என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "talks"
- 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை.
- தொழிலாளர்கள் பிரதிநிதிகளுடன் தொழிலாளர் நல அதிகாரிகள் பேச்சுவார்த்தை.
சென்னை:
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார் சத்திரத்தில் 'சாம்சங் இந்தியா' நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பிரிட்ஜ், டி.வி., வாஷிங்மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கின்றனர்.
இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை தொடங்க அனுமதி கேட்டு வருகின்றனர். அது மட்டுமின்றி சம்பள உயர்வு, சம்பள ஏற்றத்தாழ்வு களைதல் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் தீர்வு எட்டப்படவில்லை.
இந்த நிலையில் 'சாம்சங் இந்தியா' தொழிலாளர்களின் போராட்டத்திற்கு தீர்வு காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதை தொடர்ந்து தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று தலைமைச் செயலகத்தில், ஆலையின் நிர்வாகத்தினரை அழைத்து பேசினார். அப்போது நிர்வாகத்தினர் என்னென்ன கோரிக்கையை ஏற்பார்கள்? என்பதை கேட்டறிந்தார்.
இதன் அடுத்த கட்டமாக இன்று காலையில் தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் தொழிலாளர் நல அதிகாரிகளும் ஆலை நிர்வாகத்தினரும் இருங்காட்டு கோட்டையில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோர் முன்னிலையில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படுமா? என்பது மாலையில் தெரிய வரும்.
- மோடி மக்களவைத் தேர்தலில் வென்று மீண்டும் பிரதமர் ஆனதற்கு வாழ்த்து தெரிவித்தார் புதின்
- ரஷியா - உக்ரைன் போரின் பினன்ணியில் புதினிடம் 'இது போருக்கான சகாப்தம் அல்ல' என்று பேசியுள்ளதாகவும் தெரிகிறது
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வைத்து இன்று [ஜூலை 9] நடக்கும் 22 வது இந்தியா - ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி நேற்று ரஷியா சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் புதினை சந்தித்து மோடி, இருநாட்டு பொருளாதார, வணிக மற்றும் ராஜ்ய உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
அந்தவகையில் நேற்று மதியம் அதிபர் புதினின் இல்லமான நோகோ ஓகார்யோவோவில் வைத்து இரு தலைவர்களும் சந்தித்து தனிப்பட்ட முறையில் பலவேறு விஷயங்களை பற்றி பேசியுள்ளனர்.மோடி மக்களவைத் தேர்தலில் வென்று மீண்டும் பிரதமர் ஆனதற்கு வாழ்த்து தெரிவித்த புதின், 'நீங்கள் உங்களின் மொத்த வாழ்க்கையையும் இந்திய மக்களுக்காக உழைப்பதற்கு அர்ப்பணித்துள்ளீர்கள், மக்களும் அதை அறிவர்' என்று மோடியிடம் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த மோடி, 'நீங்கள் சொல்வது சரி, எனக்கு ஒரே ஒரு இலக்கு தான் உள்ளது - அது என் நாடும், இந்திய மக்களுமே ஆவர்' என்று தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது மோடி, ரஷியா - உக்ரைன் போரின் பினன்ணியில் புதினிடம் 'இது போருக்கான சகாப்தம் அல்ல' என்று பேசியுள்ளதாகவும் மாஸ்கோ வாட்டரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, உக்ரைனின் இறையாண்மை குறித்து புதினிடம் மோடி வலியுறுத்த வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது கவனிக்கத்தக்கது. தொடர்ந்து ரஷிய ராணுவத்தில் உள்ள இந்திய வீரர்களை பணியில் இருந்து சீக்கிரம் விடுவிக்க வேண்டும் மோடி புதினிடம் வலியுறுத்தியுள்ளார்.
புதின் இல்லத்தில் நடந்த சந்திப்புக்கு பின்னர் கோல்ப் வண்டியில் மோடிக்கு அப்பகுதியை புதின் சுற்றிக்காட்டினார். அதன்பின்னர் நடந்த இரவு விருந்தில் இருவரும் சேர்ந்து உணவருந்தினர். இன்று நடக்க உள்ள உச்சிமாநாட்டில் இந்தியா-ரஷியா இடையிலான பொருளாதார உறவுகள் குறித்த பல முக்கிய முடிவுகள் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்தியா கூட்டணிக்குப் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜே.டி.யுவும், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசமும் துருப்புச்சீட்டாக மாறியுள்ளது.
- காங்கிரஸ் கட்சி, சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகிய இருவருக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டு இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை துரித கதியில் நடந்து வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலைப் போல் அறுதியிட்டுக் கூறிவிட முடியாதபடி முன்னிலை நிலவரம் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே வருகிறது.
இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து காங்கிரஸ் அமைத்த 9இந்தியா கூட்டணி பாஜகவின் என்.டி.ஏ கூட்டணிக்குக் கடுமையான போட்டியைக் கொடுத்து வருகிறது. 1 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 236 இடங்களிலும் என்.டி.ஏ கூட்டணி 289 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சுமார் 165 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 10,000 என்ற அளவிலேயே உள்ள நிலையில் நேரம் செல்ல செல்ல இரண்டு கூட்டணிக்கும் சாதக பாதகங்கள் மாறுபடும்.
இந்நிலையில் பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணிக்குப் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜே.டி.யுவும், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசமும் துருப்புச்சீட்டாக மாறியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலோடு ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தலும் நடந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலிலும் தெலுங்கு தேசம் கணிசமான வாக்குகளைப் பெற்று மொத்தம் உள்ள 25 இடங்களில் 16 இடங்களில் முன்னிலையில் உள்ளது.பீகாரில் நிதிஷ்குமாரின் ஜே.டி .யு கட்சி மொத்தம் உள்ள 30 இடங்களில் 13 இடங்கள் முன்னிலையில் உள்ளது.
இந்த இரண்டு கட்சிகளும் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகிய இருவருக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
? Big News from SourcesNitish Kumar and Chandrababu Naidu have been contacted by India Alliance. India Alliance is confident of its majority and can offer a big post to Nitish Kumar.#ElectionsResults pic.twitter.com/GiTW08MTuB
— Harsh Tiwari (@harsht2024) June 4, 2024
இந்நிலையில் தெலுங்கு தேசமும் ஜே.டி.யுவும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் ஆட்சியமைப்பதில் இந்தியா கூட்டணியின் கை ஓங்கும். இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்த நிதிஷ்குமார் கடைசி நேரத்தில் பாஜகவுக்குத் தாவியது குறிப்பிடத்தக்கது.
- கருத்தரங்கை பொள்ளாச்சி எம்.பி.சண்முகசுந்தரம் தொடங்கிவைத்தார்.
- மண்ணின் தன்மையை அறிந்து பயிரிட்டால் விளைச்சல் அதிகரிக்கும்,
பொள்ளாச்சி,
வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான கருத்தரங்கு பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
கருத்தரங்கை பொள்ளாச்சி எம்.பி.சண்முகசுந்தரம் தொடங்கிவைத்தார். சப்-கலெக்டர் பிரியங்கா, வேளாண் வணிகத்துறை இயக்குநர் பெருமாள்சாமி, மாவட்ட தொழில்மைய பொது ேமலாளர் திருமுருகன், பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபைத் தலைவர் ஜி.டி. கோபாலகிருஷ்ணன், சக்தி குழுமங்களின் தலைவர் ம.மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி பேசியதாவது:-
சிறுதானிய பொருள்களுக்கு சர்வதேச அளவில் வரவேற்பு உள்ளது. கோவையில் சிறுதானியங்களால் ஆன பொருள்களை விவசாயிகள் உற்பத்தி செய்யும் போது வர்த்தக ரீதியான பயன்கள் கிடைக்கும்.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு என்று தனித்தன்மையினை உருவாக்குதல், சந்தைப்படுத்துதல், தொழில் நுட்பங்களை புகுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான உதவிகள் முதல் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
சில விவசாயிகள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே நிலத்தில் ஒரே விதமான பயிரினை விளைவித்து வருகின்றனர். இதனால் மண்ணின் வளம் பாதிக்கப்படுவதுடன், போதுமான விளைச்சலும் இருக்காது.
மண்ணின் தன்மையை அறிந்து பயிரிட்டால் விளைச்சல் அதிகரிக்கும், அதிகமான உற்பத்தி, சந்தைப்படுத்துதல் போன்றவற்றில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் சமீப காலமாக வர்த்தக மோதலில் ஈடுபட்டு உள்ளன. இரு நாடுகளும் பரஸ்பரம் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 150 பில்லியன் டாலர் அளவுக்கு வரி விதிக்கப்போவதாக மிரட்டியதால் இந்த மோதல் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதனால் இருநாடுகளும் பரஸ்பர இறக்குமதியை குறைத்தன.இந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இதில் கடைசியாக சீன வர்த்தகக்குழு ஒன்று கடந்த மாதம் வாஷிங்டன் பயணம் மேற்கொண்டு, டிரம்பின் பொருளாதார ஆலோசனைக்குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
இதில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க வர்த்தக மந்திரி வில்பர் ராஸ் நேற்று முன்தினம் பீஜிங் வந்தார். அவர் சீன துணை பிரதமர் லியு ஹியுடன் நேற்று வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் குறிப்பிடத்தக்க வகையிலான புதிய ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தானதா? என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.
எனினும் அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்ந்தால் அனைத்து ஒப்பந்தங்களும் செல்லுபடியாகாது என சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இது குறித்து சீன அரசின் செய்தி நிறுவனம் கூறியிருப்பதாவது:-
விவசாயம், எரிசக்தி, நேர்மறையான முடிவை எட்டுதல் மற்றும் உறுதியான வளர்ச்சி போன்ற துறைகள் தொடர்பாக வாஷிங்டனில் எட்டப்பட்ட உடன்பாட்டை செயல்படுத்துவது குறித்து இரு தரப்பும் நல்ல தொடர்பில் ஈடுபட்டு இருக்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்வது என்ற சீனாவின் நடைமுறையில் மாற்றம் இல்லை.
அமெரிக்கா மற்றும் சீனா தற்போது ஏற்படுத்தி இருக்கும் உடன்பாட்டை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்வது குறித்து இருதரப்பும் சந்தித்து பேச வேண்டும். மாறாக வர்த்தக போரில் ஈடுபடக்கூடாது.
சீன பொருட்களுக்கு வரி விதிப்பு உள்ளிட்ட பொருளாதார தடைகளை அமெரிக்கா அறிமுகம் செய்தால், வர்த்தக பலன்கள் எதையும் பெற முடியாது. இது தொடர்பாக ஏற்படுத்தப்பட்டு இருக்கும் ஒப்பந்தங்கள் அனைத்தும் செயலற்றதாகி விடும்.
இவ்வாறு அந்த செய்தி நிறுவனம் கூறியிருந்தது.
முன்னதாக பீஜிங்கில் செய்தியாளர்களை சந்தித்த வில்பர் ராஸ் கூறுகையில், ‘எங்கள் சந்திப்புகள் இதுவரை நட்பு ரீதியாகவும், வெளிப்படையாகவும் அமைந்து இருக்கிறது. மேலும் குறிப்பிட்ட ஏற்றுமதி பொருட்கள் தொடர்பாக சில பயனுள்ள தலைப்புகளும் இதில் இடம்பெற்று இருந்தன’ என்று தெரிவித்தார். #China #Warns #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்