என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmers"

    • அமைச்சர் பன்னீர்செல்வத்தை தலைமை செயலகத்தில் ராஜா எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து மனு அளித்தார்.
    • விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

    சங்கரன்கோவில்:

    தமிழக உழவர் நலன் மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வத்தை தலைமை செயலகத்தில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி திருவேங்கடம் தாலுகா கமிட்டி கடிதம், மற்றும் பல்வேறு கிராமங்களின் விவசாயிகள் சார்பில் இந்த மனுவை அளிக்கிறேன்.

    சங்கரன்கோவில் தொகு தியை பொறுத்தவரை விவசாயம் என்பது மிக முக்கிய பிரதான தொழி லாகும். சங்கரன்கோவில் தொகுதியில் மானாவாரி சாகுபடி வடகிழக்கு பருவமழை பருவத்தி்ல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில நேரங்களில் பருவமழை பொய்த்து விடுவதால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகும் சூழ்நிலை உள்ளது. திருவேங்கடம் வட்டம் அ.கரிசல்குளம் பழங்கோட்டை குறுவட்ட விவசாயிகள், நடுவக்குறிச்சி பிர்க்கா மற்றும் பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயிகள் 2020 - 21, 2021-22-ம் ஆண்டுகளில் மானாவாரி பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய உரிய உரிமைத் தொகை கட்டியுள்ளனர்.

    மேலும் சாகுபடியான பயிர்களுக்கு இன்சூரன்ஸ் தொகையும் கட்டப்பட்டுள்ளது. மேற்படி காலங்களில் பயிர் நஷ்டம் ஏற்பட்டதாக அரசால் வறட்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசால் அறிவிக்கப்பட்ட வறட்சி நிவாரண தொகை அறிவிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்படாமல் ஒருசில கிராமங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

    மேற்படி தாலுகாவில் சாகுபடியான பயிர்களை உரிய காலத்தில் மேலாய்வு செய்து அரசு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயி களுக்கு வறட்சி நிவாரணம் வழங்க உத்தரவான தொகை விவசாய உயர் அதிகாரிகளால் முழுமையாக வழங்கப்படாமல் இருப்பதாகவும் எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி யுள்ளார்.

    மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் மாவட்டத்தில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரி களை தொடர்பு கொண்டு உடனடியாக கள ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு முறையாக வழங்க வேண்டிய நிவார ணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    • மாரிமுத்து குடும்பத்தினருடன் தாலுகா அலுவலகம் எதிர்புறம் தர்ணாவில் ஈடுபட்டார்.
    • கூட்டுப்பட்டாவிற்கு தனிப்பட்டா கேட்டு மாரிமுத்து குடும்பத்தினர் விண்ணப்பம் செய்துள்ளார்கள்.

    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள சுத்தமல்லியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 40). இவரது அண்ணன் மாரிவேல்.

    தர்ணா போராட்டம்

    விவசாயிகளான இவர்கள் இன்று தங்களது குடும்பத்தினருடன் வந்து நெல்லை தாலுகா அலுவலகம் நுழைவு வாயில் எதிர்புறம் திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் சந்திப்பு போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது மாரிமுத்து கூறியதாவது:-

    எங்களது பூர்வீக சொத்து சுத்தமல்லியில் உள்ளது. இதனை எங்களது குடும்பத்தினரும், பெரி யப்பா குடும்பத்தினரும் சரிபாதியாக பங்கிட்டு கொண்டோம். இதற்காக அந்த சொத்திற்கான கூட்டுப்பட்டாவிற்கு தனிப்பட்டா கேட்டு விண்ணப்பம் செய்தோம். பெரியப்பா குடும்பத்தினருக்கு விரைவிலேயே தனிப்பட்டா வழங்கப்பட்டது. ஆனால் மாதக்கணக்காகியும் எங்களுக்கு தனிப்பட்டா வழங்க வில்லை. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் கேட்ட போதும், அவர்கள் ஆவணங்கள் சரியில்லை என்று அலைக்கழிப்பு செய்தனர்.

    ஒரே பட்டாவை கொண்ட பெரியப்பா குடும்பத்தினருக்கு தனிப்பட்டா வழங்கிய போது எங்களுக்கு மட்டும் ஏன் வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக எங்களுக்கு தனிப்பட்டா வழங்க வேண்டும் என கூறினார்.

    சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் ஆய்வாளர் லட்சுமண பாண்டியன், டவுன் உதவி கமிஷனர் விஜயகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆர்.டி.ஓ.அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். அதன்பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அகரக்கொந்தகை ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • மானிய விலையில் 300 நபர்களுக்கு பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் வட்டாரத்தில் 2023-24 ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அகரக்கொந்தகை ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இங்குள்ள விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை மூலமாக 300 நபர்களுக்கு பழ மரக்கன்றுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதன்படி ஊராட்சி மன்றத் தலைவர் தமிழரசி பக்கிரிசாமி தலைமையில் உதவி தோட்டக்கலை அலுவலர் செல்லபாண்டியன் விவசாயிகளுக்கு மானிய விலையில் பழக்கன்றுகளை வழங்கினார்.

    இதில் ஊராட்சி செயலர் பிரேம் குமார்,வார்டு உறுப்பினர் கோவிந்தராஜன் மற்றும் பொதுமக்கள், விவாசயிகள் உடனிருந்தனர்.

    • விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப நிவாரணம் வழங்க முன்வர வேண்டும்.
    • அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப நிவாரணம் வழங்க முன்வர வேண்டும். கடந்த 2 தினங்களாக மாநிலத்தில் டெல்டா உள்ளிட்ட பல மாவட்டப் பகுதிகளில் பெய்த கனமழையால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட நெல் உட்பட பலவகையான பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்துக்கு உட்படுகிறார்கள். எனவே தமிழக அரசு, மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய விளைப்பொருகளுக்கு நிவாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு குறைந்த பட்சம் ரூ. 20,000 கொடுக்க முன்வர வேண்டும். மேலும் தொடர்ந்து மழை பெய்யும் என்ற செய்தியால் முன்னெச்சரிக்கை, முன்னேற்பாடு நடவடிக்கைகளில் தமிழக அரசு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×