என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tasmac employees protest"
- டாஸ்மாக் ஊழியர் மீதான கொலை வெறி தாக்குதலை கண்டிப்பது என என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
- டாஸ்மாக் விற்பனை பணத்தை வங்கிகளே நேரடியாக பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேட்டுப்பாளையம்,
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் விஜய் ஆனந்த் (வயது 46). இவர் சிறுமுகைலிருந்து அன்னூர் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி விஜய்ஆனந்த் டாஸ்மாக் கடையில் வசூலான ரூ.10 லட்சம் பணத்தை மேட்டுப்பாளையத்தில் உள்ள வங்கியில் செலுத்துவதற்காக சென்றார். அப்போது இவரை பின்தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் பட்டா கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி செய்தனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து கோவை மாவட்ட டாஸ்மாக் கூட்டுக்குழு சார்பில் இன்று சிறுமுகை தியேட்டர் மேடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை மாவட்ட டாஸ்மாக் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஜான் தலைமை தாங்கினார். ஏ.ஐ.சி.சி.டி.யு மாநில துணைத்தலைவர் மதியழகன் முன்னிலை வகித்தார். டாஸ்மாக் விற்பனை பணத்தை வங்கிகளே நேரடியாக பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர் மீதான கொலை வெறி தாக்குதலை கண்டிப்பது என என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்கள் கோவை மாவட்ட தலைவர் பத்மநாபன், சுதாகர், வாசுதேவன், தினேஷ், மூர்த்தி, சரவணன், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
டாஸ்மாக் கடையில் விற்பனை நேரத்தை இரவு 10 மணி என்பதை 8 மணியாக குறைக்க வேண்டும், தொண்டராம்பட்டு டாஸ்மாக்கில் பணிபுரியும் விற்பனையாளர்களான ரமேஷ், கலையரசன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி மற்றும் மருத்துவ உதவி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு சி.ஐ.டி.யூ. டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவடட தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் வீரயையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் முள்ளிப்பாடி டாஸ்மாக் குடோன் முன்பு திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர்கள் எல்.பி.எப். மாரிமுத்து, சி.ஐ.டி.யு. ராமு, ஏ.ஐ.டி.யு.சி. அருணாச்சலம் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில குழு உறுப்பினர் கோபால், மாவட்ட செயலாளர்கள் எல்.பி.எப். கருப்பையா, சி.ஐ.டி.யு. சீனிவாசன், ஏ.ஐ.டி.யு.சி. மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் எல்.பி.எப். மாநில பேரவை தலைவர் பசீர்அகமது, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் சிவமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். 15 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், ரூ.18 ஆயிரம் அடிப்படை சம்பளமாக நிர்ணயம் செய்ய வேண்டும், ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு தர வேண்டும், மேலும் டாஸ்மாக் மதுபாட்டில்கள் தனியார் காண்டிராக்ட் லாரி மூலம் கொண்டு வரப்படுகிறது.
ஒரு மது பாட்டில் பெட்டியை டாஸ்மாக் கடையில் இறக்க ரூ.5 கேட்டு மிரட்டுகின்றனர். இதற்கு தீர்வு காணவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டன.
டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சி.ஐ.டி.யு-எல்.பி. எப். சார்பில் பணி வரன் முறை, காலமுறை ஊதியம், மாற்றுப்பணி கோரிக்கைகளை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்திட வலியுறுத்தி கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொ.மு.ச. மாவட்டச் செயலாளர் கண்ணதாசன் தலைமை தாங்கினார். சி.ஐ. டி.யு. ஊழியர் சங்க கவுரவ தலைவர் கா.கந்தசாமி முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம், தொ.மு.ச. கவுன்சில் செயலாளர் அப்பாசாமி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகேசன், டாஸ்மாக் ஊழியர் சங்க பிரதிநிதிகள் எஸ். கிருஷ்ணமூர்த்தி, கலைச்செல்வன், பத்மஸ்ரீகாந்தன், ராஜேஸ் கண்ணன், முருகானந்தம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
இதில் அரசு ஊழியர்களுக்கு இணையான கால முறை ஊதியம், இ.எஸ்.ஐ. மருத்துவ திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் திரளான டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து கொண்டனர். #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்