என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண் குழந்தை பிறந்தது"

    • பிரசவம் பார்த்த பெண்போலீசுக்கு பாராட்டு
    • முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதி

    அரக்கோணம்

    திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக வேலை செய்து வருபவர் அஸ்வின் குமார். இவரது மனைவி சாந்தினி (வயது 29). நிறைமாத கர்ப்பிணியான அவரை சென்னை பெரம்பூர் ரெயில்வே மருத்துவமனைக்கு பிரசவத் துக்காக நேற்று முன்தினம் மங்களூரில் இருந்து சென்னை செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அஸ்வின் குமார் அழைத்துச்சென்றார்.

    ரெயில் அரக்கோணம் அருகே வந்தபோது சாந்தினிக்கு பிரசவவலி அதிகமானது. இது குறித்து அஸ்வின் குமார் உடனே அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    ரெயில் அரக்கோணம் வந்தடைந்ததும் அங்கு தயாராக இருந்த பெண் போலீசார் சாந்தினியை இறக்கி பெண்கள் தங்கும் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பெண் போலீஸ் பரமேஸ்வரி உதவியுடன் சாந்தினிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    அதைத் தொடர்ந்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சாந்தினி மற்றும் பிறந்த ஆண் குழந்தையையும் போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பிரசவத்திற்கு உதவியாக இருந்த அரக்கோணம் ரெயில்வே பெண் போலீஸ் பரமேஸ்வரியை ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் பலரும் பாராட்டினர்.

    • 108 ஆம்புலன்ஸ் டிரைவர் நந்தகுமார் வாகனத்தை ஓரமாக நிறுத்தினார்.
    • நித்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தாலுகா, நம்பியூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி நித்யா (22).

    இந்நிலையில் நிறை மாத கர்ப்பிணியான இருந்த நிந்யா நேற்று இரவில் பிரசவ வலியால் துடித்தார். அதை அறிந்த அவரது உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலறிந்த 108 ஆம்புலன்ஸ் உடனடியாக நம்பியூரில் இருந்து விரைந்து வந்தது. மருத்துவ நுட்புநர் கவுரிநாத் பரிசோதித்த பின்னர் உடனடியாக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    108 ஆம்புலன்ஸ் கொன்னமடை பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது நித்யாவுக்கு பிரசவ வலி அதிகரிக்கவே, நிலைமையை புரிந்துகொண்ட 108 ஆம்புலன்ஸ் டிரைவர் நந்தகுமார் வாகனத்தை ஓரமாக நிறுத்தினார்.

    பின்னர் மருத்துவ நுட்புநர் கவுரிநாத் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். அப்போது நித்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    பின்னர் தாயும்-சேயும் பத்திரமாக கோபி செட்டி பாளையம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ நுட்புநர் கவுரிநாத் மற்றும் வாகன ஓட்டுனர் நந்தகுமார் ஆகியோரின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • பிரசவ வார்டை சுற்றி போலீசார் பாதுகாப்பு
    • சேலம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்

    வேலூர்:

    தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த பேயதேவன் என்பவர் மனைவி நாகரத்தினம் (வயது 30). இவர் கஞ்சா வழக்கில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் நிர்வாக காரணங்களால் வேலூர் ஜெயிலுக்கு மாற்றப்பட்டார். அப்போது அவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் அவ்வப்போது பரிசோதனை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகரத்தினத்துக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை ஜெயில் காவலர்கள் உடனடியாக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு நாகரத்தினத்துக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

    தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். நாகரத்தினம் அனுமதிக்கப்பட்டுள்ள பிரசவ வார்டை சுற்றி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • சங்ககிரி அருகே துளுக்கன் காட்டை சேர்ந்த வாலிபர் தனியார் நூல் மில்லில் கூலி வேலை செய்து வந்தபோது சங்ககிரியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்து.
    • கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ந் தேதி சங்ககிரி- ஈரோடு பிரிவு சாலையில் உள்ள விநாயகர் கோவில் வைத்து பெற்றோர்க ளுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே துளுக்கன் காட்டை சேர்ந்த வாலிபர் தனியார் நூல் மில்லில் கூலி வேலை செய்து வந்தபோது சங்ககிரியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்து.

    காதல்

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்ய கொள்ள முடிவு செய்து கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ந் தேதி சங்ககிரி- ஈரோடு பிரிவு சாலையில் உள்ள விநாயகர் கோவில் வைத்து பெற்றோர்க ளுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.

    நாளடை வில் இது பற்றி இரு வீட்டு பெற்றோர்க ளுக்கும் தெரிந்ததை அடுத்து ஏற்றுக் கொள்ளாத தால் வாலிபர் சிறுமியை அழைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் நடத்தி வந்தார். இந்த நிலையில் கர்ப்பமான சிறுமி கடந்த 9-ந் தேதி பிரசவத்திற்காக சேலம் அரசு மருத்துவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . அங்கு சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    போக்சோ பாய்ந்தது

    இது குறித்து அரசு மருத்துவமனை அதிகாரிகள் சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன்படி இன்ஸ்பெக்டர் வளர்மதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி ஆகியோர் குழந்தை திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • காயத்ரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
    • மருத்துவர் ஆம்புலன்சை சாலையோரமாக நிறுத்தி காயத்ரிக்கு பிரசவம் பார்த்தனர்.

    ஈரோடு:

    வட மாநிலத்தை சேர்ந்தவர் சம்பு மகா நந்தா. இவரது மனைவி காயத்ரி. இவர்கள் இருவரும் தற்போது திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா ஆலாங்காட்டு புதூர் பகுதியில் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காயத்ரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் அவசர காலம் மருத்துவர் காயத்ரியை குன்னத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று கொண்டு இருந்தார்.

    ஆனால் செல்லும் வழியிலேயே காயத்ரிக்கு பிரசவ வலி அதிகரிக்கவே நிலைமையை புரிந்து கொண்ட விஜயமங்கலம் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அவசரகால மருத்துவர் ஆம்புலன்சை சாலையோரமாக நிறுத்தி காயத்ரிக்கு பிரசவம் பார்த்தனர். இதில் காயத்ரிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும்-சேயும் நலமாக உள்ளனர்.

    இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக குன்னத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

    ஆம்புலன்சில் விரைந்து வந்த ஊழியர்கள் நித்யாவை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே நித்யாவுக்கு பிரசவ வலி அதிகமானது.
    காஞ்சிபுரம்:

    உத்திரமேரூர் அருகே உள்ள ஆலஞ்சேரி மதுரா மலைக்காலனி கிராமத்தை சேர்ந்தவர் நித்யா. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு வீட்டில் இருந்த போது திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

    இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்சில் விரைந்து வந்த ஊழியர்கள் நித்யாவை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் போகும் வழியிலேயே நித்யாவுக்கு பிரசவ வலி அதிகமானது. இதையடுத்து ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் சாம்சுந்தர் மற்றும் ஊழியர்கள் அவருக்கு பிரசவம் பார்த்தனர்.

    அப்போது நித்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது . பிறகு தாயும், குழந்தையும் சாலவாக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். தற்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர்.
    ×