என் மலர்
நீங்கள் தேடியது "Upload"
- அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெற அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களது விபரங்களை தேசிய தரவுதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
- பிரதமரின் விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 2 லட்சத்திற்கான விபத்து காப்பீடு வழங்கப்படும் என்று சிவகங்ககை லெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெடடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய அரசு அமைப்பு சாரா தொழிலாளளர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க உச்சநீதிமன்ற உத்தரவின்படி 'அமைப்பு சாரா தொழிலாளர்களின் தேசிய தரவு தளம் என்ற ஒரு தரவுதளத்தை உருவாக்கியுள்ளது.
https://eshram.gov.in என்ற வலைதளத்தின் மூலம் கட்டுமானத் தொழிலாளர்கள் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டுப்பணியாளர்கள், விவசாயத்தொழிலாளர்கள், குத்தகைதாரர்கள்,பேக்கிங் செய்வோர் உள்ளிட்ட 370 வகையான துறைகளில் வேலை பார்க்கும் இ.எஸ்.ஐ., பி.எப்., பிடித்தம் செய்யப்படாத அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை அனைத்து பொது சேவை மையங்களிலும் மற்றும் அனைத்து இ-சேவை மையங்களிலும் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
eSHRAM Portal- லில் தொழிலாளர்கள் சுயமாகவும் பதிவு செய்து கொள்ள லாம். மாநில அரசின் பல்வேறு வகையான நலத்திட்டங்களின் கீழ் பதிவு செய்துள்ள அனைத்துத் தொழிலாளர்களும் இத்தரவுதளத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும்.
இத்தரவுதளத்தில் தொழிலாளர்கள் தங்களைப்பதிவு செய்து கொள்ள வயது 16 முதல் 59-க்குள் இருக்க வேண்டும். மேலும் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. பதிவேற்றம் செய்வதற்கு ஆதார் அட்டை, ஆதாரில் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஓ.டி.பி. மூலம் அல்லது கைரேகை மூலம் பதிவு செய்து கொள்ளலாம். வங்கி கணக்குப் புத்தகம் போன்ற தேவையான விவரங்கள் இருக்க வேண்டும்.
மேலும் இத்தரவுகளை பதிவேற்றம் செய்த பிறகு பயனாளிகளுக்கு UAN என்ற 12-இலக்க எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும்.
அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலை காரணங்களுக்காகவோ அல்லது வேறு ஏதும் பிற காரணங்களுக்காகவோ புலம்பெயர நேர்ந்தாலும், அரசிடமிருந்து பெற வேண்டிய சலுகைகளைப் பெற இந்த அடையாள அட்டை உதவியாக இருக்கும். இந்த தரவுதளத்தில் தன்னை இணைத்துக் கொள்ளும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பிரதமரின் விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 2 லட்சத்திற்கான விபத்து காப்பீடு வழங்கப்படும்.
எனவே உச்சநீதிமன்ற உத்தரவின்படி இந்திய அரசால் உருவாக்கப்படும் அமைப்புசாரா தொழலாளர்களுக்கான இத்தேசிய தரவுதளத்தில் அனைவரும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கையுந்துபந்து மற்றும் கிரிக்கெட் ஆகிய போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெற உள்ளது.
- ஒவ்வொருவரும் ஆதார் கார்டு பதிவேற்றம் செய்வது அவசியம்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
2022-23-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதல் -அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இந்த மாத இறுதி மற்றும் அடுத்த மாதத்தில் நடைபெற உள்ளது.
இதில் பொது பிரிவினர் ( 15 முதல் 35 வயது வரை ) கபடி, சிலம்பம், தடகளம், இறகு பந்து, கையுந்துபந்து மற்றும் கிரிக்கெட் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெற உள்ளது.
இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு (12 வயது முதல் 19 வயது வரை ) கபடி, சிலம்பம், தடகளம் , கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல் பந்து , நீச்சல் , கையுந்துபந்து, மேசைபந்து மற்றும் கிரிக்கெட் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது.
கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு ( 17 வயது முதல் 25 வயது வரை ) கபடி, சிலம்பம், தடகளம் , கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல் பந்து , நீச்சல் , கையுந்துபந்து, மேசைபந்து மற்றும் கிரிக்கெட் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு ( வயது வரம்பு இல்லை ) 50 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், கையுந்து பந்து, கபடி, எறிபந்து போட்டிகளும், அரசு ஊழியர்களுக்கு ( வயது வரம்பு இல்லை ) கபடி, செஸ், தடகளம், இறகுப்பந்து, கையுந்து பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகளும் நடக்க உள்ளது.
மண்டல அளவில் டென்னிஸ், பளுதூக்குதல், கடற்கரை கையுந்து பந்து ஆகிய போட்டிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ -மாணவிகளுக்கு நடைபெற உள்ளது.
இந்த போட்டிகளில் கலந்து கொள்வதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் முகவரியான www.sdat. tn.gov.in என்ற இணையதளத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான பதிவில் பதிவு செய்யலாம்.
ஒவ்வொருவரும் ஆதார் கார்டு பதிவேற்றம் செய்வது அவசியம்.
இதில் பதிவு செய்வதற்கு நாளை ( ஞாயிற்றுக்கிழமை) கடைசி நாளாகும்.
எனவே தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த அனைவரும் அதிக அளவில் பதிவு செய்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்காண விளையாட்டு போட்டிகளில் பெருமளவில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விருதுநகர் மாவட்ட ஓய்வூதியதாரர்கள் இணையதளம் வழியாக ஆயுள்சான்று பதிவேற்றம் செய்ய வேண்டும் என தொழிலாளர் துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
- ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்று சமர்ப்பிக்க வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஜெ.காளிதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் நல வாரியம் முதலான 18 அமைப்புச்சாரர் தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களில் 60 வயது முடிவடைந்த உறுப்பினர்களுக்கு விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகம் மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெற ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் விருதநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்திற்கு வருகை தந்து ஆயுட்சான்று சமர்ப்பிக்கின்றனர். தற்போது ஓய்வூதிய தாரர்களின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் வருகிற 9-ந் தேதி முதல் அமைப்பு சாரா தொழிலா ளர்கள் நலவாரியங்களின் இணையதளத்தில் (tnuwwb.tn.gov.in) ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்று சமர்ப்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் முதலான 18 அமைப்பு சாரா நலவாரி யங்களின் கீழ் விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தின் மூலம் ஏற்கனவே மாதந்திர ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள் ஆதார் எண், குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு), ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை (PPO), வங்கி கணக்கு எண் மற்றும் நேரடி புகைப்படம் ஆகிய விவரங்களுடன் இணையதளத்தில் (tnuwwb.tn.gov.in) ஆயுள்சான்றினை சமர்ப்பிக்கலாம்.
ஓய்வூதிய ஆணை இல்லாதவர்கள் tnuwwb.tn.gov.in என்ற இணையதள முகபரியில் ஓய்வூதிய தாரரின் ஓய்வூதிய விண்ணப்ப எண் மற்றும் தொழிலாளர் நல வாரிய பதிவு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து ஓய்வூதிய ஆணை (Pension Order)-யை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஓய்வூதிய விண்ணப்ப எண் தெரியாத ஓய்வூதிய தாரர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரிய இணையதளத்தின் முகப்பில் இருக்கும் "விண்ணப்பத்தின் எண்ணை அறிய" என்ற வசதியை பயன்படுத்தி பதிவு செய்த தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்தும் அல்லது Login-ல் பயனாளியின் பெயர் (User namc) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியவற்றை உள்ளீடு செய்து Application History-ல் ஓய்வூதிய விண்ணப்ப எண்ணை அறிந்து கொள்ளலாம்.
ஓய்வூதியதாரர்கள் இணையதளம் வழியாக மட்டுமே ஆயுள்சான்று பதிவேற்றம் செய்ய வேண்டும். மேற்கண்ட ஓய்வூதிய தாரர்களிடம் இருந்து ஆயுள்சான்று இந்த அலுவலகத்தில் நேரில் பெற இயலாது என்ற விவரம் தெரிவிக்கப் படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஓய்வூதியர்கள் வருகிற 30-ந் தேதிக்குள் ஆயுள்சான்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- தொழிலாளர் நல உதவி ஆணையர் அறிவித்தார்.
விருதுநகர்
தொழிலாளர் நல உதவிஆணையர் காளிதாஸ் (சமூக பாதுகாப்பு திட்டம்) கூறியதாவது:-
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியம், தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியம் முதலான 18 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் 60 வயது முடிவடைந்த உறுப்பினர்களுக்கு விருதுநகர் தொழிலாளர் நல உதவி ஆணைய (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணைய (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்திற்கு வருகை தந்து ஆயுள்சான்று சமர்ப்பிக்கின்றனர். தற்போது ஓய்வூதியர்களின் சிரமத்தினை தவிர்க்கும் பொருட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் இணையதளத்தில் ஓய்வூதியர்கள் ஆயுள் சான்று சமர்ப்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் முதலான 18 அமைப்பு சாரா நல வாரியங்களில் விருதுநகர் தொழிலாளர் உதவிஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தின் மூலம் ஏற்கனவே மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்கள், ஆதார் எண், குடும்ப அட்டை, ஓய்வூதிய ஒப்படைப்பு கணக்குஎண் மற்றும் நேரடி புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம்.
தொழிலாளர் நல வாரிய பதிவு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து ஓய்வூதிய ஆணை இல்லாதவர்கள் இணையதளம் முகவரியில் ஓய்வூதியதாரரின் ஓய்வூதிய விண்ணப்ப எண் மற்றும் தொழிலாளர் நல வாரிய பதிவு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து ஓய்வூதிய ஆணையினை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஓய்வூதிய விண்ணப்ப எண் தெரியாத ஓய்வூதிய தாரர்கள் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய இணையதளத்தின் முகப்பில் இருக்கும் விண்ணப்பத்தின் எண்கள் அறிய என்ற வசதியை பயன்படுத்தி பதிவு செய்த தொலைபேசி எண் உள்ளீடு செய்தும் அல்லது பயனாளியின் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்தும் ஓய்வூதிய விண்ணப்ப எண்ணை அறிந்து கொள்ளலாம்.
ஆயுள் சான்று அளித்த ஓய்வூதியர்களுக்கு மட்டுமே தொடர்ந்து ஓய்வூதியம் அனுமதிக்கப்படும் என்பதால் இதுவரை ஆயுள்சான்று சமர்ப்பிக்காத 790 ஓய்வூதியதாரர்கள் வருகிற 30-ந் தேதிக்குள் இணையதளம் வழியாக ஆயுள் சான்றினை பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். மேற்படி ஓய்வூதிய தாரிடமிருந்து ஆயுள் சான்றை அலுவலகத்தில் நேரில் பெற இயலாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.