என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதமர்மோடி"

    • தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
    • நடிகர் மறைவிற்கு ரசிகர்களும் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பிரபல பாலிவுட் நடிகரும், இயக்குநருமான மனோஜ் குமார் (87) உடல்நலக் குறைவால் காலமானார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

    பாலிவுட்டில் 1960, 70களில் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாராக திகழ்ந்து வந்த இவரின் மறைவிற்கு ரசிகர்களும் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் மனோஜ் குமாரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதவிட்டிருப்தாவது:-

    புகழ்பெற்ற நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான மனோஜ் குமார் அவர்களின் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளேன்.

    இந்திய சினிமாவின் அடையாளமாக அவர் இருந்தார், குறிப்பாக அவரது தேசபக்தி ஆர்வத்திற்காக நினைவுகூரப்பட்டார். அது அவரது படங்களிலும் பிரதிபலித்தது.

    மனோஜ் குமாரின் படைப்புகள் தேசிய பெருமையின் உணர்வைத் தூண்டின. அது மேலும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். இந்த துயர நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரதமர் என்ற நிலையில் இருந்து தடுமாறியுள்ளார்.
    • ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி தரம்தாழ்ந்து பேசி வருகிறார். ராகுல்காந்தியையும், காங்கிரசையும் கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கிறார். பிரதமர் என்ற நிலையில் இருந்து தடுமாறியுள்ளார்.

    தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் சாதனைகளை பற்றி பேசாமல், புலம்பி வருகிறார். தினமும் தன் நிலையிலிருந்து மாறி, மாறி பேசி தடம் புரண்டு வருகிறார்.

    நடந்த முடிந்த 3 கட்ட தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும். 7 கட்ட தேர்தல் முடியும் நிலையில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். யார் பிரதமர் என்பதை இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஒருங்கிணைந்து முடிவு செய்வார்கள். ராகுல்காந்தி பிரதமர் ஆக வேண்டும் என்பது எனது விருப்பம்.

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும். லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெறுவார்.

    மோடி மீதான எதிர்ப்பு அலை, பா.ஜ.க. வேட்பாளரின் செயல்பாடு ஆகியவற்றின் மீதான அதிருப்தியால் காங்கிரஸ் வெற்றி உறுதியாகியுள்ளது.

    புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சி 3 ஆண்டு முடிந்து 4-ம் ஆண்டை தொடங்கியுள்ளது. இந்த ஆட்சிக்கு பூஜ்ஜியம் மதிப்பெண்தான் அளிக்க முடியும். எந்த வளர்ச்சி திட்டமும் இல்லை. தேர்தலில்கூட முதல்-அமைச்சர் ரங்கசாமி, ஆட்சியின் சாதனைகளை பற்றி பேசவில்லை.

    புதிய தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு ஆகியவை உருவாக்கப்படவில்லை. கஞ்சா, அபின் தாராளமாக விற்பனையாகிறது. விலை வாசி கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் புதுவையில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அதேபோல மாநில அரசு அளித்த வாக்குறுதிகளான மாநில அந்தஸ்து, நிதி கமிஷனில் சேர்ப்பது, கடன் தள்ளுபடி ஆகியவை நிறைவேற்றப் படவில்லை.

    தேசிய ஜனநாயக கூட்டணியின் 3 ஆண்டு ஆட்சி மக்களை வஞ்சித்துள்ளது. காங்கிரஸ் அரசு கொண்டுவந்த திட்டங்களை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முடக்கி வைத்துள்ளது.

    ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி வழங்கும் திட்டத்தை அமல்படுத்தி னோம். இந்த திட்டத்துக்கு ரூ.23 கோடி நிதி ஒதுக்கப்பட்டும் மாணவர் களுக்கு வழங்கப்பட வில்லை. இந்த நிதி கருவூலத்தில் உள்ளது. இதை திட்டமிட்டு மாணவர்களுக்கு கிடைக்கவிடாமல் செய்வதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

    பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கும் இலவச கல்வி வழங்க காங்கிரஸ் அமைச்சரவையில் முடிவெடுத்தோம். இந்த திட்டத்தையும் அரசு கிடப்பில் போட்டுள்ளது. நீட் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.

    தற்போது நீட் தேர்வு மூலம்தான் நர்சிங் மாணவர்களும் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது ஏழை, எளிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதை புதுவையில் உள்ள அரசியல் கட்சிகள் இணைந்து எதிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் சர்ச்சை கருத்து.
    • மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப் ஆகியோர் ராஜினாமா.

    மாலே:

    இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவின் அதிபர் முகமுது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். சீன ஆதரவாளரான அவர் மாலத்தீவில் இருந்த இந்திய ராணுவத்தை வெளியேற உத்தரவிட்டார்.

    மேலும் இந்திய பிரதமர் மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் சர்ச்சை கருத்தை தெரிவித்தனர்.

    இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து இந்தியர்கள் பலர் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை தவிர்த்தனர். இதனால் மாலத்தீவில் சுற்றுலாத்துறை, பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன்பின் பிரதமர் மோடியை விமர்சித்த மந்திரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    தற்போது இந்தியாவுடன் மாலத்தீவு அரசு இணக்கமான அணுகுமுறையை கடைபிடித்து வருகிறது.

    இந்த நிலையில் பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக கடந்த ஜனவரி மாதம் சஸ்பெண்டு செய்யப்பட்ட மந்திரிகள் மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

    மாலத்தீவு அதிபர் முகமுது முய்சு, விரைவில் இந்தியாவுக்கு அரசு முறை பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மந்திரிகள் 2 பேர் பதவி விலகியுள்ளனர்.

    இதுகுறித்து அதிபர் அலுவலகத்தின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஹீனா வலீத் கூறும்போது, அதிபர் முகமுது முய்சு மிக விரைவில் இந்தியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ள உள்ளார். பயணத்திற்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இரு தரப்பினரும் ஒரு தேதியை விவாதித்து வருகிறோம் என்றார்.

    • சரக்கு பெட்டக முனையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.
    • இது இந்தியாவின் கடல் உள்கட்டமைப்பின் புதிய நட்சத்திரம்.

    தூத்துக்குடி துறைமுகத்தில் புதிய சர்வதேச சரக்கு பெட்டக முனையத்தை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-

    விக்சித் பாரத யாத்திரையில் இது ஒரு முக்கியமான கட்டமாகும்.

    இந்த புதிய தூத்துக்குடி சர்வதேச கொள்கலன் முனையம் இந்தியாவின் கடல் உள்கட்டமைப்பின் புதிய நட்சத்திரம். இந்த புதிய முனையத்தின் மூலம், வ.உ.சிரதம்பரனார் துறைமுகத்தின் திறன் விரிவடையும்.

    இது வ.உ.சி துறைமுகத்தில் தளவாடச் செலவுகளைக் குறைக்கும் மற்றும் இந்தியாவின் அன்னிய செலாவணியை காப்பாற்றும்.

    இவ்வாறு அவர் குறி்பபிட்டுள்ளார்.

    • வருகிற 25-ந்தேதி 2-ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
    • 26 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.

    ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1-ந்தேதிகளில் ஓட்டுப்பதிவு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதல் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது.

    அடுத்தக்கட்டமாக வருகிற 25-ந்தேதி 2-ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக அந்த 26 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.

    பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இதனால், பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ஏற்கனவே ஜம்மு பிராந்தியத்தில் பிரசாரம் செய்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) பிரதமர் மோடி 2-வது முறையாக காஷ்மீர் சென்றுள்ளார்.

    பிரதமர் மோடி முதலில் ஸ்ரீநகரில் நடக்கும் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பின்னர், கத்ரா நகரில் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தத் தேர்தல் ஜம்மு-காஷ்மீரின் எதிர்காலத்தைத் தேர்ந்தெடுப்பதற்கானது. இந்தத் தேர்தல் 'புதிய ஜம்மு-காஷ்மீரை' புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்வதற்காகும்.

    காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பிடிபி ஆகிய மூன்று குடும்பங்களும் சேர்ந்து பல ஆண்டுகளாக இங்குள்ள மக்களுக்கு காயங்களை ஏற்படுத்தியது. பாஜகவின் சின்னமான தாமரைக்கு அடுத்துள்ள பட்டனை அழுத்துவதன் மூலம் இந்தக் கட்சிகளின் அரசியல் சூரிய அஸ்தமனத்தை உறுதி செய்யும்.

    அது பாஜகதான். இது உங்கள் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து, பல தசாப்தங்களாக பிராந்தியத்துடனான பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிகாரம் அளிக்க வேண்டும்.
    • வேலைவாய்ப்புகளை உருவாக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி இன்று சுமார் ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    மேலும், வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.2,870 கோடி மதிப்பில் விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கம் மற்றும் புதிய முனைய கட்டிடம் மற்றும் தொடர்புடைய பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிகாரம் அளிக்க வேண்டும். அவ்வாறு அதிகாரம் பெறும்போது, சமூகமும் வளர்ச்சியடையும்.

    பெண்களுக்கு பாஜக அரசு புதிய பலத்தை அளித்துள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்க்கையையும் மேம்படுத்த பாடுபடுகிறோம்.

    மக்களுக்கான சேவைகளை மேம்படுத்த, வேலைவாய்ப்புகளை உருவாக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

    10 ஆண்டுகளில் நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த பல்வேறு முன்னெடுப்புகளை செய்துள்ளோம். நாட்டு மக்கள் விரும்பும் மாற்றங்களே அரசின் முதன்மையான முன்னுரிமை ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலகின் தெற்கு நாடுகளின் சவால்கள் மற்றும் முன்னுரிமைகளை மனதில் கொள்ளும்போதுதான் நமது விவாதங்கள் வெற்றிபெற முடியும்.
    • ஆப்பிரிக்க யூனியனுக்கு முழு உறுப்பினர் வழங்கி தெற்குப் பகுதியின் குரலை வலுப்படுத்தியதுபோல், உலகளாவிய நிர்வாக அமைப்புகளை சீர்திருத்துவோம்.

    உலகின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றான ஜி20 அமைப்பின் தலைமை பதவியை பிரேசில் வகித்து வருகிறது. பிரேசில் நாட்டில் ஜி20 மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது. சமூக உள்ளடக்கம் மற்றும் பட்டினி, வறுமைக்கு எதிரான போராட்டம் என்ற தலைப்பில் நடப்பு ஜி20 உச்சிமாநாடு நடைபெற்றுகிறது.

    இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    போர்களால் உலகின் தெற்கு நாடுகள் (Global South) உணவு, எரிபொருள், உரம் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, உலகின் தெற்கு நாடுகளின் சவால்கள் மற்றும் முன்னுரிமைகளை மனதில் கொள்ளும்போதுதான் நமது விவாதங்கள் வெற்றிபெற முடியும். டெல்லி உச்சிமாநாட்டின் போது ஆப்பிரிக்க யூனியனுக்கு G20-ன் நிரந்தர பிரதிநிதி அந்தஸ்தை வழங்கியதன் மூலம் உலகின் தெற்குப் பகுதியின் குரலை வலுப்படுத்தியதுபோல், உலகளாவிய நிர்வாக அமைப்புகளை சீர்திருத்துவோம்.

    இவ்வாறு பிரதம் மோடி கூறினார்.

    இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    பிரதமர் மோடி மாநாட்டிற்கிடையே பிரான்ஸ் அதிபர் மற்றும் இங்கிலாந்து, இந்தோனேசியா, போர்ச்சுக்கல், இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடு பிரதமர்களை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    • மகாகவியின் முழுமையான படைப்புகளின் 23 தொகுதிகள் சீனி. விசுவநாதனால் தொகுக்கப்பட்டு அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
    • பாரதி அறிஞர் என்று அழைக்கப்படும் சீனி. விசுவநாதனால் தேசியக் கவி பாரதியின் 23 தொகுதிகள் அடங்கிய முழுப்படைப்புகளும் கால வரிசைப்படி தொகுத்கப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதியின் முழுமையான படைப்புகளின் தொகுப்பை இன்று டெல்லியில் உள்ள எண். 7 லோக் கல்யாண் மார்க்கில் (பிரதமர் இல்ல முகாம்) பிரதமர் மோடி வெளியிட்டார்.

    சுப்பிரமணிய பாரதியின் எழுத்துக்கள் மக்களிடையே தேச பக்தியை ஊட்டியது. இந்திய கலாசாரம் மற்றும் நாட்டின் ஆன்மிக பாரம்பரியத்தின் சாரத்தை வெகுஜன மக்கள் தொடர்புபடுத்தக்கூடிய மொழியில் மக்களிடம் அவர் எடுத்துச் சென்றார்.

    மகாகவியின் முழுமையான படைப்புகளின் 23 தொகுதிகள் சீனி. விசுவநாதனால் தொகுக்கப்பட்டு அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் எழுத்துகளின் பதிப்புகள், விளக்கங்கள், ஆவணங்கள், பின்னணித் தகவல்கள் மற்றும் தத்துவ விளக்கங்கள் போன்றவை அடங்கி உள்ளது. பாரதி அறிஞர் என்று அழைக்கப்படும் சீனி. விசுவநாதனால் தேசியக் கவி பாரதியின் 23 தொகுதிகள் அடங்கிய முழுப்படைப்புகளும் கால வரிசைப்படி தொகுத்கப்பட்டுள்ளன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்த தொகுப்புகள் 81 வயதான சீனி.விசுவநாதன் கடந்த 64 ஆண்டுகளாக திரட்டியவையாகும்.



    ×