என் மலர்
நீங்கள் தேடியது "Tahawwur Rana"
- குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளும் அடிப்படை உரிமை அவருக்கு உள்ளது என்று வாதிட்டார்.
- ராணா முக்கியமான தகவல்களை வெளியிடக்கூடும் என்ற கவலையை வெளிப்படுத்தியது.
தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச அனுமதி கோரி தஹாவூர் ராணா தாக்கல் செய்த மனுவை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
2008 மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான தஹாவூர் ராணா இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டார். பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த கனேடிய தொழிலதிபர் தஹாவூர் ராணா, ஏப்ரல் 10 ஆம் தேதி நீதிமன்றத்தால் 18 நாள் காவலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில் தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச அனுமதி கேட்டு ராணா பாட்டியாலா என்ஐஏ நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 19 இல் மனுதாக்கல் செய்தார். நேற்று இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.
ராணாவின் சட்ட ஆலோசகர் பியூஷ் சச்தேவா, ஒரு வெளிநாட்டவர் என்ற முறையில், காவலில் இருக்கும் போது தனக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கவலைப்படும் தனது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளும் அடிப்படை உரிமை அவருக்கு உள்ளது என்று வாதிட்டார்.
இருப்பினும், தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) இந்தக் கோரிக்கையை எதிர்த்தது, நடந்து வரும் விசாரணையை மேற்கோள் காட்டி, ராணா முக்கியமான தகவல்களை வெளியிடக்கூடும் என்ற கவலையை வெளிப்படுத்தியது. இந்நிலையில் சிறப்பு NIA நீதிபதி சந்தர் ஜித் சிங், தஹாவுர் ராணா குடும்பத்தினருடன் பேச அனுமதி மறுத்து அவரது மனுவை நிராகரித்தார்.
- பயங்கரவாத அமைப்பு மும்பை தாக்குதலுக்கு பின்னர் பல்வேறு நகரங்களிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
- ராணாவுக்கு துபாயில் உள்ள தாவூத் இப்ராகிம் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மிகப் பெரிய தாக்குதல் நடத்தினார்கள். இதில் 166 பேர் உயிரிழந்தனர். 238 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் பாகிஸ்தான்- அமெரிக்கா பயங்கரவாதி டேவிட் ஹெட்லியும் ஒருவர். இவரது நெருங்கிய நண்பர் ராணா.
ராணாவுக்கு பாகிஸ்தானை சேர்ந்த பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருந்தது. அமெரிக்காவில் வேறொரு பயங்கரவாத வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு லாஸ் ஏஞ்சல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டு 18 நாட்கள் ராணாவிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 4-வது நாளாகவும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் ராணாவை நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
பயங்கரவாத அமைப்பு மும்பை தாக்குதலுக்கு பின்னர் பல்வேறு நகரங்களிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தனர். அதன் அடிப்படையில் அவரை பல நகரங்களுக்கு அழைத்து செல்ல முடிவு எடுத்துள்ளனர்.
மேலும், கொச்சியில் ராணாவின் குரல் மாதிரிகளும் ஆய்வு செய்யபடவுள்ளது. என்.ஐ.ஏ. அதிகாரிகளின் காவலில் இருக்கும் முக்கிய சாட்சி ஒருவர் கொச்சியை சேர்ந்தவர். அவர் பயங்கரவாதி ராணா மற்றும் டேவிட் ஹெட்லி ஆகியோருக்கு உதவியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தவும் ராணாவை தெற்கு பகுதி நகரங்களுக்கு அழைத்து வருகின்றனர். ராணாவிடம் விசாரணை நடத்தும் 19 என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவில் 2 பேர் கொச்சியை சேர்ந்தவர்கள்.
ராணாவுக்கு துபாயில் உள்ள தாவூத் இப்ராகிம் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
என்.ஐ.ஏ. அதிகாரிகளின் விசாரணைக்கு ராணா முழுமையாக ஒத்துழைக்கவில்லை. இருந்தாலும் அவர் மும்பை தாக்குதலுக்கு முன்னதாக அவர் மும்பையில் இருந்ததை ஒத்துக்கொண்டுள்ளார். அவரிடம் மேலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராணாவுக்கு உதவியதாக கொச்சியில் ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்து உள்ளனர்.
- ராணாவையும் கொச்சி அழைத்து வந்து விசாரிக்க என்.ஐ.ஏ. திட்டமிட்டு உள்ளது.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவா் பாகிஸ்தான்- அமெரிக்க பயங்கரவாதி டேவிட் ஹெட்லி. இவனது நெருங்கிய நண்பராக இருந்தவர் தஹாவூா் ராணா. இவனது ஆலோசனை மூலம்தான், மும்பை தாக்குதல் சம்பவம் நடந்தது விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டது.
அமெரிக்க சிறையில் இருந்த ராணா, நாடு கடத்தப்பட்டதை தொடர்ந்து அவரை இந்தியா அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். அவரிடம் கோர்ட்டு உத்தரவுப்படி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை தாக்குதலுக்கு முன்பு ஹாபூா், ஆக்ரா, டெல்லி, கொச்சி, அகமதாபாத், மும்பை ஆகிய நகரங்களுக்கு ராணா தன் மனைவி சம்ராஸ் ராணா அக்தருடன் சென்றதாக விசாரணையில் தெரிய வந்தது.
இதன் அடிப்படையில் ராணாவுக்கு உதவியதாக கொச்சியில் ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்து உள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கொச்சியில் ராணா 13 பேருடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. அவர்கள் யார்? எங்கு சந்தித்தனர்? என விசாரணை நடைபெற்று வருகிறது.
இதன் அடிப்படையில் ராணாவையும் கொச்சி அழைத்து வந்து விசாரிக்க என்.ஐ.ஏ. திட்டமிட்டு உள்ளது.
- மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
- டெல்லி வந்தடைந்ததும் என்.ஐ.ஏ. முறையாக ராணாவை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தது.
புதுடெல்லி:
மும்பை தொடர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அவர் இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. இதன் பயனாக இன்று இந்தியா கொண்டு வரப்பட்டார்.
டெல்லி வந்தடைந்ததும் என்.ஐ.ஏ. முறையாக ராணாவை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது.
தஹாவூர் ராணாவை நேற்று இரவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் டெல்லி பாட்டியாலா கோர்ட் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 20 நாள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என தேசிய புலனாய்வு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். என்.ஐ.ஏ. மனுவை விசாரித்த சிறப்பு தேசிய புலனாய்வு முகமை நீதிபதி சந்தர் ஜித் சிங், ராணாவை காவலில் எடுக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ராணாவை 18 நாள் என்.ஐ.ஏ. காவலில் வைக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவரை தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
- அமெரிக்காவில் இருந்த நாடு கடத்தப்பட்ட ராணா இன்று மாலை டெல்லி விமான நிலையம் கொண்டு வரப்பட்டார்.
- என்.ஐ.ஏ. அவரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் முறையாக கைது செய்துள்ளது.
மும்பை தொடர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அவர் இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. இதன் பயனாக இன்று இந்தியா கொண்டு வரப்பட்டார்.
ராணா டெல்லி வந்தடைந்ததும் என்.ஐ.ஏ. முறையாக அவரை கைது செய்தனர். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் அவரை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து என்.ஐ.ஏ. குழு, தேசிய பாதுகாப்பு குழு, மூத்த அதிகாரிகள் கொண்ட குழு ஆகியவை சிறப்ப விமானம் ராணவை இந்தியாவுக்கு கொண்டு வந்தனர்.
ராணாவுக்காக டெல்லி சட்ட சேவைகள் ஆணையத்தில் இருந்து வழக்கறிஞர் பியூஷ் சச்தேவா ஆஜராகிறார். சிறப்பு அரசு வழக்கறிஞர் நரேந்திர மான், மூத்த வழக்கறிஞர் தயான் கிருஷ்ணன் அரசு சார்பில் ஆஜராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ராணா நடு கடுத்தப்பட்ட மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு ராஜாங்க ரீதியிலான வெற்றி- அமித் ஷா.
- இது வெற்றி அல்ல, மக்களை திசை திருப்புவதற்கான சூழ்ச்சி- கண்ணையா குமார்.
மும்பை தொடர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணா அமெரிக்காவால் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். நாடு கடத்தப்பட்ட நிகழ்வு வெற்றிகரமாக அமைந்துள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ராணா இந்தியா கொண்டு வரப்பட்டது, பிரதமர் மோடி தலைமையிலான அரசின் ராஜாங்க ரீதியிலான வெற்றி (diplomatic success) என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.
இதற்கு காங்கிரஸ் தலைவர் கண்ணையா பதில் அளிக்கையில் "ராணா நாடு கடுத்தப்பட்டது ராஜாங்க ரீதியிலான (diplomatic success) வெற்றி அல்ல. மத்திய அரசு அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தோல்வியடைவதில் இருந்து பொது மக்கள் கவனத்தை திசைதிருப்புவதற்கான சூழ்ச்சி" எனத் தெரிவித்துள்ளார்.
பாஜக பெயருக்கு ஏற்ற சாதனை எதையும் செய்யவில்லை என்பதால், ஏதாவது ஒரு சாக்குப்போக்கின் கீழ் பொதுப் பிரச்சினைகளைத் திசை திருப்ப முயற்சிக்கிறது. வக்ஃப் மசோதாவும் அதற்கு மற்றொரு உதாரணம்தான்.
ஏழை முஸ்லிம்களின் நலனுக்காக இந்த சட்டத்தை கொண்டு வருவதாக அரசாங்கம் கூறியது. முஸ்லிம் சமுதாயத்தினர் தங்களுக்கு சொந்தமான இடங்களின் மொட்டை மாடிகளில் 'நமாஸ்' செய்ய அனுமதிக்காத ஒரு ஆட்சியில் இருந்து இப்படி கூறுவதை, யார் நம்புவார்கள்?
370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு அவர்களின் சொல்லாட்சியை நாம் அனைவரும் நினைவில் கொள்கிறோம். இப்போது பீகார் மற்றும் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் காஷ்மீரில் நிலம் வாங்க முடியும் என்று ஒவ்வொரு பாஜக தலைவரும் கூறிக்கொண்டிருந்தார்கள். அப்போதிருந்து அங்கு சொத்து வாங்க முடிந்த ஒருவரை எனக்குக் காட்டுங்கள்" என்றார்.
- அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ராணா, இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளார்.
- பாகிஸ்தான் நாட்டில் பிறந்த ராணா, கனடா நாட்டின் குடியுரிமை பெற்றவர்.
இந்தியாவின் வர்த்தக மையமாக திகழும் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி தாஜ்ஓட்டல், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கரான டேவிட் கோல்மேன் ஹட்லியும் ஒருவர். லஷ்கர் இ தொய்பா என்ற பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இவரும், பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த கனடா நாட்டு தொழில் அதிபரான தஹாவூர் ராணாவும் மும்பை தாக்குதலில் கூட்டு சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் தஹாவூர் ராணாவை இந்தியா தேடிவந்தது. இந்த நிலையில் அவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். 2014-ம் ஆண்டு அவருக்கு 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டார்.
தஹாவூர் ராணாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா பல ஆண்டுகளாக கோரி வந்தது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதும் இதற்கு ஒரு விடிவு காலம் பிறந்தது. ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என அறிவித்தார்.
தன்னை நாடு கடத்தக்கூடாது என தஹாவூர் ராணா அமெரிக்க கோர்ட்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. அவரது கடைசி கட்ட முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ராணா இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். என்.ஐ.ஏ. அவரை கைது செய்து திகார் சிறையில் அடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ராணா குறித்து பாகிஸ்தான் கருத்து தெரிவித்துள்ளது. ராணா விசயத்தில் பாகிஸ்தான் விலகியே இருக்கும் பாகிஸ்தான் வெளியுறுத்துறை செய்தி தொடர்பாகளர் ஷஃப்கத் அலிகான் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக ஷஃப்கத் அலிகான் கூறியதாவது:-
தஹாவூர் ராணா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பாகிஸ்தான் ஆவணங்களை புதுப்பிக்கவில்லை. கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்களுக்கு பாகிஸ்தான் இரட்டை குடியுரிமை வழங்காது. அவருடைய கனடா குடியுரிமை தெளிவாக உள்ளது.
இவ்வாறு ஷஃப்கத் அலிகான் தெரிவித்துள்ளார்.
ராணா மீது குற்றச்சதி, இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தல், கொலை உள்ளிட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன.
- சட்ட நடைமுறைகளும் முடிக்கப்பட்டு இந்திய நேரப்படி நேற்று இரவு ராணாவை அதிகாரிகள் தனி விமானத்தில் ஏற்றினார்கள்.
- ராணா கைது செய்யப்பட்ட பின்னர் குண்டு துளைக்காத காரில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்.
இந்தியாவின் வர்த்தக மையமாக திகழும் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி தாஜ்ஓட்டல், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கரான டேவிட் கோல்மேன் ஹட்லியும் ஒருவர்.
லஷ்கர் இ தொய்பா என்ற பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இவரும், பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த கனடா நாட்டு தொழில் அதிபரான தஹாவூர் ராணாவும் மும்பை தாக்குதலில் கூட்டு சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது
இந்த வழக்கில் தஹாவூர் ராணாவை இந்தியா தேடி வந்தது. இந்த நிலையில் அவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். 2014-ம் ஆண்டு அவருக்கு 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டார்.
தஹாவூர் ராணாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா பல ஆண்டுகளாக கோரி வந்தது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதும் இதற்கு ஒரு விடிவு காலம் பிறந்தது. ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என அறிவித்தார்.
தன்னை நாடு கடத்தக்கூடாது என தஹாவூர் ராணா அமெரிக்க கோர்ட்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. அவரது கடைசி கட்ட முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
ராணாவை நாடு கடத்தி அழைத்து வருவதற்காக இந்திய சி.பி.ஐ. உள்ளிட்ட விசாரணை அமைப்பின் அதிகாரிகள் அமெரிக்கா சென்றனர். அவர்களிடம் ராணாவை அமெரிக்க அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
அவரை நாடு கடத்துவதற்கான அனைத்து சட்ட நடைமுறைகளும் முடிக்கப்பட்டு இந்திய நேரப்படி நேற்று இரவு ராணாவை அதிகாரிகள் தனி விமானத்தில் ஏற்றினார்கள். நேற்று இரவு 7.10 மணி அளவில் அந்த விமானம் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டது.
இந்தநிலையில், தஹாவூர் ராணா இந்தியா கொண்டு வரப்பட்டார். பின்னர், இதுதொடர்பான அனைத்து ஆவணங்களும் என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து, தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) அதிகாரப்பூர்வமாக அவரை கைது செய்ய உள்தாக தகவல் வௌியாகியுள்ளது.
ராணா கைது செய்யப்பட்ட பின்னர் குண்டு துளைக்காத காரில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு பயங்கரவாதி தஹாவூர் ராணா டெல்லி திகார் ஜெயிலில் உயர் பாதுகாப்பு வார்ட்டில் உள்ள அறையில் அடைக்கப்பட உள்ளார்.
- டேவிட் ஹெட்லிக்கு லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு இருப்பது ராணாவுக்கு தெரியும்.
- ராணாவை நாடு கடத்துவதற்கு அவரது வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.
வாஷிங்டன்:
மும்பையின் பல்வேறு இடங்களில் 2008ம் ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஆறு அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் முக்கிய குற்றவாளியான டேவிட் ஹெட்லி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு 35 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இவரது நண்பரும், தாக்குதல் திட்டத்திற்கு உதவியவருமான கனடாவில் வசித்த பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் தஹவூர் ராணா (வயது 62) 2020ம் ஆண்டில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
தாக்குதல் வழக்கில், இவரது பங்கு குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வருகிறது. அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, நாடு கடத்தக் கோரி அமெரிக்காவின் சிகாகோ நீதிமன்றத்தில் இந்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது, ராணாவின் நண்பரான டேவிட் ஹெட்லிக்கு லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு இருப்பதும், ஹெட்லிக்கு உதவுவதன் மூலமும், அவனது நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு அளித்து, பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளிப்பதும் ராணாவுக்குத் தெரியும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். ஹெட்லி யார் யாரையெல்லாம் சந்தித்தார்? என்ன பேசப்பட்டது? தாக்குதலுக்கு திடட்மிடப்பட்ட சில இலக்குகள் உட்பட தாக்குதல்களின் திட்டமிடல் ஆகியவற்றை ராணா அறிந்திருந்தார் என்றும் தெரிவித்தனர். ராணாவை நாடு கடத்துவதற்கு அவரது வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்சின் மத்திய மாவட்ட நீதிபதி ஜாக்குலின் சூல்ஜியன் மே 16ல் உத்தரவு பிறப்பித்தார். அதில், 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய தஹவூர் ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்தலாம் என்றார்.
- அதிகார வரம்பை அமெரிக்க நீதிமன்றங்கள் இழக்க நேரிடலாம்.
- டார்ச்சர் செய்யப்படும் அபாயம் உள்ளது.
26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளியான தஹவூர் ராணா, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த அமெரிக்க உச்சநீதிமன்றம் ராணாவின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
முன்னதாக நாடு கடத்தப்பட்டால், இந்தியாவில் விசாரணையை எதிர்கொள்ளும் அளவுக்கு நீண்ட நாட்கள் உயிர்வாழ முடியாது என்று ராணா தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். மேலும், இந்தியாவில் டார்ச்சர் செய்யப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். நாடு கடத்துவதற்கு தடை விதிக்காத பட்சத்தில் தனது வழக்கு மீதான அதிகார வரம்பை அமெரிக்க நீதிமன்றங்கள் இழக்க நேரிடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானை சேர்ந்த அமெரிக்க பயங்கரவாதி டேவிட் கோல்மேன் ஹெட்லியின் நெருங்கிய கூட்டாளியாக அறியப்படும் தஹவூர் ராணா கடந்த 2008-ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்டவர்களில் முக்கிய புள்ளியாக அறியப்படுகிறார்.
தான் பாகிஸ்தான் பூர்விகம் கொண்டவன் என்றும், முஸ்லீம் என்பதாலும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் சித்திரவதைக்கு ஆளாக நேரிடும் என்றும் ராணா தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இதுதவிர தனக்கு வயிற்றுப் பகுதியில் கோளாறு, பார்க்கின்சன் நோய் மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
- இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக ராணா அறிவிக்கப்பட்டார்.
- மற்றொரு பயங்கரவாத வழக்கில் ராணா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
வாஷிங்டன்:
2008 மும்பை பயங்கரவாத தாக்குதலில் 160-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் வம்சாவளி தஹாவூர் ராணா என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ராணா மற்றொரு பயங்கரவாத வழக்கில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்காவிடம் மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதையேற்று ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் கடந்த ஜனவரி மாதம் அனுமதி வழங்கியது. இதனால் ராணா விரைவில் நாடு கடத்தப்படுவார் என அதிபர் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்தது.
இதற்கிடையே, தான் நாடு கடத்தப்படுவதற்கு தடை விதிக்கக்கோரி அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் ராணா நேற்று முன்தினம் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், என்னை நாடு கடத்துவது அமெரிக்க சட்டங்களுக்கு எதிரானது. முக்கியமாக சித்தரவதைகளுக்கு எதிரான அமெரிக்க விதிகள் மீறப்பட வாய்ப்புள்ளது.
இந்தியாவில் என்னை கொடுமைப்படுத்த வாய்ப்புள்ளது. எனக்கு தீவிரமான உடல்நல பிரச்சனைகளும் உள்ளன. இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் மருத்துவ உதவிகள் மறுக்கப்படும். இது மரண தண்டனைக்கு நிகரா–னது என குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், ராணாவின் இந்த அவசர மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதன்மூலம் ராணாவின் கடைசி முயற்சியும் தோல்வியில் முடிந்தது. எனவே விரைவில் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.