search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளஸ்-1"

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைந்தது. மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வு எழுதினர்.
    சேலம்:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 5-ந்தேதி  தொடங்கி 28-ந்தேதியுடன் முடிவடைந்தது. எஸ்.எஸ்.எல்.சி. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கி நேற்றுடன் (30-ந்தேதி) நிறைவடைந்தது.

    பிளஸ்-1 பொதுத் தேர்வு  கடந்த  10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. குறிப்பாக சேலம்  மாவட்டத்தில் 154 மையங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் 82 மையங்களிலும் பிளஸ்-1 பொதுத்தேர்வு நடைபெற்றது.
    இம்மையங்களில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் சுயநிதிப்பள்ளிகளை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வுகள் எழுதினர். 

    கடைசி நாளான இன்று  (31-ந்தேதி) செவ்வாய்க்கிழமை  இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் தொழிற்நுட்பம் ஆகிய 3  பாடங்களுக்கு தேர்வு நடந்தது. காலை  10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிவடைந்தது. இதனால் பிளஸ்-1 பொதுத்தேர்வு அனைத்தும் இன்றுடன்  நிறைவடைந்தன.

    தேர்வு  நிறைவடைந்ததை அடுத்து தேர்வு மையங்களில் இருந்து வெளியே வந்த மாணவ-மாணவிகள் முகம் மகிழ்ச்சியில் பூத்துக்குலுங்கியது. மாணவிகள் துள்ளிக்குதித்து மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டனர். 

    தங்கள் வகுப்பில்  பயின்றவர்களை சந்தித்து,   ஒருவருக்ெகாருவர் வாழ்த்துக்கள்  ெதரிவித்தனர்.  மேலும் புகைப்படம் எடுத்தும்,  சீருடைகளில் மாறி மாறி மை தெளித்தும், வண்ணப்பொடிகள் தூவியும், செல்போன் நம்பர் பரிமாறிக்கொண்டும் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

    பொதுத்தேர்வுகள் முடிவடைந்ததையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1 மாணவர்களுக்கு  விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடங்குகிறது.
    ×