என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ration shop"

    • புதுவையில் ரேஷன்கடைகள் கடந்த ஆட்சியில் இருந்து மூடிக்கிடக்கிறது. ரேஷன்கடை ஊழியர்க ளுக்கு 50 மாத சம்பளம் வழங்கப்படவில்லை.
    • ஊர்வலத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஊர்வலம் முக்கியவீதிகளின் வழியாக தலைமை செயலகம்நோக்கி வந்தது.

    புதுச்சேரி:

    புதுவையில் ரேஷன்கடைகள் கடந்த ஆட்சியில் இருந்து மூடிக்கிடக்கிறது.

    ரேஷன்கடை ஊழியர்களுக்கு 50 மாத சம்பளம் வழங்கப்படவில்லை. நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை ஏற்கனவே நடத்தி வருகின்ற னர். கவர்னர், முதல்-

    அமைச்சர், அமைச்சர்களை சந்தித்து மனுவும் அளித்துள்ளனர்.

    இந்நிலையில் பாரதிய புதுவை நியாய விலை கடை ஊழியர்கள் முன்னேற்ற நலச்சங்கத்தினர் தட்டாஞ்சாவடி தலைமை அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு சங்க தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பிரேமானந்த், இணை செயலாளர்கள் வினோத்குமார், சக்திவேல், தட்சிணாமூர்த்தி, பொருளாளர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊர்வலத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஊர்வலம் முக்கியவீதிகளின் வழியாக தலைமை செயலகம்நோக்கி வந்தது. போலீசார் அவர்களை ஆம்பூர் சாலை- அம்பலத்தடையார் மடத்து வீதி சந்திப்பில் தடுத்து நிறுத்தினர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    குடிமைப்பொருள் வழங்கல்துறையில் ஊழியர்களை இணைத்து சம்பளம் வழங்க வேண்டும். நேரடி பண பரிமாற்ற திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 10 ஆண்டு பணி முடித்த தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். ஊழியர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு 7 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    • வங்கிக்கணக்கு, ஆதார் எண் விபரங்களை ரேசன் கடைகளில் வழங்க வேண்டும்.
    • ராமநாதபுரம் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் குடும்ப அட்டை தாரர்களில் வங்கி கணக்கு வைத்து ஆதார் எண் இணைக்கப் பெறாமையாலும் கணக்கு எண் ஒரு வேளை இல்லாமலும் இன்னும் 21704 குடும்ப அட்டை தாரர்கள் உள்ளதாக விவரங்கள் கண்டறியப்பட்டு உள்ளன.

    இத்தகைய குடும்ப அட்டை தாரர்கள் விபரம் தற்போது சம்மந்தப்பட்ட நியாய விலைக்கடை வாரியாக பிரித்தெடுக்கப்பட்டு அவர்களிடமிருந்து வங்கி கணக்கு எண்ணில் ஆதார் எண்ணை தொடர்புப்படுத்தி இயக்கத்திற்கு கொண்டு வரவேண்டும் என அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் அதற்கான நடவடிக்கையாக கணக்கு எண் உள்ள வங்கியில் படிவம் எண் 2-ஐ பெற்று விவரங்களைப்பூர்த்தி செய்து உடன் அளிக்கும் படியும் இது வரை வங்கிக்கணக்கு எண் இல்லாதவர்கள் கூடுமானவரை அருகில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கி அல்லது கூட்டுறவு வங்கிகளில் புதியதாக வங்கிக்கணக்கு எண், ஆதார் எண் விவரத்தினை இணைத்து உடன் தொடங்கிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • பொருள்களின் தரம் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்
    • தண்ணீர் இணைப்பு கொடுக்க உத்தரவிட்டார்

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    வாலாஜா நகராட்சி கச்சால் நாயக்கர் தெருவில் உள்ள கற்பகம் கூட்டுறவு சிறப்பங்காடி நியாய விலை கடையில் உணவுப் பொருள்களின் தரம் மற்றும் அரிசி இருப்பு ஆகியவற்றை பார்வையிட்டு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.

    அப்பொழுது பொருள்கள் வழங்கப்பட்ட விவரங்கள், தற்பொழுது இருப்பு உள்ள அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவைகளை எடை போட்டு ஆய்வு செய்தார்.பொருட்கள் இருப்பு எடை அளவை ஆகியவற்றை கைபேசி செயலின் மூலம் பதிவேற்றம் செய்தார்.

    இதனைத் தொடர்ந்து வாலாஜா ஊராட்சி ஒன்றியம் பூண்டி ஊராட்சியில் உள்ள நியாய விலை கடைகளிலும் அரிசி, பருப்பு ஆகியவற்றின் தரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து இருப்பில் உள்ள பொருள்களில் எடை அளவை ஆய்வு செய்து பொருட்களின் எடை அளவு சரியாக இருக்கின்றது என தெரிவித்தார்.மேலும் பொதுமக்களிடம் பொருள்களின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

    இதனைத் தொடர்ந்து பூண்டி ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் திடீரென ஆய்வு செய்து மையத்தில் உள்ள கழிப்பறைகள் சுகாதாரமற்ற இருந்ததை பார்வையிட்டு முறையாக குழந்தைகளுக்கு சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    மேலும் தண்ணீர் வசதிகள் இல்லை, இதனை உடனடியாக சரி செய்து தண்ணீர் இணைப்பு கொடுக்க உத்தரவிட்டார்.

    குழந்தைகளுக்கு சுகாதாரமான சூழ்நிலையை மையத்தில் அமைத்து கொடுக்க வேண்டும் என அங்கன்வாடி மைய ஊழியருக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார், வட்டாட்சியர் நடராஜன், வட்ட வழங்கல் அலுவலர் கண்ணப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி மற்றும் வருவாய்த்துறை பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • லாரியில் மூட்டை மூட்டையாக கோதுமை, அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் இறக்கிவைக்கப்பட்டன.
    • உணவுப் பொருட்களை வாங்க வரும் பொதுமக்களிடம் அடுத்த மாதத்துக்கானது என்று சொல்வதால் அவா்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாநகரில் உள்ள நியாய விலைக் கடைகளில் தரமான உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் செ.முத்துகண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூா் மாநகராட்சி 60-வது வாா்டு இந்திரா காலனி, முத்தனம்பாளையத்தில் உள்ள நியாய விலைக் கடையில் இந்த மாதத்துக்கான கோதுமை இருப்பில் இல்லை என்று விற்பனையாளா் தெரிவித்தாா். ஆனால், அப்போது லாரியில் மூட்டை மூட்டையாக கோதுமை, அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் இறக்கிவைக்கப்பட்டன.

    இதுகுறித்து கேட்டபோது அடுத்த மாதத்துக்கான இருப்பு என்பதால் அதனை வழங்க முடியாது என்று விற்பனையாளா் தெரிவித்தாா். இந்த மாதத்துக்கான உணவுப் பொருட்களை வாங்க வரும் பொதுமக்களிடம் அடுத்த மாதத்துக்கானது என்று சொல்வதால் அவா்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனா்.

    இதனால் அரசின் திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாக தெரிகிறது. அதே வேளையில், அந்தக் கடையில் வழங்கப்பட்ட பச்சரிசியில் புழுக்கள் இருந்ததால் அதனை உணவுக்காக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

    ஆகவே நியாய விலைக் கடைகளில் போதிய அளவு உணவுப் பொருட்களை இருப்பு வைத்து தரமான முறையில் வழங்க கூட்டுறவுத் துறை மற்றும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மேற்கண்ட துறைகளை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • பாரதிய நியாயவிலை கடை ஊழியர்கள் நலச்சங்கத்தின் சார்பில் சுதேசி மில் அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
    • ரேஷன்கடை ஊழியர்களின் 55 மாத நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    பாரதிய நியாயவிலை கடை ஊழியர்கள் நலச்சங்கத்தின் சார்பில் சுதேசி மில் அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    போராட்டத்துக்கு கவுரவ தலைவர் ஆசைத்தம்பி, தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தனர். துணைத்தலைவர் ரமேஷ், செயலாளர் பிரேம் ஆனந்த் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் அருள், வினோத்குமார், சக்திவேல், சுரேஷ், தட்சிணாமூர்த்தி, பார்த்திபன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    நேரடி பணி பரிமாற்ற முறையை நிறுத்த வேண்டும். ரேஷன்கடை ஊழியர்களின் 55 மாத நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும். ரேஷன்கடைகளை திறக்க வேண்டும்.

    நேரடி பணி பரிமாற்ற முறையை ரத்து செய்யக்கோரி அமைச்சரவை அனுப்பிய கோப்புக்கு அனுமதி வழங்காத கவர்னரை கண்டித்து இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    ரேஷன் கடை ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா, எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க. பொறுப்பாளர் கோபால், முன்னாள் கவுன்சிலர் சக்திவேல் பங்கேற்றனர்.

    • அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த வெள்ளூர் குஜால்பேட்டை யில் நேற்று இப்பகுதியில் வசிக்கும் 223 குடும்ப அட்டைதாரர்கள் வசதிக்காக பகுதி நேர ரேசன் கடை தொடக்க விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் போளூர் தொகுதி அக்ரி. கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, ரேசன் கடையை திறந்து வைத்து ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்து பேசினார்.

    இதில் முன்னாள் எம் எல் ஏ ஜெயசுதா, போளூர் ஒன்றிய குழு முன்னாள் தலைவர்கள் செல்வன், ராஜன், முன்னாள் கவுன்சிலர்கள் கண்ணபிரான், ராஜாபாபு சந்தவாசல் முன்னாள் தலைவர் வெங்கடேசன் படவேடு முன்னாள் தலைவர் வெற்றிவேலன், சந்தவாசல் கிராம நிர்வாக அலுவலர் ஜோதிமுருகன, படவேடு ரேணுகாம்பாள் கோவில் முன்னாள் அறங்காவலர் லோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சந்தவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் சசிகுமார் நன்றி கூறினார்.

    • 27 பயனாளிகளுக்கு ரூ.5,42,541 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
    • ரூ.1,02,600 மதிப்பீட்டில் 15 பயனாளிகளுக்கு தையல் எந்திரம் வழங்கினார்.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சி, சடையப்பா நகர் மற்றும் கொங்கு நகர் பகுதிகளில் புதிய பகுதிநேர நியாய விலைக்கடைகள் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் அ.லட்சுமணன் தலைமை தாங்கினார். தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு திறந்து வைத்து பொருட்களை வழங்கினார்.

    மேலும் வெள்ளகோவில் சுபஸ்ரீ திருமண மண்டபத்தில் கூட்டுறவு துறையின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற ரூ.20.33 கோடி கடனுக்கான தள்ளுபடி சான்றிதழ்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மற்றும் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி வீல்சேர் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.3,18,000 மதிப்பீட்டில் பேட்டரி வீல்சேர்களையும், பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கான கைபேசி வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1,21,941 மதிப்பீட்டில் 9 பயனாளிகளுக்கு கைபேசிகளையும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1,02,600 மதிப்பீட்டில் 15 பயனாளிகளுக்கு தையல் எந்திரம் என மொத்தம் 27 பயனாளிகளுக்கு ரூ.5,42,541 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சொ.சீனிவாசன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் முருகேசன், வெள்ளகோவில் நகர்மன்றத்தலைவர் கனியரசி முத்துக்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சாயர்புரம் பேரூராட்சியில் 14-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ரேஷன் கடை பழுதடைந்த நிலையில் இருந்தது.
    • புதுப்பிக்கபட்ட‌ ரேஷன் கடையை கலெக்டர் செந்தில் ராஜ் திறந்து வைத்தார்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் பேரூராட்சியில் 14-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ரேஷன் கடை பழுதடைந்த நிலையில் இருந்தது. அதை சாயர்புரம் பேரூராட்சி கவுன்சிலர் எஸ்.வி.பி.எஸ்.பொ. ஜெயக்குமார் மற்றும் சாயர்புரம் கூட்டுறவு பண்டக சாலை தலைவர் எஸ்.வி.பி.எஸ். பண்டாரம் உள்ளிட்டோர் நிதி திரட்டி புதிய ரேஷன் கடையை புதுப்பிக்க ஏற்பாடு செய்தனர்.

    இந்நிலையில், புதுப்பிக்கபட்ட ரேஷன் கடையை கலெக்டர் செந்தில் ராஜ் திறந்து வைத்தார். பின்னர் வீடுவீடாக சென்று பொங்கல் பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன்களை பொது மக்களிடம் விநியோகம் செய்தார்.

    தொடர்ந்து, அப்பகுதியில் மரகன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் சாயர்புரம் பேரூராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

    நிகழ்ச்சிக்கு சாயர்புரம் பேரூராட்சி மன்ற தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமை தாங்கினார். சேகரகுரு இஸ்ரவேல் ராஜாதுரைசிங், ஏரல் தாசில்தார் கண்ணன், திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. புகாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சாயர்புரம் பேரூர் செயலாளர் கண்ணன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அறவாழி, திருப்பணி செட்டி குளம் பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்கம், சாயர்புரம் செயல் அலுவலர் பிரபா, பேரூராட்சி துணை தலைவர் பிரியா மேரி, பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜெப தங்கம் பிரேமா, ப்ளாட்டினா மேரி, இந்திரா, சுமதி, முத்து மாரி, ராமமூர்த்தி, முத்துராஜ், மற்றும் பேரூராட்சி மேற்பார்வையாளர் நித்திய கல்யாண், செபத்தையாபுரம் அரிமா சங்க தலைவர் ஆலயமணி, அகதாஸ், 14- வார்டு பொதுமக்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • பொதுமக்களுக்கு அன்னதானம்

    செய்யாறு:

    செய்யாறு டவுன், கொடநகர் 9-வது வார்டில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14 லட்சத்தில் புதிய ரேசன் கடை கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர்ஆ. மோகனவேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் குல்ஷார், கவுன்சிலர் ஞானமணி சின்னதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக ஓ.ஜோதி எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய ரேசன் கடையை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து கொடநகர் பகுதியில் தி.மு.க. கொடியை ஏற்றி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    அப்பகுதியை சேர்ந்த பூப்பந்து விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், யூனியன் சேர்மன்கள் ராஜு, பாபு, நகர செயலாளர் கே.விஸ்வநாதன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சம்பத், ஒன்றிய செயலாளர்கள் ஞானவேல், சங்கர், திராவிட முருகன், நகர மன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், அக்பர், சரஸ்வதி ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • துறையூர் அருகே புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டது
    • நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், கட்சி பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வரதராஜபுரம் ஊராட்சி, ராஜபுரம் பகுதி மக்கள் தங்களது பகுதியில் புதிய ரேஷன் கடை அமைத்து தருமாறு துறையூர் தொகுதி எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமாரிடம் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையின் படி அப்பகுதியில் புதிய ரேஷன் கடையை எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமார் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், துறையூர் ஒன்றிய குழு தலைவர் சரண்யா மோகன்தாஸ், துறையூர் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, ஊராட்சி மன்ற தலைவர் மதுபாலன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், கிளைச் செயலாளர்கள் ராமராஜ், கோபி, மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, விவசாய அணி செல்லமுத்து, ஒன்றிய கவுன்சிலர் அசோகன், வட்ட வழங்கல் அலுவலர் தமிழ்ச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கட்சி பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


    • ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • பொங்கல் பரிசுத்தொ குப்பு மற்றும் ரொக்கத் தொகை விநியோகம் குறித்த புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1077ல் தொடர்பு கொள்ளலாம்.

    ராமநாதபுரம்

    பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் ஒரு பன்னீர் முழுக்கரும்பு, 1கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 பொது விநியோகத்திட்டத்தின் கீழ் செயல்படும் ரேசன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசுத் தொகுப்பு தமிழக அரசால் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற கடந்த 3-ந்தேதி முதல் டோக்கன் வழங்கப்பட்டது. இன்று காலை ராமநாதபுரம் வசந்த நகர், ஏ.வி.எம். மெட்ரிக்குலேசன் பள்ளி அருகில் உள்ள கே.கே.சாலை ரேசன் கடையில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி தொடங்கி வைத்தார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சித் திட்ட பொது மேலாளர் சக்தி சரவணன் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார் வரவேற்றார்.

    நகர் மன்ற தலைவர் கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன் தங்கம், தாசில்தார் தமீம்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி தொகுத்து வழங்கினார்.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 776 ரேசன் கடைகளில் 3 லட்சத்து 96 ஆயிரத்து 403 கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் அந்தந்த ரேஷன் கடைகளில் பகுதி வாரியாக டோக்கன் வழங்கப்படும். அதற்கான விவரப்பட்டியல் சம்பந்தப்பட்ட ரேசன் கடைகளில் அறிவிப்பாக தெரிவிக்கப்படும்.

    குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசான பச்சரிசி மற்றும் சர்க்கரையை பெற கட்டாயம் துணிப்பை கொண்டு வர வேண்டும். குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நாட்களில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுச் செல்லலாம்.

    பொங்கல் பரிசுத்தொ குப்பு மற்றும் ரொக்கத் தொகை விநியோகம் குறித்த புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1077ல் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரேசன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.
    • அபிராமம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் பேருராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரேசன்கடை கடந்த சில வருடங்களாக தனியார் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

    இந்த ரேசன்கடை மூலம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேசன் குடும்ப அட்டைதாரர்கள பயனடைந்து வருகின்ற னர். ரேசன்கடை வாடகை கட்டிடத்தில் செயல்படு வதால் அடிக்கடி ரேசன் கடையை இடமாற்றம் செய்து வருகின்றனர்

    இதனால் ரேசன் கடைக்கு பொருட்கள் வாங்க செல்லும் முதிய வர்கள், மாற்றுதிற னாளிகள், பெண்கள் என அனைவரும் அலைக்கழிக்கப்படு கிறார்கள். எனவே அரசுக்கு சொந்தமான இடத்தில் புதிய ரேசன்கடை கட்டிடம் கட்டி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அபிராமம் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுெதாடர்பாக சமூக ஆர்வலர் அருணாச்சலம் கூறுகையில், அபிராமம் பேருராட்சி பகுதியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்ற னர். இங்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் 2 ரேசன் கடைகளும், ராம்கோ மூலம் ஒரு ரேசன் கடையும் என மொத்தம் 3 ரேசன்கடைகள் செயல்பட்டு வருகிறது.

    3 ரேசன்கடைகளிலும் 2000 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட ரேசன்கார்டுகள் உள்ளன. இந்த 3 கடையும் வாடகை கட்டிடத்தில்தான் இன்றுவரை செயல்பட்டு வருகின்றன.

    எனவே அனைவரும் பயனடையும் வகையில் 3 ரேசன் கடைகளையும் அரசுக்கு சொந்தமான இடத்தில் அமைத்து தர ேவண்டும் என்றார்.

    ×