search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theppakulam"

    • பாகம்பிரியாள் அம்மன் கோவில் தெப்பக்குளம் தூர்வாரப்படுகிறது.
    • தூர்வாரப்படுவதால் இப்ப குதி மக்கள் மகிழ்ச்சியடைந் துள்ளனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே திருவெற் றியூரில் மிகவும் பிரசித்தி பெற்றதும், பழமையானது மான சிவகங்கை சமஸ்தா னம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ வல்மீக நாதர் சமேத ஸ்ரீ பாகம்பி ரியாள் அம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலுக்கு தமிழகத் தின் பல்வேறு பகுதிகளிலி ருந்து பக்தர்கள் தினமும் சாமி கும்பிட வருகின்றனர். அதிலும் முன்தினம் கோவி லில் தங்கி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இங்குள்ள வாசுகி தீர்த்தக்கு ளத்தில் நீராடிச் சென்றால் தீராத வியாதிகள் தீரும் என்ற நம்பிக்கை உள்ளதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருகி றார்கள்.

    இந்நிலையில் இங்கு உள்ள தீர்த்தக்குளமான வாசுகி தீர்த்த தெப்பக் குளத்தில் தண்ணீர் அசுத்த மாகி அதிலிருந்த மீன்கள் இறந்து தெப்பக்கு ளம் மாசு ஏற்பட்டது. அதனைத்தொ டர்ந்து தேவஸ்தானம் நிர்வாகத்தின் மூலம் கெட் டுப்போன தண்ணீரை முழு மையாக வெளியேற்றி பொக்லைன் எந்திரங்கள் மூலம் தூர்வாரப்பட்டு வரு கிறது.

    இப்பகுதியைச் சேர்ந்த குட்லக் ராஜேந்திரன் யூனி யன் சேர்மனாக இருந்த போது சுமார் 20 ஆண்டுக ளுக்கு முன் தூர்வாரப்பட் டது. அதன்பிறகு தற்போது தூர்வாரப்படுவதால் இப்ப குதி மக்கள் மகிழ்ச்சியடைந் துள்ளனர்.

    • தூத்துக்குடி மாநகரில் உள்ள தெப்பக்குளத்தை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.
    • இந்த குளத்தின் கரையை சுற்றிலும் பேவர் பிளாக்கற்களும், வண்ண விளக்குகளும், இருக்கைகளும் அமைக்கப்படும் என்று மேயர் கூறினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகரில் உள்ள தெப்பக்குளத்தை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார். இந்த கோடையிலும் நீர் நிறைந்து காணப்பட்டாலும், சுகாதாரமாக இல்லாமல் இருப்பதாகவும் மீன்கள் அடிக்கடி இறந்து மிதப்பதாகவும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கூறினர்.

    அப்பொழுது அவர்க ளிடம் இந்த குளத்தின் கரையை சுற்றிலும் பேவர் பிளாக் கற்களும், வண்ண விளக்கு களும், இருக்கை களும் அமைக்கப்படும். குளத்தின் நீரை சுத்தப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை மீன்வளக் கல்லூரியின் மூலம் என்ன செய்யலாம் என்று கேட்டு குளத்தின் நடுவிலோ அல்லது ஓரத்திலோ செயற்கை நீருற்று மற்றும் மினி ஹைமாஸ் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.

    அப்போது தி.மு.க. பகுதி செயலாளரும், மாநகர கவுன்சிலருமான சுரேஷ்குமார், மாநகர துணை செயலாளர் கவுன்சி லர் கீதா முருகேசன், கவுன்சி லர் முத்துவேல், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், பகுதி செயலாளர் ரவீந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • கோவிலுக்கு வரும் பக்தா்கள் மீன்களுக்கு பொரி உள்ளிட்ட உணவு பொருள்களை அளிப்பது வழக்கம்.
    • கோவில் நிா்வாகத்தின் அலட்சியத்தாலே மீன்கள் உயிரிழந்து மிதந்தாக பக்தா்கள் தெரிவித்தனா்.

    அவினாசி :

    அவிநாசியில் கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் உள்ளது. இக்கோவிலில் பழமையான தெப்பக்குளம் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தா்கள், தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்கு பொரி உள்ளிட்ட உணவுப்பொருள்களை அளிப்பது வழக்கம்.

    இந்தநிலையில், புதன்கிழமை காலை, கோவில் தெப்பக்குளத்தில் மீன்கள் உயிரிழந்து மிதந்தன. இதையடுத்து, கோவில் நிா்வாகத்தினா் உயிரிழந்த மீன்களை அப்புறப்படுத்தினா். கோவில் நிா்வாகத்தின் அலட்சியத்தாலே தெப்பக்குளத்தில் இருந்த மீன்கள் உயிரிழந்து மிதந்தாக பக்தா்கள் தெரிவித்தனா். 

    • தெப்பக்குளம் தூய்மைப்படுத்தப்பட்டது.
    • நாச்சியார், சண்முகராஜா மற்றும் தனி யார் நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை நகரின் மத்தியில் 10 ஏக்கர் பரப்பில் தெப்பக்குளம் உள்ளது. இங்கு பிளாஸ்டிக், குப்பை கள் கொட்டப்பட்டு தண்ணீர் அசுத்தமானது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவியது.

    இந்த நிலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தெப்பக்கு ளத்தை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. இதனை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் பாண்டீ ஸ்வரி தலைமையில் ஏராளமானோர் படகில் சென்று தெப்பக்குளத்தில் கிடந்த கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்தினர்.

    இதில் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் கிருஷ்ணன் தலைமையில் வீரர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    இதில் நகர்மன்ற உறுப்பினர் அயூப்கான், ஜெய காந்தன், காந்தி, ராமதாஸ், வீரகாளை, நாச்சியார், சண்முகராஜா மற்றும் தனி யார் நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.

    • பாளை தெற்கு பஜாரில் உள்ள ராமசாமி கோவில் பிரசித்தி பெற்றது.
    • இந்த கோவிலையொட்டி உள்ள தெப்பக்குளத்தில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் நடைபெறும் தெப்ப உற்சவம் சிறப்பு வாய்ந்தது.

    நெல்லை:

    பாளை தெற்கு பஜாரில் உள்ள ராமசாமி கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலை யொட்டி உள்ள தெப்பக்குளத்தில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் நடைபெறும் தெப்ப உற்சவம் சிறப்பு வாய்ந்தது.

    சிதிலமடைந்த தெப்பக்குளம்

    கடந்த சில ஆண்டுகளாகவே தெப்பக்குளத்தை சுற்றி உள்ள கல் சுவர்கள் உடைந்து விழுந்ததோடு, தெப்பக்குளம் சிதிலம் அடைந்து காணப்படுவதாக பக்தர்கள் புகார் கூறினர்.

    எனவே தெப்பக்குளத்தை சீரமைத்து தெப்ப உற்சவம் நடத்த வேண்டும் என பக்தர்களும், பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை வைத்தனர்.

    சீரமைப்பு பணிகள்

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கோவில் தெப்பகுளத்தில் மீன்கள் செத்து மிதந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து பக்தர்கள் கோவில் செயல் அலுவலர் சுஜாதாவிடம் புகார் கூறினர்.

    இதுபற்றி செயல் அலுவலர் சுஜாதா கூறுகை யில், கோவில் தெப்பகுளம் பல வருடங்களாக சீரமைக் கப்படாமல் உள்ளது. எனவே சிதிலம் அடைந்து காணப்படும் தெப்பக்குக் குளத்தை சீரமைத்து திருப்பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்ற வேண்டியது அவசியமாக உள்ளது.

    எனவே 2 அடிக்கு மட்டும் தண்ணீர் வைத்து விட்டு மீதமுள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் மீன்களுக்காக தெப்பக்குளத்திற்குள் ஒரு கிணறு உள்ளது. அதையும் தாண்டி தற்போது வெயி லின் தாக்கத்தால் மீன்கள் இறந்துள்ளது.

    விரைவில் தெப்பக்குளத்தை முழுமையாக சீரமைத்து திருப்பணிகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • மதுரை வலைவீசி தெப்பக்குளத்தை சுற்றி கட்டிடம் கட்ட அனுமதிக்க கூடாது என கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் மனு அளித்துள்ளனர்.
    • இந்த பகுதியில் நீர்வளம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மகா.சுசீந்திரன் தலைமையில் முத்துகுமார், ராஜ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தின் ஆன்மீக மையமாக கருதப்படும் மதுரை கோவில்கள் அதிகம் உடைய மாநகரமாகும். இங்குள்ள மீனாட்சி அம்மன் கோவில் புராதன பெருமைகள் உடையது. இங்கு நடக்கும் திருவிழாக்கள், திருவிளையாடல் லீலைகள் பிரசித்தி பெற்றது.

    ஆண்டு தோறும் நடக்கும் சித்திரை திருவிழா வரலாற்று சிறப்பு வாய்ந்தது. தெப்பத் திருவிழா, புட்டு திருவிழா, நரியை பரியாக்கிய லீலை, மண்டூக முனிவருக்கு சாப விமோசன லீலை சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக மீனாட்சி அம்மன் கோவிலின் வலைவீசி மீன் பிடி திருவிழாவும் பிரசித்தி பெற்றது.

    இதற்காக மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே தனியார் ஆஸ்பத்திரி எதிரே சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் வலைவீசி தெப்பக்குளம் உள்ளது. இந்து சமய அறநிலைய துறைக்கு பாத்தியப்பட்ட இந்த தெப்பக்குளத்தை சுற்றிலும் அரசியல்வாதிகள் தற்போது காங்கிரீட் கட்டிடம், ெசட் அமைக்கும் பணியை செய்து வருகிறார்கள்.

    இந்த தெப்பக்குளம் அந்த பகுதிக்கு முக்கிய நீர்வள ஆதாரமாக உள்ளது. இங்கு கட்டிடம் கட்டுவதால் மீன் பிடி திருவிழாவை பக்தர்கள் காண முடியாத நிலை ஏற்படும். இந்த பகுதியில் நீர்வளம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதுவும் தவிர தெப்பக்குளத்தை சுற்றி கட்டிடம் கட்டுவது, நீர்வள ஆதார அமைப்பு சட்டத்தை மீறும் செயலாகும்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்த கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பிறகு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தற்போது இந்த வலைவீசி தெப்பக்குளம் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதனை இந்து சமய அறநிலைய துறையும் கண்டு கொள்ளவில்லை.

    ஆறு,ஏரி,குளங்களை ஆக்கிரமிக்கவோ, கட்டிடங்கள் கட்டவோ கூடாது. அப்படி கட்ட அனுமதித்தால், அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பு என்று ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. மதுரை வலைவீசி தெப்பக்குளத்தை சுற்றியுள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றி கட்டிடம் கட்ட நிரந்தர தடை விதிக்க வேண்டும்.

    • தெப்பக்குளத்தில் பிணமாக கிடந்தவர் யார்? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • ஆரஞ்சு கலர் முழுக்கை டி-சர்ட்டும், கருப்பு டவுசரும் அணிந்திருந்தார்.

    மதுரை

    மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் தியாகராஜர் மாடல் பள்ளி எதிரில் நேற்று (11-ந் தேதி) காலையில் 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. வலது முழங்காலின் கீழ் பழைய காயத்தழும்பும், இடது முழுங்காலில் பழைய காயத்தழும்பும் காணப்படுகிறது.

    ஆரஞ்சு கலர் முழுக்கை டி-சர்ட்டும், கருப்பு டவுசரும் அணிந்திருந்தார். இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் ராமநாதன் கொடுத்த புகாரின்பேரில் தெப்பக்குளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தெப்பக்குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் இறந்தான்.
    • மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருமங்கலம்

    திருமங்கலத்தை அடுத்துள்ள அலப்பலச்சேரி கிராமத்தை சேர்ந்த ராஜகோபால்-காளீஸ்வரி தம்பதியினர். இவர்கள் மானாமதுரை அருகில் உள்ள நாராயணதேவன் பட்டியில் குடியிருந்து கட்டிட வேலை செய்து வருகின்றனர்.

    இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அஜய் என்ற காளி (11) அலப்பலச்சேரி கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி நாகையாபுரம் நடுநிலை பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

    அஜய் தனது நண்பர்களுடன் அலப்பலச்சேரி கிராமத்தில் உள்ள வாழவந்தஅம்மன் கோவில் தெப்பக்குளத்தில் குளித்தான்.அவனுக்கு நீச்சல் தெரியாததால் எதிர்பாராத விதமாக தெப்பக்குளத்தில் மூழ்கினான். இதனைக் கண்ட கிராம மக்கள் அஜய்யை மீட்டனர். அவன் தெப்பக்குளத்தில் மூழ்கியதில் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பலியானான்.

    நாகையாபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ×