என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Relatives"

    • 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.
    • 300-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி மேட்டு தெருவை சேர்ந்தவர் கனிவண்ணன் (27) சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உப்பனாறு கரையில் கனிவண்ணன் தலையில் பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சீர்காழி போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கொலை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இதனிடையே திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கனிவண்ணனின் உடல் தடைய அறிவியல் பிரேதப் பரிசோதனை நேற்று மாலை செய்யப்பட்டது.

    இந்நிலையில் கொலை செய்யப்பட்டு பல மணி நேரம் கடந்தும் இதுவரை கொலை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

    என உறவினர்கள் குடும்பத்தினர் ஊர் மக்கள் கடும் ஆத்திரமடைந்தனர்.

    கொலை குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்ற கோரிக்கையுடன் மயிலாடுதுறை - சீர்காழி நெடுஞ்சாலை தென்பாதி மெயின் ரோட்டில் 300க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது ஏ.டி.எஸ்.பி தலைமை யில் ஏராளமான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் குற்றவாளிகளை விரைவில் காவல்துறை கைது செய்யும் என்று தெரிவி த்ததன் அடிப்படையில் சாலை மறியலை விலக்கி கொண்டனர்.

    மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார். தெரிவிக்கின்றனர்.

    • உறவினர்கள், தங்கச்சாமியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி புளியங்குடியில் உள்ள திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், துணை போலீஸ் சூப்பிரண்டு சுதிர் உள்ளிட்டோர் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலைய பகுதியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகன் தங்கச்சாமி(வயது 26). மாடசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    திடீர் சாவு

    தங்கச்சாமி அப்பகுதியில் பெட்டிக்கடையில் வைத்து சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 11-ந்தேதி புளியங்குடி போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் பாளை மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று மாலை திடீரென மயங்கி விழுந்தார்.

    உடனே அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த நிலையில் அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனை அறிந்த அவரது உறவினர்கள், தங்கச்சாமியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி புளியங்குடியில் உள்ள திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பேச்சுவார்த்தை

    உடனடியாக போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், தென்காசி ஆர்.டி.ஓ. கங்காதேவி, துணை போலீஸ் சூப்பிரண்டு சுதிர், புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து, உயிரிழந்த தங்கச்சாமியின் தாயாருக்கு முதியோர் உதவி த்தொகை வழங்குவதற்கான உடனடி நடவடிக்கையை ஆர்.டி.ஓ. மேற்கொண்டார். மேலும் தங்கச்சாமியின் குடும்பத்தி னருக்கு அரசு நிவாரண தொகை கிடைக்க செய்வதாக உறுதி அளித்தார். இதனால் அவரது உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் தங்கச்சாமி உடலை பெற்றுக்கொள்ளவும் சம்மதித்தனர்.

    இதற்கிடையே இன்று காலை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள தங்கச்சாமியின் உடலை பிரேத பரிசோதனைக்குப்பின் அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    • யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி காதலர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
    • புகார் அளிக்கப்பட்ட நிலையில் காதல் ஜோடிகள் காவல்நிலையம் வந்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் செல்போன் கடை வைத்திருக்கும் ரிக்கப் சந்த், இவரது மகள் (வயது 19).

    இவருக்கும் மயிலாடுது றையைச் சார்ந்த தற்போது காரைக்காலில் வசித்து வரும் பாலச்சந்தர் 20 என்ற வாலிபருக்கும் சில ஆண்டு களாக காதல் ஏற்பட்டது.

    காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரிந்ததால் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி காதலர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

    இதுகுறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் காதல் ஜோடிகள் காவல்நிலையம் வந்தனர்.

    தாங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்த அந்தப் பெண் தனது கணவரோடு தான் செல்வேன் என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் பெண்ணை தங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று பெண்ணின் உறவினர்கள் காவல்து றையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் காவல்து றையினர் மறுத்து விட்டனர்.

    பின்னர் பெண்ணை காதல் திருமணம் செய்த கணவனுடன் போலீசார் பெண்ணை அனுப்பி வைத்தனர்.

    ஆத்திரமடைந்த உறவினர்கள் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகே மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    போலிஸ்சார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 34 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • 2-வது திருமணம் செய்த கணவர்-உறவினர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சூலப்பட்டி நாச்சி யார்புரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது27). ஸ்ரீவில்லிபுத்தூர் லட்சுமி யாபுரம் இந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் கவுசல்யா (27). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர் களுக்கு 1 1/2 வயது பெண் குழந்தை உள்ளது. திரு மணத்தின்போது மாப் பிள்ளை வீட்டாருக்கு 10 பவுன் நகைகள், 50 ஆயிரம் ரொக்கம் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் மேலும் பணம் கொடுக்குமாறு கவுசல்யாவை கண்ணன் வீட்டார் வற்புறுத்தி யுள்ளனர். அதன் பேரில் கவுசல்யா வீட்டினர் ரூ.50 ஆயிரம் கொடுத்து ள்ளனர். அதன்பின்னரும் தொடர்ச்சியாக பணம் கேட்டு வந்துள்ளனர்.

    பணம் கொடுக்கா விட்டால் சேர்ந்து வாழ முடியாது என கண்ணன் வீட்டார் கூறியுள்ளனர்.

    இதையடுத்து கணவரை பிரிந்து வாழ முடிவு செய்த கவுசல்யா, ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பரில் ஜீவனாம்ச வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள கொல்வீரன் பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணை கண்ணன் 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

    இதுகுறித்து கவுசல்யா வுக்கு தெரியவந்தது. இதைதொ டர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் கண்ணன் குடும்பத்தின் மீது கவுசல்யா வழக்கு தொடர்ந்தார்.

    கோர்ட்டு உத்தரவின் பேரில் கண்ணன், அவரது தாயார் சுப்புதாய், சகோதரர் பன்னீர் செல்வம், சகோதரி சுந்தரம்மாள், சகோதரர் மனைவி பானுமதி உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு அருகே கொலை செய்யப்பட்ட சமையல் தொழிலாளி முருகனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் இன்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம், யாதவர் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 43). சமையல் தொழிலாளி.

    கடந்த உள்ளாட்சி தேர்தலில் இவரது நண்பரான அதே ஊரை சேர்ந்த முத்தையா என்ற சுரேஷ் சிங்கிகுளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக முருகன் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டார்.

    தேர்தலில் முத்தையா என்ற சுரேஷ் வெற்றி பெற்று பஞ்சாயத்து தலைவரானார். இதனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. பிரமுகர் வானமாமலை என்ற சுரேசுக்கு, முருகன் மீது விரோதம் ஏற்பட்டது. இதையடுத்து வானமாமலை என்ற சுரேஷ், முருகனுக்கு அடிக்கடி கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 22-ந்தேதி காலை 8 மணியளவில் வயலுக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்ற முருகனை, வானமாலை என்ற சுரேஷ் மற்றும் கூலிப்படையினர் 4 பேர் அரிவாள்களால் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்தனர்.

    இதுபற்றி அவரது மனைவி செல்வி (40) புகாரின் பேரில் களக்காடு இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தலைமறைவாக உள்ள வானமாமலை என்ற சுரேஷ் மற்றும் கூலிப்படையினரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே கொலையாளிகளை கைது செய்ய வேண்டும், முருகனின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முருகனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் இன்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தால் சிங்கிகுளம் பகுதியில் பதட்டம் நீடித்து வருகிறது.
    ×