என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the kerala story"

    • சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’.
    • இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

    வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்கள் மலையாள திரையுலகில் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் 'சார்லி சாப்ளின் -2' படத்தில் நடித்த நடிகை அடா சர்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


    தி கேரளா ஸ்டோரி

    இப்படத்தின் டீசர் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த டீசரில் பர்தா அணிந்து தோன்றும் அடா சர்மா தான் மதமாற்றம் செய்யப்பட்டு தீவிரவாதியாக மாற்றப்பட்டதாக பொய்யான தகவல்களை உண்மைப் போல் முன்வைத்துள்ளதாகவும் கேரளாவை தவறாக சித்தரிப்பதாக தெரிவித்து இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தணிக்கை குழுவில் புகார் செய்யப்பட்டது.

    மேலும், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இப்படத்தின் மீதான முதற்கட்ட விசாரணையில் ஒரு பிரிவினரின் மத உணர்வை புண்படுத்துவது மற்றும் கலவரத்திற்கு அழைப்பு விடுப்பது போன்ற மையக்கருத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கேரளா டி.ஜி.பி. அனில்காந்த் திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனருக்கு வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். 

    • டிரெய்லரில் நாம் பார்த்தது அனைத்துமே போலி கதையம்சமாகும்.
    • இது சங்க்பரிவார்களின் பொய்களை பரப்பும் தொழிற்சாலையின் தயாரிப்பாகும்.

    திருவனந்தபுரம் :

    கேரளாவில் 'தி கேரள ஸ்டோரி' என்ற திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தி கேரள ஸ்டோரி படத்தின் டிரெய்லர் என்பது மதசார்பின்மையை அடிப்படையாக கொண்ட கேரளாவை மத பயங்கரவாதத்தின் மையமாக நிலை நிறுத்தி கொள்ளும் வகையில் சங்க்பரிவார் பிரசாரமாக உள்ளது. போலியான கதைகள், திரைப்படங்கள் மூலம் பிரிவினைவாத அரசியலை அவர்கள் பரப்ப முயற்சிக்கிறார்கள். எந்தவித உண்மையும், ஆதாரமும் இன்றி இதுபோன்ற கட்டுக்கதைகளை பரப்புகிறார்கள். படத்தின் டிரெய்லரில் நாம் பார்த்தது அனைத்துமே போலி கதையம்சமாகும். இது சங்க்பரிவார்களின் பொய்களை பரப்பும் தொழிற்சாலையின் தயாரிப்பாகும்.

    கேரளாவில் தேர்தல் அரசியலில் ஆதாயம் அடைய சங்க்பரிவார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். உலகத்தின் முன், இது போன்ற பிரசார படங்களும், அதில் சித்தரிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட மதத்தினரை அந்நியப்படுத்துவதும், கேரளாவில் அரசியல் ஆதாயம் தேடும் சங்க்பரிவார் முயற்சிகளின் பின்னணியாக உள்ளது. விஷ விதைகளை விதைத்து மாநிலத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு கேரள மாநிலத்தில் ஏற்கனவே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
    • கேரள மாநிலத்தில் ‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    கேரள பெண்களை மையமாக வைத்து 'தி கேரளா ஸ்டோரி' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் நாளை மறுநாள் 5-ந்தேதி வெளியாகிறது.

    இந்த படத்தில் கேரளாவை சேர்ந்த பெண்கள் மதம் மாறி பயங்கரவாத அமைப்புகளில் சேருவது போன்று காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    நர்சாக இருக்கும் கேரள இந்து பெண் முஸ்லிம் மதத்துக்கு மாறி பின்னர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேருவது போன்றும், பின்னர் ஆப்கானிஸ்தான் சிறையில் அடைக்கப்படுவது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதையடுத்து 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு கேரள மாநிலத்தில் ஏற்கனவே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அம்மாநில முதல்வரான பினராயி விஜயன் இந்த படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தின் மாண்பை குலைக்கும் வகையில் திரைப்படம் எடுக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறி இருக்கிறார். இதனால் கேரள மாநிலத்தில் 'தி கேரள ஸ்டோரி' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் இந்த படத்தை திரையிட்டால் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மாநில உளவுதுறையினர் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி இருக்கிறார்கள்.

    'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டால் தியேட்டர்கள் முன்பு முஸ்லிம் அமைப்பினர் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளது. எனவே தமிழ்நாட்டில் அந்த படத்தை திரையிடாமல் இருந்தால் நல்லது. இந்த படத்துக்கு எதிராக முஸ்லிம் அமைப்பினர் மனுவும் அளித்து உள்ளனர். இதனையும் கருத்தில் கொள்ளவேண்டும். எனவே வருகிற 5-ந்தேதி படம் வெளியாகிறதா என்பது பற்றி திரைத்துறையினரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கலாம். அதே நேரத்தில் மற்ற மொழிகளில் படம் வெளியாவதை பார்த்து எந்த மாதிரி சூழல் நிலவுகிறது என்பதையும் பார்த்து பின்னர் முடிவு எடுக்கலாம்.

    இவ்வாறு உளவு பிரிவு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த அறிக்கை தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .

    இதற்கிடையே 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட யாரும் இதுவரை முன்வரவில்லை என்கிற தகவலும் வெளியாகி உள்ளது. இதனால் படத்தை தயாரிப்பாளரே வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றியும் தமிழக அரசு ஆலோசித்து முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    இந்த படத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் வாழக்கூடிய சிறுபான்மை முஸ்லிம் சமூகம் ஒரு மிகப்பெரிய வாழ்வியல் நெருக்கடியை சந்தித்து வரும் சூழலில், காஷ்மீர் ஃபைல்ஸ், புர்கா, கேரளா ஸ்டோரி என தொடர்ந்து முஸ்லிம் சமூகம் தொடர்பான திரைப்படங்கள் பொய்யையும், அவதூறையும் கலந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

    முஸ்லிம்களின் கலாச்சாரம், பண்பாடுகள் குறித்த தவறான பார்வையை வேண்டுமென்றே வெளியிடுவது, பொது சமூகத்திடம் அச்சத்தை விதைப்பது போன்றவை இதுபோன்ற திரைப்படங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதுபோன்ற திரைப்படங்கள் சங்பரிவார்கள் முன்னெடுக்கும் வெறுப்பு பிரச்சாரத்துக்கு வலுசேர்க்கவே திட்டமிட்டு தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டு வருகின்றன. இதன்மூலம் சமூகங்களுக்கிடையே வன்மத்தை, மத மோதலை உருவாக்கவும், அமைதியை சீர்குலைக்கவும் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

    சிறுபான்மை முஸ்லிம் சமூகம் சந்திக்கும் பல்வேறு நெருக்கடிகள் ஏராளமாக உள்ளபோதும், அதுபற்றி பேசாமல் அவதூறை பரப்பி, அமைதியை சீர்குலைக்கும் இதுபோன்ற பொய்யான, அரசியல் நோக்கம் கொண்ட பரப்புரை படங்கள் தடை செய்யப்பட வேண்டும். தமிழகத்தில் இந்த திரைப்படங்களுக்கு அரசு தடை விதிக்க வேண்டும். தமிழக அரசு இதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை விதிக்க கோரி எதிர்ப்புகள் கிளம்பியிருந்தது.
    • இப்படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    கேரள பெண்களை மையமாக வைத்து 'தி கேரளா ஸ்டோரி' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் நாளை மறுநாள் 5-ந்தேதி வெளியாகிறது. இந்த படத்தில் கேரளாவை சேர்ந்த பெண்கள் மதம் மாறி பயங்கரவாத அமைப்புகளில் சேருவது போன்று காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


    தி கேரளா ஸ்டோரி

    தி கேரளா ஸ்டோரி

    நர்சாக இருக்கும் கேரள இந்து பெண் முஸ்லிம் மதத்துக்கு மாறி பின்னர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேருவது போன்றும், பின்னர் ஆப்கானிஸ்தான் சிறையில் அடைக்கப்படுவது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு கேரள மாநிலத்தில் ஏற்கனவே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.


    தி கேரளா ஸ்டோரிக்கு கிளம்பிய எதிர்ப்பு

    தி கேரளா ஸ்டோரிக்கு கிளம்பிய எதிர்ப்பு

    அம்மாநில முதல்வரான பினராயி விஜயன் இந்த படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தின் மாண்பை குலைக்கும் வகையில் திரைப்படம் எடுக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறி இருக்கிறார். இதனால் கேரள மாநிலத்தில் 'தி கேரள ஸ்டோரி' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


    தி கேரளா ஸ்டோரி

    தி கேரளா ஸ்டோரி

    இந்நிலையில் தி கேரளா ஸ்டோரி படத்தை வெளியிட தடை விதிக்கக் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. ஆனால் இந்த மனுக்களை விசாரிக்க உச்சநீதின்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் கேரள உயர்நீதிமன்றத்தை அணுகும்படி மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

    • படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் தமிழக உளவு பிரிவு போலீசார் அரசுக்கு அறிக்கை ஒன்றை தயாரித்து அளித்துள்ளனர்.
    • முஸ்லிம் அமைப்பினரும் இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னை:

    கேரள பெண்களை மையமாக வைத்து 'தி கேரளா ஸ்டோரி' என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தமிழ், மலையாளம் உள்பட 5 மொழிகளில் நாளை வெளியாகிரது. இந்த படத்துக்கு கேரள மாநிலத்தில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கேரள இந்து பெண்கள் முஸ்லிமாக மதம் மாறி ஐ.எஸ். அமைப்பில் சேருவது போன்று படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் மற்றும் வசனங்களுக்கும் எதிர்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

    இந்த படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் தமிழக உளவு பிரிவு போலீசார் அரசுக்கு அறிக்கை ஒன்றை தயாரித்து அளித்துள்ளனர். அதில் தமிழக தியேட்டர்களில் தி கேரளா ஸ்டோரி படம் திரையிடப்பட்டால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முஸ்லிம் அமைப்பினரும் இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் தி கேரளா ஸ்டோரி படத்தை வெளியிட்டால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி விரிவாக ஆய்வு செய்ய கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இந்த படத்தை யாரும் வாங்கி வெளியிட முன்வரவில்லை. இதையடுத்து அந்த படத்தின் தயாரிப்பாளரே படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார். அப்படி அவர் படத்தை வெளியிட்டால் பிரச்சினை ஏற்படுமா என்பதை ஆய்வு செய்து அதற்கேற்ப செயலாற்ற வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் நாளை தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாக உள்ள தியேட்டர்கள் பற்றிய விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    • இந்த திரைப்படம் இன்று வெளியாகிறது.
    • இந்த படத்தை பார்க்க வருவோர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

    சென்னை :

    இந்தி இயக்குனர் சுதீப்டோ சென் இயக்கத்தில் இன்று வெளியாகும் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் முன்னோட்ட 'டீசர்' சமீபத்தில் வெளியானது. இதில் கேரளாவை சேர்ந்த பெண்கள் பயங்கரவாத அமைப்பில் சேர்வது போன்று காட்சிகள் இடம் பெற்றிருந்தால் இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அம்மாநிலத்தில் வலுத்தது.

    தமிழ்நாட்டிலும் இந்த திரைப்படம் வெளியானால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று தமிழக அரசை மாநில உளவுத்துறை அறிவுறுத்தியது. இதையடுத்து இந்த படத்துக்கு தடைகேட்டு சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நேற்று தள்ளுபடி ஆனது. இதற்கிடையே இந்த திரைப்படம் இன்று வெளியாகிறது.

    இந்த படம் வெளியாகும் தியேட்டர்களின் முன்பு போராட்டங்கள் நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. எனவே தமிழ்நாட்டில் இந்த திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், கமிஷனர்களை டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    * இந்த திரைப்படம் வெளியாகும் அனைத்து தியேட்டர்களிலும் போதியளவில் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.

    * இந்த படத்தை பார்க்க வருவோர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

    * பதற்றமான பகுதிகளில் போலீசார் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    * இந்த படத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வன்முறை ஏற்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * இந்த படத்துக்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ போஸ்டர்கள் ஒட்டப்பட்டால் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்

    * சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பரவுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • எஸ்.டி.பி.ஐ. கட்சி படத்தை தமிழகத்தில் வெளியிடக்கூடாது என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தது.
    • மத வெறியை தூண்டும் வகையில் கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து இருக்கிறது.

    சென்னை:

    கேரள மாநில பெண்களை மையமாக வைத்து தி கேரளா ஸ்டோரி திரைப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த இந்து பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மாறி பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்று கதை களம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதற்கு கேரள மாநிலத்தில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் படத்தை திட்டமிட்டபடி திரையிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது. இதற்கு தமிழகத்திலும் எதிர்ப்பு ஏற்பட்டது. எஸ்.டி.பி.ஐ. கட்சி படத்தை தமிழகத்தில் வெளியிடக்கூடாது என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தது.

    இந்த படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து திட்டமிட்டபடி இன்று தி கேரளா ஸ்டோரி படம் வெளியானது. சென்னையில் 13 தியேட்டர்களில் இந்த படம் இன்று திரை யிடப்பட்டது. சென்னை அண்ணாநகர் வி.ஆர். மால், ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ, விருகம்பாக்கம் ஐநாக்ஸ், வேளச்சேரி பி.வி.ஆர். உள்ளிட்ட அனைத்து தியேட்டர்களிலும் தி கேரளா ஸ்டோரி படம் வெளியாகி இருக்கிறது. இந்த படம் இந்தி மொழியில் மட்டுமே வெளியாகி உள்ளது. தமிழில் வெளியாகவில்லை.

    தமிழகத்தில் சேலம் , கோவை, வேலூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலும் தாம்பரத்திலும் படம் வெளியாகி இருக்கிறது.

    கோவையில் 3 தியேட்டர்களிலும், சேலத்தில் ஒரு தியேட்டரிலும் வேலூரில் 2 தியேட்டர்களிலும் தாம்பரத்தில் ஒரு தியேட்டரிலும் படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது.

    இதையடுத்து தி கேரளா ஸ்டோரி படம் வெளியாகி இருக்கும் தியேட்டர்கள் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் இன்று போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 4 இடங்களில் இந்த போராட்டம் நடை பெறுகிறது. அண்ணாநகர் வி.ஆர். மால், எக்ஸ்பிரஸ் அவென்யூ அமைந்துள்ள ராயப்பேட்டை மணிக்கூண்டு , விருகம்பாக்கம் ஐநாக்ஸ், வேளச்சேரி பி.வி.ஆர். சினிமா ஆகிய சந்திப்புகளில் இன்று மாலையில் முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.

    இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் ஏ.கே.கரீம் கூறும்போது, மத வெறியை தூண்டும் வகையில் கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து இருக்கிறது. இது திரைப்படங்களுக்கும் பொருந்தும். எனவே வரும் காலங்களில் இது போன்ற படங்களுக்கு மத்திய தணிக்கை வாரியம் அனுமதி அளிக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

    சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் படம் வெளியாகி இருக்கும் தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தி இருக்கிறார். சென்னையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    • கடும் எதிர்ப்புக்கு இடையே தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கேரள திரையரங்குகளில் இன்று வெளியானது.
    • கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு ஆதரவாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.

    பெங்களூரு:

    இந்திப்பட இயக்குனர் சுதீப்டோ சென், 'தி கேரளா ஸ்டோரி' என்ற பெயரில் திரைப்படம் இயக்கி உள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் கேரளாவில் இருந்து 32 ஆயிரம் இளம்பெண்கள் மாயமாவது போன்றும், அவர்கள் பயங்கரவாத அமைப்பில் சேருவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றன. இது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்தப் படத்தை தடைசெய்ய வேண்டும் என கேரள அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும், இந்தப் படம் கடும் எதிர்ப்புக்கு இடையே கேரள திரையரங்குகளில் இன்று வெளியானது.

    சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கோவையிலும் இன்று வெளியிடப்பட்டது.

    இந்நிலையில், கர்நாடக தேர்தல் பிரசாரத்தின் போது தி கேரள ஸ்டோரி படத்திற்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

    இதுதொடர்பாக பல்லாரியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், தீவிரவாதம் எப்படி ஊடுருவி இருக்கிறது என்பதை தி கேரளா ஸ்டோரி படம் காட்டுகிறது. இந்தப் படத்தை தான் தடைசெய்ய காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. இந்தப் படத்தை தடைசெய்ய முயற்சிப்பதன் மூலம் பயங்கரவாதத்தைப் பாதுகாக்கும் சக்திகளுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கிறது.

    தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பயங்கரவாதிகளின் முகத்திரையைக் கிழிக்கும் வகையில் அமைந்துள்ளது. பயங்கரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்துக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து தீவிரவாத போக்குடன் நிற்கிறது. வாக்கு வங்கிக்காக பயங்கரவாதத்தை காங்கிரஸ் கட்சி பாதுகாத்துள்ளது என தெரிவித்தார்.

    • ஒவ்வொரு காலகட்டத்திலும் தேர்தல் வரும்போது காஷ்மீர் பைல்ஸ் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய படங்கள் வந்தன.
    • கர்நாடக தேர்தலின் போது ‘தி கேரளா ஸ்டோரி’ படம் வெளிப்படுத்தி இருக்கிறது.

    சென்னை:

    கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்ட படம் 'தி கேரளா ஸ்டோரி.'

    இந்த படம் சென்னை உள்பட தமிழகத்தில் முக்கிய நகரங்களில் நேற்று வெளியானது. இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்க தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. இருப்பினும் நேற்று தென்மாநில எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 4 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதையடுத்து 342 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

    இந்த நிலையில் 2-வது நாளான இன்று இந்த படத்தை தடை செய்ய கோரியும், படத்தில் முஸ்லிம்கள் தவறாக சித்தரிக்கப்படுவதாக வரும் காட்சிகளை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அமைந்தகரையில் உள்ள ஸ்கைவாக் தியேட்டர் முன்பு போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தார்கள். இதையடுத்து தியேட்டரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    போராட்டம் நடத்துவதற்காக அண்ணா வளைவு முன்பு சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் திரண்டனர்.

    ஒருங்கிணைப்பாளர் கதிர் ராஜேந்திரன், தமிழர் நல பேரவை தலைவர் களஞ்சியம், மருது மக்கள் இயக்க தலைவர் முத்துப்பாண்டி, தலைமை நிலையச் செய்தி தொடர்பாளர் பாக்கிய ராசன், தலைமை நிலையச் செயலாளர் ஹர்திப் குமார், வக்கீல் பாசறை செயலாளர் சங்கர், மண்டல செயலாளர் கோபு, இளைஞர் பாசறை செயலாளர் இடும்பவனம் கார்த்தி, மாவட்ட செயலாளர்கள் அய்யனார், சோழன் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திரைப்படத்தை தடை செய்ய கோரி கோஷங்களை எழுப்பினார்கள்.

    பின்னர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று தான் நாம் எல்லோரும் நம்பிக் கொண்டு இருக்கிறோம். தற்போது மதமே ஆட்சி செய்யும் போக்கை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.

    இந்தியாவில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த 9 ஆண்டுகளில் கொடும் போக்கு நிலவுகிறது. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான கட்டமைப்பை உருவாக்கி வருகிறது.

    ஒவ்வொரு காலகட்டத்திலும் தேர்தல் வரும்போது காஷ்மீர் பைல்ஸ் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய படங்கள் வந்தன. கர்நாடக தேர்தலின் போது 'தி கேரளா ஸ்டோரி' படம் வெளிப்படுத்தி இருக்கிறது. பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பேசும்போது தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை கேட்பவர்கள் நாட்டில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்கள் ஆவார்கள் என்று பேசுகிறார். இது போன்ற கொடுமை எங்காவது உண்டா?

    2024 பாராளுமன்ற தேர்தலுக்கும் ஒரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. 8 ஆயிரம் இந்துக் கோவிலை இடித்தவர், 27 தேவாலயங்களை இடித்தவர், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்களை கொன்றவர், 2 ஆயிரம் பிராமணர்களை கொன்றவர் 'திப்பு' என்று ஒரு படம் தயாரிக்கப்பட்டு முன்னோட்டம் வந்துள்ளது. அந்த படம் பாராளுமன்ற தேர்தலையொட்டி வெளிவரும். அதற்கும் நாங்கள் போராட்டம் நடத்துவோம்.

    தி கேரளா ஸ்டோரி படம் உங்கள் மகள்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்ற கருத்தை மையப்படுத்துகிறது. நீங்களும் உங்கள் மகள்களை இந்த படத்தை பார்க்கவிடாமல் தடுத்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி கேரளா ஸ்டோரி படம் பயங்கரவாத செயல்களுக்கு இளைஞர்களை மூளைச்சலவை செய்வது பற்றி எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
    • விழிப்புணர்வு படத்துக்கு தடை விதிக்க கோர்ட்டு மறுத்த நிலையில் போராட்டம் நடத்துகிறார்கள்.

    சென்னை:

    தி கேரளா ஸ்டோரி படம் தொடர்பாக இந்து முன்னணி மாநகர தலைவர் இளங்கோவன் டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    இந்த படம் பயங்கரவாத செயல்களுக்கு இளைஞர்களை மூளைச்சலவை செய்வது பற்றி எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இந்த விழிப்புணர்வு படத்துக்கு தடை விதிக்க கோர்ட்டு மறுத்த நிலையில் போராட்டம் நடத்துகிறார்கள். சீமான் தலைமையில் முற்றுகையிட போவதாக கூறி உள்ளார்கள். அவரை கைது செய்ய வேண்டும். திரையிடப்பட்டுள்ள திரையரங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • தமிழகத்தில் 24 தியேட்டர்களில் கேரளா ஸ்டோரி படம் வெளியானது.
    • சென்னை, கோவை, சேலம், வேலூர் உள்ளிட்ட இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

    சென்னை:

    கேரள இந்து பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மாறி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேருவது போன்ற காட்சி அமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ள தி கேரளா ஸ்டோரி படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையிலும் திட்டமிட்டபடி படம் நேற்று வெளியானது.

    இதையடுத்து படத்தை தடைசெய்யக்கோரி முஸ்லிம் அமைப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் தமிழகத்தில் 24 தியேட்டர்களில் கேரளா ஸ்டோரி படம் வெளியானது. சென்னையில் 13 தியேட்டர்களில் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது.

    இந்த நிலையில் கேரள ஸ்டோரி படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் தமிழகத்தில் படம் வெளியான நகரங்களில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் 4 இடங்களில் போராட்டம் நடந்தது. அண்ணாநகர் வி.ஆர்.மால், விருகம்பாக்கம் ஐநாக்ஸ் தியேட்டர், ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ, வேளச்சேரி பி.வி.ஆர். தியேட்டர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. தியேட்டர்கள் முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இருப்பினும் தடையை மீறி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    4 இடங்களிலும் 342 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது அனுமதியின்றி கூடியதாக 151 சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அனைவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் கைதான அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    நேற்றைய போராட்டம் முறைப்படி அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது. அதே நேரத்தில் எதிர்ப்பாளர்கள் யாரும் திடீரென தியேட்டர்கள் முன்பு கூடிவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு படம் வெளியாகியுள்ள தியேட்டர்களில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சென்னை, கோவை, சேலம், வேலூர் உள்ளிட்ட இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

    • ஒவ்வொரு காலகட்டத்திலும் தேர்தல் வரும்போது காஷ்மீர் பைல்ஸ் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய படங்கள் வந்தன.
    • தற்போது கர்நாடக தேர்தலின் போது ‘தி கேரளா ஸ்டோரி’ படம் வெளிப்படுத்தி இருக்கிறது என்று சீமான் தெரிவித்துள்ளார்.

    கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்ட படம் 'தி கேரளா ஸ்டோரி'. இந்த படம் சென்னை உள்பட தமிழகத்தில் முக்கிய நகரங்களில் நேற்று வெளியானது. இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்க தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.


    தி கேரளா ஸ்டோரி

    தி கேரளா ஸ்டோரி

    இருப்பினும் நேற்று தென்மாநில எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 4 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 342 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் 2-வது நாளான இன்று 'தி கேரளா ஸ்டோரி' படத்தை தடை செய்ய கோரியும், படத்தில் முஸ்லிம்கள் தவறாக சித்தரிக்கப்படுவதாக வரும் காட்சிகளை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.


    சீமான்

    சீமான்

    அதன்பின்னர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது, இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று தான் நாம் எல்லோரும் நம்பிக் கொண்டு இருக்கிறோம். தற்போது மதமே ஆட்சி செய்யும் போக்கை நாம் கண்கூடாக பார்க்கிறோம். இந்தியாவில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த 9 ஆண்டுகளில் கொடும் போக்கு நிலவுகிறது. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் தேர்தல் வரும்போது காஷ்மீர் பைல்ஸ் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய படங்கள் வந்தன.


    தி கேரளா ஸ்டோரி

    தி கேரளா ஸ்டோரி

    கர்நாடக தேர்தலின் போது 'தி கேரளா ஸ்டோரி' படம் வெளிப்படுத்தி இருக்கிறது. பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பேசும்போது தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை கேட்பவர்கள் நாட்டில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்கள் ஆவார்கள் என்று பேசுகிறார். இது போன்ற கொடுமை எங்காவது உண்டா? 2024 பாராளுமன்ற தேர்தலுக்கும் ஒரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. 8 ஆயிரம் இந்துக் கோயிலை இடித்தவர், 27 தேவாலயங்களை இடித்தவர், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்களை கொன்றவர், 2 ஆயிரம் பிராமணர்களை கொன்றவர் 'திப்பு' என்று ஒரு படம் தயாரிக்கப்பட்டு முன்னோட்டம் வந்துள்ளது.


    சீமான்

    சீமான்

    அந்த படம் பாராளுமன்ற தேர்தலையொட்டி வெளிவரும். அதற்கும் நாங்கள் போராட்டம் நடத்துவோம். தி கேரளா ஸ்டோரி படம் உங்கள் மகள்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்ற கருத்தை மையப்படுத்துகிறது. நீங்களும் உங்கள் மகள்களை இந்த படத்தை பார்க்கவிடாமல் தடுத்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    ×