என் மலர்
நீங்கள் தேடியது "Snatching"
- தங்கம்மாள் நேற்று முன்தினம் ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலுக்கு சென்றார்.
- பூஜை முடிந்தபின்னர் தங்கம்மாள் வெளியே வந்து தனது கழுத்தில் கிடந்த 4 பவுன் செயின் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி தங்கம்மாள்(வயது 70).
இவர் நேற்று முன்தினம் ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலுக்கு சென்றார். அங்கு நடந்த கோபூஜையில் பங்கேற்றபோது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. பூஜை முடிந்தபின்னர் தங்கம்மாள் வெளியே வந்து தனது கழுத்தில் கிடந்த 4 பவுன் செயின் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுதொடர்பாக அவர் தாழையூத்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நகையை பறித்துக்கொண்டு 2 பேரும் தப்பியோடினர்.
- இது தொடர்பாக பூபதி என்கிற பிரபாகரன் என்பவரை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரகு (36). இவர் மேட்டூர் ரோட்டில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகின்றார். சம்பவத்தன்று இவரது கடைக்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.
அப்போது 2 பேரும் திடீரென்று வியாபாரி ரகுவிடம் வாய்த்தகராறு செய்ததோடு தாக்குதலில் ஈடுபட்டனர்.
அப்போது ரகுவின் கழுத்தில் இருந்த 6 அரை பவுன் நகையை பறித்துக்கொண்டு 2 பேரும் தப்பியோடினர்.
இதையடுத்து பின்னால் மற்றொரு வாகனத்தில் ரகு துரத்தி சென்றதையடுத்து மோட்டார் சைக்கிளை அந்த கும்பல் அப்படியே விட்டு விட்டு தப்பியோடிவிட்டனர்.
இது தொடர்பாக ரகு கொடுத்த புகாரின் பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட ஈரோடு பழைய கரூர் ரோடு, கோணவாய்க்கால், பாலதண்டாயுதம் வீதியை சேர்ந்த பூபதி என்கிற பிரபாகரன் (30) என்பவரை கைது செய்தனர்.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சுரேஷ் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.
- செயின் பறித்ததாக கொடுத்த புகாரின்பேரில் வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
- இவ்வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டியை சேர்ந்தவர் தமிழரசி (42) இவர் கடந்த மார்ச் மாதம் நத்தம்- மதுரை சாலையில் உள்ள நல்லாகுளம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்த ஹரிதர்சன் (26) என்பவர் 6 பவுன் தங்க செயினை பறித்து சென்றார்.
இச்சம்பவம் தொடர்பாக நத்தம் போலீசில் தமிழரசி புகார் செய்தார். அதன் பேரில் நத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து ஹரிதர்சனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி விசாரணை செய்து வந்தார். இந்நிலை யில் இந்த வழக்கு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி உதயசூரியா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் ஹரிதர்சனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளி த்தார்.
- வள்ளியூர் அருகே உள்ள சவுந்திரபாண்டியபுரத்தை சேர்ந்த திவ்யா நர்சிங் பயிற்சி பள்ளியில் பயிற்சிக்கு சென்று வருகிறார்.
- மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர்கள் 2 பேர் அவரது மொபட்டை வழிமறித்து திவ்யா கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் நகையை பறித்து சென்றனர்.
நெல்லை:
வள்ளியூர் அருகே உள்ள சவுந்திரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் ரூபசேகர். இவரது மனைவி திவ்யா (வயது31). இவர் வள்ளியூரில் உள்ள நர்சிங் பயிற்சி பள்ளியில் பயிற்சிக்கு சென்று வருகிறார்.
இதற்காக அவர் வீட்டில் இருந்து தனது மொபட்டில் வள்ளியூர் சென்றார். பின்னர் மீண்டும் வீடு திரும்பினார். அவர் வள்ளியூர்-சவுந்திரபாண்டியபுரம் பகுதியில் சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர்கள் 2 பேர் அவரது மொபட்டை வழிமறித்து திவ்யா கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் நகையை பறித்து சென்றனர்.
இது தொடர்பாக அவர் வள்ளியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோன்ஸ் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
வள்ளியூர் அருகே உள்ள வடக்கு ஆச்சியூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முப்புடாதி. இவரது மனைவி பிரேமா(வயது 35).
சம்பவத்தன்று ஆனைகுளத்தில் உள்ள முப்புடாதியின் உறவினர் வீட்டுக்கு கோவில் கொடைவிழாவில் பங்கேற்பதற்காக பிரேமா சென்றுள்ளார். அன்று இரவு கொடை விழா முடிந்து அனைவரும் தூங்க சென்றுள்ளனர்.
அப்போது காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு பிரேமா தூங்கி கொண்டிருந்தார்.
நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர், அயர்ந்து தூங்கி கொண்டிருந்த பிரேமாவின் கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்கநகையை பறிக்க முயன்றபோது விழித்துக்கொண்ட பிரேமா, நகையை பிடித்தார்.
ஆனால் அதில் சுமார் 6 கிராம் எடை கொண்ட செயின் துண்டு மட்டும் அவரது கையில் சிக்கியது. மற்றொரு பகுதி தங்க செயின் மர்ம நபரின் கையில் மாட்டிக்கொண்டது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம நபர் அங்கிருந்து ஓடிவிட்டார்.
இதுதொடர்பாக வள்ளியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.