என் மலர்
நீங்கள் தேடியது "Food Festival"
- 100-க்கும் மேற்பட்ட நவதானிய உறை பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டு இருந்தது.
- முடிவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் மேனகா நன்றி கூறினார்.
வேதாரண்யம்:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டத்தின் மூலம் வேதாரண்யம் வட்டாரத்தில் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா வட்டார இயக்க மேலாண்மை அலுவ லகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு வட்டார இயக்க மேலாளர் அம்பு ரோஸ்மேரி தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் இந்திராணி, வேதாரண்யம் வர்த்தக சங்க பொருளாளர் சீனிவாசன், தோப்புத்துறை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தெட்சணமூர்த்தி மற்றும் நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தினர் கலந்து கொண்டனர். விழாவில் மகளிர் குழு உறுப்பினர்கள் தயாரித்த ஊட்டச்சத்து நிறைந்த 100-க்கும் மேற்பட்ட நவதானிய உறை பொருட்கள் காட்சிபடுத்தி வைத்திருந்தனர்.
பின்பு, ஊட்டச்சத்து தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். முடிவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் மேனகா நன்றி கூறினார்.
- கலெக்டர் வளர்மதி தகவல்
- தானியங்களின் சிறப்புகள் குறித்த விழிப்புணர்வு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறுதானிய ஆண்டு-2023 ஐ முன்னிட்டு பொதுமக்களிடையே பாரம்பரிய உணவான சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு நாளை முதல் சிறுதானிய உணவுத்திரு விழாவானது பஸ் நிலையங்கள், கல்லூரிகள் மற்றும் பொது மக்கள் கூடும் சந்தைகளில் நடைபெறவுள்ளது.
மேற்படி உணவுத் திருவிழாவில் சிறுதானிய உணவுகள் குறித்த கண்காட்சி பல்வேறு அரசுத்துறைகள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி களில் இடம்பெற்றுள்ள குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் சார்பில் சிறுதானியங்களின் முக்கியத்துவம் மற்றும் சிறுதானியங்களின் சிறப்புகள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்படவுள்ளது.
இதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) ராணிப்பேட்டை சந்தை, 2 -ந்தேதி ஓச்சேரி சந்தை, 4-ந்தேதி நெமிலி சந்தை, 5-ந்தேதி மின்னல் கிராமம்,6-ந்தேதி சோளிங்கர் பஸ் நிலையம், 7-ந்தேதி பாணாவரம் சந்தை, 8-ந்தேதி அரக்கோணம் பஸ் நிலையம், 11-ந்தேதி ஆற்காடு பஸ் நிலையம், 19-ந்தேதிராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களிலும் மேலும் நுகர்வோர் மன்றங்கள் செயல்படும் கல்லூரி களிலும் சிறுதானிய உணவுத் திருவிழா நடைபெறும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் சிறுதானிய உணவுத்திரு விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறுதானிய உணவுகளின் பயன்பாடு குறித்து தெரிந்து கொண்டு பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.
- 200க்கும் மேற்பட்ட மரபு காய்கறிகளினுடைய கண்காட்சி மற்றும் விற்பனையும் நடைபெற உள்ளது.
- 10 விவசாயிகளை தேர்ந்தெடுத்து "மண்ணை காக்கும் விவசாயிகளுக்கு மண் காப்போம் விருதுகள்" வழங்கப்பட இருக்கிறது.
ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் "பாரத பாரம்பரிய நெல் மற்றும் உணவுத் திருவிழா" எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வேலூர் மாவட்டம் ஶ்ரீபுரம் பொற்கோவிலில் அமைந்துள்ள ஶ்ரீ நாராயணி மஹாலில் வரும் ஜூலை-28 ஆம் தேதி நடைபெற உள்ள இந்நிகழ்வை பாராளுமன்ற உறுப்பினர் திரு. கதிர் ஆனந்த் தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு வேலூர் முத்தண்ணா நகரில் உள்ள ஈஷா யோக மையத்தில் நடைப்பெற்றது. இதில் ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் திரு. முத்துக்குமார் அவர்கள் பங்கேற்று பேசினார்.
அவர் பேசுகையில், " ஈஷா மண் காப்போம் இயக்கம் கடந்த 15 வருடங்களாக நம் மண்ணை காக்கும் நோக்கத்தோடு தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயத்தை எடுத்து சென்ற வண்ணம் உள்ளது. இவ்வியக்கத்தின் மூலம் இதுவரையில் 25,000 விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 8,000 விவசாயிகளுக்கு மேல் இயற்கை விவசாயத்திற்கு திரும்பி வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்திய அரசு சமீபத்திய பட்ஜெட்டில் வரும் இரண்டு ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது. ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் நோக்கமும் அது தான். எனவே இயற்கை விவசாயத்தை மென்மேலும் விரிவுப்படுத்தும் நோக்கத்தோடு ஒவ்வொரு பயிருக்கு ஏற்றவாறான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இது ஆடி பட்டம் காலம் என்பதால் நெல் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த நெல் திருவிழா நடத்தப்படுகிறது.
மேலும் நெல் விவசாயத்தை பல வருடம் செய்த போதிலும், போதிய வருவாய் இல்லாமல் விவசாயிகள் சோர்வாக உள்ளனர். அதே வேளையில் சில முன்னோடி விவசாயிகள் நெல் விவசாயத்தை வெற்றிகரமாகவும், லாபகரமாகவும் செய்து வருகின்றனர். நெல் விவசாயத்தை எவ்வாறு லாபகரமாக செய்ய முடியும் என்பது குறித்த தங்களின் அனுபவங்களை முன்னோடி நெல் விவசாயிகள் இந்த "பாரத பாரம்பரிய நெல் மற்றும் உணவுத் திருவிழா" வில் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.
இந்நிகழ்ச்சியில் வேளாண் வல்லுநர்கள், விஞ்ஞானிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் என ஏராளமானோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேச உள்ளனர். குறிப்பாக மரபு வழி கால்நடை மருத்துவரானபுண்ணியமூர்த்தி, பூச்சியியல் வல்லுநர் பூச்சி செல்வம், நெல் வயலில் மீன் வளர்த்து அசத்தி வரும் விவசாயி பொன்னையா மற்றும் மதிப்பு கூட்டல் மூலம் பல லட்சங்களில் வருவாய் ஈட்டும் தான்யாஸ் நிறுவனர் திரு. தினேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.

மேலும் இந்த திருவிழாவின் முக்கிய அம்சமாக பொதுமக்களையும், விவசாயிகளையும் இணைக்கும் வகையிலான விவசாயிகளின் நேரடி சந்தை நடைபெற உள்ளது. இந்த சந்தையில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் இடம்பெற உள்ளன. இதில் பாரம்பரிய அரிசி வகைகள், நாட்டு காய்கறிகள் மற்றும் அதன் விதைகள், நம் மரபு திண்பண்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வேளாண் விளைப் பொருட்கள் சந்தைப்படுத்தப்பட உள்ளன.
அது மட்டுமின்றி பாரம்பரிய நெல்லை பரவலாக்கம் செய்ய உதவும் வகையில் விதை நெல்லும் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. அத்துடன் நெல் விவசாயிகளுக்கு பயன்படும் எளிய கருவிகளின் கண்காட்சி மற்றும் விற்பனை, நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களின் கண்காட்சி மற்றும் 200க்கும் மேற்
பட்ட மரபு காய்கறிகளினுடைய கண்காட்சி மற்றும் விற்பனையும் நடைபெற உள்ளது.
மேலும் கூடுதல் சிறப்பாக இத்திருவிழாவில் இயற்கை முறையில் சிறப்பாக செயல்படும் 10 விவசாயிகளை தேர்ந்தெடுத்து "மண்ணை காக்கும் விவசாயிகளுக்கு மண் காப்போம் விருதுகள்" வழங்கப்பட இருக்கிறது. இந்த பிரம்மாண்ட திருவிழாவில் 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இத்திருவிழாவில் கலந்து கொள்ள விரும்புவோர் 8300093777, 9442590077 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்." இவ்வாறு அவர் பேசினார்.
- கோவை கொடிசியா மைதானத்தில் கொங்கு திருமண உணவு திருவிழா நடைபெற்றது.
- நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 799 ரூபாயும் குழந்தைகளுக்கு 499 ரூபாயும் வசூலிக்கப்பட்டது.
கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா மைதானத்தில் தமிழ்நாடு கேட்டரிங் சங்கம் சார்பில் கொங்கு திருமண உணவு திருவிழா நடைபெற்றது.
இந்த உணவு திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டு 400-க்கும் மேற்பட்ட சைவ, அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன.
இதற்கான நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 799 ரூபாயும் குழந்தைகளுக்கு 499 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டு ஆன்லைனில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது.
ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து ஏராளமான மக்கள் உணவு திருவிழாவில் திரண்டுள்ளனர். ஆனால் ஏற்பாடுகள் சரியாக இல்லாததால் ஒவ்வொரு உணவையும் வாங்க மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மக்கள் கூட்டத்தை கையாள முடியாததால் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வந்த மக்களுக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதிகளவில் டிக்கெட்டுகளை விற்றதே இந்தக் குழப்பங்களுக்கு காரணம் என மக்கள் குற்றம் சாட்டினர்.
- 150-க்கும் மேற்பட்ட பெண்கள் உடனடியாக சமைத்து, பரிமாறும் வகையில் 35 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
- 45 வகையான பொருட்கள் 3 அரங்குகளில் விற்பனை செய்யப்பட உள்ளன.
சென்னை:
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவு திருவிழா, நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி, வருகிற 24-ந்தேதி வரை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது. உணவு திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
உணவு திருவிழாவில், உயர்தர உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகளுக்கு இணையான உணவுகள் மட்டுமன்றி தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு வாய்ந்த சுவையும், தரமும் நிறைந்த கோவை கொங்கு மட்டன் பிரியாணி, கிருஷ்ணகிரி நோ ஆயில் நோ பாயில், கரூர் தோல் ரொட்டி - மட்டன் கிரேவி, நாமக்கல் பள்ளிப்பாளையம் சிக்கன், தர்மபுரி ரவா கஜூர், நீலகிரி ராகி களி - அவரை குழம்பு, திருப்பூர் முட்டை ஊத்தாப்பம், காஞ்சிபுரம் கோவில் இட்லி,
சிவகங்கை மட்டன் உப்புக்கறி, புதுக்கோட்டை சுக்குமல்லி காபி, ராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி, வேலூர் ராகி கொழுக்கட்டை, மதுரை கறி தோசை, விருதுநகர் கரண்டி ஆம்லெட், தஞ்சை பருப்பு உருண்டை குழம்பு, திருச்சி நவதானிய புட்டு, மயிலாடுதுறை இறால் வடை, நாகை மசாலா பணியாரம், கன்னியாகுமரி பழம் பொறி, சென்னை தயிர் பூரி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை, 65 சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பெண்கள் உடனடியாக சமைத்து, பரிமாறும் வகையில் 35 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
உடனடியாக சமைப்பதற்கும் மற்றும் உண்ணுவதற்கும் ஏற்ற 67 வகையான தயார் நிலை உணவுப் பொருட்களை, உணவுத் தரச் சான்றிதழ் பெற்ற 24 குழுக்களைச் சேர்ந்த மகளிர் சுகாதாரமான முறையிலும், கலப்படமின்றியும் தயாரித்து தகுந்த முறையில் விற்பனை செய்ய 6 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுயஉதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட 45 வகையான பொருட்கள் 3 அரங்குகளில் விற்பனை செய்யப்பட உள்ளன.
நாளை (வெள்ளிக்கிழமை) மட்டும் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் உணவு திருவிழா, 21-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை மதியம் 12.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.
உணவு திருவிழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள் லேடி வெலிங்டன் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம் மற்றும் ராணி மேரி கல்லூரி ஆகிய கல்லூரிகளின் வளாகங்களில் இலவசமாக வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உணவு திருவிழா இன்று தொடங்கி 24-ந்தேதி வரை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது.
- உணவு பட்டியலில் அதிக விலையாக கரூர் நாட்டுக் கோழி பிரியாணியும் சிவகங்கை நெய் சாதம் மட்டன் உப்பு கரியும் (விலை ரூ.250 ) விற்கப்படுகிறது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவு திருவிழா இன்று தொடங்கியது.
இந்த உணவு திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபுவும் கலந்து கொண்டார். இருவரும் பரிமாறப்பட்ட உணவுகளை சுவைத்தனர்.
உணவு திருவிழா இன்று தொடங்கி 24-ந்தேதி வரை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது. இன்று மட்டும் 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். நாளை முதல் 24-ந் தேதி வரை மதியம் 12.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உணவு வகைகளும், விலைப் பட்டியல்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஸ்பெஷல் உணவாக பார்க்கப்படும் உணவுகள் பட்டியலிடப்பட்டு அதற்கான விலைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த உணவு பட்டியலில் அதிக விலையாக கரூர் நாட்டுக் கோழி பிரியாணியும் சிவகங்கை நெய் சாதம்+மட்டன் உப்பு கரியும் (விலை ரூ.250 ) விற்கப்படுகிறது.

உணவு திருவிழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள் லேடி வெலிங்டன் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம் மற்றும் ராணி மேரி கல்லூரி ஆகிய கல்லூரிகளின் வளாகங்களில் இலவசமாக வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- சென்னை உணவு திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- இந்த உணவு திருவிழா வரும் 24-ந்தேதி வரை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவு திருவிழா கடந்த 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த உணவு திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த உணவு திருவிழா வரும் 24-ந்தேதி வரை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது
இந்நிலையில் சென்னை உணவு திருவிழாவில் மாட்டிறைச்சி புறக்கணிக்கப்பட்டதாக கூறி நீலம் பண்பாட்டு மையம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அந்த பதிவில், "சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரக்கூடிய உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன? பெருமளவிலான மக்கள் பீப் சாப்பிட கூடியவர்கள். ஆனால், திட்டமிட்டே ஓர் உணவை புறக்கணிக்கப்படுவதை நீலம் பண்பாட்டு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது. உணவு எங்கள் உரிமை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை உணவு திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- சென்னை உணவு திருவிழாவில் மாட்டுக்கறி உணவுகள் புறக்கணிக்கப்பட்டதாக நீலம் பண்பாட்டு மையம் குற்றச்சாட்டு
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவு திருவிழா கடந்த 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த உணவு திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த உணவு திருவிழா வரும் 24-ந்தேதி வரை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது
இந்நிலையில் சென்னை உணவு திருவிழாவில் மாட்டுக்கறி உணவுகள் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து நீலம் பண்பாட்டு மையம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அந்த பதிவில், "சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரக்கூடிய உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன? பெருமளவிலான மக்கள் பீப் சாப்பிட கூடியவர்கள். ஆனால், திட்டமிட்டே ஓர் உணவை புறக்கணிக்கப்படுவதை நீலம் பண்பாட்டு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது. உணவு எங்கள் உரிமை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சென்னை உணவு திருவிழாவில் கரூர் மாவட்ட உணவு அரங்கு எண்.17 இல் மாட்டிறைச்சி உணவும் விற்பனை செய்யப்படுவதாக விழா ஏற்பாட்டு குழுவினராக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் விளக்கம் அளித்துள்ளனர்.
- உணவுத் திருவிழாவில் மொத்தம் 286 வகையான உணவுகள் வைக்கப்பட்டு இருந்தது.
- கடந்த 5 நாட்களாக நடந்த உணவுத் திருவிழாவில் 3.20 லட்சம் மக்கள் கலந்துகொண்டனர்.
சென்னை:
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் சென்னை மெரினாவில் கடந்த 20-ந்தேதி மகளிர் சுய உதவிக்குழுவினரின் உணவுத் திருவிழா தொடங்கியது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சிறப்பு வாய்ந்த பாரம்பரிய சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டது.
முழுக்க முழுக்க மகளிர் சுய உதவிக்குழுவினர் தங்களின் கைப்பட சமைத்து வழங்கும் உணவுகளே இங்கு விற்பனை செய்யப்பட்டது.
உணவுத் திருவிழாவில் ராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி, தருமபுரி ரவா கஜூர், சாமை வெண்பொங்கல், தினை இனிப்பு பொங்கல், கிருஷ்ணகிரி கம்பு பாயாசம், ஈரோடு அடை அவியல், சேலம் தட்டு வடை, கார பொறி, சிவகங்கை நெய் சாப்பாடு- சிக்கன் கிரேவி, வேலூர் ராகி புட்டு, ராகி கொழுக்கட்டை, திண்டுக்கல் மட்டன் பிரியாணி, கன்னியாகுமரி பொரிச்ச பழம், கிழங்கு மீன் கறி உள்ளிட்ட உணவு வகைகளை பொதுமக்கள் விரும்பி வாங்கி சாப்பிட்டனர். மொத்தம் 286 வகையான உணவுகள் வைக்கப்பட்டு இருந்தது.
உணவுத் திருவிழா டிக்கெட் கவுண்ட்டர்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் பெற்று சென்றனர். உணவு வழங்கும் அரங்கிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்கு தேவையானவற்றை மக்கள் வாங்கி விரும்பி சாப்பிட்டனர்.
இந்நிலையில் மெரினாவில் கடந்த 5 நாட்களாக நடந்த உணவுத் திருவிழாவில் 3.20 லட்சம் மக்கள் கலந்துகொண்டு, மகளிர் சுய உதவிக் குழுவினரின் ரூ.1.50 கோடி மதிப்பிலான தயாரிப்பு பொருட்கள், உணவுகளை வாங்கி உள்ளனர்.
45 அரங்கங்களில் 286 வகையான சைவ, அசைவ உணவுகள், ஆயத்த உணவுப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.