என் மலர்
நீங்கள் தேடியது "Chance"
- பத்மவாணி மகளிர் கல்லூரியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் நாளை ( 26 -ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
- இந்த முகாமில் சுமார் 300-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கு பெற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியா ளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பத்மவாணி மகளிர் கல்லூரியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் நாளை ( 26 -ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் சுமார் 300-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கு பெற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியா ளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இந்த நிலையில், இந்த வேலை வாய்ப்பு முகாம் குறித்த முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், கல்லூரி வளா கத்தில் நடைபெற்றது. இதில் சேலம் கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். இந்த ஆய்வு கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் கலந்து கொண்டு, ஆலோசனை நடத்தினார். இதில், மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் ராமச்சதிரன், பத்மவாணி கல்வி நிறுவனங்களின் தாளாளர் சத்தியமூர்த்தி உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கணேசன் பேசியதாவது:-
படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உரு வாக்கி தர வேண்டும் என்பது முதல் - அமைச்சரின் எண்ணம். தமிழகம் முழுவ தும் முகாம் நடத்தி 1½ ஆண்டில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை என்ற நிலையே இருக்க கூடாது என்பதே முதல்- அமைச்சரின் நோக்கம். அதனை செயல்படுத்திட அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும். வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவது தொடர்பாக கிராமங்கள் தோறும் எடுத்து செல்ல வேண்டும். இந்த முகாமில் 8-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டம், முதுநிலை பட்டம், பொறியியல், செவிலியர் உள்ளிட்ட பல்வேறு படிப்பு
படித்தவர்கள் வரை கலந்து கொண்டு விலை வாய்ப்பை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. முகாமில் அனைத்து பகு தியை சேர்ந்தவர்களும் பங்கேற்கும் வகையில் இல வச பேருந்து வசதி களும், அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
- ஒரு பெண்ணால் பல பெண்கள் பொதுவாழ்க்கைக்கு வருவதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது.
- மக்கள் பணியாற்றும் பெண்கள் தன்னிச்சையாக செயல்பட வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் உலக மகளிர் தின விழா மற்றும் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் மேல் வீதியில் உள்ள ஆர்.ஓ.ஏ. சங்க கட்டடத்தில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார் ரசர்வதேச கலாம் அறக்கட்டளை மாவட்ட தலைவர் ராகவேந்திரன், வணிகர் சங்க தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க உறுப்பினர் தமிழரசன் வரவேற்றார்.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் மகாலிங்கம், பிரதேச காங்கிரஸ் கமிட்டி மற்றும் அறம்செய் அறக்கட்டளை செயலாளர் மரகதவல்லி செந்தில் ஆகியோர் பேசினர். முன்னாள் மத்திய மந்திரி மணிசங்கர்அய்யர் கலந்துகொண்டு சாதனை படைத்த மகளிருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசுகையில்
இந்தியாவில் அரசியில் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்ட பிறகு தான் பெண்கள் வெளிஉலகத்திற்கு வரத்தொடங்கினர்.
குறிப்பாக அரசியலில் பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்கி ஒரு தேர்தலில் பெண் நிற்கும்போது அவரை எதிர்த்து ஒருசில பெண்கள் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டு ஒரு பெண்ணால் பல பெண்கள் பொதுவாழ்க்கைக்கு வருவதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது.
பொதுவாழ்க்கைக்கு வந்து மக்கள் பணியாற்றும் பெண்கள் தன்னிச்சையாக செயல்பட வேண்டும். உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதியாக இருக்கும் பெண்கள் அவர்கள் பணியை அவர்களது கணவர்கள் மேற்கொள்வதை அனுமதிக்கக்கூடாது பெண்கள் தன்னிச்சையாக செயல்பட்டு மக்கள் பணியாற்ற வேண்டும் என்றார்.
இதில் அஞ்சல் ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் சாமிகணேசன், கவிஞர் ராதாகிருஷ்ணன், கனகசபை, தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் முத்துக்குமார், அறம்செய் அமைப்பு சிவக்குமார், யுவா ஜெயின் சங்க தலைவர் மகாவீர்ஜெயின் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க பொறுப்பாளர்கள், மகளிர் திரளாக கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.