search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kailasanathar Temple"

    • அதிசய நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்வார்கள்.
    • இன்றும், நாளையும் அதிசய நிகழ்வை காண முடியும்.

    தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 21, 22, 23 ஆகிய தேதிகளில் மாலை வேளையில் சூரியன் அஸ்தமனம் ஆகும் நேரத்தில் சூரியஒளி ராஜகோபுரம் வழியாக வந்து முன் மண்டபத்தில் அமர்ந்திருக்கும் நந்தி சிலையின் இரு கொம்புகளுக்கும் நடுவே ஊடுருவி கருவறையில் வீற்றிருக்கும் சிவலிங்கத்தின் நெற்றியில் முதல் நாள் ஒளிபடும். 2-ம் நாள் மார்பிலும், 3-ம் நாள் பாதத்திலும் விழும் அதிசய நிகழ்வு நடைபெறும்.

    இந்த அதிசய நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்வார்கள். அதன்படி நேற்றும் பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர். மாலை 6 மணி அளவில் ராஜகோபுரம் வழியாக உள்ளே வந்த சூரிய ஒளி நந்தி சிலையின் கொம்புகளுக்கு நடுவே ஊடுருவி கோவிலின் நடுவே உள்ள உண்டியல் மீது பட்டு மறைந்தது, பக்தர்கள் அதிக அளவில் கூடி கூட்ட நெரிசலை ஏற்படுத்தியதால் ஒளி உள்ளே செல்ல முடியாமல் மறைந்தது. இதனால் சிவலிங்கத்தின் மீது ஒளி விழும் அதிசய நிகழ்வை காண காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு தீப ஆராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் அனைவரும் சாமியை வழிபட்டு சென்றனர். தொடர்ந்து இன்றும், நாளையும் இந்த அதிசய நிகழ்வை காண முடியும். 

    நெல்லை சந்திப்பு கைலாசநாத சுவாமி கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை சந்திப்பு கைலாசபுரம் கைலாசநாத சுவாமி கோவில் வைகாசி பெருந்திருவிழா இன்று  கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    விழாவை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து  செப்பு கேடயத்தில் சவுந்தரி அம்பாள்  கைலாசநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

    அதனைத் தொடர்ந்து கொடிப்பட்டம் பல்லக்கில் ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொடி பட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. 

    பஞ்ச வாத்தியங்கள் இசைக்கப்பட்டு கோவில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.  தொடர்ந்து பால், தயிர் , இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. 

    இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

    தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான பஞ்சமூர்த்திகள் வீதி உலா வருகிற 2-ந்தேதியும், தேரோட்டம் வருகிற 7-ந் தேதியும் நடைபெறுகிறது.

    ×