித்து நகராட்சி கமிஷனர் ஹேமலதா கூறியதாவது:-

    வேதாரண்யம் நகராட்சியில் ரூ. 28 லட்சத்தில் 95 தனி நபர் கழிவறைகள் கட்டப்படுகிறது.

    இதில் ஒவ்வொரு கழிவறையும் ரூ. 9 ஆயிரத்து 330 அரசு மானியமாக 30 ஆயிரம் செலவில் கட்டப்படுகிறது.

    தற்போது 18 கழிவறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

    மேலும், ரூ. 31 லட்சம் 28 ஆயிரம் செலவில் கட்டப்படும் பொது கழிவறையும் விரைந்து பணிகள் முடிக்கபட்டு பொதுமக்கள் பயன்பா ட்டிற்கு விடப்படும் என்றார்.

    ஆய்வின்போது வேதாரண்யம் தாசில்தார் ஜெயசீலன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாஸ்கர், ஆத்மா குழு தலைவர் சதாசிவம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஆகியோர் இருந்தனர்.

    • அனைவரையும் ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார்.
    • நடைபெற்று முடிந்த பணிகள் குறித்து ஆலோசனை செய்து தணிக்கை செய்யப்பட்டு அறிக்கை.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் ஊராட்சி நர்சரி பகுதியில் சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் மகாலட்சுமி பாலசுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அனைவரையும் ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார்.

    கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சிவக்குமார், ஆனந்தராஜ், வட்டார வன அலுவலர் சுகுணா, மாவட்ட வன அலுவலர் செந்தில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தணிக்கை அருளாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கடந்த ஆண்டு கபிஸ்தலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று முடிந்த பணிகள் குறித்து ஆலோசனை செய்து தணிக்கை செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

    கூட்டத்தில் தணிக்கை அலுவலர்கள், ஊராட்சி பணியாளர்கள், பணிதல பொறுப்பாளர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • சாலை சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தவும், தரமானதாகவும் அமைக்க வேண்டும்.
    • 3 கட்டுமான குழுக்களை கொண்டு ஒரே நேரத்தில் இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    பாபநாசம்:

    கும்பகோணம் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கப்பட்டுள்ள சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம், பாபநாசம் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார்.

    அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது :-

    கும்பகோணம்- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை சிதிலமடைந்து பொது போக்குவரத்துக்கு பெரும் சவாலாக இருந்து வந்த நிலையில் சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு இந்த சாலையில் தற்போது சீரமைப்புப் பணிகள் தொடங்கியுள்ளன.

    தஞ்சாவூரிலிருந்து தொடங்கப்பட்டுள்ள அந்த பணியானது ஒரேயொரு கட்டுமான குழுவைக் கொண்டு கும்பகோணம் நோக்கி மிகவும் மெதுவாக நடைபெற்று வருகின்றது.

    கடந்த சில வாரங்களாக பெய்துள்ள தொடர்மழை காரணமாக இந்த சாலை உருக்குலைந்த நிலையில் காணப்படுவதால், நடைபெற்றுக் கொண்டிருக்கும் சாலை சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்தவும், தரமானதாகவும் அமைத்திட வேண்டும்.தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் ரவுண்டானாவிலிருந்து அய்யம்பேட்டை வரை ஒரு பகுதியாகவும். அய்யம்பேட்டை தொடங்கி பாபநாசம் உத்தாணி வரை ஒரு பகுதியாகவும், உத்தாணி முதல் தாராசுரம் புறவழிச்சாலை வரை ஒரு பகுதியாகவும் ஆக 3 பகுதியாக இந்த பணிகளை, 3 கட்டுமான குழுக்களை கொண்டு ஒரே நேரத்தில் இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் வேகமாக இந்த பணிகளை நிறைவு செய்ய முடியும்.

    இந்த நெடுஞ்சாலையில் வடிகால் மற்றும் சிறு பாலங்கள் கட்டுமானத்தின் போது, அய்யம்பேட்டை, பாபநாசம் பேரூராட்சிப் பகுதிகளில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் பேரூராட்சி பொறியாளர்கள். பேரூராட்சி மன்றத் தலைவ ர்களின் ஆலோசனைகளின் அடிப்படையிலும், பேரூராட்சி அல்லாத கிராமப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களின் பொறியாளர்கள், ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஒன்றியக் குழு மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆகியோரின் ஆலோசனைகளின் அடிப்படையிலும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • காதாரப் பணிகளை வார்டு கவுன்சிலர் சுகன்யா ஜெகதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • வீடுகளில் வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் டயர்களில் தண்ணீர் தேங்கி அதில் கொசு உற்பத்தியாகிறது.

    பல்லடம்:

    பல்லடம் நகராட்சி பகுதியில் கடந்த சில தினங்களாக பருவ மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மழை நீர் தேக்கம் ஏற்பட்டு கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நகராட்சி சுகாதாரத் துறை சார்பில், நகரில் பல்வேறு இடங்களில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. பல்லடம் 8-வது வார்டு பச்சாபாளையம் பகுதியில் நடைபெற்ற சுகாதாரப் பணிகளை வார்டு கவுன்சிலர் சுகன்யா ஜெகதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கொசு உற்பத்தியை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது :-

    பொதுமக்கள் தங்களது வீட்டில் குப்பைகள்,பயன்படுத்தாத டயர்கள், அம்மிக்கல் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நல்ல தண்ணீரில் தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. எனவே நல்ல தண்ணீரை உரிய முறையில் மூடி வைக்கவேண்டும். பொதுமக்கள் தண்ணீரை திறந்த நிலையில் வைக்ககூடாது. அவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகிவிடும். வீடுகளில் வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் டயர்களில் தண்ணீர் தேங்கி அதில் கொசு உற்பத்தியாகிறது. எனவே பொதுமக்கள் அதுபோன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • தஞ்சை மாவட்டத்தில் நெல்லுக்கு இணையாக பயிரிடப்படும் கரும்பில் புதிய வகை நோய் காணப்படுகிறது.
    • ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 21-22-ம் ஆண்டு முதல் ரூ.114 கோடி மனித சக்தி நாள் உருவாக்கப்பட்டு உள்ளது. 22-23-ம் ஆண்டு நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    தூய்மை இந்தியா இயக்கத்தில் வல்லம் பேரூராட்சியில் கழிவுகள் மேலாண்மை சிறப்பாக நடைபெறுகிறது.

    அதனைப் பின்பற்றி மற்ற பேரூராட்சிகள், நகராட்சிகளில் கழிவுகள் மேலாண்மை அமைக்க ஆலோசிக்கப்பட்டது.

    தேசிய நெடுஞ்சாலை துறையில் விக்கிரவாண்டி- தஞ்சாவூர் சாலை பணிகளை விரைந்து முடிக்கவும் பூண்டி, அம்மாபேட்டை வழியாக அந்த தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைவாக முடிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டது.

    மின்சாரத் துறையின் மூலம் மாநகராட்சிகளில் நடைபெறும் சாலை விரிவாக்கங்களில் மின்சார துறைகளின் தேவைகளை நிறைவேற்றி தரவும், இரும்புதலையில் மின் துணை நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ள மின் இலாகா அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சை மாநகராட்சியில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.

    தஞ்சை மாவட்டத்தில் நெல்லுக்கு இணையாக பயிரிடப்படும் கரும்பில் புதிய வகை நோய் காணப்படுகிறது.

    அதனை கட்டுப்படுத்துவதற்கு வேளாண்துறைக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

    திருமண்டங்குடி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகைகளை சட்டரீதியாக பெறுவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    ×