என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனமழை"

    • சென்னை உள்பட 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
    • கனமழையால் ராணிப்பேட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை:

    வடகிழக்கு பருவமழைத் தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இரு தினங்களாக தொடர் மழை பெய்தது. மழைப்பொழிவு நவம்பர் 4-ம் தேதி வரை நீடிக்கும் என்றும், நவம்பர் 1-ம் தேதியில் இருந்து மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும், வட தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், கனமழை எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

    • சென்னை உள்பட 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
    • கனமழையால் ராணிப்பேட்டை, சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழைத் தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இரு தினங்களாக தொடர் மழை பெய்தது. மழைப்பொழிவு நவம்பர் 4-ம் தேதி வரை நீடிக்கும் என்றும், நவம்பர் 1-ம் தேதியில் இருந்து மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும், வட தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், கனமழை எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    இதேபோல், வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து, மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    • கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படும் 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
    • 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்.

    வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து சென்னையில் கனமழை கொட்டி தீர்க்கிறது. நேற்று முன்தினம் தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சிறிது நேரம் ஓய்வதும் மீண்டும் கொட்டி தீர்ப்பதுமாக தொடர்கிறது.

    மழைநீர் வடிகால்வாய் பணிகள் 75 சதவீதம் முடிவடைந்த பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கவில்லை. ஓரளவு தண்ணீர் தேங்கினாலும் மழை ஓயும்போது வடிந்து விடுகிறது.

    ஆனால், உட்புற சாலைகள், தெருக்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. மோட்டார்கள் மூலம் அதை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம், செங்குன்றம், பூந்தமல்லி, மணலி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. சிறு சிறு கால்வாய்களில் அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்ததால் அந்த தண்ணீர் சாலைகளை சூழ்ந்தது.

    சென்னையை பொறுத்தவரை 32 ஆண்டுகளுக்கு பிறகு நவம்பர் 1ம் தேதியன்று அதிகமழை பெய்துள்ளது. அதாவது நுங்கம்பாக்கத்தில் ஒரே நாளில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது. இதற்கு முன்பு 1990-ம் ஆண்டு இதே நாளில் 13 செ.மீட்டரும், 1964-ம் ஆண்டு 11 செ.மீட்டரும் மழை பெய்து இருக்கிறது.

    இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ள வானிலை முன்னறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படும் 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்கள் வருமாறு:-

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தேனி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி.

    கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று 2-வது நாளாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று கூறியதாவது:-

    தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வி, தென்காசி உள்பட 19 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக் கால் குதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

    3ம் தேதி முதல் 6ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். 4, 5ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் ராமநாதபுரத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும்.

    சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இடை இடையே மிதமான மழை பெய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை பெரம்பூர், கலெக்டர் அலுவலகம், ஆவடியில் தலா 17 செ.மீ. மழை பெய்துள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம் காட்டு குப்பம், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி 16 செ.மீ., செங்குன்றம், கும்மிடிப்பூண்டி தலா 14 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    சென்னை சோழிங்க நல்லூர், எம்.ஜி.ஆர். நகர், அம்பத்தூர், நுங்கம்பாக்கம், அயனாவரம், வில்லிவாக்கம் மற்றும் செய்யூர் ஆகிய இடங்களில் தலா 13 செ.மீ. மழை பெய்துள்ளது.

    • மதுரை மாவட்டம் முழுவதும் விடிய விடிய கனமழை பெய்தது.
    • சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை நின்றிருந்த நிலையில் நேற்று இரவு பலத்த இடி மின்னலுடன் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் மதுரை மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கியது.

    தாழ்வான பகுதிகளில் மழை நீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது. மதுரையில் சேதம் அடைந்த சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தாலும் உசிலம்பட்டி, வாடிப்பட்டி பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் அந்த பகுதியில் உள்ள கண்மாய் மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. விவசாய பணிகளும் தீவிரமடைந்துள்ளன.

    மதுரை மாவட்டத்தில் இரவு பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு-

    சிட்டம்பட்டி -17, கள்ளந்திரி -8, தனியா மங்கலம்- 2,மேலூர் -3, சாத்தையாறு அணை- 26, வாடிப்பட்டி -70, திருமங்கலம் -5, உசிலம்பட்டி -90, மதுரை வடக்கு -17, தல்லாகுளம் -12, விரகனூர் -20, விமான நிலையம் -63, இடைய பட்டி -29, புலிப்பட்டி -11, சோழவந்தான் -43, மேட்டுப்பட்டி -39, குப்பனம்பட்டி- 35, கள்ளிக்குடி -4, பேரையூர்- 20, ஆண்டிப்பட்டி -53.

    மதுரை மாவட்டம் முழுவதும் மொத்தமாக 56.2 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சராசரியாக 28 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    மதுரை மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.20 அடியாக உள்ளது அணைக்கு வினாடிக்கு 587 கன அடி தண்ணீர் வருகிறது.அணையில் இருந்து 1667 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    வைகை அணையை பொறுத்தவரை நீர்மட்டம் 69.49 அடியாக உள்ளது.அணைக்கு வினாடிக்கு 2308 கன அடி தண்ணீர் வரும் நிலையில் மதுரை நகர குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக 1819 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சுமார் 70 சதவீத கண்மாய், குளங்கள் நிரம்பி உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்தது.
    • கனமழை எதிரொலியால் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை கடந்த 29-ம் தேதி தொடங்கியது முதல் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்தது. சென்னையை பொறுத்தவரை கடந்த 31-ம் தேதி முதல் மழை பெய்து வந்தது. நேற்றிரவும் பல பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது.

    இதற்கிடையே, சென்னையில் இன்று காலை ஓரளவு வெயில் அடித்தது. மாலையில் இருந்து திடீரென கனமழை கொட்டியது.

    அடையாறு, சாந்தோம், தேனாம்பேட்டை, எழும்பூர், புரசைவாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது. புறநகர்ப் பகுதிகளிலும் கனமழை பெய்தது.

    கனமழை எதிரொலியால் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

    • கனமழை எதிரொலியாக புதுச்சேரியில் வெள்ளி, சனியன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது
    • புதுவையில் கடந்த இரு தினங்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

    புதுச்சேரி:

    வடகிழக்கு பருவமழை தொடங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது. 2 நாட்களாக மழை புதுவையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.

    நேற்று மதியம் 2 மணிக்கு மேல் விட்டு விட்டு மழை பெய்தது. சாரலாக தொடங்கிய மழை அடுத்தடுத்து வேகம் பிடித்து கனமழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து இரவிலும் விட்டு விட்டு மழை பெய்தது. வில்லியனூர், திருபுவனை, திருக்கனூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    தொடர் மழையால் மாநிலம் முழுவதும் குளிர்ந்து காணப்படுகிறது. கடற்கரை, சுண்ணாம்பாறு படகு குழாம் என சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தொடர்ந்து மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து புதுவை, காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு நாளை, நாளை மறுதினம் என 2 நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது என 

    • கனமழை எதிரொலியால் சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
    • சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை கடந்த 29-ம் தேதி தொடங்கியது முதல் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்தது. சென்னையை பொறுத்தவரை கடந்த 31-ம் தேதி முதல் மழை பெய்து வந்தது. நேற்றிரவும் பல பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது.

    இதற்கிடையே, சென்னையில் நேற்று மாலையில் இருந்து திடீரென கனமழை கொட்டியது. எழும்பூர், புரசைவாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கொட்டியது. புறநகர்ப் பகுதிகளிலும் கனமழை பெய்தது. கனமழை எதிரொலியால் இன்று சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனமழை காரணமாக மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தஞ்சையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி, திருவள்ளூர் ஆகிய 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் தாலுகாவில் பள்ளி, கல்லுரிகலுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • சிதம்பரம் அருகே கனமழைக்கு சுவர் இடிந்து மூதாட்டி பலியானார்.
    • கடந்த 2 நாட்களாக சிதம்பரம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள நஞ்சமகத்துவாழ்க்கை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது தாயார் கலியம்மாள் (வயது 70). இவர் தனியாக வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களாக சிதம்பரம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இவரது வீட்டில் சுவர் நனைந்து இருந்தது. நேற்று திடீரென பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் கலி யம்மாள் இடிபாடுகளுக்குள் சிக்கினார்.

    அவர் உயிர் பிழைக்க கூச்சல்போட்டார். சத்தம்கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். உடனே அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அவரை பரி சோதித்த டாக்டர்கள் கலி யம்மாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தில்லை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மதுரையில் விடிய விடிய கனமழையால் கால்வாய் ஆக்கிரமிப்பால் வீடுகளை சூழ்ந்த வெள்ளம் சூழ்ந்தது.
    • சகதி காடான வீதிகளால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.



    மதுரையில் பெய்த மழையால் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் தண்ணீர் தேங்கி நின்றது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை நின்றிருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இரவு பலத்த இடி மின்னலுடன் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் மதுரை மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கியது.

    தாழ்வான பகுதிகளில் மழை நீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது. மதுரையில் சேதம் அடைந்த சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். கனமழை காரணமாக கண்மாய் மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. விவசாய பணிகளும் தீவிரமடைந்துள்ளன.

    மதுரை மாநகராட்சி விரிவாக்க பகுதிகளான ஆனையூர், தபால்தந்தி நகர், பார்க் டவுன், ஒத்தக்கடை, ஊமச்சிக்குளம், அய்யர்பங்களா, திருப்பாலை உள்ளிட்ட பகுதிகளில் கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக மழை தண்ணீர் கண்மாய்களுக்கு செல்ல வழி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ளது. வீதிகளிலும் தண்ணீர் தேங்கி சகதிகாடாக உள்ளதால் மக்கள் நடக்க கூட முடியாமல் கடும் அவதியடைந்துள்ளனர்.

    மதுரை மாவட்டத்தில் இரவு பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு-

    சிட்டம்பட்டி -13, கள்ளந்திரி -10, தனியா மங்கலம்- 14, மேலூர் -8, சாத்தையாறு அணை- 9, வாடிப்பட்டி -22, உசிலம்பட்டி -5, மதுரை வடக்கு -21, தல்லாகுளம் -19, விரகனூர் -7, விமான நிலையம் -8, இடைய பட்டி -40, புலிப்பட்டி -40, சோழவந்தான் -11, மேட்டுப்பட்டி -19, பேரையூர்- 45, ஆண்டிப்பட்டி -29.

    மதுரை மாவட்டம் முழுவதும் மொத்தமாக 29.9 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சராசரியாக 15 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    மதுரை மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.25 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 763கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 511 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வைகை அணையை பொறுத்தவரை நீர்மட்டம் 69.46 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1759 கன அடி தண்ணீர் வரும் நிலையில் மதுரை நகர குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக 1819 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    • மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
    • தென் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை.

    தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை (5-ந்தேதி) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

    • கனமழை எதிரொலியால் சில நாட்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
    • சென்னை உள்பட 4 மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியால், கடந்த சில நாட்களாக பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் வரும் 6ம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

    இந்நிலையில், வங்கக் கடலில் நவம்பர் 9-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் அடுத்த 3 தினங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, தூத்துக்குடி திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    நவம்பர் 9-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது 10, 11-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி திசையை நோக்கி நகரக்கூடும். காற்றழுத்தத்தின் நகர்வு வலிமை குறித்து தொடர்ந்து கண்காணித்து தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.

    • புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி 10, 11-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி திசையை நோக்கி நகரக்கூடும்.
    • தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

    இதற்கிடையே, வங்கக் கடலில் நவம்பர் 9-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    இது 10, 11-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி திசையை நோக்கி நகரக்கூடும். காற்றழுத்தத்தின் நகர்வு வலிமை குறித்து தொடர்ந்து கண்காணித்து தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, தூத்துக்குடி, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×