என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Motorcycle Accident"

    • பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், வாசுகி மீது மோதியது.
    • மருத்துவமனையில் வாசுகி பரிதாபமாக இறந்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த ஆயக்கரன்புலம் 3ஆம் சேத்தி அண்ணா நகர் பகுதி சேர்ந்தவர் பாண்டியன்.

    இவரது மனைவி வாசுகி (வயது 40).

    இவர் சம்பவதன்று வேதாரண்யம் காந்தி நகரில் உள்ள தன் மகளுக்கு தீபாவளி வரிசை பொருட்கள் கொடுக்க சென்றார். பின்னர் சீர்வரிசை கொடுத்துவிட்டு தனது மருமகன் பூவரசன் (27) என்பவரிடம் அவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து ஊருக்கு செல்வதற்காக காரியப்பட்டினம் மின்சார வாரியம் அருகே வந்துள்ளார்.

    அப்போது இவர்களுக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், வாசுகி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் வாசுகி பலத்த காயம் அடைந்தார்.

    உடனடியாக இவர் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு வாசுகி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய அகஸ்தியம்பள்ளி கணக்கன்காடு பகுதியை சேர்ந்த ஐயப்பதாஸ் (36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது.
    • வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாமரத்துபாளை யம் சக்தி நகரை சேர்ந்தவர் தினேஷ் (21). ஆயில் உற்பத்தி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு பணி முடிந்து தனது மோட்டா ர் சைக்கிளில் தினேஷ் வந்து கொண்டிருந்தார்.

    வீரப்பன்ச த்திரம் பகுதியில் வந்து கொ ண்டிருந்தபோது திடீரென சாலையின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் தினேஷ் படுகாயம் அடை ந்தார்.

    பின்னர் அவர் சிகி ச்சைக்காக அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல ப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே தினேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து வீரப்பன்ச த்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சகோதரி-3 வயது மகள் படுகாயம்.
    • வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கோவளம் வெள்ளார் பகுதியை சேர்ந்தவர் சிமி(வயது35). நேற்று சிமி மற்றும் அவரது 3 வயது மகள் சிவன்யா, சகோதரி சினி(35) ஆகிய 3பேரும் ஸ்கூட்டரில் சென்றனர். சினி ஸ்கூட்டரை ஓட்ட, சிமி தனது மகளுடன் பின்னால் அமர்ந்து பயணித்தார்.

    திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெண்பால வட்டம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஸ்கூட்டர் திடீரென சினியின் கட்டுப்பாட்டை மீறி ஓடி, பாலத்தில் மேலே இருந்து தடுப்புச்சுவரை தாண்டி கீழே இருந்த சர்வீஸ் சாலையில் விழுந்தது.

    பல அடி உயரத்தில் இருந்து ஸ்கூட்டருடன் 3 பேர் கீழே விழுந்ததை அங்கு நின்றுகொண்டிருந்த ஆட்டோ டிரைவர்கள் மற்றும் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் சிமி, அவரது மகள் மற்றும் சகோதரி ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிமி பரிதாபமாக இறந்தார். அவரது மகள் மற்றும் சகோதரி ஆகிய இருவரும் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்ற வருகின்றனர்.

    இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிமி உள்ளிட்ட 3 பேரும் மேம்பாலத்தில் இருந்து ஸ்கூட்டருடன் சர்வீஸ் சாலையில் விழுந்தது ஏதே சினிமாவில் பார்த்தது போன்று இருந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் சிமி உள்ளிட்டோர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழும் காட்சி அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

    களக்காடு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.
    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சவளைக்காரன்குளத்தை சேர்ந்தவர் வசந்த்ராஜா (வயது 23). இவர் நேற்று இரவு தனது மோட்டார்  சைக்கிளில் சவளைக்காரன்குளம் செங்கல்சூளை அருகே சென்று கொண்டிருந்தார். 

    அப்போது அந்த வழியாக தோப்பூரை சேர்ந்த முத்துக்குட்டி என்பவர் ஓட்டி வந்த சைக்கிளும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதின. இந்த விபத்தில் வசந்த்ராஜா, முத்துக்குட்டி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம், பக்க த்தினர் அவர்களை மீட்டனர். 

    பின்னர் வசந்த்ராஜாவை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

    முத்துக்குட்டி நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். 

    இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×