என் மலர்
நீங்கள் தேடியது "Tamilnadu"
- நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
- நீட் முறைகேடுகளை முன்வைத்து பாராளுமன்றத்தை இந்தியா கூட்டணி கட்சிகள் முடக்கின.
கொல்கத்தா:
நடப்பு ஆண்டில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் வினாத்தாள் விற்பனை, ஆள் மாறாட்டம், நீட் தேர்வு மையங்களே நீட் முறைகேடுகளை முன்னெடுத்தது என அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. சில ஆயிரம் மாணவர்களுக்கு நீட் தேர்வை நடத்திய தேசியத் தேர்வு முகமை கருணை மதிப்பெண் வழங்கியதும் சர்ச்சையானது.
இதையடுத்து நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. நீட் முறைகேடுகளை முன்வைத்து பாராளுமன்றத்தை இந்தியா கூட்டணி கட்சிகள் முடக்கின. டெல்லியிலும் போராட்டங்கள் நடைபெற்றன.
இதற்கிடையே, தமிழ்நாடு சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி தமிழ்நாடு சட்டசபையில் தொடர்ச்சியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த தீர்மானங்களை மத்திய அரசு கிடப்பில் போட்டு வைத்துள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்காள மாநில சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வுக்கு முன் மேற்கு வங்காள மாநில அரசே நடத்திய பொது நுழைவுத் தேர்வை மீண்டும் நடத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, மாநில கல்வி அமைச்சர் பிரத்யா பாசு கூறுகையில், அகில இந்திய அளவில் தேர்வை நடத்துவதற்கு நாங்கள் ஒருபோதும் ஆதரவாக இல்லை. நீட் தேர்வை மத்திய அரசு நடத்தக்கூடாது என அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியதாக தெரிவித்தார்.
- கல்லூரியை சேர்ந்த பெண் பணியாளர் ஒருவர் உடனிருந்து பணிகளை கண்காணிக்க வேண்டும்.
- கல்வி நிறுவனங்களில் புகார் பெட்டிகளை அமைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுவத்துவதற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம், தலைமைச்செயலாளர் முருகானந்தம் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், ஆணையர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள், கல்லூரிகளின் முதல்வர்கள், கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் துறைசார்ந்த அதிகாரிகள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுருந்து காணொலிக் காட்சி மூலமாக கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் கல்வி நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முருகானந்தம் சில அறிவுறுத்தல்களை வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இதன்படி, அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் Internal Complaints Committee அமைக்கப்படும். 'Internal Complaints Committee' என்று அழைக்கப்படும் உள் புகார் குழுவை அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் முறையாக அமைக்க வேண்டும்.
மகளிர் தங்கும் கல்லூரி விடுதிகள் போன்றவற்றில் வெளி ஆட்கள் பணிகளுக்கு உள்ளே வந்தால், அவர்களுடன் கல்லூரியை சேர்ந்த பெண் பணியாளர் ஒருவர் உடனிருந்து பணிகளை கண்காணிக்க வேண்டும்.
அனைத்து கல்லூரிகளிலும் காவலர் ஒருவரை நியமித்து, கல்லூரிகளில் நடக்கும் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை உடனடியாக காவல்துறையிடம் கொண்டு செல்ல காவலர் ஒருவரை நியமிக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்களில் புகார் பெட்டிகளை அமைக்க வேண்டும். மாணவ, மாணவிகள் போதை பொருட்களுக்கு அடிமையாகி இருப்பது தெரிய வந்தால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.
பாலியல் துன்புறுத்தல் மற்றும் போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து மாணவ மாணவிகளுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கல்லூரிகளில் போதை பொருட்கள் நடமாட்டத்தை கண்காணிக்க 'Anti Drug Club'களை ஏற்படுத்த வேண்டும்.
உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தேசிய சராசரியை விட தமிழ்நாடு முதல் இடத்தில் இருப்பதை தக்க வைக்கும் வகையில் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் மற்றும் போதை பொருட்கள் இல்லாத நிலையை கல்வி நிலையங்களில் ஏற்படுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 5 மீனவர்களை மொட்டை அடித்து இலங்கை அரசு அனுப்பியுள்ளது.
- மீனவர்கள் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விடுதலையான தமிழக மீனவர்களை மொட்டை அடித்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
தலா ரூ.50,000 அபராதம் செலுத்தியதால் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 5 மீனவர்களை மொட்டை அடித்து இலங்கை அரசு அனுப்பியுள்ளது.
இதைக்கண்டித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் இதையடுத்து, இலங்கை அரசை கண்டிக்கும் விதத்தில் தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இலங்கை அரசின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த மீனவர்கள் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மொட்டையடித்து திருப்பி அனுப்பி வைத்த இலங்கை அரசைக் கண்டித்து செப்.20ம் தேதி ராமேஸ்வரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
மேலும், இலங்கை அரசின் அராஜக போக்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
இலங்கையை கண்டித்தும், மீனவர் பிரச்சனையில் பாராமுகமாக உள்ள மத்திய அரசையும் கண்டித்து ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
- ஆன்லைன் விளையாட்டுகளை எப்படி கட்டுப்படுத்தலாம்?
- ரூ.20 ஆயிரம் வரை செலுத்தி விளையாடும் வகையில் திருத்தம்.
சென்னை:
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை கட்டுப்படுத்த தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் புதிய பரிந்துரைகளை செய்துள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகளால் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்ததை தொடர்ந்து தமிழக அரசு இந்த ஆணையத்தை அமைத்து செயல்படுத்தி வருகிறது.
ஆன்லைன் விளையாட்டுகளை எப்படி கட்டுப்படுத்தலாம்? சிறுவர்-சிறுமிகளை அதில் இருந்து எப்படி மீட்டெடுக்கலாம்? என்பது போன்ற ஆலோசனைகள் தமிழக அரசிடம் அளிக்கப்பட்டு உள்ளன. அதன் விவரம் வருமாறு:-
நள்ளிரவு 12 மணி முதல் அதிகாரி 5 மணி வரை ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கலாம். ஒரு நாளைக்கு 4 மணி நேரத் துக்கு மேல் விளையாட அனுமதிக்கக் கூடாது. ஒவ்வொரு மாதமும் ரூ.5 ஆயி ரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரை மட்டுமே செலுத்தி விளையாடும் வகையில் திருத்தங்களை செய்யலாம்.
சுமார் 1½ லட்சம் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் குழந்தைகள் பலர் தங்களது பெற்றோர்களின் செல்போன்களையே ஆன்லைன் விளையாட்டுக்காக பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
இப்படி குறிப்பிட்ட நேரம் தான் விளையாட முடியும் என்பதை கொண்டு வந்து விட்டால் நிச்சயமாக ஆன்லைன் விளையாட்டுகளில் குழந்தைகள் அதிகமாக நேரத்தை செலவழிப்பது குறையும்.
சீனா, தென்கொரியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் இருப்பது போன்று விளையாடும் நேரம் மற்றும் பணப்பரிமாற்ற தகவல்களை செல்போன்களுக்கு அனுப்பும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகள் அமலுக்கு வந்தாலும் பணம் கட்டாமல் பொழுதுபோக்காக விளையாடப்படும் விளையாட்டுகளுக்கு இது பொருந்தாது என்று ஆன்லைன் விளையாட்டு தடுப்பு வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
- தமிழகம், டெல்லி இடையிலான போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
- முதல் நாளில் தமிழகம் 379 ரன்கள் குவித்தது. சாய் சுதர்சன் 202 ரன் எடுத்தார்.
புதுடெல்லி:
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடந்து வருகிறது. குரூப் டி பிரிவில் டெல்லியில் இன்று தொடங்கிய லீக் ஆட்டத்தில் தமிழகம், டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங் தேர்வு செய்தது.
இதையடுத்து, தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாய் சுதர்சன், ஜெகதீசன் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர். ஜெகதீசன் அரைசதம் அடித்து 65 ரன்னில் அவுட் ஆனார்.
அடுத்து இறங்கிய வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சனுடன் இணைந்து நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடியைப் பிரிக்க முடியாமல் டெல்லி வீரர்கள் திணறினர். நிலைத்து நின்று ஆடிய சாய் சுதர்சன் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் முதல் நாள் முடிவில் தமிழகம் 88 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 379 ரன்கள் குவித்தது. சாய் சுதர்சன் 202 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 96 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
- தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 674 ரன்கள் குவித்தது.
- சாய் சுதர்சன் 213 ரன்னும், வாஷிங்டன் 156 ரன்னும் எடுத்தனர்.
புதுடெல்லி:
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடந்து வருகிறது.
குரூப் டி பிரிவில் டெல்லியில் நடந்து வரும் லீக் ஆட்டத்தில் தமிழகம், டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாய் சுதர்சன், ஜெகதீசன் ஆகியோர் களம் இறங்கினர். ஜெகதீசன் அரைசதம் அடித்து 65 ரன்னில் அவுட் ஆனார்.
அடுத்து இறங்கிய வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சனுடன் இணைந்து நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடியைப் பிரிக்க முடியாமல் டெல்லி வீரர்கள் திணறினர்.
நிலைத்து நின்று ஆடிய சாய் சுதர்சன் இரட்டை சதம் அடித்து அசத்தினார். முதல் நாள் முடிவில் தமிழகம் 1 விக்கெட்டுக்கு 379 ரன்கள் குவித்தது. சாய் சுதர்சன் 202 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 96 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், தொடர்ந்து பேட்டிங் செய்த தமிழகம் தனது முதல் இன்னிங்சில் 158.2 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 674 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. சாய் சுதர்சன் 213 ரன், வாஷிங்டன் சுந்தர் 152 ரன், பிரதோஷ் ரஞ்சன் பால் 117 ரன் எடுத்தனர்.
இதையடுத்து டெல்லி அணி தனது முதல் இன்னிங்சை ஆடி வருகிறது. இரண்டாம் நாள் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்துள்ளது.
- தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
- அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.
நாடு முழுவதும் வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பொது மக்கள் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடும் வகையில் அரசு தரப்பில் கட்டுப்பாடுகள் விதிப்பது வழக்கம்.
இந்நிலையில், இந்த ஆண்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை அன்று இரண்டு மணி நேரம் பட்டாசு வெடிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, காலை 6- 7 மணி மற்றும் இரவு 7 - 8 மணி வரை, குறைந்த ஒலி, மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.
பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு மாவட்ட நிர்வாகம்/ உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.
அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.
மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
குடிசை பதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களு்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 674 ரன்கள் குவித்தது.
- 3ம் நாள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெடுக்கு 264 ரன்கள் எடுத்தது.
புதுடெல்லி:
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
குரூப் டி பிரிவில் டெல்லியில் நடந்து வரும் லீக் ஆட்டத்தில் தமிழகம், டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 674 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. சாய் சுதர்சன் 213 ரன், வாஷிங்டன் சுந்தர் 152 ரன், பிரதோஷ் ரஞ்சன் பால் 117 ரன் எடுத்தனர். ஜெகதீசன் அரைசதம் அடித்து 65 ரன்னில் அவுட் ஆனார்.
தொடர்ந்து ஆடிய டெல்லி அணி இரண்டாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. அந்த அணியின் யாஷ் துல் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். பிரணவ் ராஜவன்ஷி 40 ரன்னும், சங்க்வான் 36 ரன்னும், தியாகி 35 ர்ன்னும் எடுத்தனர்.
இறுதியில் மூன்றாம் நாள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது, யாஷ் துல் 103 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- தீ விபத்து போன்ற அசம்பாவிதங்களை தடுக்க தீயணைப்பு துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
- கடந்த 3 ஆண்டுகளாக தீ விபத்து இல்லாத தீபாவளியாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு நேற்று முதலே பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வருகிறது.
பொது மக்கள் பாதுகாப்புடன் பட்டாசுகளை வெடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தீ விபத்து போன்ற அசம்பாவிதங்களை தடுக்க தீயணைப்பு துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் 21 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்கும்போது சென்னையில் 7 பேரும், மதுரையில் 5 பேரும், திருச்சியில் 3 பேரும் தீக்காயத்தால் பாதிப்படைந்துள்ளனர்.
தஞ்சாவூரில் 6 பேர் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட 4 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளாக தீ விபத்து இல்லாத தீபாவளியாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் தீ விபத்து இல்லாத தீபாவளியாக கொண்டாடப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 438 ரன்கள் எடுத்தன.
- ரயில்வேஸ் அணி முதல் இன்னிங்சில் 229 ரன்கள் எடுத்தன.
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'டி' பிரிவு லீக் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழகம், ரயில்வேஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழகம் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ரயில்வேஸ் அணி முதல் இன்னிங்சில் 229 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தமிழகம் முதல் இன்னிங்சில் 438 ரன்கள் எடுத்தன.
209 ரன்கள் பின்தங்கிய நிலையில், ரயில்வேஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. அந்த அணி 184 ரன்களில் ஆல் அவுட்டானது.
இதன்மூலம் தமிழகம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது தமிழகத்தின் முகமது அலிக்கு அளிக்கப்பட்ட்டது.
- ஃபெஞ்சல் புயல் காரணமாக 3 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன.
- திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டதில் ஒரு வீட்டிலிருந்த 7 பேர் உயிரோடு புதைந்து பலியாகினர்.
திருவனந்தபுரம்:
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையை கடந்தது. இதனால் சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை கொட்டியது.
குறிப்பாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புயலின் கோரத்தாண்டவத்தால் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அந்த 3 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன.
திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டியதால், கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கனமழையால் திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டதால் மலையடிவாரத்தில் இருந்த ஒரு வீட்டை மண் மூடியதில் அங்கிருந்த 7 பேர் உயிரோடு புதைந்து பலியானார்கள்.
இந்நிலையில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு உதவ கேரள அரசு தயாராக உள்ளது என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பினராயி விஜயன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து மீண்டு வரும் தமிழக மக்கள் மீதே எங்களது எண்ணங்கள் உள்ளன. இந்த சவாலான நேரத்தில் கேரளா அண்டை மாநிலங்களுடன் ஒற்றுமையாக நிற்கிறது. தேவையான எந்த உதவிகளையும் வழங்க கேரள அரசு தயாராக உள்ளது. ஒன்றாக இணைந்து வென்று வருவோம் என பதிவிட்டுள்ளார்.
- குடியரசு தின அணிவகுப்பில் 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- அலங்கார ஊர்தி அணிவகுப்புக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை.
குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில், தமிழ்நாடு சார்பில் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு குடியரசு தின அணிவகுப்பில் 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதில், அலங்கார ஊர்தி அணிவகுப்புக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை.
அதன்படி, குடியரசு தின அணிவகுப்பு நிகழ்வில் உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், பஞ்சாப், கோவா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநில அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு இடம்பெறவில்லை.
இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
குடியரசு தின விழாவில், தலைநகர் டெல்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில் , தமிழகத்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை உயர்த்தி காட்டும் தமிழகத்தின் அலங்கார அணிவகுப்பு ஊர்தி அதிமுக ஆட்சிக்காலங்களில் இடம்பெறுவது மரபு.
ஆனால் விடியா திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால், குடியரசு தின விழாவில் இந்த ஆண்டும் அலங்கார ஊர்தி இடம்பெறாத வெட்கக் கேடான நிலை உருவாகியுள்ளதாக அறிகிறேன்.
மு.க.ஸ்டாலின் அரசின் தொடர் அலட்சிய நிர்வாகத்திற்கும் , அனுமதி வழங்காத மத்திய அரசுக்கும் எனது கடுமையான கண்டனங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.