என் மலர்
நீங்கள் தேடியது "தீக்குளிக்க"
- சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை சேர்ந்த செங்கோடன், நடுவனேரியில் 6 பேர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்கள், திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றனர்.
- நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கின்றனர். மேலும் அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை சேர்ந்த செங்கோடன், நடுவனேரியை சேர்ந்த சாரதா, ரெட்டிப்பட்டியை சேர்ந்த ஜெயம்மாள், இவரது கணவர் தங்கமணி மற்றும் குழந்தைகள் உள்பட 6 பேர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்கள், திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கலெக்டர் அலுவலக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
இதில், மகுடஞ்சாவடி ஒன்றியம் கூடலூர் ஊராட்சி சின்னஆண்டிப் பாளையத்தில் எங்களுக்கு சொந்தமான 3.41 ஏக்கர் நிலம் உள்ளது. கூடலூர் குன்னிப்பாளையம், கோவையை சேர்ந்த சிலர், முதல்-அமைச்சர் மனைவியின் உறவினர் எனக் கூறிக்கொண்டு, இந்த நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கின்றனர். மேலும் அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இதுகுறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சங்ககிரி கோட்டாட்சியர், சார்பதிவாளர் ஆகியோரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தற்கொலை செய்துகொள்ளலாம் என இங்கு வந்தோம் என அவர்கள் கூறினர்.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 21 நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த நித்தியா (20) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டேன்.
- எனவே காரிப்பட்டி போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து தனது மனைவியை மீட்டுத்தர வேண்டும் என்பதற்காகவே கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றேன் என்றார்.
சேலம்:
சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகே உள்ள மின்னாம்பள்ளி ராஜமாணிக்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் ராகதேவன் (வயது 21). இவர் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே திடீரென தான் மறைத்து கொண்டு வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ராகதேவனை தடுத்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கூறுகையில், கடந்த 21 நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த நித்தியா (20) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். கடந்த 3 நாட்களுக்கு முன்பு நித்யாவின் பெற்றோர் வந்து, நித்யாவை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டனர். மேலும் நித்யாவை அழைத்து வர, அவர் வீட்டிற்கு சென்றபோது என்னை விரட்டி விட்டனர்.
எனவே காரிப்பட்டி போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து தனது மனைவியை மீட்டுத்தர வேண்டும் என்பதற்காகவே கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றேன் என்றார். போலீசார் தொடர்ந்து ராகதேவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலத்தில் இன்று காலை கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென மறைத்து வைத்திருந்த டீசலை எடுத்து இருவரும் தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
- எங்களுக்கு சொந்தமான 30 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை எனது மாமாவும், தி.மு.க பிரமுகரும் சேர்ந்து அபகரித்துக் கொண்டு தர மறுக்கின்றனர்.
சேலம்:
சேலம் வீராணம் மெயின் ரோடு டி.எம்.செட் பகுதியை சேர்ந்த மோகனா மற்றும் அவரது மகன் கோவிந்தராஜ் ஆகியோர் இன்று காலை கலெக்டர் அலுவலகம் வந்தனர். அப்போது, அவர்கள் நுழைவு வாயில் முன்பு திடீரென மறைத்து வைத்திருந்த டீசலை எடுத்து இருவரும் தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
இதை பார்த்த கலெக்டர் அலுவலக பாதுகாப்பில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோவிந்தராஜ் கூறும்போது:-
எங்களுக்கு சொந்தமான 30 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை எனது மாமாவும், தி.மு.க பிரமுகரும் சேர்ந்து அபகரித்துக் கொண்டு தர மறுக்கின்றனர். மேலும் நிலத்தை கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து அம்மா பேட்டை போலீஸ் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வாழ வழியில்லாமல் இருக்கும் நாங்கள் இறப்பதே மேல் என நினைத்து, தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, எங்கள் நிலத்தை உடனடியாக மீட்டு தர வேண்டும் என்றார்.
- ஆத்தூர் பஸ் நிலைய பகுதியில் புறநகர் காவல் நிலையத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக மண்ணெண்ணையை தலையில் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்தார்.
- இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் பஸ் நிலைய பகுதியில் புறநகர் காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையம் அருகில் பழ வியாபாரம் செய்து வருபவர் மகேஸ்வரி. இவரது கணவர் மண்டைக்கட்டு ( வயது 40). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் மகேஸ்வரிக்கும் மண்டைக்கட்டுக்கும் கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பஸ் நிலையப் பகுதியில் பழ வியாபராம் செய்து வந்த மனைவி மகேஸ்வரியிடம், மண்டைக்கட்டுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது மண்டைக்கட்டு கையில் வைத்திருந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்தார்.
இதை பார்த்து பஸ் நிலையப் பகுதியில் இருந்த பயணிகள் அலறியடித்து ஓடினர். உடனடியாக போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசார், அங்கு வந்து அவரை அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் மண்டைக்கட்டு தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி, பஸ் நிலையப் பகுதியிலேயே தீ வைத்து எரித்து, பின்னர் சிகரெட்டை கையில் வைத்துக் கொண்டு பஸ் நிலையப் பகுதியில் உலா வந்தார். இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் பஸ் நிலைய பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- ஓமலூர் நீதிமன்றத்திற்கு வந்து கந்து வட்டி கும்பல் அத்துமீறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியவாறு மண் எண்ணை தலையில் ஊற்றி குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றார்.
- ராமன் எனது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அத்துமீறி சேதப்படுத்தி வேறு பூட்டை பூட்டிவிட்டு ராமன் சென்று விட்டார்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள கொங்கு பட்டி ஊராட்சி மூங்கிலேரிபட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி மரகதம்(வயது 31).
இவர் ஓமலூர் நீதிமன்றத்திற்கு வந்து கந்து வட்டி கும்பல் அத்துமீறி தனது வீட்டை உடைத்து சேதப்படுத்தியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியவாறூ மண் எண்ணை தலையில் ஊற்றி குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றார். இதை அறிந்து அங்கிருந்த வக்கீல்கள் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து கண்ணீர் ஊற்றி சமாதானப்படுத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-
எனது கணவர் பால்ராஜ் மூங்கிலேரிபட்டி பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவரிடம் சிறுக சிறுக 9 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளதாகவும் பணம் பெற்ற நாள் முதல் இது வரை 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளோம். தொடர்ந்து ராமன் நாங்கள் குடியிருக்கும் வீட்டை எழுதிக் கொடுக்க சொல்லி மிரட்டுகிறார்.
இது குறித்து ஏற்கனவே சேலம் எஸ்.பி.யிடம் புகார் மனு அளித்து விசாரணையில் உள்ளது. அடிக்கடி எங்களை மிரட்டுவதால் நாங்கள் தற்போது அங்கு இல்லாமல் தீவட்டிபட்டியில் உள்ள எனது தாய் வீட்டில் குடியிருந்து வருகிறோம். எங்கள் குழந்தைகள் மட்டும் பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் ராமன் எனது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அத்துமீறி சேதப்படுத்தி வேறு பூட்டை பூட்டிவிட்டு ராமன் சென்று விட்டார். எனவே இதுபற்றி நடவ–டிக்கை எடுக்க வேணும்.
இவ்வாறு அவர் கூறினார். இதுபற்றி போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
- கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, சுமார் 5 செண்ட் நத்தம் புறம்போக்கு நிலத்தில் கூரை அமைத்து குடியிருந்து வருகின்றனர்.
- இதையடுத்து, கடந்த சில நாட்களாக கூரையை அகற்றிவிட்டு அட்டை வீடு அமைக்க பொருட்களை வாங்கி இருந்தனர்.
மகுடஞ்சாவ:
சேலம் மாவட்டம் இடங்கணசாலை, மாட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி மனைவி ஆராயி (வயது 42). இவருக்கு மோகனா (25) என்ற மகளும், பிரியா (22) என்ற தங்கையும் உள்ளனர்.
இவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, சுமார் 5 செண்ட் நத்தம் புறம்போக்கு நிலத்தில் கூரை அமைத்து குடியிருந்து வருகின்றனர். இதையடுத்து, கடந்த சில நாட்களாக கூரையை அகற்றிவிட்டு அட்டை வீடு அமைக்க பொருட்களை வாங்கி இருந்தனர்.
இந்த நிலையில், இடங்கண சாலை நகராட்சியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் உள்ளிட்ட 3 பேர், வீடு கட்ட ரூ.2 லட்சம் பணம் கேட்டதாக கூறப்படு கிறது. மேலும் பணம் கொடுக்கவில்லை என்றால் வீடுகட்ட அனுமதிக்க மாட்டோம் என மிரட்டியதாக ஆராயி கடந்த 15-ந் தேதி சேலம் கலெக்டர் அலு வலகத்தில் புகாரளித்தார்.
இந்நிலையில் நேற்று பொக்லைன் எந்திரத்துடன் வந்த சங்ககிரி வருவாய்து றையினர், ஆராயி வீடு கட்ட வைத்திருந்த பொருட்கள், அவரது கூரை வீடு மற்றும் மரங்களை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரியா உடலில் மண்ணென்னை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அவரை, பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார் தடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த சங்ககிரி டி.எஸ்.பி. ஆரோக்யராஜ் சம்பந்த பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, சமாதானம் செய்தனர். அதனை தொடர்ந்து ஆராயி குடும்பத்தினர் இடங்கணசாலை வி.ஏ.விடம் மனு அளித்து சென்றனர்.
இது குறித்து ஆராயி கூறியதாவது:-
நான் கடந்த 20 ஆண்டுகளாக இதே நிலத்தில் குடியிருந்து வருகிறேன். அதற்கு ரசீது உள்ளது. சில தினங்களுக்கு முன் 5 செண்ட் நிலத்தின் ஒரு பகுதியில் அட்டை வீடு கட்ட ஏற்பாடு செய்ய முயன்றபோது, தி.மு.க.,பிரமுகர் ஒருவர் என்னிடம் வந்து இங்கு வீடு கட்ட வேண்டும் என்றால் ரூ.2 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றார்.
நான் பணம் தர மறுக்கவே, பணம் கொடுக்கவில்லை என்றால் உன் நிலத்தை பள்ளி மைதானத்திற்கு சேர்த்துவிடுவேன் என மிரட்டி சென்றார். தற்போது, அவர் கூறியது போல் நேற்று அதிகாரிகள் உதவியுடன் நிலத்தை பள்ளி மைதானத்திற்கு சேர்க்க நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதனால் குழந்தை மற்றும் தங்கையுடன் வீடு இல்லாமல் தவிக்கிறேன். எனவே அரசு எனக்கு அதே இடத்தில் 2 செண்ட் நிலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மைதானம் செல்ல 2 இடங்களில் வழியுள்ள நிலையில் வேண்டும் என்றே எங்கள் நிலத்தை கேட்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாழப்பாடி அடுத்த புத்தியம்பாளை யத்தை சேர்ந்த பொன்னம் மாள் மற்றும் அவரது 2 மகள்கள் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர்.
- எனது பெயரில் இருந்த சொத்தை, எனது 2 மகள்களுக்கும் பிரித்து கொடுக்க வேண்டும்.
சேலம்:
சேலம் கலெக்டர் அலுவலகத்தில், வாழப்பாடி அடுத்த புத்தியம்பாளை யத்தை சேர்ந்த பொன்னம் மாள் (வயது 60) மற்றும் அவரது 2 மகள்கள் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர்.
அவர்களிடம் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
எனது பெயர் பொன்னம்மாள். எனக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகன், எனது கணவர் பெயரில் இருந்த 2 1/2 ஏக்கர் நிலத்தை எடுத்துக் கொண்டார். என் பெயரில் 1 1/2 ஏக்கர் சொத்து இருந்தது. இதை எனது இளைய மகன் லோகநாதன் எடுத்துக்கொண்டார்.
எனது பெயரில் இருந்த சொத்தை, எனது 2 மகள்களுக்கும் பிரித்து கொடுக்க வேண்டும். இதனை வற்புறுத்தி தீக்குளிக்க முயன்றதாக கூறினார். இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.
- இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தப் பட்டு தீர்வு காணப்படும்.
சேலம்:
சேலம் கலெக்டர் அலுவகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.
மனு
இங்கு பொதுமக்கள் தங்கள் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி மனு அளிப்பர். இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தப் பட்டு தீர்வு காணப்படும். இந்த நிலையில் கொண்டலாம்பட்டியை சேர்ந்த ரேஷ்மா (35) என்பவர் இன்று தனது குழந்தைகளு டன் கலெக்டர் அலுவல கத்திற்கு வந்தார்.
தீக்குளிக்க முயற்சி
பின்னர் அவர் திடீரென தான் மறைத்து வைத்து எடுத்து வந்திருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கலெக்டர் அலுவலக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ரேஷ்மாவை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
கணவர் கொடுமை
அப்போது அவர் கூறு கையில், எனது கணவர் பெயர் ரமேஷ். நாங்கள் இருவரும் காதலித்து திரு மணம் செய்து கொண்டோம். எங்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் எனது கணவர் மற்றும் மாமியார் என்னை கொடுமைபடுத்தி வருகின்றனர். இதனால் தற்கொலை செய்யும் முடி வில் இங்கு வந்தேன். எனவே அவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதையடுத்து போலீசார் அவரை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் மாவட்டம் ஓமலூர் மேட்டுப்பட்டி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள். இவரது மகன் கார்த்திக், மகள்கள் நிதியா, வெண்ணிலா ஆகியார் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.
- அப்போது கார்த்திக் தன் கையில் பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணையை எடுத்து தலையில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் மேட்டுப்பட்டி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள். இவரது மகன் கார்த்திக், மகள்கள் நிதியா, வெண்ணிலா ஆகியார் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.
அப்போது கார்த்திக் தன் கையில் பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணையை எடுத்து தலையில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கிருந்த போலீசார் அவரை தடுத்தனர். பின்னர் அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் நாங்கள் அதே பகுதியில் 3 செண்ட் நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். இந்த இடத்தை அருகில் உள்ளவர்கள் தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி மிரட்டி வருகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.