என் மலர்
நீங்கள் தேடியது "Monkeypox"
- குரங்கு அம்மை நோய் பாதிப்பு 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 70,000 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- குரங்கு அம்மை நோய் பரவல் சர்வதேச சுகாதார அவசரநிலையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
ஜெனீவா:
உலகளவில் குரங்கு அம்மை நோய் பரவல் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மறுபுறம் புதிய நோய் தொற்று பரவல் எண்ணிக்கை சில நாடுகளில் இன்னும் அதிகரித்து வருகிறது.
குரங்கு அம்மை நோய் பாதிப்பு 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 70,000 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக பதிவாகின.
இந்நிலையில், சர்வதேச பொது சுகாதார அவசர அச்சுறுத்தலாக குரங்கு அம்மை நோய் பரவல் இருந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பல நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய் பரவல் குறித்த அவசரக் குழுவின் 3-வது கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கூட்டப்பட்டது. கமிட்டியின் 15 உறுப்பினர்களில் 11 பேரும், 9 ஆலோசகர்களில் 6 பேரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதில், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பேசுகையில், உலகளவில் குரங்கு அம்மை நோய் பரவலில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், சில நாடுகளில் சரிவைச் சந்தித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் பிராந்தியங்களில் சில நாடுகளில் நோய் தொற்று அபாயம் அதிகரித்து வருகின்றன. மேலும் சில நாடுகளில் குறைவாக பதிவாகியுள்ளது என தெரிவித்தார்.
- குரங்கு அம்மை என்ற பெயரை உலக சுகாதார அமைப்பு எம்பாக்ஸ் என மாற்றியுள்ளது.
- உலகளாவிய மருத்துவ நிபுணர்களின் தொடர்ச்சியான ஆலோசனையை தொடர்ந்து இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜெனிவா:
டென்மார்க்கில் 1958-ம் ஆண்டு ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த குரங்கு ஒருவித வைரசால் பாதிப்புக்கு ஆளானது. இதனால் அந்த வைரஸ் நோய்க்கு குரங்கு அம்மை என பெயர் வந்தது. பின்னர் இந்த நோய் தாக்கம் மனிதர்களுக்கும் கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது குரங்கு அம்மை என்ற பெயரை உலக சுகாதார அமைப்பு எம்பாக்ஸ் என மாற்றியுள்ளது. உலகளாவிய மருத்துவ நிபுணர்களின் தொடர்ச்சியான ஆலோசனையை தொடர்ந்து இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
- குரங்கம்மை வைரஸ் ஆனது நெருங்கியத் தொடர்புகள் மூலம் பரவக்கூடும்.
- காய்ச்சல் மற்றும் தோலில் அதிக புண்களை ஏற்படுத்தும்.
குரங்கம்மை பாதிப்பை பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருக்கிறது. உலக அளவில் குரங்கம்மை பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து இதை உயரிய எச்சரிக்கையுடன் இருக்கும் நோய் பாதிப்பாக அந்த அமைப்பு வகைப்படுத்தியிருக்கிறது.

இதையடுத்து உலக சுகாதார அமைப்பு நேற்று (புதன்கிழமை) mpox பரவுவதை உலகளாவிய பொது சுகாதார அவசரநிலை என்று அறிவித்தது.
குரங்கம்மை வைரஸ் ஆனது நெருங்கியத் தொடர்புகள் மூலம் பரவக்கூடும். இதன் அறிகுறிகள் காய்ச்சல் மற்றும் தோலில் அதிக புண்களை ஏற்படுத்தும்.
ஆப்பிரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், குரங்கம்மை காய்ச்சல் பொது சுகாதார அவசரகால நிலையாக உருவாகி உள்ளது. 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். அதனால், இதனை தடுத்து நிறுத்த சர்வதேச உதவி வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.
இதன்படி, நடப்பு ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 13 நாடுகளில் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் காங்கோ நாட்டில் 96 சதவீதம் அளவுக்கு பாதிப்புகளும் மற்றும் மரணங்களும் ஏற்பட்டு உள்ளன.
கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது, காங்கோவில் பாதிப்புகள் 160 சதவீதமும், மரணங்கள் 19 சதவீதமும் உயர்ந்து உள்ளன. இதுவரை 524 பேர் பலியாகி உள்ளனர். 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன என்றும் தெரிவித்து இருந்தது.
ஆப்பிரிக்க நாடுகளில் புது வடிவிலான வைரசானது பரவி வருகிறது. காங்கோவில் இருந்து புரூண்டி, கென்யா, ருவாண்டா மற்றும் உகாண்டா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் பரவியுள்ளது. எனினும், ஆப்பிரிக்காவில் குறைந்த தடுப்பூசி டோஸ்களே இருப்பில் உள்ளன.

இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறும்போது, நாம் அனைவரும் கவலைப்பட வேண்டிய விசயம். இந்த வைரசானது ஆப்பிரிக்காவை கடந்து பரவ கூடிய ஆற்றல் படைத்துள்ளது என்பது அதிக வருத்தத்திற்குரியது என்று கூறியுள்ளார்.
இந்த சூழலில் உலக சுகாதார அமைப்பு, குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரகால நிலையாக அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மை நோய் தொற்று வேகமெடுக்கிறது.
- சுவீடன் நாட்டில் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவிய குரங்கம்மை நோய் தொற்று, சுவீடன் நாட்டிலும் உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே அதன் பரவலையொட்டி உலக சுகாதார நிறுவனம், அவசர நிலையை அறிவித்துள்ளது.
இதனையொட்டி தமிழக சுகாதாரத்துறை, மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும், தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களின் சுகாதார அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் "குரங்கம்மை பாதிப்புள்ளவர்கள் என்று யார் மீதாவது சந்தேகம் இருந்தால், உடனடியாக தெரிவிக்க வேண்டும்."
"அதிகாரிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக, காங்கோ மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பயணிகளுக்கு வெப்ப நிலை பரிசோதனை மேற்கொள்ளவேண்டும்."
"கடந்த 21 நாட்களுக்குள் குரங்கம்மை பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வந்தவர்களை கண்டறியவும். குரங்கம்மை அறிகுறிகள் இருப்பவர்களை மருத்துவமனைகளுக்கு பரிந்துரைப்பதற்காக ஏற்பாடுகளை வலுப்படுத்தவும்."
"யாருக்காவது பாதிப்பு கண்டறியப்பட்டால், அதுகுறித்து அவர் பயணித்த விமான நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். அந்த விமான நிறுவனம் தொற்று பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தி அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளது.
- அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பீளமேடு:
குரங்கம்மை எனப்படும் எம்பாக்ஸ் தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தி அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளது.
தமிழகத்திலும் விமான நிலையத்தில் பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இன்று முதல் வெளிநாட்டில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை விமான நிலையத்திலும் விமான பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. 2 டாக்டர்கள் மற்றும் நர்சுகள் அடங்கிய மருத்துவ குழுவினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை விமான நிலையத்தில் இருந்து சார்ஜா, அபுதாபி, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சிங்கப்பூருக்கு தினமும், சார்ஜாவுக்கு 4 நாட்கள், அபுதாபிக்கு 3 நாட்கள் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சிங்கப்பூரில் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து அந்த நாட்டில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் கோவை விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து வருபவர்கள் மட்டும் இன்றி, பிற வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிளும் கோவை விமான நிலையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
விமானத்தில் வந்திறங்கும் பயணிகளுக்கு மருத்துவக்குழுவினர் முதல் கட்டமாக காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்கின்றனர். அதேபோல் கொப்புளங்கள் உளளனவா? என்பது குறித்து ஆய்வு செய்கின்றனர்.
நேற்று கோவை விமான நிலையத்திற்கு 3 வெளிநாட்டு விமானங்களில் 275 பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் அல்லது அம்மை கண்டறியப்பட்டால், உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல ஆம்புலன்சும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகமும், ஏர்போர்ட் சுகாதார மருத்துவ குழுவினரும் இணைந்து பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
2 டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பணியில் இருக்கின்றனர். வெளிநாட்டு பயணிகள், பரிசோதனைக்கு பின்பே நகருக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
அறிகுறிகளளோ, அம்மையோ கண்டறியப்பட்டால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்கு வசதியாக, விமான நிலைய வளாகத்தில் ஆம்புலன்சும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- தமிழகத்தில் யாருக்கும் இதுவரையில் பாதிப்பு இல்லை.
- தும்மும் போது வெளியாகும் எச்சில் துளிகள் மூலம் இந்த நோய் பரவுகிறது.
சென்னை:
ஆப்பிரிக்கா நாடுகளை ஆட்டம் காண செய்த குரங்கம்மை, தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்த தொடங்கி இருக்கிறது. அந்தவகையில் 116 நாடுகளில் குரங்கம்மை நோய் பரவி இருக்கிறது. இந்தியாவில் இந்த நோய் பரவி விடாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்திலும் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவரது உத்தரவின்பேரில், பொது சுகாதாரத்துறை குரங்கம்மை தடுப்பு பணிகளில் முனைப்பு காட்டி வருகிறது.
குரங்கம்மை அறிகுறி, தடுப்பு பணிகள் மற்றும் தமிழக அரசு ஆஸ்பத்திரிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் கூறியதாவது:-
1958-ம் ஆண்டில் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்ட குரங்குகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது, குரங்கம்மை நோய். தற்போது இந்த நோய் உலகளாவிய பொது சுகாதார முக்கியத்துவம் வாய்ந்த நோயாக மாறி உள்ளது. குரங்கம்மை பாதிப்பை பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருக்கிறது.
உலக நாடுகளில் பலருக்கும் இதன் பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. தமிழகத்தில் யாருக்கும் இதுவரையில் பாதிப்பு இல்லை. தீவிர காய்ச்சல், உடல் வலி மற்றும் கொப்பளங்கள் ஆகியன குரங்கம்மை நோயின் அறிகுறியாகும்.
குரங்கம்மை பாதிப்பின் அறிகுறியானது ஒரு வாரத்தில் தெரிய வரும். இதுபோன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக 104 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொண்டால், ஆம்புலன்ஸ் மூலம் இருக்கும் இடத்தில் இருந்து அழைத்து செல்லப்படுவார்கள். சென்னை கிண்டியில் உள்ள கிங் நிறுவனத்தில் அவர்களுக்கு குரங்கம்மை பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, கோவை அரசு ஆஸ்பத்திரி, திருச்சி அரசு ஆஸ்பத்திரி மற்றும் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிகளில் தலா 10 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 21 நாட்களில் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ள 116 நாடுகளுக்கு யார் எல்லாம் சென்றுள்ளார்கள் என்பதை அறிய, 4 பன்னாட்டு விமான நிலையங்களிலும் கண்காணிக்கும் பணி தொடங்கியுள்ளது.
தும்மும் போது வெளியாகும் எச்சில் துளிகள் மூலம் இந்த நோய் பரவுகிறது. மேலும் உடலில் சிரங்கு, காயங்களை தொடுவதின் மூலமாகவோ, பாதிக்கப்பட்ட நபரின் கறைபட்ட ஆடைகள், கிருமி தொற்றியுள்ள துணிகள், படுக்கைகள் போன்றவற்றை தொடுவதின் மூலமும் குரங்கம்மை பரவுகிறது. உடலுறவு மூலம் இந்த நோய் அதிகம் பரவ வாய்ப்பு உள்ளது. சில நேரம் பாதிக்கப்பட்ட விலங்குகள் மூலம் மனிதனுக்கு பரவ வாய்ப்புகள் உள்ளது. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களை, மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும். அவர்களை பராமரிப்பவர்கள், பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும்.
மேலும், குரங்கம்மை நோயினால் 3 முதல் 10 சதவீதம் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே குரங்கம்மை நோய் குறித்த அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிகளை அணுகி அதற்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குரங்கம்மை பாதிப்பின் அறிகுறியானது ஒரு வாரத்தில் தெரிய வரும்.
- குரங்கம்மை நோயினால் 3 முதல் 10 சதவீதம் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
1958-ம் ஆண்டில் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்ட குரங்குகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது, குரங்கம்மை நோய். தற்போது இந்த நோய் உலகளாவிய பொது சுகாதார முக்கியத்துவம் வாய்ந்த நோயாக மாறி உள்ளது. குரங்கம்மை பாதிப்பை பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருக்கிறது.
உலக நாடுகளில் பலருக்கும் இதன் பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. தமிழகத்தில் யாருக்கும் இதுவரையில் பாதிப்பு இல்லை. தீவிர காய்ச்சல், உடல் வலி மற்றும் கொப்பளங்கள் ஆகியன குரங்கம்மை நோயின் அறிகுறியாகும்.
குரங்கம்மை பாதிப்பின் அறிகுறியானது ஒரு வாரத்தில் தெரிய வரும். தும்மும் போது வெளியாகும் எச்சில் துளிகள் மூலம் இந்த நோய் பரவுகிறது. மேலும் உடலில் சிரங்கு, காயங்களை தொடுவதின் மூலமாகவோ, பாதிக்கப்பட்ட நபரின் கறைபட்ட ஆடைகள், கிருமி தொற்றியுள்ள துணிகள், படுக்கைகள் போன்றவற்றை தொடுவதின் மூலமும் குரங்கம்மை பரவுகிறது.
உடலுறவு மூலம் இந்த நோய் அதிகம் பரவ வாய்ப்பு உள்ளது. சில நேரம் பாதிக்கப்பட்ட விலங்குகள் மூலம் மனிதனுக்கு பரவ வாய்ப்புகள் உள்ளது. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களை, மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும். அவர்களை பராமரிப்பவர்கள், பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும்.
மேலும், குரங்கம்மை நோயினால் 3 முதல் 10 சதவீதம் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே குரங்கம்மை நோய் குறித்த அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிகளை அணுகி அதற்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
- குரங்கம்மை தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
புதுடெல்லி:
குரங்கம்மை எனப்படும் எம்பாக்ஸ் தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தி அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, தமிழகத்திலும் விமான நிலையத்தில் பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தற்போது வெளிநாட்டில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குரங்கம்மை நோய் பாதிப்புள்ள நாட்டில் இருந்து வந்தவருக்கு அறிகுறி காணப்பட்டது. குரங்கம்மை நோய் அறிகுறிகளுடன் வந்த பயணி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
- மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தி அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளது.
- குரங்கம்மை நோய் பாதிப்புள்ள நாட்டில் இருந்து வந்த இளைஞர் ஒருவருக்கு அறிகுறி காணப்பட்டது.
குரங்கம்மை எனப்படும் எம்பாக்ஸ் தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தி அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, தமிழகத்திலும் விமான நிலையத்தில் பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தற்போது வெளிநாட்டில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, குரங்கம்மை நோய் பாதிப்புள்ள நாட்டில் இருந்து வந்த இளைஞர் ஒருவருக்கு அறிகுறி காணப்பட்டது. அதைதொடர்ந்து, பயணி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய அந்த இளைஞருக்கு குரங்கம்மை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட நோயாளியின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் இளைஞருக்கு ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக பொது மக்களுக்கு எந்த அபாயமும் இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இளைஞருக்கு ஏற்பட்டுள்ள தொற்று கிளேட் 2 வகையை சார்ந்தது என்றும், உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ள கிளேட் 1 வகையை சார்ந்தது அல்ல என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
இந்த வகை நோய் தொற்று 2022, ஜூலை மாதம் இந்தியாவில் காணப்பட்ட குரங்கம்மை நோய் தொற்று எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
- 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஒப்புதல் அளிக்கப்படவில்லை.
ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் இந்த நோய் பாதிப்புக்கு பலியாகி உள்ளனர். கடந்த வாரம் மட்டும் 107 பேர் குரங்கம்மை பாதித்து உயிரிழந்தனர். தொடர்ந்து பரவி வருவது மற்றும் உயிரிழப்பு அதிகரிப்பதைத் தொடர்ந்து, நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில் பெரியவர்கள் குரங்கம்மை நோய்க்கு எதிரான தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது. இது ஆப்பிரிக்கா மற்றும் இதர நாடுகளில் குரங்கம்மை நோய்த்தடுப்பு நடவடிக்கையில் முக்கிய படி என்று உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.
பவேரியன் நார்டிக் ஏ/எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பூசியை கவி (GAVI) மற்றும் யுனிசெப் (UNICEF) போன்ற நன்கொடையாளர்கள் மட்டுமே வாங்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. ஒரே ஒரு உற்பத்தியாளர் மட்டுமே இருப்பதால் தடுப்பூசி இருப்பு குறைவாகவே இருக்கிறது.
நன்கொடையாளர்கள் தடுப்பூசியை கொள்முதல் செய்து உடனடியாக தேவைப்படும் பகுதியில் விரைவாக விநியோகம் செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் அதானம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்கி இருப்பதை அடுத்து, இந்த தடுப்பூசியை இரண்டு டோஸ் என்ற அளவில் 18 வயது அல்லது அதற்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கலாம். 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஒப்புதல் அளிக்கப்படவில்லை.
எனினும், அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகம் ஏற்படும் என கணிக்கப்பட்ட பகுதிகளில் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்கும் இந்த தடுப்பூசி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வயநாட்டை சேர்ந்த இளைஞர் அபுதாபியில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் திரும்பினார்.
- தனிமையில் உள்ள அவருக்கு சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வருகிறது.
அபுதாபியில் இருந்து திரும்பிய 26 வயது இளைஞருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து அதிகமானவர்கள் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக அரபுநாடுகளில் அதிகமாக கேரளா மக்கள் பணி செய்து வருகின்றனர்.
கேரளா மாநிலம் வயநாட்டை சேர்ந்த 26 வயது இளைஞர் அபுதாபியில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அந்த இளைஞர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தனிமையில் உள்ள அவருக்கு சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வருகிறது. கண்ணூரில் மற்றொருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரு நோயாளிகளும் பரியாரம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.