search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் அதிக விலைக்கு மது விற்ற 13 மதுபான கடைகளுக்கு ரூ.84 ஆயிரம் அபராதம்
    X

    குமரியில் அதிக விலைக்கு மது விற்ற 13 மதுபான கடைகளுக்கு ரூ.84 ஆயிரம் அபராதம்

    • விற்பனையாளர் சஸ்பெண்டு
    • அனுமதியின்றி மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அனுமதியின்றி மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வருவாய் துறை மற்றும் போலீஸ் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

    குமரி மாவட்டம் முழுவ தும் கள்ளச்சாராயம் மற்றும் அனுமதியின்றி மது விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அரசு நிர்ணயம் செய்துள்ள விலையை விட அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த 13 மதுபானக்கடைகளில் இருந்து ரூ.84 ஆயிரத்து 400அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. ஒரு மதுபான விற்பனையாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கலால் உதவிஆணையர், கோட்ட ஆய அலுவலர், கல்குளம் தாசில்தார், வருவாய் அலுவலர்கள் இரணியல் ரோட்டில் செயல்பட்டு வரும் கிளப்பில் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது உறுப்பினராக பதிவு செய்யப்படாத நபர்கள் மது அருந்தியது தெரிய வந்தது.

    எனவே விதி மீறலுக்காக கிளப்பின் மீது உரிய நடவ டிக்கை மேற்கொள்ளும் பொருட்டு உரிமம் வழங்கும் அலுவலரான சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத் துறை ஆணையருக்கு பரிந்து ரைக்கப்பட்டுள்ளது.

    இது போன்ற நிகழ்வுகளில் ஈடுபடும் மதுபான கடை ஊழியர்கள் மீது துறைவாரியாக நடவடிக்கையும் விதி மீறல்களில் ஈடுபடும் கிளப் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×