என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "camping"

    • காரைக்கால் மாவட்டம் சமுதாய நலப்பணித் திட்டம் சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு குறித்து ஒரு நாள் சிறப்பு முகாம் சிறப்பாக நடைபெற்றது.
    • இம்முகாமில் காரைக்கால் மாவட் டத்தில் உள்ள 10 பள்ளிகளில் இருந்து 250 மாணவர்கள் பங்கேற்றார்கள்.



    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டம் சமுதாய நலப்பணித் திட்டம் சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு குறித்து ஒரு நாள் சிறப்பு முகாம் சிறப்பாக நடைபெற்றது. காரைக்கால அடுத்த ராயன் பாளையம் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, புதுச்சேரி போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இம்முகாமில் காரைக்கால் மாவட் டத்தில் உள்ள 10 பள்ளிகளில் இருந்து 250 மாணவர்கள் பங்கேற்றார்கள்.

    இம்முகாமில் மாணவர்க ளுக்கு போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் எதிர்ப்பு, சத்தான உணவுகள், மரங்களின் முக்கியத்துவம், தூய்மையின் அவசியம் பற்றியும் தன்னார்வலர்க ளுக்கு விழிப்புணர்வு அளிக்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில், காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்ட் லோகேஸ்வரன், சமுதாய நலப்பணித் திட்டத்தின் மாநில அதிகாரி சதீஷ்குமார், கல்வித்துறையின் மேல்நிலைக் கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி, காரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன். நவோதயா பள்ளியின் முதல்வர் நந்தகுமார், போக்குவரத்து துறையைச் சார்ந்த கல்விமாறன், நாட்டு நலப்பணி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் லட்சு மணபதி, சமுதாய நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • பரமக்குடியில் தொழில் பழகுநர் தேர்வு முகாம் வருகிற 10-ந்தேதி நடக்கிறது.
    • 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள், பட்டயம் பட்டதாரி மாணவர்கள் அனைவரும் நேரடியாக கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதமரின் தேசிய தொழில் பழகுபவர் பயிற்சிக்குரிய தேர்வு முகாம் வருகிற 10-ந்தேதி காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரையில் நடைபெறுகிறது. இந்த முகாமில் 5-க்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்கள் (தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், தமிழ்நாடு மின்சார வாரியம், வழுதூர் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிறுவனம்,தமிழ்நாடு அரசு உப்பு உற்பத்தி கழகம்,தமிழ்நாடு அரசு பணிமனை) மற்றும் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் நேரடியாக தொழில் பழகுநர் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இதில் ஐ.டி.ஐ-யில் என்.சி.வி.டி,எஸ்.சி.வி.டி பயிற்சி முடித்த வர்கள் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள், பட்டயம் பட்டதாரி மாணவர்கள் அனைவரும் நேரடியாக கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 21-ந் தேதி நடக்கிறது.
    • 50-க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தேர்வு செய்ய உள்ளனர்.

    மதுரை

    மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவ னங்கள் கலந்து கொண்டு கல்வித்தகுதிக்கேற்ப வேலைநாடும் இளை ஞர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இந்த முகாமில் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக் கொள்ளலாம். வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் நிறுவ னங்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள த்தில் சுய விவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

    முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப் படத்துடன் 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை)காலை 10 மணிக்கு மதுரை, புதூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறு வதால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது. மேற்கண்ட தகவல் மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
    • செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பங்ேகற்றார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றிய செயலாளர் சேவியர்தாஸ் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் அரண்மனை சிறுவயலில் அ.தி.மு.க. இளைஞர்-இளம் பெண்கள் பாசறை, மகளிரணி மற்றும் பூத் கமிட்டி அமைப்பதற்கான வழிமுறைகள் மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. மேலும் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தையும் நிர்வாகிகள் பெற்று கொண்டனர். இதில் இளைஞர்-இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜ், அமல்ராஜ், விவசாய ஒன்றிய செயலாளர் முருகேசன், சிறுபான்மை பிரிவு ஒன்றிய செயலாளர் ஜின்னா, இளைஞரணி ஒன்றிய செயலாளர் ராஜா, மகளிரணி ஆனந்தவல்லி, சுரேஷ், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு தடுப்பு சிகிச்சை முகாம் 25-ந் தேதி வரை நடக்கிறது.
    • திட்டத்தினை சிறப்புற நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தேசிய சுகாதாரக் கொள்கை 2017-ம் ஆண்டின் நோக்கம் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 2016-ல் 39 ஆக இருந்ததை 2025-ம் ஆண்டில் 23 ஆக குறைப்ப தாகும். 2023-ம் ஆண்டிற்குள் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 1000 பிறப்புகளுக்கு 10 ஆக குறைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் இலக்கு ஆகும்.

    குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறறுப்போக்கு, 5 வயதிற்குட்பட்ட குழந்தை களின் இறப்பிற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக விளங்குகிறது. நம் நாட்டில் ஆண்டிற்கு சுமார் 1 இலட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கினால் இறந்து போகிறார்கள்.

    ஏழை, எளிய மக்களின் குழந்தைகளே பெரும்பாலும் வயிற்றுப்போக்கினால் இறக்க நேரிடுகிறது. இவ்வாறு ஏற்படுகின்ற 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்பினைத் தடுக்கும் விதமாக நமது ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 25-ந் தேதி வரை இருவார காலத்திற்கு தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

    பொது சுகாதாரத்துறையு டன் இணைந்து தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் நீரகற்று வாரியம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல்வாழ்வு, கிராம பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், பள்ளிக்கல்வி ஆகிய துறைகள் இணைந்து இத்திட்டத்தினை சிறப்புற நடத்திட திட்டமிடப் பட்டுள்ளது.

    நமது மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 13 ஆயிரத்து 577 குழந்தைகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளனர். 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஓ.ஆர்.எஸ் பொட்டலம் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் இத்திட்டம் நடைபெறும். இருவார காலங்களில் வழங்கப்படவுள்ளது.

    அனைத்து ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கைகழுவுதல் மூலம் கை சுத்தம் பேணுவது பற்றிய செயல்முறை விளக்கம் வழங்கப்பட உள்ளது. ஓ.ஆர்.எஸ் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் வயிற்றுப்போக்கிற்கு மிகவும் சரியான சிகிச்சை முறையாகும். ஆகவே பொதுமக்கள், இத்திட்டதில் பயணியாற்றும் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பினை வழங்கி, 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளையும் வயிற்றுப்போக்கினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாத்திடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விளாச்சேரியில் கால்நடை தடுப்பூசி முகாம் நடந்தது.
    • தகுதியான கன்றுகளுக்கு கால்நடை மருந்தகத்தின் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    மதுரை

    மதுரை விளாச்சேரி பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய நோய் தடுப்பு திட்டத்தின்கீழ் கால்நடை களில் ஏற்படும் 'புருசெல்லா' எனும் கன்று வீச்சு நோய்க்கு 2-வது சுற்று தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. தகுதியான கன்றுகளுக்கு கால்நடை மருந்தகத்தின் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. டாக்டர் சிவக்குமார் மற்றும் ஆய்வாளர்கள் தமிழ்செல்வி, செந்தாமரை ஆகியோர் இந்த பணியை மேற்கொண்டனர்.

    முகாமில் அவர்கள் கூறியதாவது:- புருசெல்லா ேநாய் கால்நடைகளில் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது. இது புருசெல்லா எனும் நுண்ணுயிர் கிருமியால் ஏற்படுகிறது. இந்த நோய் மனிதர்களின் மூட்டு மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. 4-ல் இருந்து 8 மாத வயதுடைய பெண் பசு, எருமை கன்றுகளுக்கு உரிய பாதுகாப்பு முறை களை பின்பற்றி ஒருமுறை தடுப்பூசி செலுத்தினால் வாழ்நாள் முழுவதும் அவைகளை இந்த நோயில் இருந்து காப்பாற்றுவதோடு மனிதர்களுக்கு பரவுவதையும் தவிர்க்கலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கினார்.
    • முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார் நன்றி கூறினார்.

    சீர்காழி:

    தமிழகம் முழுவதிலும் நூறு இடங்களில் கலைஞரின் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகளின் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.

    இந்நிலையில் திருமுல்லைவாசல் அரசு பள்ளியில் நடைபெற்ற இம்முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி தலைமை வகித்தார். சட்டபேரவை உறுப்பினர்கள் எம்.பன்னீர்செல்வம், நிவேதா.முருகன், பாராளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குனர் அமுதவல்லி முகாமினை தொடங்கிவைத்தார்.

    முகாமில் பள்ளி மாணவர்களுக்கு மூக்கு கண்ணாடி, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கினார். இதில் சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, கொள்ளிடம் ஒன்றிய பெருந்தலைவர் ஜெயபிரகாஷ், சீர்காழி திமுக நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மலர்விழி திருமாவளவன் பங்கேற்றனர். முன்னதாக மயிலாடுதுறை மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அஜித்பிரபுகுமார் வரவேற்றார். முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார் நன்றி கூறினார்.

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
    • இந்த தகவலை கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    மதுரை

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பெரிய அளவிலான கால்நடை மருத்துவ முகாமானது நாளை (28-ந்தேதி) அலங்காநல்லூர் வட்டாரம், முடுவார்பட்டி கிராமத்தில் நடைபெற உள்ளது. முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை பணி, குடற்புழு நீக்கம், தடுப்பூசி பணி, சிணை பரிசோதனை, மலட்டுதன்மை நீக்கம் மற்றும் கால்நடை பரிசோதனை, ஊட்டசத்து வழங்குதல், தீவனக் கன்றுகள் விநியோகித்தல் ஆகியவைகள் வழங்கப்பட உள்ளது. எனவே முடுவார்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் உள்ள கால்நடை வளர்ப்போர்கள் இதில் பங்கேற்று பயனடையலாம்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    • நாட்டுக்கோழி வளர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பனைக்குளம் வட்டார கால்நடை வளர்ப்போர் சங்க தலைவர் செய்குல் அக்பர் செய்திருந்தார்.

    ராமநாதபுரம்

    இந்திய அரசு உயிர்த் தொழில் நுட்பவியல் துறைத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் வேலூரிலுள்ள வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் சார்பில் கால்நடை, கோழி, நாட்டுக்கோழி வளர்ப்புப் பற்றிய விழிப்புணர்வு முகாம் பனைக்குளத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மேனாள் விரிவாக்கக் கல்வி இயக்குநர் பேராசிரியர் டாக்டர் சுதீப் குமார். வேலூரிலுள்ள வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும், திட்டத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் வேளாண் பேராசிரியர் சத்தியவேலு, திட்ட துணை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சந்தீப் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் விஜயலிங்கம் நாட்டுக்கோழி வளர்ப்பில் பண்ணையாளர்களின் தற்போதைய நிலைப்பாடும் மேம்பாட்டுக்காகக் கடைப்பிடித்திட வேண்டிய வழிமுறைகளும் என்ற தலைப்பில் தொழில் நுட்பவுரையாற்றினார். இத்திட்டத்தின் களப்பணியாளர் நவீன் நன்றி கூறினார். ராமநாதபுர மாவட்டம் பனைக்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பனைக்குளம் வட்டார கால்நடை வளர்ப்போர் சங்க தலைவர் செய்குல் அக்பர் செய்திருந்தார்.

    • அரசு மருத்துவ மனையில் காசநோய் இறப்பில்லா திட்டத்தின் கீழ் எப்-75 ஊட்ட சத்து பானம் வழங்கும் முகாம் நடை பெற்றது.
    • அதி தீவிர சிகிச்சை கீழ் உள்ள காசநோயாளிகள் 6 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் சார்பாக குமார பாளையம் அரசு மருத்துவ மனையில் காசநோய் இறப்பில்லா திட்டத்தின் கீழ் எப்-75 ஊட்ட சத்து பானம் வழங்கும் முகாம் நடை பெற்றது. அதி தீவிர சிகிச்சை கீழ் உள்ள காசநோயாளிகள் 6 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய ஊட்டச்சத்து வழங்கப்பட்டது.

    தன்னார்வலர் பிரபு, மாவட்ட காசநோய் துணை இயக்குனர் வாசுதேவன், குமாரபாளையம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் பாரதி, உதவி டாக்டர் ஆர்த்தி, முதுநிலை சிகிச்சை மேற்பாற்வையாளர் அருள்மணி, சுகாதார பார்வையாளர் கெளதம், ஆய்வக பொறுப்பாளர் சரண்யா மற்றும் செவிலியர்கள் பலரும் பங்கேற்றனர்.

    • தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் நாமக்கல் ஆவின் சார்பாக இலவச சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    • இதில் இருக்கூர் கிரா மத்தை சேர்ந்த கால்நடை விவசாயிகள் தங்களது கால்நடைகளை முகாமிற்கு கொண்டு வந்து தேவையான சிகிச்சைகளை பெற்று சென்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா இருக்கூர் பகுதியில் தமிழக அரசின் கால்நடை பரா மரிப்புத் துறை மற்றும் நாமக்கல் ஆவின் சார்பாக இலவச சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    இதில் இருக்கூர் கிரா மத்தை சேர்ந்த கால்நடை விவசாயிகள் தங்களது கால்நடைகளை முகாமிற்கு கொண்டு வந்து தேவையான சிகிச்சைகளை பெற்று சென்றனர். மொத்தம் 315 கால்நடைகள் பயனடைந்தன.

    இம்முகாமில் கன்றுகள் மற்றும் ஆட்டினங்களுக்கு குடற்புழு நீக்க மருந்துகள், சினை பருவத்தில் உள்ள பசு, எருமைகளுக்கு செயற்கை முறை கருவூட்ட்ல கள் செய்யப்பட்டன.

    சினை பிடிக்காத கால் நடைகளுக்கான சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட் டது. 49 கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து தாது உப்பு கலவைகள் வழங்கப்பட்டன.

    மேலும், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பாக கண்காட்சி அரங்கும் அமைக்கப்பட்டு கால்நடை வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    இம்முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை நாமக்கல் மண்டல இணை இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் நடராஜன், திருச்செங்கோடு கோட்ட உதவி இயக்குநர் டாக்டர் அருண் பாலாஜி, கால்நடை நோய் புலனாய்வுத் துறை உதவி இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன், ஆவின் உதவி மேலாண் இயக்குனர்கள் டாக்டர் சின்னுசாமி மற்றும் டாக்டர் முருகுசெல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் கபிலர்மலை கால்நடை மருந்தக கால்நடை மருத்துவர் ரவிச்சந்திரன் தலைமையில் கால்நடை மருத்துவர்கள் தனவேல், மணிவேல், செந்தில்குமார், சையது அஸ்லாம், ரமேஷ், ராஜ்குமார், சசிக்குமார் கால்நடை ஆய்வாளர் பொன்னம்மாள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சுரேஷ் மற்றும் துரைசாமி, செயற்கை முறை கருவூட்டல் பணியாளர் சதீஷ் குமார் உள்ளிட்ட கால்நடை மருத்து வக் குழுவினர் சிகிச்சை பணிகளை மேற்கொண்ட னர்.

    முகாமிற்கு தேவையான ஏற்பாடுகளை இருக்கூர் பால் உற்பத்தியாளர் கூட்டு றவு சங்க செயலர் பழனி வேல், ராமசாமி மற்றும் இருக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி உள்ளிட் டோர் செய்திருந்தனர்.

    • நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், மாணவ, மாணவியருக்கான ராகிங் தடுப்பு சட்ட விழிப் புணர்வு முகாம் நடந்தது.
    • கல்லூரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், மாணவ, மாணவியருக்கான ராகிங் தடுப்பு சட்ட விழிப் புணர்வு முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார். நாமக்கல் சார்பு நீதிபதி விஜய் கார்த்திக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:

    ராகிங் (கேலிவதை) நடவடிக்கையால், புதிய மாணவ மாணவிகள் மோச மான பாதிப்புகளை அடை கின்றனர். இந்த ராகிங் முறை தொடக்கக் காலத்தில், புதிய மாணவர்களுடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் இருந்தாலும், காலப் போக்கில், வன்மு றைச் செயல்களுக்கும், குற்றங்களுக்கும் வித்திடு வதாக அமைந்துவிட்டது.

    ராகிங் செய்வதை, பேச்சு, உடல் மற்றும் பாலி யல் ரீதியான துன்புறுத்தல் என 3 வகையாக பிரிக்க லாம். உடல் ரீதியான துன்புறுத்தல், இறப்புக்கு காரணமாக உள்ளது. அதற்கு, நாவரசு கொலை வழக்கு உதாரணம். மாண வர்களாகிய நீங்கள், எப்பே தும் ராகிங்கில் ஈடுபடக் கூடாது. முதலாம் ஆண்டு மாணவர் களுடன் , அன்பு பாராட்டி, தோழமை உணர்வுடன் பழக வேண்டும் என கூறினார்.

    சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பின் தலைவர் ராமசெழியன், துணை தலைவர் பழனிசாமி ஆகியோர், ராகிங் தடுப்பு சட்டம் பற்றியும், வழக்கு பதிவு செய்யும் முறை குறித்தும் விளக்கினர். கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட னர்.

    ×