search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய"

    • விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை
    • தமிழக நாடார் சங்க நிர்வாகிகளுடன் மத்திய விமான போக்கு வரத்துத்துறை செயலாளர் ராஜீவ் பன்சாலை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி நாடாளு மன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் தமிழக நாடார் சங்க நிர்வாகிகளுடன் மத்திய விமான போக்கு வரத்துத்துறை செயலாளர் ராஜீவ் பன்சாலை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலைய கட்டிடத்துக்கு தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் வருகிற 8-ந் தேதி புதிதாக திறக்கப்பட இருக்கும் விமான நிலைய கட்டிடத்தில் 'பெருந்த லைவர் காமராஜர் விமான நிலையம்' என்ற பெயர் பலகை இடம்பெற வேண்டும்.

    மற்ற விமான நிலை யங்களில் தலைவர்களுக்கு சிலை உள்ளது போல் சென்னை உள்நாட்டு விமான நிலைய வளாகத்தில் காமராஜருக்கு முழு உருவ வெண்கல சிலை அமைத்து தரவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    விஜய் வசந்த் எம்.பி.யுடன், தமிழ்நாடு நாடார் சங்கபொதுச் செயலாளர் வி.எல்.சி. ரவி, தலைமை நிலைய செயலாளர் பொன் ராஜ், கொள்கை பரப்பு செயலாளர் சுரேஷ்மாறன், மாநில ஒருங்கிணைப்பாளர் அனந்தகுமார், மராட்டிய மாநில் தலைவர் தெய்வ குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு நிலைய அலுவலராக கோமதி பணியாற்றி வந்தார்.
    • இவர் பதவி உயர்வு பெற்று பெரம்பலூர் மாவட்ட உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு நிலைய அலுவலராக கோமதி பணியாற்றி வந்தார். இவர் பதவி உயர்வு பெற்று பெரம்பலூர் மாவட்ட உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    இதையடுத்து ஈரோடு மாவட்டம் கொடுமுடி தீயணைப்பு நிலைய அலுவலராக பணியாற்றி வந்த சரவணன், பணிஇட மாறுதல் பெற்று வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    அவருக்கு தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் அனைத்து தீயணைப்பு வீரர்கள், பல்வேறு துறை அலுவலர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடல் பகுதியில் புதிய காற்று சுழற்சி உருவாகி யுள்ளது.
    • இதன் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சேலம்:

    தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடல் பகுதியில் புதிய காற்று சுழற்சி உருவாகி யுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்க ளில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 19 மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கன மழை பெய்யும். சில இடங்களில் மிக கனமழையும் பல இடங்களில் கனமழையும் பதிவாகும்.

    வரும் நாட்களில் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, ஆகிய மாவட்டங்களி லும் ஓரிரு நாட்கள் மழை எதிர்பார்க்கலாம். அடுத்த 4 நாட்களை பொறுத்தவரை குறிப்பாக வட கடலோர மாவட்டங்கள் அதிக மழையை சந்திக்கும். இதனால் வெப்பத்தில் பிடியில் இருந்து சற்று விடுதலை கிடைக்கும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் நீண்ட வருடங்களாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
    • தற்போது, பரமத்திவேலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத் திற்கு சொந்த கட்டிடம் கட்டு வதற்காக அரசிடம் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில் விரைவில் புதிய அலுவலகம் கட்டப்பட உள்ளது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தியில், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் நீண்ட வருடங்களாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

    புதிய வாகன பதிவு மற்றும் தரச் சான்றிதழ் பெற வரும் கனரக வாகனங்களை பரமத்தியில் இருந்து வேலூர் செல்லும் பிரதான சாலையில் நிறுத்தி ஆய்வு மேற்கொள்வதால் போக்குவரத்து பாதிப்பும் விபத்தும் ஏற்படும் அபாயம் உள்ளது.

    இங்கே தினசரி வாகன ஓட்டுனர் உரிமம் பெற மற்றும் பழகுனர் உரிமை பெற வருகின்றனர். தற்போது, பரமத்திவேலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத் திற்கு சொந்த கட்டிடம் கட்டு வதற்காக அரசிடம் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில் விரைவில் புதிய அலுவலகம் கட்டப்பட உள்ளது.

    பரமத்தியில் பெரும் பாலான அரசு அலுவலகங்கள் பரமத்தி மெயின் சாலையிலேயே உள்ளதால், இப்பகுதியில் போக்கு வரத்து நெரிசலும் வாகன விபத்தும் ஏற்படுகிறது. இந்த அரசு அலுவலகங்க ளுக்கு வேலை நாட்களில் தினசரி 10 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் வந்து செல்கின்றனர்.

    மேலும் திருச்செங்கோடு செல்லும் பிரதான சாலை மற்றும் கபிலர்மலை ஸ்ரீ பால தண்டாயுதபாணி முருகன் கோவிலுக்கு செல்லும் பிரதான சாலையாக பரமத்தி உள்ளதால் மக்கள் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது.

    இதனால் சேலம், கரூர் செல்லும் தனியார் பஸ்கள், பரமத்தி நகருக்குள் நுழைவதை தவிர்த்து பைபாஸ் சாலையிலே சென்று விடுகின்றன.

    தற்போது வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்திற்கு இடம் தேர்வு செய்ய ஆய்வு நடைபெற்று வருகிறது. மேலும் போக்குவரத்து மிகுந்த பரமத்திக்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் புதிய கட்டடம் கட்டினால், மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

    அதனால் மக்களின் நலன் கருதி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் பரமத்தி வேலூரில் அமைய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து பரமத்தி வேலூர் வட்டாரப் போக்கு வரத்து அலுவலர் முருகனிடம் கேட்டபோது, தற்போதுள்ள வட்டார போக்கு வரத்து அலுவலகத்திற்கு வாகன ஆய்வு மேற்கொள் வதற்கு என தனி இடம் ஒதுக்கப்படாமல் உள்ளதால் சாலை ஓரத்தில் நிறுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டிய நிலை உள்ளது.

    சொந்த கட்டிடம் கட்டுவதற்கான ஒப்புதல் பெறப் பட்டுள்ள நிலையில் விரைவில் புதிய அலுவலகம் கட்டப்பட்டு, அப்பகுதியில் ஆய்வுக்கான தனி இடம் அமைக்கப்படும். அதுவரை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு பணிகள் மேற்கொள் ளப்படும் என கூறினார்.

    • நாடு முழுவதும் வயதில் மூத்தோர்களுக்கு கற்பிக்கும் நோக்கில், புதிய பாரத எழுத்தறிவு இயக்கத்தை மத்திய அரசு தொடங்கி யுள்ளது.
    • இத்திட்டத்தின் கீழ், வாழப்பாடி வட்டா ரத்தில் வாழப்பாடி, பேளூர் பேரூராட்சிகள் மற்றும் 20 கிராம ஊராட்சிகளிலும் புதிய பாரத எழுத்த றிவு இயக்கம் தொடங்கப் பட்டது.

    நாடு முழுவதும் வயதில் மூத்தோர்களுக்கு கற்பிக்கும் நோக்கில், புதிய பாரத எழுத்தறிவு இயக்கத்தை மத்திய அரசு தொடங்கி யுள்ளது. இத்திட்டத்தின் கீழ், வாழப்பாடி வட்டா ரத்தில் வாழப்பாடி, பேளூர் பேரூராட்சிகள் மற்றும் 20 கிராம ஊராட்சிகளிலும் புதிய பாரத எழுத்த றிவு இயக்கம் தொடங்கப் பட்டது. சிறப்பு பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள், வயதில் மூத்தவர்களுக்கு மாலை நேரத்தில் கல்வி கற்பிக்கும் பணியை தொடங்கினர்.வாழப்பாடி அண்ணா நகர் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் நடைபெற்ற தொடக்க விழாவில், பள்ளி தலைமை ஆசிரியை ஷபிராபானு, தன்னார்வலர்கள் ஈஸ்வரி, சந்தியா ஆகியோருக்கு சான்றிதழ்களையும், வயதில் மூத்தவர்களுக்கு பயிற்சி ஏடுகளையும் வழங்கினார். வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து மையங்களிலும் பயிற்சியில் கலந்து கொண்ட வயதில் மூத்தோர்களுக்கு, எழுது பொருட்கள், பயிற்சி ஏடுகள் வழங்கப்பட்டது.

    • ராஜஷ்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • பொது மக்கள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

    மார்த்தாண்டம்:

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, பாலப்பள்ளம் பேரூராட்சியில் உள்ள மத்திக்கோடு எல்.எம். அரசு தொடக்க பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டி டங்கள் அமைக்க வேண்டும் என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர், அப்பகுதி பொது மக்கள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து அந்த பள்ளி யில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைப்பதற்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட் டத்தில் இருந்து ரூ.13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து வகுப்பறை கட்டிடங்கள் அமைக்கும் பணிகள் நிறைவுப் பெற்றதையடுத்து வகுப்பறை கட்டிடங்களை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மாணவர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் கிள்ளி யூர் கிழக்கு வட்டார காங் கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், பாலப்பள்ளம் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெபர்சன், வார்டு உறுப்பினர்கள் ஹெலன் மேரி, மேரி பிரிதா, பாலப்பள்ளம் பேரூராட்சி இளைஞர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் லதீஷ், மற்றும் சூசை மிக்கேல், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், ஊர் பொது மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மத்திய அரசு சார்பில் ஆசிரியர் கல்வித் திட்டங்களை செயல்முறைபடுத்த புதிய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
    சேலம் :

    இந்திய அரசு கல்வி அமைச்சகத்தின்  கீழ் உள்ள  தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம்,  கல்வி முறை, அதன் தரம் மற்றும்  நடைமுறைகள், செயல்முறைகள் ஆகியவற்றை  மேற்பார்வையிட  உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.

    சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் ஆசிரியர்  கல்வியியல் கல்லூரிகள் பல செயல்பட்டு வருகின்றன.  

    தற்போது தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம்   ஆசிரியர் கல்வித் திட்டங்களை அங்கீகரிப்பதற்கான முழு செயல்முறையையும் ஒழுங்குபடுத்த ஆன்லைன் தளத்தை  தொடங்கியுள்ளது.

    இதில் கல்வி நிறுவனங்களின் ஆய்வு உட்பட சமீபத்தில் தொடங்கப்பட்ட 4 ஆண்டு ஒருங்கிணைந்த (Integrated Teacher Education Programme) பி.ஏ பி.எட்.,  பி.எஸ்சி. பி. எட்., பிகாம் பி. எட் ஆகிய  ஆசிரியர் கல்வி படிப்பு பயன்பாடுகளுக்கான   விண்ணப்பங்கள் இந்த தளத்தில் செயலாக்கப்படும்.

    இந்த தளம் என்சிடிஇ-யின்  செயல்பாட்டில் ஒரு முன்னுதாரண மாற்றத்தைக் கொண்டு வரும். இது தன்னியக்க வலுவான கட்டமைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பங்கள்  இணையதளத்தின்  `நிர்வாக உள்நுழைவு' மூலம் செயலாக்கப்படும் என என்சிடிஇ தெரிவித்துள்ளது.
    ×