search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Television"

    • தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களுக்கான விருது விழாவான எம்மி விருதுகள் விழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது
    • நேற்றய தினம் நடந்த ரெட் கார்பெட் நிகழவில் தொலைக்காட்சி பிரபலங்கள் மிடுக்கான உடையணிந்து அணிவகுத்தனர்.

    உலக அளவில் மார்க்கெட் கொண்டுள்ள ஹாலிவுட் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களுக்கான விருது விழாவான எம்மி விருதுகள் விழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது . அந்த வகையில் 2024 எம்மி விருது வழங்கும் விழா நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றய தினம் நடந்த ரெட் கார்பெட் நிகழவில் தொலைக்காட்சி  பிரபலங்கள் மிடுக்கான உடையணிந்து அணிவகுத்தனர். தொடர்ந்து இன்றைய தினம் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் கலைஞர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது,

    ❧சிறந்த ரிலாலிட்டி போட்டி - டிரையேட்டர்ஸ் [Traitors]

    ❧சிறந்த டிராமா சீரிஸ் - ஷோ கன் [Shogun]

    ❧சிறந்த டாக் சீரிஸ் தி டெய்லி ஷோ [The Daily Show]

    ❧சிறந்த ஆன்தாலஜி சீரிஸ் - பேபி ரெய்ன்டீர் [Baby Reindeer]

     

    ❧சிறந்த நடிகர் விருது [காமெடி] - 'தி பியர்' [The Bear] சீரிஸ் நடிகர் ஜெர்மி ஆலன் வைட் [Jeremy Allen White]

    ❧சிறந்த துணை நடிகர் விருது [காமெடி] - 'தி பியர்' சீரிஸ் நடிகர் எபோன் மாஸ் [Ebon Moss]

    ❧சிறந்த நடிகை விருது [ காமெடி] ஹேக்ஸ் [Hacks] நடிகை ஜீன் ஸ்மார்ட்

    ❧சிறந்த துணை நடிகை விருது [காமெடி] - 'தி பியர்' சீரிஸ் நடிகை லிசா கோலன் [Liza Colon]

     

    ❧சிறந்த நடிகை விருது [டிராமா] - ஷோ கன் சீரிஸ் நடிகை அனா சவாய் [Anna Sawai]

    ❧சிறந்த துணை நடிகை விருது [டிராமா] - 'தி கிரவுன்' The Crown நடிகை எலிசபெத் டெபிக்கி [Elizabeth Debicki]

    ❧சிறந்த நடிகர் விருது [டிராமா] -ஷோ கன் சீரிஸ் நடிகர் ஹிரோயுகி சனாடா [Hiroyuki Sanada]

    தொடர்ந்து பல்வேறு பிரிவுகளுக்கான எம்மி விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வங்காளதேசத்தில் இருந்து சுமார் 1,000 இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
    • நேபாளம், பூடான் வழியாக இந்தியா திரும்பத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    டாக்கா:

    வங்காளதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அரசுக்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

    இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டு நாடு முழுவதும் வன்முறை வெடித்துள்ளது. அரசு தொலைக்காட்சி நிலையத்துக்கு தீவைக்கப்பட்டது. தலைநகர் டாக்காவின் வடக்கே அமைந்துள்ள நர்சிங்டி நகரில் உள்ள சிறைச்சாலைக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததை தொடர்ந்து, சுமார் 800 கைதிகள் சிறையில் இருந்து தப்பினர். வன்முறை கட்டுக்குள் வராததால் நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும் ராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வன்முறை கட்டுக்குள் வரவில்லை. அங்கு தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. வன்முறையில் இதுவரை 130-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.


    இந்த நிலையில் போராட்டத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வரும் நிலையில், ஊரடங்கை மீறி வன்முறையில் ஈடுபடுவோரைக் கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    வங்காளதேசத்தில் இருந்து சுமார் 1,000 இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். மாணவர்களைப் பாதுகாப்பாக அழைத்து வர வெளியுறவு அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவர்கள் நேபாளம், பூடான் வழியாக இந்தியா திரும்பத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    • BTV அலுவலகத்தின் வரவேற்பு கட்டிடத்துக்கும் பார்க்கிங்கில் நின்றிருந்த வாகனங்களுக்கும் போராட்டக்காரர்கள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • நாடு பல்வேறு நகரங்களில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971 இல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.  இந்த படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

     

    தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

     

    இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 6 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

     

    பல்கலைக்கழகம் மட்டுமின்றி தலைநகர் டாக்காவிலும் மற்றைய பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. டாக்காவில் உள்ள BTV தொலைக்காட்சியின் தலைமையகத்துக்கு வெளியில் போலீசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. BTV அலுவலகத்தின் வரவேற்பு கட்டிடத்துக்கும் பார்க்கிங்கில் நின்றிருந்த வாகனங்களுக்கும் போராட்டக்காரர்கள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிடத்துக்குள்ளே பலர் சிக்கினர்.

     

    இதனைத்தொடர்ந்து அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிகிறது. இதுபோன்று நேற்று பல்வேறு இடங்களில் நடந்த போராட்ட்டத்தில் மேலும் சுமார் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதுவரை நடந்த போராட்டங்களில் ஒட்டுமொத்தமாக பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

    போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை காலவரையின்றி மூட அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு பல்வேறு நகரங்களில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரகள் மீது ரப்பர் குண்டுகளையும், ஒலியெழுப்பும் கிரைனைடுகளையும் போலீசார் உபயோகித்து வருகின்றனர்.

     

    தலைநகரில் உள்ள மெட்ரோ நிலையங்கள் சேவையை நிறுத்தியுள்ளன. போராட்டத்தை கட்டுக்குள் கொண்டவர எல்லை பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். வங்காளதேசத்தில் வசிக்கும் இந்தியர்களை கவனமுடன் இருக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

    • ஒருவருக்கு அரை ஏக்கருக்கு மட்டுமே வழங்க இயலும் என்று கூறியதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • சில கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் குறுவை நடவு செய்த பின்னரே சான்று தருவதாக கூறியதால் இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம், பூதலூர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகள் நேற்று குறுவை தொகுப்பு திட்டத்தில் உரங்கள் பெறுவதற்கு ஆணை வாங்க காத்திருந்தனர். அரசு அறிவிப்பின்படி குறுவை தொகுப்பு திட்டம் ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர் பரப்பிற்கு வழங்கப்பட வேண்டும். இதற்காக விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர்களிடம் சான்றுகள் பெற்று வந்திருந்தனர்.

    நேற்று திடீரென விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு குறுவை தொகுப்பு திட்டம் வழங்க இயலாது, ஒருவருக்கு அரை ஏக்கருக்கு மட்டுமே வழங்க இயலும் என்று கூறியதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.பூதலூர் வட்டாரத்தில் வலிமையான விவசாயிகள் துணிவான கிராம நிர்வாக அலுவலர்கள மூலம் முன் கூட்டியே சான்றிதழ்களை பெற்று குறுவை தொகுப்பு திட்ட உரங்களை பெற்றுள்ளனர்.

    சில கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் குறுவை நடவு செய்த பின்னரே சான்று தருவதாக கூறியதால் இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது. பூதலூரில் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும் பயன் பெறும் வகையில் வேளாண்துறை அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து விவசாயிகளுக்கு அரசு அறிவித்த திட்ட பயன்கள் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுகின்றனர்.

    பிலிப்ஸ் நிறுவனம் புதிய எல்.இ.டி. மற்றும் 4K ஸ்மார்ட் டி.வி. மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #Philips



    டி.பி.வி. டெக்னாலஜி இந்தியாவில் 22 இன்ச் முதல் 65 இன்ச் வரை புதிய பிலிப்ஸ் தொலைகாட்சி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

    புதிய தொலைகாட்சிகளில் பிலிப்ஸ் காப்புரிமை பெற்ற ஆம்பிலைட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் 65 இன்ச் 65PUT6703S/94 மிகப்பெரிய மாடலாக இருப்பதோடு, இந்த எல்.இ.டி. டி.வி.க்களில் 3 பக்க அம்பிலைட் பொருத்தப்பட்டுள்ளது.

    தொலைகாட்சியின் பக்கவாட்டுகளில் ஆன்-ஸ்கிரீன் நிறங்கள் சுவரில் பிரதிபலிக்கச் செய்கிறது. இத்துடன் ஆம்பிலைட் மியூசிக் மோட் வசதி வழங்கப்பட்டுள்ளதால், அறையில் விர்ச்சுவல் சவுன்ட் மற்றும் மின்விளக்குகளை மிளிரச் செய்யும். புதிய டி.வி.க்களில் பிக்சல் பிரிசைஸ் ஹெச்.டி. வழங்கப்பட்டிருக்கிறது. இது புகைப்படத்தின் தரத்தை மேம்படுத்தி, அதிக தெளிவான காட்சியை பிரதிபலிக்கும்.



    பிலிப்ஸ் 4K டி.வி.க்கள் (6100/ 6700 சீரிஸ்) ஹெச்.டி.ஆர். பிளஸ் மற்றும் SAPHI வழங்கப்பட்டு இருப்பதால் டி.வி. மற்றும் தரவுகளை மிக எளிமையாக இயக்க வழி செய்கிறது. இதன் மைக்ரோ டிம்மிங் மென்பொருள் படத்தை 6400 வெவ்வேறு சூழல்களில் கண்டறிந்து, அதற்கு ஏற்ப தரத்தை மாற்றியமைக்கும்.

    இதனுடன் டி.டி.எஸ். ஹெச்.டி. (DTS HD) தொழில்நுட்பமும் வழங்கப்பட்டு இருப்பதால், சவுண்டு ஆப்டிமைஸ் செய்யப்பட்டு, ஆடியோ தரம் இயற்கையாக வெளிப்படுகிறது. 

    புதிய 22 இன்ச் ஃபுல் ஹெச்.டி. எல்.இ.டி. டி.வி. மாடல் விலை ரூ.9,990 முதல் துவங்கி டாப்-என்ட் 65PUT6703S 65-இன்ச் விலை ரூ.1,49,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய தொலைகாட்சி மாடல்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் டிசம்பர் மாதம் முதல் விற்பனை செய்யப்படுகிறது.
    ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விளக்கம் கேட்காமல் விவாதத்தை ஒளிபரப்பிய ஆங்கில தொலைக்காட்சி மீது ரூ.10,000 கோடி இழப்பீடு கேட்டு ரிலையன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. #Rafale #Reliance
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி வருகிறார். இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்தபின்பும் தொடர்ந்து புகார் கூறப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ரபேல் ஒப்பந்தத்தில் உதிரி பாகங்கள் சப்ளை செய்வதற்கான ஒப்பந்தம் தொழில் அதிபர் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் சிபாரிசு இல்லாமல் ரபேல் நிறுவனமே ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக ஒரு ஆங்கில தொலைக்காட்சியில் ‘உண்மையும் மீறலும்’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் பேசிய பிரபலங்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்ய நெருக்குதல்கள் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

    இதில் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து விளக்கம் கேட்காமலேயே ஒளிபரப்பப்பட்டதாக அந்த நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர் பாக ஆங்கில தொலைக்காட்சி மீது ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.10,000 கோடி நஷ்டஈடு கேட்டு ஆமதாபாத் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.

    இந்த மனுவை நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். வருகிற 26-ந்தேதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்தார். #Rafale #Reliance
    எல்ஜி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய மாடல்களின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #SMARTTV



    எல்ஜி நிறுவனத்தின் புதிய தொலைகாட்சி மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டிருக்கும் புதிய டிவி மாடல்கள் OLED, சூப்பர் UHD, UHD மற்றும் ஸ்மார்ட் டிவி பிரிவுகளில் வெளியிடப்பட்டுள்ளன. 

    இவற்றில் ஆல்ஃபா 7 மற்றும் ஆல்ஃபா 9 பிராசஸர்களை கொண்டிருக்கின்றன. வாய்ஸ் கன்ட்ரோல், வெப் ஓ.எஸ். சப்போர்ட், மொபைல் ரெடி கனெக்ஷன் ஓவர்லே மற்றும் டால்பி அட்மாஸ் சரவுன்டு சவுன்டு சப்போர்ட் கொண்டிருக்கிறது.

    அனைத்து எல்ஜி டிவி மாடல்களிலும் புதிய ரிமோட் கன்ட்ரோல் - மேஜிக் ரிமோட் என்ற பெயரில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு பாயின்ட், க்ளிக், ஸ்கிரால் மற்றும் வாய்ஸ் கமான்ட் உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியும். இன்டர்நெட் வசதி இல்லாமலும் 800-க்கும் அதிகமான வாய்ஸ் கமான்ட்களை புதிய  டிவி மாடல்கள் சப்போர்ட் செய்கின்றன. இந்த டிவிக்கள் கேமிங் கன்சோல்களில் இருந்து சவுன்ட் பார் உள்ளிட்டவற்றை செட்டப் செய்யும் வழிமுறைகளுடன் வருகிறது.

    இத்துடன் மொபைல் கனெக்ஷன் ஓவர்லே எனும் அம்சம் மொபைல் மற்றும் தொலைகாட்சி திரைகளை ஒரே நேரத்தில் பார்க்க வழி செய்கிறது. இத்துடன் பயனர்கள் கூகுள் போட்டோஸ் மற்றும் கூகுள் டிரைவ் உள்ளிட்டவற்றை எல்ஜி டிவியில் கிளவுட் போட்டோஸ் மற்றும் வீடியோஸ் ஆப் மூலம் பயன்படுத்த வழி செய்கிறது.



    இதில் வழங்கப்பட்டு இருக்கும் ப்ளூடூத் அம்சம் கொண்டு பயனர்கள் டிவி ஆடியோக்களை, ப்ளூடூத் வசதி கொண்ட ஆடியோ சாதனம் அல்லது ஸ்மார்ட்போன்களில் கேட்டு ரசிக்க முடியும். மேலும் HDR, டால்பி விஷன், டெக்னிகலரின் மேம்படுத்தப்பட்ட HDR வசதி, HDR 10 ப்ரோ மற்றும் ஹெச்.எல்.ஜி. ப்ரோ உள்ளிட்ட வசதிகளை கொண்டிருக்கிறது.

    எல்.ஜி.-யின் 2018 OLED டிவி மாடல்களில் ஆல்ஃபா 9 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது நாய்ஸ் ரிடக்ஷன் அம்சம், மேம்படுத்தப்பட்ட கலர் கரெக்ஷன் அல்காரிதம் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்து, உயர் ரக ஃபிரேம் ரேட் மூலம் நொடிக்கு 120 ஃபிரேம் தரத்தில் அதிக துல்லியமான மோஷன் படங்களை வழங்குகிறது.

    எல்ஜி நிறுவனத்தின் 2018 சூப்பர் UHD டிவி மாடல்களில் 4K, தின்க் ஏ.ஐ. (ThinQ AI), ஆல்ஃபா 7 பிராசஸர், டால்பி அட்மாஸ் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் நானோ செல் டிஸ்ப்ளே கிட்டத்தட்ட 100 கோடி நிஜ வாழ்க்கை நிறங்களை பிரதிபலிக்கிறது, இது வழக்கமான டிவி மாடல்களை விட 64 மடங்கு தரமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு 2018 OLED மற்றும் சூப்பர் UHD டிவி மாடல்களிலும் 4K சினிமா HDR மற்றும் டால்பி அட்மாஸ் சார்ந்த சரவுன்டு சவுன்டு தொழில்நுட்பம் கொண்டுள்ளது.

    எல்ஜி இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கும் புதிய டிவி மாடல்கள் 32 இன்ச் முதல் 77 இன்ச் விலை ரூ.32,500-இல் துவங்குகிறது. #SMARTTV
    ×