என் மலர்
நீங்கள் தேடியது "தற்கொலை."
- ஒரு தனியார் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து வந்துள்ளார்
- பெற்றோர்கள் ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை என்று திட்டியதாக கூறப்படுகிறது,
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உள்ள கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பனியன் கம்பெனி தொழிலாளி சிவகுமார் . இவரது மகள் சத்யா(வயது 17). இவர் வெள்ளகோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சத்யாவின் தோழிகள் அரசு பள்ளியில் படித்து வருவதாகவும், சத்யா தனியார் பள்ளியில் படிக்க விரும்பாமல் தோழிகளுடன் சேர்ந்து அரசு பள்ளியில் படிக்க விருப்பப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று சத்யா பள்ளிக்குச் செல்லவில்லை.
இதனால் பெற்றோர்கள் ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை என்று திட்டியதாக கூறப்படுகிறது, இதனால் மனமுடைந்த சத்யா வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சம்பவத்தன்று டியூசன் செல்லாமல் வீட்டில் இருந்ததால் சங்கீதா மகனை கண்டித்துள்ளார்.
- விரக்தியடைந்த ஹரிராம் வீட்டில் யாரும் இல்லாத போது சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி இ.பி. காலனி பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு 14 வயதில் மீனா என்ற மகளும், 15 வயதில் ஹரிராம் என்ற மகனும் உள்ளனர்.
சந்திரன் கடந்த 4 வருடமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் சங்கீதா கூலி வேலைக்கு சென்று குழந்தைகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் ஹரிராம் மாரண்ட அள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று டியூசன் செல்லாமல் வீட்டில் இருந்ததால் சங்கீதா மகனை கண்டித்துள்ளார்.
இதனால் விரக்தியடைந்த ஹரிராம் வீட்டில் யாரும் இல்லாத போது சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காவேரிப்பட்டினம் அருகே தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை.
- கிருஷ்ணகிரி மனைவி குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கோரமங்கலா அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மோகன்பாபு (வயது 36). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் காவேரிப்பட்ட ணம் எம்.எஸ். நகரை சேர்ந்தவர் அம்சவள்ளி என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். கணவன் - மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் கணவன் - மனைவி பிரிந்தனர். அம்சவள்ளி காவேரிப்பட்டணம் எம்.எஸ். நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது கணவரிடம் இருந்து விவகாரத்து கேட்டு கிருஷ்ணகிரி குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி மாலை மோகன் பாபு அம்சவள்ளியின் வீட்டிற்கு சென்று தன்னுடன் வருமாறு கூறினார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் மனமுடைந்த மோகன்பாபு தனது மனைவி வீட்டிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மோகன்பாபுவின் தந்தை கருணாநிதி காவேரிப்பட்டணம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தற்கொலை செய்து கொண்ட மோகன்பாபுவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- குருணை மருந்தை வாழைப்பழத்தில் தடவி சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக கிடந்தனர்.
- சம்பவம் நடந்த தோப்பில் அமைந்திருந்த பரமசிவன் வீட்டுக்குள் சென்று போலீசார் ஆய்வு செய்தனர்.
தென்காசி:
தென்காசி அருகே உள்ள கம்பிளி பகுதியை சேர்ந்தவர் பரமசிவன்(வயது 70). இவரது மனைவி சுடலை மாடத்தி(65). இவர்களது மகன் முருகேசன்(50). பரமசிவனும், சுடலைமாடத்தியும் அதே பகுதியில் உள்ள ஒரு தோப்பில் தங்கியிருந்தனர். முருகேசன் தனது மனைவி, மகன், மகள் மற்றும் மருமகளுடன் கம்பிளி மெயின்ரோட்டில் வசித்து வந்தார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முருகேசன் ஒரு விபத்தில் சிக்கியதில் அவருக்கு மனநலம் சற்று பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தனது பெற்றோர் வசிக்கும் தோப்பிற்கு சென்ற முருகேசன் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் முருகேசன் குடும்பத்தினர் தனது தாத்தா-பாட்டி வசிக்கும் தோப்பிற்கு சென்று பார்த்தபோது அங்கு பரமசிவன், முருகேசன், சுடலைமாடத்தி ஆகியோர் குருணை மருந்தை வாழைப்பழத்தில் தடவி சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக கிடந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து ஆய்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் அங்கு விரைந்த சென்று 3 பேர் உடலையும் கைப்பற்றி தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் நடந்த தோப்பில் அமைந்திருந்த பரமசிவன் வீட்டுக்குள் சென்று போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள கட்டிலில் வைக்கப்பட்டிருந்த தலையணையை எடுத்து பார்த்தபோது, அதன் கீழே ரூ.50 ஆயிரம் பணம் இருந்தது. தாங்கள் இறந்தால் தங்களின் இறுதிச் சடங்கிற்கு செலவு செய்வதற்காக அந்த பணத்தை அவர்கள் விட்டு சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
ஆய்க்குடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பெற்றோர், மகன் ஆகிய 3 பேரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதோடு மட்டுமின்றி இறுதிச்சடங்கிற்கு ரூ.50 ஆயிரம் பணத்தையும் விட்டுச் சென்றது அவர்களது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- திங்கட்கிழமை வங்கி மேலாளர் தற்கொலை செய்து கொண்டார்.
- புதன்கிழமை (நேற்று) 52 வயத தொழில்அதிபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தெற்கு மும்பையை நவி மும்பையுடன் இணைக்கும் வகையில் கடலுக்கு மேல் 21.8 கி.மீட்டர் தூரத்திற்கு பிரமாண்ட 6 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நேரத்தை குறைக்கும் வகையில் இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கடலுக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள மிக நீளமாக சாலை என்ற பெயரை இந்த அடகல் சேது கடல் பாலம் பெற்றுள்ளது.
ஆனால் தற்போது இந்த பாலத்தின் நடுப்பகுதிக்கு செல்லும் சிலர் அங்கிருந்து கடலுக்குள் குதித்து தற்கொலை செய்யும் சம்பவம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
நேற்று காலை தொழில் அதிபர் பிலிப் ஷா என்பவர் இந்த பாலத்தில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளார். சென்ட்ரல் மும்பையின் மதுங்கா பகுதியில் வசநித்து வந்த ஷா, தனது காரில் அடல் சேது பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு இடத்தில் காரை நிறுத்தி, கடலில் குதித்து தற்கொலை செய்துள்ளார்.
சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் பாலத்தின் மீது கார் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக மீட்புக் குழு உஷார் ஆனது. அதிகாரிகள் ஷா கடலில் குதித்த பகுதிக்கு விரைந்தனர். அவர்கள் ஷாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோத்து ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களாக அவர் மன அழுத்தத்தில் இருந்தாக தெரிகிறது. இதன் காரணமாக தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை வங்கி மேலாளர் பணிச்சுமை மற்றும் அழுத்தம் காரணமாக அடல் சேது பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அடல் சேது கடல் பாலத்தில் மூன்று நாட்களில் இரண்டு பேர் தற்கொலை செய்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பெண் ஒருவர் திடீரென குதித்து தற்கொலை செய்ய முயன்றார். அப்போது முடியை பிடித்து இழுத்து அவரை ஒருவர் காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து சிரமத்தை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட பாலம் தற்போது தற்கொலை செய்யும் பகுதியாக மாறி வருகிறதோ? என வாகன ஓட்டிகளம் ஒரு அச்சம் நிலவி வருகிறது.
- தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூர்:
பெங்களூர் எச்.ஏ.எல். போலீஸ் எல்லைக்குட்பட்ட தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தவர் பெண் என்ஜினீயர் (வயது 24). இவர் கடந்த 6 ஆண்டுகளாக திருமலஷெட்டிஹள்ளியில் உள்ள தனது தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வந்தார். தனது ஓய்வு நேரத்தை தனது மாமா பிரவீன் குடும்பத்துடன் கே.ஆர்.புரத்தில் உள்ள குடியிருப்பில் செலவிடுவது வழக்கம்.
இந்த நிலையில் பெண் என்ஜினீயர் கடந்த 12-ந்தேதி குண்டலஹள்ளி மெட்ரோல் நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்றார். அங்குள்ள அறையில் திடீரென்று உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். ஓட்டல் ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பெண் என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து தாய் கதறி அழுதார்.
அப்போது பெண் என்ஜினீயரின் நண்பர் அவரது தாயாரை சந்தித்து, பெண் என்ஜினீயரின் மாமா பிரவீன் செல்போனிலும், பென் டிரைவிலும் சேமித்து வைக்கப்பட்டிருந்த தனது நிர்வாண புகைப்படங்களை கொண்டு துன்புறுத்துவதாகவும், இதனால் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் பெண் என்ஜினீயர் தெரிவித்தார். அத்தகைய நடவடிக்கையை எடுக்க வேண்டாம் என நான் அறிவுரை வழங்கினேன். மேலும் அவர் இந்த பிரச்சனையை தனது பெற்றோருக்கு தெரிவித்து தீர்வு காணுமாறு என்னிடம் கூறினார் என்ற திடுக்கிடும் தகவலை பெண் என்ஜினீயர் தாயாரிடம் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பெண் என்ஜினீயரின் தாய் இதுகுறித்து எச்.ஏ.எல். போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பெண் என்ஜினீயர் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பிரவீன் ரகசியமாக எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை காண்பித்து உல்லாசத்துக்கு மறுத்தால் இணையதளத்தில் வெளியிடுவதாக பெண்ணை பிரவீன் துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் அவருடன் பழகுவதை தவிர்த்து, வேறொரு வாலிபருடன் பெண் என்ஜினீயர் பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரவீன், ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி உள்ளார்.
சம்பவத்தன்று பிரவீன், அவரை ஓட்டல் அறைக்கு வருமாறு அழைத்துள்ளார். இதனால் மனம் உடைந்த பெண் பிரவீன் தங்கி இருந்த ஓட்டலுக்கு சென்று தீக்குளித்து தற்கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீனை கைது செய்தனர். அவரது செல்போன் மற்றும் பென் டிரைவ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான பிரவீனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.