என் மலர்
நீங்கள் தேடியது "அதிக"
- நாமக்கல் மாவட்டத்தில் நிலக்கடலை மானாவாரி பயிராகவும், இறவை பயிராகவும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் நிலக்கடலையில் அதிக மகசூல் பெறுவதற்கு ஊட்டச்சத்து கரைசலை தெளிக்க வேண்டும்.
- 200 லிட்டர் தண்ணீரில் கலந்து அதிகாலையிலோ அல்லது மாலை வேளையிலோ, நிலக்கடலை பயிர் விதைத்த 30-ம் நாள் மற்றும் 45-ம் நாள் என 2 முறை பயிர்களின் இலையின் மீது நன்கு படும்படி தெளிக்க வேண்டும்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை மற்றும் பரமத்தி வட்டாரத்தில் நிலக்கடலையில் அதிக மகசூல் பெற கடைபிடிக்க வேண்டியது முறை குறித்து வேளாண்மை உதவி இயக்குனர்கள் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் நிலக்கடலை மானாவாரி பயிராகவும், இறவை பயிராகவும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் நிலக்கடலையில் அதிக மகசூல் பெறுவதற்கு ஊட்டச்சத்து கரைசலை தெளிக்க வேண்டும். இந்த ஊட்டச்சத்து கரைசல் தயாரிப்பதற்கு டி.ஏ.பி உரம் ஒரு கிலோ, அம்மோனியம் சல்பேட் உரம் 500 கிராம், போராக்ஸ் 200 கிலோ ஆகியவற்றை சிறிதளவு நீரில் தனித்தனியே ஊறவைத்து, கரைத்து வடிகட்டி தெளிந்த கரைசலை எடுத்துக் கொள்ள வேண்டும். வடிகட்டிய கரைசலில் 140 மில்லி பிளானோ-பிக்ஸ் பயிர் ஊக்கியை கலந்து கொண்டு அக்கலவையை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து அதிகாலையிலோ அல்லது மாலை வேளையிலோ, நிலக்கடலை பயிர் விதைத்த 30-ம் நாள் மற்றும் 45-ம் நாள் என 2 முறை பயிர்களின் இலையின் மீது நன்கு படும்படி தெளிக்க வேண்டும்.
ஊட்டச்சத்து கரை சலை நிலக்கடலை பயிரில் தெளிப்பதால் இலை துவாரங்களின் வழி யாக ஊட்டச்சத்துகள் நேரடி யாக பயிருக்கு சென்று அடைகின்றன. இதனால் நிலக்கடலை பயிர் சீராக வளர்ச்சி அடைந்து பூக்கள், பிஞ்சுகள் அதிகள
வில் பிடிப்பதற்கு உதவி புரிகின்றது.
எனவே நிலக்கடலை விதைப்பண்ணை விவசாயிகள் மேற்கண்ட தொழில்நுட்பத்தை கடைப்பிடித்து அதிக விதை நிலக்கடலையினை அறுவடை செய்து அதிக வருமானம் பெற்று பயன் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- 2021-2022-ம் ஆண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிக கடன்களை வழங்கி சிறப்பாக செயலாற்றிய வங்கிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
- மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மகளிர் குழுக்களுக்கு அதிக கடன் உதவி வழங்கிய வங்கிகளுக்கு கேடயம் வழங்கி பாராட்டினார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 2021-2022-ம் ஆண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிக கடன்களை வழங்கி சிறப்பாக செயலாற்றிய வங்கிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மகளிர் குழுக்களுக்கு அதிக கடன் உதவி வழங்கிய வங்கிகளுக்கு கேடயம் வழங்கி பாராட்டினார்.
மாவட்டத்தில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிக கடன்களை வழங்கி சிறப்பாக செயலாற்றிய, சிறந்த வங்கிகளுக்கான விருது இந்தியன் வங்கி மற்றும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டது.
சிறந்த வங்கி கிளை–களுக்கான விருதுகளில் முதலிடம் பெற்ற இந்தியன் வங்கி, மைக்ரோசெட் ராசிபுரம் கிளைக்கு நற்சான்றிதழ் மற்றும் விருது தொகை ரூ.15,000-க்கான உத்தரவு, 2-ம் இடம் பெற்ற கனரா வங்கி திருச்செங்கோடு கிளைக்கு, நற்சான்றிதழ் மற்றும் விருது தொகை ரூ.10,000-க்கான உத்தரவு, 3-ம் இடம் பெற்ற தமிழ்நாடு கிராம வங்கி நாமகிரிப்பேட்டை கிளைக்கு நற்சான்றிதழ் மற்றும் விருது தொகை ரூ.5,000-க்கான உத்தரவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் பிரியா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வக்குமரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதீஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சந்தேகம் அடைந்த போலீசார் டாரஸ் லாரியை சோதனை செய்தனர்.
- உறுதிப்படுத்த அருகில் உள்ள எடை மேடைக்கு கொண்டு சென்று அதிக பாரம் இருந்ததை உறுதி செய்தனர்.
கன்னியாகுமரி:
தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தக்கலை அருகே பரைக்கோடு பகுதியில் ஒரு டாரஸ் லாரி எம் சண்ட் ஏற்றி வந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் டாரஸ் லாரியை சோதனை செய்தனர். அதில் அதிக பாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது.
மேலும் இதனை உறுதிப்படுத்த அருகில் உள்ள எடை மேடைக்கு கொண்டு சென்று அதிக பாரம் இருந்ததை உறுதி செய்தனர். உடனே போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் காவல்கிணறு பகுதியில் இருந்து ஏற்றி கேரளா மாநிலம் செங்கவிளை பகுதிக்கு கொண்டு செல்ல இருந்தது தெரிய வந்தது.
இது சம்பந்தமாக தக்கலை போலீசார் லாரி டிரைவர் கேரளா மாநிலம் ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்த சுஜித் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை
- சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
கன்னியாகுமரி:
சென்னை முதன்மை செயலாளர் மற்றும் தொழிலாளர் ஆணையர் கடைகள் மற்றும் நிறுவனங்களில் 2009-ம் ஆண்டு சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் 2011-ம் ஆண்டு சட்டமுறை எடையளவு (பொட்டல பொருட்கள்) விதிகளின் கீழ் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மணிகண்டபிரபு தலைமையில் உதவி ஆய்வாளர்கள் அஞ்சுகிராமம் மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் நியாய விலைக்கடைகள், கிடங்குகள் மற்றும் சுற்றுலா, வழிபாட்டு தலங்கள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாங்களில் தின்பண்டங்கள், குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதுபற்றி தொழிலாளர் உதவி ஆணையர் மணிகண்ட பிரபு கூறுகையில், முத்திரை இடப்படாத எடையளவுகள் வைத்திருத்தல், தரப்படுத்தப்படாத பொட்டலப் பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் அதிகபட்சமாக சில்லறை விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல், பொட்டலமிடுபவர் மற்றும் இறக்குமதியாளர் பதிவு சான்று பெறாதது, பொருட்களில் குறிப்பிட்டுள்ள எடை மற்றும் அளவுகள் இல்லாமை ஆகிய குற்றங்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றார்.
- விற்பனையாளர் சஸ்பெண்டு
- அனுமதியின்றி மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அனுமதியின்றி மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வருவாய் துறை மற்றும் போலீஸ் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-
குமரி மாவட்டம் முழுவ தும் கள்ளச்சாராயம் மற்றும் அனுமதியின்றி மது விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அரசு நிர்ணயம் செய்துள்ள விலையை விட அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த 13 மதுபானக்கடைகளில் இருந்து ரூ.84 ஆயிரத்து 400அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. ஒரு மதுபான விற்பனையாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கலால் உதவிஆணையர், கோட்ட ஆய அலுவலர், கல்குளம் தாசில்தார், வருவாய் அலுவலர்கள் இரணியல் ரோட்டில் செயல்பட்டு வரும் கிளப்பில் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது உறுப்பினராக பதிவு செய்யப்படாத நபர்கள் மது அருந்தியது தெரிய வந்தது.
எனவே விதி மீறலுக்காக கிளப்பின் மீது உரிய நடவ டிக்கை மேற்கொள்ளும் பொருட்டு உரிமம் வழங்கும் அலுவலரான சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத் துறை ஆணையருக்கு பரிந்து ரைக்கப்பட்டுள்ளது.
இது போன்ற நிகழ்வுகளில் ஈடுபடும் மதுபான கடை ஊழியர்கள் மீது துறைவாரியாக நடவடிக்கையும் விதி மீறல்களில் ஈடுபடும் கிளப் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- 15 மற்றும் 12 வயதுகளில் 2 மகன்கள் உள்ளனர்.
- கணவன்-மனைவி அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
கன்னியாகுமரி:
மணவாளக்குறிச்சி அருகே உள்ள ஆற்றின்கரை காலனியை சேர்ந்தவர் கணேஷ், கட்டிட தொழிலாளி. இவரது மனைவி செல்வகுமாரி (வயது 38). இவர்களுக்கு 15 மற்றும் 12 வயதுகளில் 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 9-ந் தேதி வாழ்க்கையில் வெறுப்படைந்த செல்வகுமாரி அதிக மாத்திரையை தின்று மயங்கி கிடந்தார்.
உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு நெய்யூரில் ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த செல்வகுமாரி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து விஜயகுமாரி மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.