என் மலர்
நீங்கள் தேடியது "Thirukalyana festival"
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
- பல்லக்கு செல்லும் பகுதியில் மின் இணைப்பை துண்டிக்கப்பட்டது
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியும், கடந்த 11-ந் தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும், 14-ந் தேதி தேர்த்திருவிழாவும், 15-ந் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும் நடந்தது. இந்த விழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
இவ்விழாவின் தொடர்ச்சியாக பூப்பல்லக்கு பவனி நிகழ்ச்சி நடைபெற்றது நேற்று இரவு குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் அருகே கோபாலபுரம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக சிவலிங்கம் மற்றும் விநாயகர் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கு நகரின் முக்கிய வீதிகள் வழியாக விடிய விடிய உலா வந்தது.
பல்லக்கில் அமைக்கப்பட்டிருந்த விதவிதமான அலங்காரங்களில் அம்மனை வழிபட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, ஊர் நாட்டாமை ஆர்.ஜி.சம்பத், கௌரவ தர்மகர்த்தா கே.பிச்சாண்டி, திருப்பணிக்குழு சேர்ந்த ஆர்.ஜி.எஸ்.கார்த்திகேயன் மற்றும் இளைஞர் அணியினர், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
இதேபோல் குடியாத்தம் தரணம்பேட்டை புஷ்ப வியாபாரிகள் சங்கம் சார்பில் 67-ம் ஆண்டு பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற்றது குடியாத்தம் கண்ணகி தெரு காளியம்மன் கோவில் அருகே அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கு நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது.
இந்தப் பல்லக்கில் சிறப்பம்சமாக முதலில் சிறிய பல்லக்கு செய்யப்பட்ட அதில் 14அடி உயரத்தில் சமயபுரத்து அம்மன் அலங்காரம் செய்யப்பட்டது தொடர்ந்து புற்று அம்மன் அலங்காரத்தில் பூப்பல்லக்கு உலா வந்தது.
இதற்கான ஏற்பாடுகளை குடியாத்தம் புஷ்ப வியாபாரிகள் சங்க தலைவர் ராமலிங்கம், துணைத் தலைவர் நாராயணசாமி பொருளாளர் பாலையா, செயலாளர் சந்திரசேகர், கவுரவ தலைவர் லோகநாதன் உள்பட சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
குடியாத்தம் அகமுடைய முதலியார் சங்கம் சார்பில் காசி விஸ்வநாதர் ஆலயம் அருகே அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் இரண்டு யானைகள் பிளிரும் வகையில் அஷ்டலட்சுமிகள் சுவாமி உருவங்கள் வைக்கப்பட்டிருந்தது நகரின் முக்கிய வீதிகள் வழியாக விடிய விடிய உலா வந்தது.
இதற்கான ஏற்பாடுகளை சங்கத் தலைவர் எம்.ஏ.கே. சீனிவாசன், செயலாளர் ஜி.மணிவண்ணன், சங்க ஆலோசகர் வக்கீல் கே.எம்.பூபதி, பொருளாளர் ஆர்.பி.செந்தில் உள்பட சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்
குடியாத்தம் நகரில் 3 புஷ்ப பல்லக்கில் உலா வந்ததை காண குடியாத்தம் நகர மற்றுமில்லாமல் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிர க்கணக்கான பொது மக்களும், திருவிழாவுக்காக உறவினர் வீடுகளுக்கு வந்தவர்களும் தரிசனம் செய்தனர். மின் பணியாளர்கள் பூ பல்லக்கு செல்லும் பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். பூப்பல்லக்கு சென்றபின் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை உடனடியாக இணைத்தனர்.
- விழாவையொட்டி தினமும் கோவிலில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.
- திருகல்யாண நிகழ்வில் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், ஜவ்வாது என 16 திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
காங்கயம்:
காங்கயம் சிவன்மலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா 14-ந் தேதி தொடங்கியது.விழாவையொட்டி தினமும் கோவிலில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.கோவிலில் நேற்று முன்தினம் நடந்த சூரசம்ஹாரத்தில் சூரனை முருகப்பெருமான் வதம் செய்தார். நேற்று முருகனுக்கு வள்ளி, தெய்வானையுடன் திருகல்யாண வைபவம் நடந்தது.திருகல்யாண நிகழ்வில் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், ஜவ்வாது என 16 திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் மந்திரங்கள் ஓதப்பட்டு, ேஹாமம் வளர்க்கப்பட்டு, மாங்கல்ய வழிபாடு செய்யப்பட்டது. திருக்கல்யாண வைபவ முடிவில் முருகப் பெருமானுக்கு தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கடைசியாக பக்தர்கள் காப்பு அவிழ்த்து விரதத்தை முடித்தனர்.திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானம் ஏற்பாடுகளை சிவன்மலை கந்த சஷ்டி விரத குழுவினர் செய்தனர்.விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் காங்கயம் காவல் துறையினர் ஈடுபட்டனர்.
- வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
- 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பழனி:
முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் ஆண்டுதோறும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில் `தீர்த்தக்காவடி திருவிழா' என அழைக்கப்படும் பங்குனி உத்திரம் தனி சிறப்பு வாய்ந்தது. அதாவது கோடை காலமான பங்குனி, சித்திரை மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். பழனி முருகன் சிலை நவபாஷாணத்தால் ஆனது என்பதால், இந்த காலத்தில் முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு, பக்தர்கள் கொடுமுடியில் இருந்து தீர்த்தம் எடுத்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். இது பங்குனி உத்திர விழாவின் சிறப்பு ஆகும்.
இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 18-ந்தேதி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, மாலையில் வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழாவின் 6-ம் நாளான நேற்று மாலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக காலை 9 மணிக்கு சன்னதி வீதி, கிரிவீதிகளில் தந்தப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. மதியம் 3 மணிக்கு அடிவாரம் சவுமிய நாராயண கவர நாயக்கர் மண்டபத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் மாலை 5 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து புண்ணியாக வாஜனம், கலசபூஜை, மாங்கல்ய பூஜை, கந்த யாகம், சுப்பிரமண்யா யாகம், பூர்ணாகுதி நடைபெற்றது. அதையடுத்து திருக்கல்யாண சடங்குகள் நடைபெற்றன. தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
மாலை 7 மணிக்கு முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் 'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா', 'வீர வேல் முருகனுக்கு அரோகரா', 'ஞான தண்டாயுதபாணிக்கு அரோகரா' என்று விண்ணே அதிரும் வகையில் கோஷமிட்டனர். தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி, 16 வகை தீபாராதனை நடந்தது. மகா தீபாராதனைக்குப் பின்னர் ஓதுவார்கள் தேவாரம் பாடி, கோவில் குருக்கள் வேத பாராயணம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.
திருக்கல்யாண நிகழ்ச்சிகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் மற்றும் குருக்கள்கள் செய்தனர். நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, கோவில் அலுவலர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பங்குனி உத்திர திருவிழாவில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்ததை தொடர்ந்து, மண கோலத்தில் சுவாமி வெள்ளித்தேரில் எழுந்தருளினார். முன்னதாக திருஆவினன்குடி கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் வெள்ளிதேருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தேர்பவனி தொடங்கியது. சன்னதி வீதி, வடக்கு, கிழக்கு, மேற்கு கிரிவீதிகள் வழியாக சென்று நிலை வந்து சேர்ந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது. இதனை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே பழனி நோக்கி குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் தீர்த்தம் எடுத்து வந்தும், காவடி சுமந்தும் ஆடிப்பாடியும் மலைக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் பழனி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
- ஆனித்தேரோட்டமும், ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
- இன்று முதல் 3 நாட்களுக்கு அம்பாள் ஊஞ்சல் விழா நடைபெறுகிறது.
நெல்லை:
நாயன்மாா்களால் பாடப்பெற்ற பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லை யப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஒவ்வொரு ஆண்டும் சுவாமிக்கு ஆனித்தேரோட்டமும், அம்பாளுக்கு ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த ஆண்டுக்கான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 18-ந்தேதி அம்மன் சன்னதி கொடிமரத்தில் கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
கடந்த 10 நாட்களாக தினமும் காலை, மாலை நேரங்களில் காந்திமதி அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. மேலும் பல்வேறு அலங்காரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா புறப்பாடும் நடைபெற்றது.
நேற்று பிற்பகல் கம்பாநதி காட்சி மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடை பெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை பிரம்ம முகூா்த்தத்தில் அம்மன் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி- அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதற்காக நெல்லை கோவிந்தராஜா் நெல்லை யப்பரை ஆயிரங்கால் திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்தாா். முதலில் மூலவா் காந்திமதிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடா்ந்து மண்டப வாயிலில் நெல்லையப்பருக்கு பாதபூஜை நடைபெற்றுது. விழா மண்டபத்தில் அக்னி பிரதிஷ்டை செய்து ஹோமங்கள் நடைபெற்றன.
தொடா்ந்து சுவாமி- அம்பாளுக்கு புது வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு, காப்பு கட்டி திருஷ்டி கழித்தனா். அதன்பின் மாலை மாற்றும் வைபவம் என திருமண சடங்குகள் நடைபெற்றன.
சுவாமி நெல்லைப்பருக்கு காந்திமதி அம்பாளை தாரைவார்த்து கொடுத்ததும் பக்தா்களின் ஹரஹர சிவசிவ கோஷங்கள் முழங்க மங்கல இசை இசைக்க திருமாங்கல்ய தாரணம் நடைபெற்றது.
தொடா்ந்து சுவாமி- அம்பாளுக்கு நலுங்கு இட்டு பாலும், பழமும் கொடுத்து சப்தபதி பொரியிடுதல் போன்றவை நடைபெற்றன. வேதியா்கள் மந்திரங்கள் ஓத, ஓதுவா மூா்த்திகள் திராவிட வேதம் பாட மகா தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் . திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோவில் பக்தர் பேரவை சார்பில் திருக்கல்யாண விருந்தும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
பொங்கல், கேசரி, பிரசாத பைகள் உள்ளிட்டவை வந்திருந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. இன்று முதல் 3 நாட்களுக்கு அம்பாள் ஊஞ்சல் விழா நடைபெறுகிறது.
அதனை தொடா்ந்து சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேசம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், அறங்காவல் குழுவினா் மற்றும் உபயதாரா்கள் செய்திருந்தனர்.
- திம்மராய பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது.
- 3 மணிக்கு திம்மராய பெருமாள் கருடவாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே காரமடை கா.புங்கம்பாளையம் திம்மராய பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணிக்கு அபிஷேக அலங்கார பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து 10 மணிக்கு அம்மன் அழைப்பும் மற்றும் பஜனை நடைபெற்றது. பின் மதியம் 1.30 மணிக்கு மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், 3 மணிக்கு திம்மராய பெருமாள் கருடவாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. இதில் திம்மராயபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இந்த உற்சவத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.