search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thar Road"

    • அ.தி.மு.க நகரமன்ற உறுப்பினர் துர்கா ஜெயலட்சுமி தொடங்கி வைத்தார்
    • பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் பாராட்டு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் 3-வது வார்டுக்கு உட்பட்ட நவநகர், மூணார்க், ஸ்னோஸ்டவுன் முதல் ஜெம் பார்க் பகுதி வரை, தமிழகஅரசு நகர்ப்புற மேம்பாட்டு சாலை திட்டத்தின்கீழ் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை 3-வது வார்டு அ.தி.மு.க நகரமன்ற உறுப்பினர் துர்கா ஜெயலட்சுமி தொடங்கி வைத்தார்.

    ஊட்டி 3-வது வார்டு பகுதியில் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் அதற்கான முயற்சிகளை மேற்கொண்ட துர்கா ஜெயலட்சுமிக்கு பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

    • தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
    • கலவை தயாரிக்கும் போதே அதே வெள்ளை நிறம் கலந்து தயாரிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதிதாக தார்சா லைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இன்னும் பல இடங்களில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தார்சாலையில் விபத்தை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளன.

    ஆனால் சில இடங்களில் அந்த வேகத்தடைக்கு வெள்ளை வர்ணம் பூசாமல் உள்ளது.

    இதனால் வாகன ஓட்டிகளுக்கு அருகே வந்த பிறகு தான் வேகத்தடை இருப்பது தெரிகிறது.

    இதன் காரணமாக சிலர் தடுமாற்றத்துடன் விழுகின்றனர்.

    குறிப்பாக இரவு நேரங்களில் விபத்து நடக்கிறது.

    எனவே சாலையில் வேகத்தடை அமைக்கும் போதே வெள்ளை வர்ணம் பூச வேண்டும்.

    இல்லையென்றால் வேகத் தடுப்பில் அடிக்கும் வெள்ளை நிறத்திற்குப் பதில் வேகத்தடுப்பு கலவை தயாரிக்கும் போதே அதே வெள்ளை நிறம் கலந்து தயாரிக்கலாம் என்று வாகன வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் எங்கெல்லாம் வேகத்தடைக்கு வர்ணம பூசாமல் உள்ளது என கண்டறிந்து அதறகு வெள்ளை வர்ணம் பூச வேண்டும்.

    தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரூ 1.18 கோடி மதிப்பீட்டில்புதிய தார்சாலை அமைப்பதற்கு பூமி பூஜை விழா இன்று காலையில் நடைபெற்றது.
    • புதிய தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் பொன்னக்குப்பம் ஊராட்சியில் இருந்து சி. என். பாளையம் செல்லும் சாலையை முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 59.08 லட்சம்மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்ப தற்கும், துத்திப்பட்டு கிரா மத்தில் இருந்து இருளர் காலனி மயான பாதை செல்லும் சாலையை ரூ 46 லட்சம்மதிப்பீட்டில் தார்சாலையாகஅமைப்பதற்கும்,துத்திப்பட்டு முதல் கிருஷ்ணா புரம் வரை செல்லும் சாலையை ரூ 1.18 கோடி மதிப்பீட்டில்புதிய தார்சாலை அமைப்பதற்கு பூமி பூஜை விழா இன்று காலையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய குழுதலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறுபான்மையினர்நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு 2 கோடியே 23 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில்செஞ்சி மத்திய ஒன்றிய செயலாளர் விஜயராகவன், அனந்தபுரம் நகர செயலாளர் சம்பத், பேரூராட்சி மன்ற தலைவர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் அலுமேலுகிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் மங்கை முனுசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாபு சிங்,வனக்குழு தலைவர் நடராஜன்,அவை தலைவர் வாசு, மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பழனி, நிர்வாகிகள் பிரதாப், முத்து, பாண்டியன், சுரேஷ், சரவணன் , அரசு ஒப்பந்த தாரர் சரவணன், செஞ்சி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பழனி உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.

    • செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் முன்னிலை வகித்தார்.
    • சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போட்டு பணியை தொடங்கி வைத்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றி யத்தை சேர்ந்த பள்ளியம் பட்டு- அப்பம்பட்டு சாலை ரூ.32 லட்சத்தில் தார் சாலையாக அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணி வரவேற் றார். நிகழ்ச்சியில் சிறு பான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போட்டு பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை மாவட்ட விவசாய அணி அஞ்சாஞ்சேரி கணேசன் ஒன்றிய குழு துணை தலைவர் ஜெயபாலன் பொதுகுழு உறுப்பினர் மணிவண்ணன் ஒப்பந்ததாரர் கோடீஸ்வரன் ஊராட்சி மன்ற தலைவர் முன்வர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பால கிருஷ்ணன் ஒன்றிய நிர்வாகி கள் வாசு, அய்யா துரை, இக்பால்சையீத் முன்னாள் கவுன்சிலர் தங்க வேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
    • மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்துக்குட்பட்ட வேலன் நகர், தீபா நகர், திருகுமரன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.84.90 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.விழாவில் மாநகராட்சி நான்காவது மண்டல தலைவர் இல. பத்மநாதன் கலந்துகொண்டு புதிய சாலை அமைப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்ரமணியம், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் கவிதா நேதாஜி கண்ணன், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

    • பிச்சம்பாளையம் விரிவு முதல் வீதியில் ரூ.8 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் மறுதார்தளம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
    • பூமிபூஜை விழா 22-வது வார்டு கவுன்சிலர் தலைமையில் நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட சிங்காரவேலன் நகர் பகுதியில் ரூ.28 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பிலும், பிச்சம்பாளையம் விரிவு முதல் வீதியில் ரூ.8 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலும் மறுதார்தளம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

    இதற்கான பூமிபூஜை விழா 22-வது வார்டு கவுன்சிலர் வி.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் 1-வது மண்டல தலைவர் உமாமகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம், 2-வது மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி கமிஷனர் சுப்பிரமணியம், இளநிலை பொறியாளர் கணேஷ், 22-வது வட்ட தி.மு.க. செயலாளர் ராஜ்குமார், தி.மு.க. நிர்வாகிகள் சரவணகுமார், திராவிட பாலு, தங்கராஜ், வேலுச்சாமி, பழனிச்சாமி, வினோத், ராஜேந்திரன், புஷ்பா, ஈஸ்வரி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • திருப்பூா் மாவட்ட நிா்வாகம் 2021 அக்டோபா் மாதம் இப்பணிக்கான ஆணை வழங்கி நிதி ஒதுக்கீடும் செய்தது.
    • சாலைப் பகுதியை அகலப்படுத்தி தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

    அவினாசி :

    அவிநாசி அருகே உமையஞ்செட்டிபாளையம் பகுதியில் தாா் சாலை அமைக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.இது குறித்து அக்கட்சியினா் அவிநாசி ஒன்றிய அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட மங்கலம் சாலை பிரிவு உமையஞ்செட்டிபாளையம் எல்லை வரை உள்ள சாலையை புதுப்பிக்க வேண்டும் என தொடா்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து திருப்பூா் மாவட்ட நிா்வாகம் 2021 அக்டோபா் மாதம் இப்பணிக்கான ஆணை வழங்கி நிதி ஒதுக்கீடும் செய்தது.

    ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் பணி நடைபெறாமல் காலம் தாழ்த்தி வருகின்றனா். ஆகவே, உடனடியாக சாலைப் பணிகளை தொடங்க வேண்டும். மேலும் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகி உள்ள பாலத்தின் வலதுபுற சாலைப் பகுதியை அகலப்படுத்தி தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.மனுவை பெற்றுக் கொண்ட ஒன்றிய நிா்வாகத்தினா் 10 நாள்களில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா். ஒரு வார காலத்துக்குள் பணிகள் தொடராவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தெரிவித்தனா். இதில் கட்சி நிா்வாகிகள் ஈஸ்வரமூா்த்தி, ராஜன், வெங்கடாசலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்

    • ரூ.57½ லட்சம் மதிப்பில் தார் தளம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
    • தென்றல் நகர் முதல் அபிராமி கார்டன் வரை தார் தளம் அமைக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 47-வது வார்டு தென்றல் நகர் முதல் அபிராமி கார்டன் வரை மெயின் ரோட்டில் ரூ.57½ லட்சம் மதிப்பில் தார் தளம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. பூமி பூஜையில் திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், தி.மு.க. தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், ஜெயசுதா பூபதி, உதவி ஆணையாளர் வாசுகுமார், வட்ட செயலாளர்கள் வெங்கட்ராஜா, பத்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • 11 பணிகள் 34.99கி.மீ., நீளத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • 6 பணிகள் ரூ.15.87 கோடி மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் வேலப்பநாயக்கன் வலசு ஊராட்சியில் நபார்டு மற்றும் கிராம சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.1.62 கோடி மதிப்பீட்டில் தார்சாலை தரம் உயர்த்துதல் பணியி னை செய்தித்துறை அமை ச்சர் மு.பெ.சாமிநாதன் கலெக்டர் வினீத் தலைமை யில் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை இதர மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்துதல் திட்டத்தின் கீழ் தற்போது 11 பணிகள் 34.99கி.மீ., நீளத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் 6 பணிகள் ரூ.15.87 கோடி மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்ப ட்டுள்ளது.வெள்ளகோவில் ஊராட்சிஒன்றியம் வேலப்பநாயக்கன் வலசு ஊராட்சி,இலுப்பை கிணற்றில் நபார்டு மற்றும் சாலை மேம்பாட்டுத்தி ட்டத்தின் கீழ் ரூ.1.62கோடி மதிப்பீட்டில் என்.ஜி.எம்., சாலை முதல் இலு ப்பைகிணறுவரை தார்சாலைதரம் உயர்த்துதல் பணி தொடங்கி வைக்கப்ப ட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி துரைசாமி, திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் ராசி கே.ஆர்.முத்துகுமார், ஒன்றிய செயலாளர் மோளகவுண்டன்வலசு கே.சந்திரசேகரன், நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • கடந்த 2 வாரத்துக்கு முன்பு தார்சாலை போடப்பட்டது.
    • பல இடங்களில் தார் போடப்பட்ட ஜல்லிகள் பெயர்ந்து சாலை வீணாகி ஜல்லி சாலையாகிவருகிறது.

    கடலூர்:

    பண்ருட்டி வி.கே.டி.தேசிய நெடுஞ்சாலையில் பண்ருட்டி அடுத்த சித்திரைசாவடி முதல் பனிக்கன்குப்பம் அரசு பொறியியல் கல்லுாரி வரையில் பைபாஸ் பகுதியில் வராததால்அப்பகுதிக்கு தனியாக தேசிய நெடுஞ்சாலை நகாய் பிரிவின் சார்பில் தனியாக ஒப்பந்த பணி கோரப்பட்டு பணிகள் துவங்கியது. இப்பகுதியில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு தார்சாலை போடப்பட்டது. இந்த தார்சாலைகள் தரமில்லாமலும், ஒரே நீள,அகலத்தில் போட ப்படவில்லை. மாறாக பள்ளமும், மேடுமாகவும், பழைய தார்சாலை அளவில் பாதியளவே பல இடங்களில் தார் சாலைபோடப்பட்டுள்ளன.

    அரைகுறையாக போடப்பட்ட தார்சாலையும் தரமற்ற முறையில் உள்ளது. இதனால் பல இடங்களில் தார் போடப்பட்ட ஜல்லிகள் பெயர்ந்து சாலை வீணாகி ஜல்லி சாலையாகிவருகிறது. தரமற்ற சாலைகள் போட்ட தேசிய நெடு ஞ்சாலை அதிகாரிகளை கண்டித்து அரசியல் கட்சி யினர், வியாபாரிகள் போரா ட்டம் நடத்திட தயாராகி வருகின்றனர். இதனால் தரமற்ற சாலையை சீரமைத்து, சீராக சாலை அமைத்திட மாவட்ட நிர்வாகம், நகாய் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ×