என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "thief arrested"
- சேலம் நெத்திமேட்டில் தனியார் சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.
- அப்போது அங்கு வந்த ஒருவர் பொருட்களை வாங்காமல் அங்குள்ள பொருட்களை திருடி உள்ளார்.
சேலம் நெத்திமேட்டில் தனியார் சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் ஏராளமான பொதுமக்கள் மளிகை பொருட்கள் வாங்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒருவர் பொருட்களை வாங்காமல் அங்குள்ள பொருட்களை திருடி உள்ளார். இதை ஊழியர்கள் சி.சி.டி.வி கேமிராவில் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரை பிடித்து பொருட்களை பறிமுதல் செய்து செவ்வாய்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கோட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சபியுல்லாகான் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- டீ கடை முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி டீ குடிக்க சென்றனர்
- ஒரு மர்மநபர் திருடிக்கொண்டு தப்பி செல்ல முயன்றார்.
ஈரோடு,
கோபி கோடீஸ்வரா நகரை சேர்ந்தவர் மஞ்சுநாதன்(35). இவர் நேற்று அவரது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் கோபி பஸ் நிலையம் சென்றார்.
அப்போது அங்கு இருந்த டீ கடை முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி டீ குடிக்க சென்றனர்.
மஞ்சுநாதனின் மோட்டார் சைக்கிளை ஒரு மர்மநபர் திருடிக்கொண்டு தப்பி செல்ல முயன்றார். இதைப்பார்த்த மஞ்சுநாதன் கூச்சல்போட அக்கம்பக்கத்தினர் அந்த மர்மநபரை பிடித்து கோபி போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில், அந்த நபர் கோபி நல்லகவுண்டன்பாளையத்தை சேர்ந்த முருகேசன்(40) என்பது தெரியவந்தது.
இதையடுத்து முருகேசனை போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
- பிரபல ஜவுளி கடைகளில் குழந்தைகளிடம் கைவரிசை காட்டிய திருடன் கைது செய்யப்பட்டார்.
- கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை செல்லூர் அகிம்சாபுரம் 5-வது தெருவை சேர்ந்தவர் பெரிய சாமி (வயது60). இவர் ஆழ்வார்புரத்தில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு தனது பேத்தியுடன் சென்றி ருந்தார். அவர் 3-வது தளத்திற்கு சென்று துணி வாங்கிக் கொண்டிருந்த ார். அப்போது அவருடன் சென்ற பேத்தியை காண வில்லை.
தேடி பார்த்தபோது அந்த தளத்தின் படிக்கட்டு பகுதியில் தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது பார்த்தபோது அவர் அணிந்திருந்த ½ பவுன் வளையல் திருடு போயிருந்தது தெரியவந்தது. குழந்தையை நைசாக தூக்கிச் சென்று படிக்கட்டில் வைத்து மர்ம நபர் வளை யலை திருடி சென்றுள்ளார்.
இதுகுறித்து பெரியசாமி மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஜவுளி கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவு களை ஆய்வு செய்தனர். அதில், முதியவர் ஒருவர் குழந்தையை தூக்கிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
அதனடிப்படையில் அந்த முதியவரை போலீசார் தேடி வந்தனர். அவர் மதுரை தாசில்தார் நகர் நேரு தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் (62) என்பது தெரியவந்தது. அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
அதில், அவர் வேறு சில ஜவுளிக்கடைகளிலும் குழந்தைகளை குறிவைத்து நகைகளை திருடியது தெரியவந்தது. அவரிடம் இருந்து 4½ பவுன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் துரைசாமி (63). இவர் தன் பேத்தியுடன் மாட்டுத்தா வணியில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு துணிகள் வாங்க சென்றிருந்தார்.அப்போது அவருடைய பேத்தி அணிந்திருந்த ஒரு பவுன் வளையல் மற்றும் செயின் காணாமல் போனது.
இதுகுறித்து துரைசாமி மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கூட்டத்தில் யாரும் குழந்தையிடம் திருடினார்களா? அல்லது மாயமானதா? என்பது குறித்து சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- அரசுப்பள்ளி அருகே ஆசாமி ஒருவனை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.
- அவன் மின்வாரிய அலுவலகத்தில் இருந்த இரும்பு திருடியது தெரிய வந்தது.
கடலூர்:
பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா உத்தரவு படி, டி.எஸ்.பி. அணி போலீசார் நேற்று இரவு பண்ருட்டி,அண்ணா கிராமம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அண்ணா கிராமம் அரசுப்பள்ளி அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டி ருந்த ஆசாமி ஒரு வனை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். அவன் அந்தப் பகுதியில் இருந்த மின்வாரிய அலுவலகத்தில் இருந்த இரும்பு திருடியது தெரிய வந்தது.
அவனிடம்மேலும் விசாரணை நடத்தியதில் அவன் கீழ்கவரபட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த உத்திர வீரன் (வயது 30) என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவனை கைது செய்து அவனிடமிருந்து 50 கிலோ இரும்பு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து அவனை பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- காருக்கு பெட்ரோல் போட்டுவிட்டு காரை எடுத்து பண்ருட்டி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
- 17 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்தனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே உள்ள கந்தன்பாளையத்தை சேர்ந்த பெருமாள். இவரது மகள் வைஷ்ணவி, மருமகன் மணிவண்ணன், அவரது தம்பி மணிசங்கர் ஆகியோர் பண்ருட்டி சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றனர். அங்கு காருக்கு பெட்ரோல் போட்டுவிட்டு காரை எடுத்து பண்ருட்டி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது 17 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்தனர். காரின் கண்ணாடியை உடைத்துவிட்டு காரில் இருந்த 3 பேரையும் தாக்கினர். மேலும், அவர்களிடமிருந்த பணப்பையை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனர். இதில் காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இது தொடர்பான புகாரின் பேரில் பண்ருட்டி நகர இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் 17 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் தலைமறைவாகியிருந்த கொள்ளையர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.
இந்நிலையில் இன்று காலை போலீசார் பண்ருட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த இளைஞர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் கார் கண்ணாடியை உடைத்து பணத்தை திருடிச் சென்ற கும்பலைச் சேர்ந்த ஒருவர் என்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இவர் பண்ருட்டி பாரதி நகர் ஜெயமூர்த்தி மகன் கவியரசு (38) என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் மீதமுள்ளவர்களை எங்கு ஒளிந்து இருக்கின்றனர் என்பது குறித்து கவியரசுவிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திண்டிவனத்தில் கடைகளில் திருட முயன்ற கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
- பூட்டை உடைத்து திருட முயற்சி செய்ததை ஒப்புக்கொண்டார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நல்லி கொண்டான்நகர் பகுதியை சேர்ந்தவர் ஜான் இவர் திண்டிவனம் காந்தி சிலை அருகே கம்ப்யூட்டர் சர்வீஸ் கடை நடத்தி வருகின்றர் இவரது கடையும்,அதன் அருகே பியூட்டி பார்லர் மற்றும்செல்போன் சர்வீஸ் கீழே உள்ள முடி திருத்தகம் ஆகிய கடைகளில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்து உள்ளனர். இந்த சிசிடிவி காட்சி ஆனது தற்போது வெளியாகி உள்ளது சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். திண்டிவனம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்த ராசன் தலைமையிலான போலீசார் திண்டிவனம் மேம்பாலம்.கீழ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது சந்தேகம் படும்படியான ஒரு நபரை கூப்பிட்டு விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார் இதை எடுத்துஅவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிவகுமார் (வயது 23) என்பதும் அவர் செல்போன் கம்ப்யூட்டர் சர்வீஸ் ஆகிய கடைகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்ததை ஒப்புக் கொண்டார்.மேலும் அவர் கூறுகையில்பாரதியார் தெருவில் உள்ள பர்கர் கடையில் பூட்டை உடைத்து அங்குள்ள பர்கர் மற்றும் தின்பண்டங்களை தின்று அந்த கடையில் இருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் 2000 ரூபாய் பணம் எடுத்ததை ஒப்புக்கொண்டார்.இது எடுத்து போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் பர்கர் கடையில் பூட்டை உடைத்து கடையில் தின்பண்ட ங்களை ஆராய்ந்து தின்று சாவகசமாக திருடிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
- மோட்டார் சைக்கிள் நிறுத்தி விட்டு மருத்துவமனைக்கு சென்றார்.
- ஆட்டை மட்டும் காணவில்லை என கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் .
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் ராஜ்குமார் (வயது 32) இவர் நேற்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு தனது மோட்டார் சைக்கிள் நிறுத்தி விட்டு மருத்துவமனைக்கு சென்று மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதேபோல் கள்ளக்கு றிச்சி அருகே தென்கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த மணி மனைவி சந்திரா (51) இவர் நேற்று தனது வீட்டிற்கு முன்பு 2 ஆடுகளை மேச்சலுக்காக கட்டியி ருந்தார். இதில் ஒரு ஆட்டை மட்டும் காணவில்லை என கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் இந்நிலையில் நேற்று மாலை கள்ளக்குறிச்சி போலீசார் நீலமங்கலம் அருகே வாகனத் தணிக்கை ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் ஆடு எடுத்து வந்த வந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் தியாகதுருகம் அருகே முடியனுர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (30) என்பதும், இவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனை முன்பு இருந்த மோட்டார் சைக்கிள் திருடி கொண்டு, தென்கீரனூரில் ஆட்டையும் திருடி வந்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் ஆடுகளை பறிமுதல் செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.
- விசாரணையில் தாராபுரம் உப்பாறு அணை பகுதியை சேர்ந்த ஆகாஷ்குமார் என்பதும்,மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.
- இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆகாஷ் குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு:
ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரபுராஜா என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவரது சொந்த ஊர் திருப்பத்தூர் ஆகும். இவர் ரூ.1.25 மதிப்பில் புதிய மோட்டார் சைக்கிளை வாங்கி இருந்தார்.
இந்த புதிய மோட்டார் சைக்கிளில் தான் பிரபு ராஜா தினமும் ஆஸ்பத்திரிக்கு வருவார். அங்குள்ள மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு செல்வார்.
இதேபோல் சம்பவத்தன்றும் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பணிக்கு சென்று விட்டார்.
பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டுப் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். யாரோ மர்ம நம்பர் கள்ள சாவி போட்டு மோட்டார்சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசில் பிரபுராஜா புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் டவுன் குற்றப்பிரிவு போலீசார் எல்லைமாரியம்மன் கோவில் பகுதியில் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். அவரை நிறுத்தி போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம், உப்பாறு அணை பகுதியை சேர்ந்த ஆகாஷ்குமார்(23) என்பதும், பிரபு ராஜாவின் மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.
மேலும் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் இவர் மீது திருப்பூரில் மோட்டார் சைக்கிள் திருடியதாக 4 வழக்குகளும், திண்டுக்கல்லில் 3 வழக்குகள் என மொத்தம் 7 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆகாஷ் குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
- கடையில் வேலை பார்த்த கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த திவ்யா என்பவர் கடையில் இருந்து சிறிது சிறிதாக நகை திருடி சென்றதாக கூறப்படுகிறது.
- திவ்யாவிடம் கேட்டபோது அவர் சிறிது சிறிதாக 120 கிராம் தங்கம், 700 கிராம் வெள்ளி பொருட்களை திருடியது தெரிய வந்தது
புதுச்சேரி:
புதுவை லூயி பிரகாசம் வீதியை சேர்ந்தவர் தேவநாதன் (வயது 49) பாரதி வீதியில் நகைக்கடை வைத்துள்ளார், இவரது கடையில் வேலை பார்த்த கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த திவ்யா என்பவர் கடையில் இருந்து சிறிது சிறிதாக நகை திருடி சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திவ்யாவிடம் கேட்டபோது அவர் சிறிது சிறிதாக 120 கிராம் தங்கம், 700 கிராம் வெள்ளி பொருட்களை திருடியது தெரிய வந்தது.
இைதயடுத்து அந்த நகையை திவ்யாவும் , அவரது 2-வது கணவர் அருண்குமாரும் சேர்ந்து 10 நாட்களுக்குள் திருப்பி தந்து விடுவதாக உறுதி அளித்தார், ஆனால் அதற்குள் கணவன்- மனைவி இருவரும் தலைமறைவாகி விட்டனர்.
இதுகுறித்து தேவநாதன் பெரியக்கடை போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து கணவன்- மனைவி இருவரையும் தேடிவந்தனர். இந்த நிலையில், அருண்குமார் இடையன்சாவடியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனே போலீசார் அங்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதனையடுத்து போலீசார் அவரை தேடிக்கொண்டிருந்தபோது கிழக்கு கடற்கரை சாலையில் பஸ்சில் தப்பியோட நின்றிருந்த அருண்குமாரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், முன்னதாக அவர் தனது மனைவி திவ்யாவை பஸ் ஏற்றி தலைமறைவாக்கியது தெரியவந்தது.
இதனிடையே மனைவி திருடிக்கொண்டு வந்து கொடுத்த நகைகளில் சிலவற்றை அருண்குமார் அடமானம் வைத்துள்ளார். சிலவற்றை விற்றுள்ளார்.
இதனையடுத்து போலீசார் 24 கிராம் தங்க நகை மற்றும் 100 கிராம் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர். அருண்குமார் கொடுத்த தகவலின்படி திவ்யாவை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்