என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 331494
நீங்கள் தேடியது "Tank"
சுரண்டை பகுதியில் 10 இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்படும் என நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சுரண்டை:
சுரண்டை நகராட்சி கூட்டம் தலைவர் வள்ளி முருகன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் சங்கராதேவி முருகேசன், நகராட்சி ஆணையாளர் லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சுரண்டை நகராட்சி பகுதியில் 10 இடங்களில் குடிநீர் தொட்டி அமைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை த்தொடர்ந்து சொத்துவரி குறித்த தீர்மானம் நிறைவேற்ற முன்மொழியப்பட்டது.
அப்போது 8-வது வார்டு கவுன்சிலரும், அ.தி.மு.க. நகர செயலாளருமான சக்திவேல் தலைமையில் துணை தலைவர் சங்கராதேவி முருகேசன், கவுன்சிலர்கள் வசந்தன், பொன் ராணி, மாரியப்பன், ராஜேஷ் மற்றும் புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த 25-வது வார்டு கவுன்சிலர் வினோத்குமார் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
அ.தி.மு.க.வினர் வெளிநடப்பை தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் முன்னிலையில் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள துட்டம்பட்டி கிராமம் கிழக்கு மேடு பகுதியை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க எதிர்ப்பால் இரு தரப்பினருக்கும் மோதல்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள துட்டம்பட்டி கிராமம் கிழக்கு மேடு பகுதியை சேர்ந்தவர் சூர்யா (வயது 19). இவருக்கும் லட்சுமாயூர் பகுதியை சேர்ந்த குணசேகரன் (45) என்பவருக்கும் இடையே நில பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஊராட்சி நிர்வாகம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டபோது அந்த இடம் குணசேகரனுக்கு சொந்தமான இடம் என்பதால் அவர் நீர்த்தேக்க தொட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தார்.
இது தொடர்பாக சூர்யா தரப்பினருக்கும் குணசேகரன் தரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இதில் இரு தரப்பயும் சேர்ந்த காளியப்பன், அப்புக்குட்டி, சேகர், செல்வம், மாதையன், சூர்யா, தாயம்மாள், சத்யா, நஞ்சப்பன், சேட்டு, குருசாமி ஆகிய 11 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×

X