என் மலர்
நீங்கள் தேடியது "வாலிபர்"
- சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்து, விசாரணை நடத்தினர்.
- 2019-ம் ஆண்டு கிருஷ்ணகிரியில் வைத்து அவரது தாய் வைரத்தை கொலை செய்தார்.
சேலம்:
சேலம் நெத்திமேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் அருகே, சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் தலையில் காயத்துடன் நேற்றிரவு மயங்கி கிடந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று, அந்த வாலிபரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்து, விசாரணை நடத்தினர்.
இதில், மயங்கி கிடந்த வாலிபர் மணியனூர் கந்தாயம்மாள் தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் கார்த்தி (வயது 33) என்பது தெரியவந்தது. கார்த்தி 2019-ம் ஆண்டு கிருஷ்ணகிரியில் வைத்து அவரது தாய் வைரத்தை கொலை செய்தார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், ஜாமீனில் வெளியே வந்து சுற்றிதிரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், கார்த்தி தவறி விழுந்து காயம டைந்தாரா? அல்லது வேறு யாராவது தாக்கினார்களா? என்பது குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
- இளம்பெண்-வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
- மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
மதுரை
மதுரை அவனியாபுரம் வள்ளல் ஆனந்தபுரம் ஜே.ஜே. நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி மாலினி (வயது 24). இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இந்த நிலையில் குடும்பப் பிரச்சினையால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மாலினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவனியாபுரம் போலீசில் மாலினியின் தந்தை கருப்பையா புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மிளகரணை நாகம்மாள் தெரு வடக்கு தெருவை சேர்ந்தவர் மணி (50). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மணி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மனைவி நாகம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கூடல் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மணிமாறன் ரெயில் தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
- அகஸ்தியன்பள்ளியை நோக்கி வந்த டெமு ரெயில் அவர் மீது மோதியது.
நாகப்பட்டினம்:
வேதாரண்யத்தை அடுத்த கொள்ளுதீவை சேர்ந்தவர் பாலு மகன் மணிமாறன் (வயது 21). மாற்றுத்திறனாளி.
இவர் அப்பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று மாலை நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருத்துறைப்பூண்டியில் இருந்து அகஸ்தியன்பள்ளியை நோக்கி வந்த டெமு ரெயில் மணிமாறன் மீது மோதியது.
இதில் மணிமாறன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மணிமாறன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலை காரணமாக சிதம்பரம் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.
- அந்த கடிதத்தை போலீசாரிடம் ஒப்படைத்து கேசவமூர்த்தியிடம் விசாரிக்குமாறு கூறினர்.
கும்பகோணம்:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த மணல்மேடு மகாராஜபு ரத்தை சேர்ந்தவர் அசோக்ராஜ் (வயது 27).
இவர் சென்னையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், இவர் கடந்த 11-ந்தேதி தீபாவளி பண்டி கைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊரான சோழபுரத்திற்கு வந்துள்ளார்.
பின்னர், அவர் கடந்த 13-ந்தேதி வேலை காரணமாக சிதம்பரம் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.
ஆனால் வீடு திரும்பவில்லை.
இதைதொடர்ந்து, அசோக் ராஜின் பாட்டி பத்மினி சோழபுரம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக்ராஜை தேடி வந்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையில் அசோக்ராஜ் கடைசியாக சோழபுரம் மணல்மேடு கீழத்தெருவை சேர்ந்த சித்த வைத்தியரான கேசவமூர்த்தி (47) என்பவர் வீட்டுக்கு சென்றது தெரியவந்தது.
இதைதொடர்ந்து, கேசவமூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர், கடந்த 13-ந் தேதி இரவு அசோக்ராஜ் தன்னை வீட்டில் வந்து பார்த்ததாகவும், தனக்கு ஆண்மை குறைவு உள்ளதால் வாழ பிடிக்கவில்லை எனக்கூறி அழுததாகவும் தெரிவித்தார்.
இதனால் தஞ்சையில் உள்ள தனக்கு தெரிந்த டாக்டரை அணுகுமாறு அவரிடம்கூறி அனுப்பி வைத்ததாக போலீசாரிடம் கூறினார்.
கடந்த 16-ந் தேதி அசோக்ராஜ் வீட்டிற்கு அவர் எழுதியதாக ஒரு கடிதம் வந்துள்ளது.
அந்த கடிதத்தில், தனக்கு ஆண்மை குறைவு இருப்பதாகவும், இதனால் இந்த உலகத்தில் நான் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என எழுதப்பட்டிருந்தது.
ஆனால் அந்த கடிதத்தில் இருந்த கையெழுத்து அசோக் ராஜின் கையழுத்து இல்லை என்று அவரது குடும்பத்தினர் உறுதி செய்தனர். மேலும் அந்த கடிதத்தை போலீசாரிடம் ஒப்படைத்து கேசவமூர்த்தியிடம் விசாரிக்குமாறு கூறினர்.
இதையடுத்து கடந்த 17-ந் தேதி கேசவமூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் அவர் போலீசாரிடம் கூறுகையில், சம்பவத்தன்று நான், அசோக் ராஜிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டபோது, அவருக்கு ஆண்மை வீரியத்திற்காக சித்த மருந்தை கொடுத்தேன்.
அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்.
இதனால் அவர் இறந்து விட்டதாக நினைத்து அசோக்ராஜின் தலையை துண்டித்தேன். பின்னர் உடல் மற்றும் தலையை எரித்து தனது வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்தேன் என்றார்.
இதையடுத்து திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் தலைமையில் போலீசார் நேற்று கேசவமூர்த்தியை அவரது வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
அங்கு அவர் அசோக்ராஜை புதைத்த இடத்தை அடையாளம் காட்டினார்.
இதை தொடர்ந்து கோட்டாட்சியர் பூர்ணிமா முன்னிலையில் அசோக்ராஜ் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
உடல் அழுகிய நிலையில் இருந்ததால் சம்பவ இடத்திலேயே டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.
கேசவமூர்த்தியை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.