என் மலர்
நீங்கள் தேடியது "Loans"
- சிவகங்கையில் ரூ.1,216 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
- ரூ.1.50 கோடி வரை வழங்கப்பட்டு வருகிறது.
சிவகங்கை
சிவகங்கையில் மாவட்ட அளவிலான தொழில் கடன் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு 1 லட்சத்து 20 ஆயிரத்து 791 பயனாளி களுக்கு ரூ.1216.63 கோடி மதிப்பிலான வங்கி கடன் அனுமதி மற்றும் வங்கி கடன் பட்டுவாடாவுக்கான ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதா வது:-
தமிழகத்தில் அனைத்து துறைகளும் சிறந்த விளங்க வேண்டும் என்ற அடிப்படை யில் முதல்-அமைச்சர் பல்வேறு சிறப்பு திட்டங் களை செயல்படுத்தி வரு கிறார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத் திடும் வகையில் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடு களை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2022-2023 முதல் 143 பயனாளிகளுக்கு 13.10 கோடி அளவில் வங்கி மூலம் கடனுதவி செய்து தரப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டிற்கு (2023-24) 210 பயனாளி களுக்கு 20.13 கோடி கடனுதவி செய்து தருவ தற்கும் இலக்கு நிர்ண யிக்கப்பட்டது.
இதுதவிர மேற்காணும் திட்டங்களில் வியாபார தொழில்கள், உற்பத்தித் தொழில்கள் மற்றும் சேவை தொழில்கள் செய்வதற்கும் மாவட்ட தொழில் மையம் மூலம் விண்ணப்பித்து வங்கி கடனுதவிகள், அரசின் மானியத்துடன் அதிகபட்சம் ரூ.1.50 கோடி வரை வழங்கப்பட்டு வருகிறது.
இதுபோன்று சிறு-குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் அர சால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தங்களின் வாழ் வாதாரத்தினை மேம் படுத்தி்க் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் துரைஆனந்த், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜுனு மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- விருதுநகர் அருகே பழங்குடியினருக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டது.
- பயனாளி 5 சதவீதம் முதல் 10 சதவீதம் சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகை வங்கி கடனுதவி பெற்றுக்கொள்ளலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம் பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக சென்னை மற்றும் புறநகர்பகுதிகளில் பில்டர்காபி நிலையம் அமைக்க மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேற்படி இத்தொழிலை தொடங்க காலி இடமோ அல்லது கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கு பில்டர் காபி நிலையம் அமைக்கவும், தொழில் முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும் உரிமையாளர் கட்டணம் ரூ.2 லட்சம் முற்றிலுமாக விலக்கும், விற்பனை செய்ய வாங்கும் பொருட்களுக்கு 5 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியும், பில்டர் காபி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும். மேலும் மாதாந்திர பில்லிங்மென் பொருள் கட்டணம் விலக்கு அளிக்கப்படும்.
இத்தொழிலை செய்ய திட்ட அறிக்கை தயார் செய்ய இலவச ஆலோ சனைகள் அந்நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும். 18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இத்தொழிலுக்கு ரூ.6.50 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை திட்டத் தொகையினை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவி டர்களுக்கு 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.25 லட்சம் எனவும், பழங்குடி யினருக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் வரை வழங்கப்படும். பயனாளி 5 சதவீதம் முதல் 10 சதவீதம் சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகை வங்கி கடனுதவி பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கூட்டுறவுத்துறை சார்பில் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் கடனுதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- இந்த தகவலை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே தளக்காவூர் கிராமத்தில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். கலெக்டர் ஆஷாஅஜித் முன்னிலை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-
தளக்காவூர் ஊராட்சியை பொறுத்தவரை மக்களின் வரிப்பணம் ரூ.21,17,000/- தொகை உள்ளது. இது தவிர அரசின் சார்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்கென ரூ.3.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் நடப்பாண்டிற்கென ரூ.5.14 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகள் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் பயிர் கடனுதவி, மகளிர் சுய உதவிக்குழு கடனுதவி, கால்நடை பராமரிப்பு கடனுதவி, நகை கடனுதவி, தென்னை மற்றும் வாழை பராமரிப்பு கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் கூட்டுறவுத்துறையின் சார்பில் வழங்கப் பட்டுள்ளது. இதில் ரூ.2.27 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவியும் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது. அதில் 139 நபர்களுக்கு ரூ.7.25 லட்சம் மதிப்பீட்டிலான பயிர் கடனுதவிகள், 63 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை சார்ந்த 789 நபர்களுக்கு ரூ.1.89 கோடி மதிப்பீட்டிலான கடனுதவியும், 105 நபர்களுக்கு ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் நகை கடனுதவியும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் கூட்டுறவுத்துறையின் சார்பில் பல்வேறு கடனுதவிகளை வழங்குவதற்கென கடந்தாண்டு ரூ.12 ஆயிரம் கோடி இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டது.ஆனால் அதையும் தாண்டி தமிழகம் முழுவதும் 13,500 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டது.
இதேபோன்று நடப்பாண்டிலும் தமிழகம் முழுவதும் ரூ.14 ஆயிரம் கோடி வழங்கிட இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதையும் தாண்டி ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் பல்வேறு கடனுதவிகள் வழங்கிட துறை ரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கல்லல் ஊராட்சி ஒன்றிய தலைவர் சொர்ணம் அசோகன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சரஸ்வதி, உதவி இயக்குநர் (ஊராட்சி கள்) குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சரி லெட்சுமணன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஆரோக்கியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இந்த வங்கி கிளையில் 100 கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளார்கள்.
- கடந்த 30 ம் தேதி கேரள முதலைமைச்சர் நிவாரணம் ஒதிக்கி 50 லட்சம் இந்த வங்கி நிர்வாகம் வழங்கியது.
வயநாடு நிலச்சரிவு பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி கேரள வங்கி தள்ளுபடி செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
கேரள வங்கி என்பது கேரள மாநில அரசிற்கு சொந்தமான கூட்டுறவு வங்கி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வங்கி கிளையில் 100 கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளார்கள். இந்த கிளையில் நிலச்சரிவில் சிக்கி மரணமடைந்தோர், உடமைகளை இழந்தோர், வீடுகளை இழந்தோரின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்துள்ளதாக அந்த வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கேரள முதலைமைச்சர் நிவாரணம் நிதி கணக்கிற்கு ரூ.50 லட்சத்தை கேரள வங்கி நிர்வாகம் வழங்கியுள்ளது. இதைத்தவிர, வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் ஒவ்வொருவரும் தங்களது 5 நாட்கள் ஊதியத்தை கேரள முதல்வர் நிவாரன நிதிக்கு வழங்கினர்.
இருப்பினும், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களில் எத்தனை பேர் இந்த வங்கியில் கடன் வைத்திருக்கிறார்கள் என்ற விவராம் இன்னும் வெளியாகவில்லை. இந்த அறிவிப்பின் மூலம், கூடுதலான மக்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- வாராக்கடன்களில் தங்க நகைக்கடன் பங்கு மட்டுமே 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
- சுதந்திர இந்தியாவில் பெண்களின் தாலியை திருடும் ஒரே அரசாங்கம் என்ற கீழான தனித்துவத்தை தற்போதைய அரசு பெற்றுள்ளது
பெண்களின் தாலியை மோடி தலைமையாலான மத்திய அரசு திருடுவதாக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வங்கிகளில் தாலியை வைத்து கடன் பெற்றுள்ள பெண்கள், கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய குடும்பங்கள் 3 லட்சம் கோடி அளவிலான தங்க நகை கடன் பெற்றுள்ள நிலையில், மந்தமான பொருளாதாரம் காரணமாக அதனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் குடும்பங்கள் உள்ளதாக புள்ளி விவரங்கள் வந்துள்ளன. வங்கிகளில் உள்ள வாராக்கடன்களில் தங்க நகைக்கடன் பங்கு மட்டுமே 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் (NBFC) தங்கக் கடன் வாராக்கடன்கள் (NPA) ஜூன் 2024 நிலவரப்படி 30% உயர்ந்து ரூ.6,696 கோடியாக உயர்ந்துள்ளது. இது மூன்று மாதங்களுக்கு முன்பு ரூ.5,149 கோடியாக இருந்தது.
கடன்களை திருப்பி செலுத்த முடியாத நிலையில், பெண்களின் தாலி உட்பட பல நகைகள் பறிபோகிறது. மத்திய அரசின் ஒழுங்கற்ற கொள்கை உருவாக்கமும், முன்னுரிமையை திசைதிருப்பி தவறானவற்றுக்கு அளிப்பதுமே இதற்கு முக்கிய காரணம்.

சுதந்திர இந்தியாவில் பெண்களின் தாலியை திருடும் ஒரே அரசாங்கம் என்ற கீழான தனித்துவத்தை தற்போதைய அரசு பெற்றுள்ளது என்று ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். முன்னதாக மக்களவை தேர்தலின்போது பெண்களின் தாலியை காங்கிரஸ் திருடிவிடும் என்று மோடி பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
- சிவபெருமாள் வாங்கிய பணத்தையும், அதற்கான வட்டித் தொகையையும் செலுத்த முடியாமல் திணறி வந்துள்ளார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே களக்காடு ரோட்டில் உள்ள பூதத்தான்குடியிருப்பை சேர்ந்தவர் சிவ பெருமாள் (வயது 24). பி.டெக். படித்துள்ளார்.
இவர் ஆன்லைனில் பணத்தை செலுத்தி வர்த்தகம் செய்து வந்துள்ளார். ஆன்லைன் வர்த்தகம் செய்யவும், புதிதாக தொழில் தொடங்கவும் ஆன்லைன் செயலி மூலம் 3 தவணையாக ரூ.5 லட்சம் கடனாக வாங்கி உள்ளார். ஆனால் அந்த செயலியில் 10 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை கந்து வட்டி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் சிவபெருமாள் வாங்கிய பணத்தையும், அதற்கான வட்டித் தொகையையும் செலுத்த முடியாமல் திணறி வந்துள்ளார். அவரிடம் ஆன்லைனில் வட்டிக்கு பணம் கொடுத்த களக்காடு சிதம்பராபுரத்தை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் மகன் சக்தி குமரன் (28) என்பவரும், திருக்குறுங்குடி அருகே உள்ள மாவடி ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ் (22) என்பவரும் பணத்தை திரும்பக்கேட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் சிவபெருமாளை நேரில் அழைத்து பணத்தை குறிப்பிட்ட தேதியில் செலுத்தக்கோரி ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து போடுமாறும், அல்லது அவரது மோட்டார் சைக்கிளை தங்களிடம் ஒப்படைத்து விடுமாறும் நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். இதனால் சிவபெருமாள் 2 பேரிடமும் மோட்டார் சைக்கிளை ஒப்படைத்து விட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.
விரக்தியில் இருந்த சிவபெருமாள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் சிவபெருமாளை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சேரன்மகாதேவி போலீசார் கந்து வட்டி கேட்டதாகவும், தற்கொலைக்கு தூண்டி யதாகவும் சக்திகுமரன், வெங்கடேஷ் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இளைஞர்கள் பலர் ஆன்லைன் டிரேடிங் அல்லது ஆன்லைன் விளையாட்டு உள்ளிட்டவற்றில் பணத்தை வைத்து விரைவில் அதிக பணத்தை சம்பாதிக்க முடியும் என நினைத்து பல லட்சங்களை கடனாக பெற்று அதை செலுத்த முடியாமல் திணறுவதை பார்க்க முடிகிறது. எவ்வளவு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினாலும் இது போன்று பலரும் சிக்கிக் கொள்வதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.