என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teenager arrested"

    • சேலம் நெடுஞ்சாலை நகர் நர்மதா தெருவை சேர்ந்த 41 வயது திருமணமான பெண்மணிக்கு, கடந்த 2 1/2 ஆண்டுகளாக போன் மூலம் தகாத முறையில் பேசியும், ஆபாச குறுந்தகல்களையும் வாலிபர் ஒருவர் தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார்.
    • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வடகம் பகுதியை சேர்ந்தவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சேலம்:

    சேலம் நெடுஞ்சாலை நகர் நர்மதா தெருவை சேர்ந்த 41 வயது திருமணமான பெண்மணிக்கு, கடந்த 2 1/2 ஆண்டுகளாக போன் மூலம் தகாத முறையில் பேசியும், ஆபாச குறுந்தகல்களையும் வாலிபர் ஒருவர் தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார்.

    பலமுறை கண்டித்தும், வாலிபர் தொடர்ந்து போன் மூலம் தொல்லை கொடுத்ததால், இதுகுறித்து அந்த பெண் சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த பெண்ணுக்கு தொல்லை கொடுத்த நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வடகம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் பூபதி (வயது 36) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சேலம் தொங்கும் பூங்கா அருகில் மாவட்ட நூலகம் செயல்பட்டு வருகிறது.
    • அங்கு வந்த ஒரு வாலிபர் திடீரென மாணவிகளிடம் கேலி கிண்டலில் ஈடுபட்டார்.

    சேலம்:

    சேலம் தொங்கும் பூங்கா அருகில் மாவட்ட நூலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கல்லூரி மாணவ-மாணவிகள் அடிக்கடி வந்து புத்தகங்களை படிப்பது வழக்கம்.

    சம்பவத்தன்று மாணவிகள் நூலகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு வாலிபர் திடீரென மாணவிகளிடம் கேலி கிண்டலில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் நூலகத்தி லிருந்து உடனடியாக வெளியேறினர்.

    மேலும் இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதுகுறித்த தகவலின் பேரில் அஸ்தம்பட்டி போலீ சார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவு களை ஆய்வு செய்தனர்.

    அப்போது மாணவிகளிடம் கேலி கிண்டல் செய்தவர் சேலம் கிச்சிபாளையம் எஸ்.எம்.சி. காலனி பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மகன் சரத்குமார் (வயது 24) என்பது தெரியவந்தது. அவரை இன்று காலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அவரை, நேற்று நாமக்கல் நகர போலீசார் கைது செய்தனர்.
    • பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி நாமக்கல் சிறையில் அடைத்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் கொசவப் பட்டியை சேர்ந்தவர் ஸ்ரீரங்கன் (வயது 36). இவர் கடந்த 2019-ம் ஆண்டு, ஒருவரிடம் காரை வாங்கி அடமானம் வைத்தார்.

    இது தொடர்பான வழக்கில் நாமக்கல் கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதனால் நாமக்கல் நகர போலீசார் அவரை தொடர்ந்து தேடி வந்தனர்.

    கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அவரை, நேற்று நாமக்கல் நகர போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி நாமக்கல் சிறையில் அடைத்தனர்.

    • சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 4-ந்தேதி பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நடை பெற்றது.
    • பின் தலையில் பலத்த அடிபட்டதால் இறந்திருக்கலாம் என தெரியவந்தது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 4-ந்தேதி பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நடை பெற்றது. இதனை காண்ப தற்காக அன்று அதிகாலை திண்டிவனம் கிடங்கல் - 1 பகுதியை சேர்ந்த அபி, சுந்தர், ரிஸ்வான் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்றனர். மயிலம் அடுத்த கொல்லியங்குணம் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் மோட்டார் சைக்கிள்களுக்கு பார்க்கிங் கட்டண வசூலில் ஈடுபட்டு வந்தார்.

    அவருக்கு துணையாக அவரது நண்பர்களான முத்தையன், சூரியமூர்த்தி, பிரகாஷ் ஆகியோர் இருந்த னர். இவர்கள் திண்டி வனத்தில் இருந்து வந்திருந்த வர்களிடம் பார்க்கிங் கட்ட ணம் கேட்டுள்ளனர். தர மறுத்ததால் இரு தரப்பின ருக்கு இடையே வாய் தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மைலம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் அனைவரை யும் எச்சரித்து அனுப்பினார். அங்கிருந்து கிளம்பிச் சென்ற திண்டிவனத்தை சேர்ந்த 3 பேரும் தங்களது ஆதரவாளர்களுடன் கொல்லியங்குணத்திற்கு மீண்டும் வந்து பார்க்கிங் கட்டணம் கேட்டவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    இதில் திண்டிவனம் கிடங்கல் பகுதியை சேர்ந்த வர்களை அபி, சுந்தர், ரிஸ்வான் ஆகியோர் தாங்கள் மறைத்து வைத்தி ருந்த கத்தியால் சரமாரி யாக தாக்கியதில் கொல்லி யங்குணத்தை சேர்ந்த சூரிய மூர்த்தி, முத்தை யன், பிரகாஷ் ஆகியோ ருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 3 பேரும் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து சூரியமூர்த்தி மயிலம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் அபி, சுந்தர், ரிஸ்வான் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர்.

    இந்த நிலையில் மயிலம் புதுச்சேரி சாலையில் கொல்லியங்குணம் அருகே சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக மயிலம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    முதலில் மது போதையில் இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்த நிலை யில், பிரேத பரிசோதனையில் இறந்தவரின் பின் தலையில் கட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் திண்டிவனம் கிடங்கல் பகுதியை சேர்ந்த முடித்தி ருந்தும் கடை ஊழியர் கோகுல்ராஜ் என்பவர் அபியின் நண்பர் என்பதும், தகராறு நடந்த அன்று அங்கு வந்திருந்ததாகவும், மது போதையில் இருந்ததால் அங்கிருந்து தப்பி வர முடியாமல், பின் தலையில் பலத்த அடிபட்டதால் இறந்திருக்கலாம் என தெரியவந்தது.இதனை அடுத்து சந்தேகம் மரணம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு கொல்லியங்குணம் பகுதியை சேர்ந்த ரமேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 4-ந்தேதி பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நடை பெற்றது. இதனை காண்ப தற்காக அன்று அதிகாலை திண்டிவனம் கிடங்கல் - 1 பகுதியை சேர்ந்த அபி, சுந்தர், ரிஸ்வான் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்றனர். மயிலம் அடுத்த கொல்லியங்குணம் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் மோட்டார் சைக்கிள்களுக்கு பார்க்கிங் கட்டண வசூலில் ஈடுபட்டு வந்தார். அவருக்கு துணையாக அவரது நண்பர்களான முத்தையன், சூரியமூர்த்தி, பிரகாஷ் ஆகியோர் இருந்த னர். இவர்கள் திண்டி வனத்தில் இருந்து வந்திருந்த வர்களிடம் பார்க்கிங் கட்ட ணம் கேட்டுள்ளனர். தர மறுத்ததால் இரு தரப்பின ருக்கு இடையே வாய் தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மைலம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் அனைவரை யும் எச்சரித்து அனுப்பினார்.

    அங்கிருந்து கிளம்பிச் சென்ற திண்டிவனத்தை சேர்ந்த 3 பேரும் தங்களது ஆதரவாளர்களுடன் கொல்லியங்குணத்திற்கு மீண்டும் வந்து பார்க்கிங் கட்டணம் கேட்டவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். இதில் திண்டிவனம் கிடங்கல் பகுதியை சேர்ந்த வர்களை அபி, சுந்தர், ரிஸ்வான் ஆகியோர் தாங்கள் மறைத்து வைத்தி ருந்த கத்தியால் சரமாரி யாக தாக்கியதில் கொல்லி யங்குணத்தை சேர்ந்த சூரிய மூர்த்தி, முத்தை யன், பிரகாஷ் ஆகியோ ருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 3 பேரும் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து சூரியமூர்த்தி மயிலம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் அபி, சுந்தர், ரிஸ்வான் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர்.

    இந்த நிலையில் மயிலம் புதுச்சேரி சாலையில் கொல்லியங்குணம் அருகே சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக மயிலம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலில் மது போதையில் இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்த நிலை யில், பிரேத பரிசோதனையில் இறந்தவரின் பின் தலையில் கட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் திண்டிவனம் கிடங்கல் பகுதியை சேர்ந்த முடித்தி ருந்தும் கடை ஊழியர் கோகுல்ராஜ் என்பவர் அபியின் நண்பர் என்பதும், தகராறு நடந்த அன்று அங்கு வந்திருந்ததாகவும், மது போதையில் இருந்ததால் அங்கிருந்து தப்பி வர முடியாமல், பின் தலையில் பலத்த அடிபட்டதால் இறந்திருக்கலாம் என தெரியவந்தது.

    இதனை அடுத்து சந்தேகம் மரணம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு கொல்லியங்குணம் பகுதியை சேர்ந்த ரமேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 4-ந்தேதி பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நடை பெற்றது. இதனை காண்ப தற்காக அன்று அதிகாலை திண்டிவனம் கிடங்கல் - 1 பகுதியை சேர்ந்த அபி, சுந்தர், ரிஸ்வான் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்றனர். மயிலம் அடுத்த கொல்லியங்குணம் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் மோட்டார் சைக்கிள்களுக்கு பார்க்கிங் கட்டண வசூலில் ஈடுபட்டு வந்தார்.

    அவருக்கு துணையாக அவரது நண்பர்களான முத்தையன், சூரியமூர்த்தி, பிரகாஷ் ஆகியோர் இருந்த னர். இவர்கள் திண்டி வனத்தில் இருந்து வந்திருந்த வர்களிடம் பார்க்கிங் கட்ட ணம் கேட்டுள்ளனர். தர மறுத்ததால் இரு தரப்பின ருக்கு இடையே வாய் தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மைலம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் அனைவரை யும் எச்சரித்து அனுப்பினார். அங்கிருந்து கிளம்பிச் சென்ற திண்டிவனத்தை சேர்ந்த 3 பேரும் தங்களது ஆதரவாளர்களுடன் கொல்லியங்குணத்திற்கு மீண்டும் வந்து பார்க்கிங் கட்டணம் கேட்டவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    இதில் திண்டிவனம் கிடங்கல் பகுதியை சேர்ந்த வர்களை அபி, சுந்தர், ரிஸ்வான் ஆகியோர் தாங்கள் மறைத்து வைத்தி ருந்த கத்தியால் சரமாரி யாக தாக்கியதில் கொல்லி யங்குணத்தை சேர்ந்த சூரிய மூர்த்தி, முத்தை யன், பிரகாஷ் ஆகியோ ருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 3 பேரும் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து சூரியமூர்த்தி மயிலம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் அபி, சுந்தர், ரிஸ்வான் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர். இந்த நிலையில் மயிலம் புதுச்சேரி சாலையில் கொல்லியங்குணம் அருகே சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக மயிலம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    முதலில் மது போதையில் இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்த நிலை யில், பிரேத பரிசோதனையில் இறந்தவரின் பின் தலையில் கட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் திண்டிவனம் கிடங்கல் பகுதியை சேர்ந்த முடித்தி ருந்தும் கடை ஊழியர் கோகுல்ராஜ் என்பவர் அபியின் நண்பர் என்பதும், தகராறு நடந்த அன்று அங்கு வந்திருந்ததாகவும், மது போதையில் இருந்ததால் அங்கிருந்து தப்பி வர முடியாமல், பின் தலையில் பலத்த அடிபட்டதால் இறந்திருக்கலாம் என தெரியவந்தது. இதனை அடுத்து சந்தேகம் மரணம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு கொல்லியங்குணம் பகுதியை சேர்ந்த ரமேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • முருகன் (வயது 45). இவர் குகை பிரபாத் அருகே உள்ள ஒரு காபி பாரில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.
    • முருகன் பணம் தர மறுத்த தால் ரவிக்குமார் கடையிலிருந்து டீ பாய்லர்,பிஸ்கட் வைத்துள்ள கண்ணாடி ஜார்கள்,மற்றும் கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவர் குகை பிரபாத் அருகே உள்ள ஒரு காபி பாரில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது கடைக்கு கிச்சிப்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு களரம்பட்டி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் ரவிக்கு மார் (29) என்பவர் வந்தார்.

    அவர் முருகனிடம் பணம் கேட்டுள்ளார். முருகன் பணம் தர மறுத்த தால் ரவிக்குமார் கடையிலிருந்து டீ பாய்லர்,பிஸ்கட் வைத்துள்ள கண்ணாடி ஜார்கள்,மற்றும் கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார்.

    இது குறித்து முருகன் செவ்வாபேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பிரபாகரன் (வயது 22). இவர் மீது கார் மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு உள்ளது.
    • நாமக்கலில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    நாமக்கல்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கலர் காடு பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் பிரபாகரன் (வயது 22). இவர் மீது கார் மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு உள்ளது. இதையடுத்து அவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று நாமக்கலில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஒரு நபரை தடுத்து நிறுத்தி விசாரித்த னர். விசாரணையில் அவர் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டில் தொடர்புடைய பிரபாகரன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் அவர் திருடிய கார் மற்றும் மோட்டார் சைக்கிள் எங்கு உள்ளது என்பது குறித்து கேட்டறிந்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சாத்தூர் அருகே மைத்துனரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பிள்ளையார்கோவில் புரத்தை சேர்ந்தவர் வைர முத்து (வயது 38). இவரது மனைவி கவிதா. வைரமுத்துக்கு குடி பழக்கம் உள்ளது. அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத் தன்று கோவில் திருவிழா வுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த கவிதாவிடம் தகராறு செய்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த கவிதா அதே பகுதியில் வசிக்கும் தனது தம்பி கார்த்திக்கிடம் இது பற்றி கூறினார்.

    உடனடியாக அங்கு வந்த கார்த்திக், குடித்து விட்டு ஏன் தகராறு செய்கிறீர்கள் என வைரமுத்துவிடம் தட்டி கேட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது.

    சிறிது நேரத்தில் வாக்கு வாதம் முற்றி கை கலப்பாக மாறியது. அப்போது கார்த்திக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வைரமுத்துவை குத்தினார். இதையடுத்து அங்கிரு ந்தவர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றி வைரமுத்து கொடுத்த புகாரின்பேரில் ஏழாயிரம் பண்ணை போலீ சார் வழக்குப்பதிவு செய்து மைத்துனரை கத்தியால் குத்திய கார்த்திக்கை கைது செய்தனர்.

    • கன்னங்குறிச்சி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார், நேற்று நள்ளிரவு கன்னங்குறிச்சி சின்ன முனியப்பன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
    • டாரஸ் லாரியை பள்ளிப்பாளையத்தில் இருந்து திருடி வந்த போது, வழி தெரியாமல் சின்ன முனியப்பன் கோவில் அருகே நின்றிருந்தபோது, போலீசாரிடம் சிக்கிக் கொண்டதாக தெரிவித்தார்.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார், நேற்று நள்ளிரவு கன்னங்குறிச்சி சின்ன முனியப்பன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அங்கு நின்றிருந்த ஒரு டாரஸ் லாரியின் மீது சந்தேகம் ஏற்பட்டு, லாரிக்குள் இருந்த நபரை அழைத்து விசாரணை மேற்கொண்டபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

    போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், அவர் கர்நாடக மாநிலம் பெங்களூர் கோரமங்களா ராஜேந்திரன் நகர் பகுதியைச் சேர்ந்த பாஷா மகன் முகமது உரில்லா (வயது 37) என்பது தெரிய வந்தது. மேலும் இவர் அந்த டாரஸ் லாரியை பள்ளிப்பாளையத்தில் இருந்து திருடி வந்த போது, வழி தெரியாமல் சின்ன முனியப்பன் கோவில் அருகே நின்றிருந்தபோது, போலீசாரிடம் சிக்கிக் கொண்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், பள்ளிபாளையம் போலீசார் சேலத்திற்கு வந்து லாரியை பறிமுதல் செய்து, முகமதுவை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

    பிடிபட்ட டாரஸ் லாரி, நாமக்கல்லை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. போலீசார் பிடிபட்ட வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கடந்த 1-ந் தேதி வாலிபர் ஒருவர் தங்க மோதி ரம் ஒன்றை அடகு வைத்தார்.
    • பொய்யான விலாசம் மற்றும் போன் நம்பரை கொடுத்து போலிமோதிரத்தை அடகு வைத்தது தெரிய வந்தது.

    கடலூர்:

    பண்ருட்டியை சேர்ந்தவர் கிஷோர் குமார். இவர்பொன்னு சாமி தெருவில் நகை அடகு கடை வைத்துள்ளார். இவரது அடகு கடையில் கடந்த 1-ந் தேதி வாலிபர் ஒருவர் தங்க மோதி ரம் ஒன்றை அடகு வைத்து ரூ14.500பணத்தைப் பெற்றுக் கொண்டு சென்றுள்ளார். இவர் அடகு வைத்து பணம் வாங்கி சென்றது போலிநகை என்றும் தங்கமுலாம் பூசியது என்றும்தெரியவந்தது. இது குறித்து நகை அடகு கடை உரிமையாளர் கிஷோர் குமார் பண்ருட்டிபோலீசில்புகார்கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார்சம்பவ இடத்துக்குவிரைந்து சென்று விசாரணை நடத்தினர் விசார ணையில் பொய்யான விலாசம் மற்றும் போன் நம்பரை கொடுத்து போலிமோதிரத்தை அடகு வைத்தது தெரிய வந்தது.தீவிர விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் பஞ்சமாதேவி பாத்தி மா லே அவுட்டை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (வயது 38) என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ராஜேஷ் கண்ணனை அதிரடியாக கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சேலம் கொண்ட லாம்பட்டி போலீசாருக்கு, நாட்டாமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பதாக கடந்த மாதம் ரகசிய தகவல் வந்தது.
    • இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அங்கி ருந்த 7 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்தனர்.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி போலீசாருக்கு, நாட்டாமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பதாக கடந்த மாதம் ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அங்கி ருந்த 7 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்தனர்.

    அதில் ஒருவர் மட்டும் தப்பி ஓடிவிட்ட நிலையில், மீதிமுள்ள 6 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறி முதல் செய்தனர். பிடிபட்ட 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் தப்பி யோடியவர் சேலம் நிலவாரப்பட்டி பகுதியை சேர்ந்த ராமநாதன் மகன் யுவராஜ் என்கிற ராஜா (வயது 38) என்பது தெரியவந்தது. அவரை இன்று காலை கொண்டலாம்பட்டி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • அரசு டாஸ்மாக் கடை அருகே அனு மதியின்றி மது விற்பனை நடப்பதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக் டர் சுப்ரமணியன் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அரசு டாஸ்மாக் கடை அருகே அனு மதியின்றி மது விற்பனை நடப்பதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது அங்கு திருட்டுத்தனமாக மது பாட்டில்களை விற்பனை செய்த சிவகங்கை மாவட்டம், அங்காளக் கோட்டையை சேர்ந்த சின்னசாமி என்பவரது மகன் ரகுபதிராஜா(25) என்பவரை கைது செய்தனர். மேலும் அனுமதியின்றி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 25 மதுபாட்டில்களை பரமத்தி போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சித்திக் (33) என்பவர் வீடு வாடகைக்கு எடுத்து மது விற்பனை செய்வதாக வெப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் விரைந்து சென்று அந்த வீட்டில் சோதனை செய்தனர்.

    பள்ளிப்பாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெப்படை வாழ்ராஜபாளையம் பகுதியில் சித்திக் (33) என்பவர் வீடு வாடகைக்கு எடுத்து மது விற்பனை செய்வதாக வெப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அந்த வீட்டில் சோதனை செய்தனர். அங்கு 704 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சித்திக்கை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்தனர். மேலும் 704 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    ×