search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thirukarthigai"

    • பல்வேறு அளவுகளில் அவல், பொரிகளை பாக்கெட்டுகளில் அடைத்து வியாபாரிகள் விற்பனை செய்தனர்.
    • அளவை பொறுத்து பனை ஓலைகள் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது.

    நெல்லை:

    திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று மாலை வீடுகளில் பொதுமக்கள் பூஜை செய்து வழிபடுவார்கள்.

    களை கட்டிய பஜார்கள்

    இதையொட்டி பொருட்கள் வாங்குவதற்காக பொது மக்கள் கடைகளுக்கு செல்வ தால் நெல்லையில் மார்கெட்டுகள் மற்றும் முக்கிய பஜார்களில் பொருட்கள் விற்பனைகளை கட்டி உள்ளது.

    கார்த்திகை தீப வழிபாட்டுக்குரிய அவல், பொரி கடலை, இலை, பூ, பழம், அகல் விளக்குகள், கொழுக்கட்டை தயாரிக்க பயன்படுத்தும் பனை ஓலை, சிறுவர்கள் கொளுத்தி மகிழும் சூந்து குச்சி போன்றவைகளை வாங்குவதற்காக இன்று டவுன் ரதவீதிகள், பாளை மார்க்கெட் பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியதை காண முடிந்தது.

    அவல், பொரி- பனை ஓலை

    பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதற்காக கூட்டத்தில் காத்து நிற்பதை தடுக்கும் விதமாக அவல், பொரி உள்ளிட்டவைகளை பல்வேறு அளவுகளில் பாக்கெட்டுகளில் அடைத்து வியாபாரிகள் விற்பனை செய்தனர்.

    பாளை தெற்கு பஜார், மகாராஜா நகர், மேலப் பாளையம் உழவர் சந்தைகள் உள்ளிட்ட பகுதிகளில் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாட தேவையான பூஜை பொருட்கள் உள ளிட்டவை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    பாளை மார்க்கெட், மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளிலும் பனை ஓலை விற்பனை மும்முரமாக நடைபெற்றது. அவை பெரியது, சிறியது என அளவை பொறுத்து ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது.

    அகல் விளக்குகள்

    இதேபோல் முக்கிய இடம் பிடிக்கும் அகல் விளக்குகளின் விற்பனையும் சூடு பிடித்தது. டவுன் ரதவீதிகளில் உள்ள தற்காலிக தள்ளுவண்டி கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிவன் விளக்கு, அகல் விளக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனையானது.

    மேலும் புதுவரவான மயில் விளக்கு, யானை விளக்கு, லட்சுமி விளக்கு ஆகியவை ரூ.250-க்கும், தாமரை பூ விளக்கு ரூ.100-க்கும், பாவை விளக்கு ரூ.80-க்கும், அணையா விளக்கு ரூ.70-க்கும், துளசி மாடம் ரூ. 30-க்கும் விற்பனையானது. சுமார் 250 வகையான விளக்குகள் விற்பனைக்கு வந்திருந்தன.

    மண் விளக்குகளில் வாடிக்கையாளர்கள் விரும்பும் நிறங்களில் அவர்கள் விரும்பும் டிசைன்களை உடனுக்குடன் தயார் செய்தும் சில கடைகளில் வழங்கினர். அவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

    • அந்நிலையில், சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றினார்.
    • இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர்.

    படைத்தல் தொழிலை செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலை செய்யும் விஷ்ணுவும்

    நானே பெரியவன் என்று வாதாடிப் போரிட்டனர்.

    அந்நிலையில், சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றினார்.

    அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது.

    இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர்.

    அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று

    விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார்.

    இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.

    • திருவாவினன்குடி கோவில் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவில்களிலும் கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வருடம் முழுவதும் திருவிழா கோலம் பூண்டிருக்கும் பழனியில் பல முக்கிய திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அதில் ஒன்று திருக்கார்த்திகை திருவிழா ஆகும். 7 நாட்கள் நடைபெறும் இந்த விழா வருகிற 20-ந் தேதி மலைக்கோவிலில் காப்பு கட்டுதலுடன் தொடங்க உள்ளது. அன்று மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜைக்கு பின்னர் காப்பு கட்டப்படும். மாலை 6 மணிக்கு சண்முகார்ச்சனை, 6.30 மணிக்கு சண்முகர் தீபாராதனை, மாலை 7 மணிக்கு தீபாராதனை மற்றும் தங்கரத புறப்பாடு ஆகியவை நடைபெறுகிறது.

    அதனைத் தொடர்ந்து 6 நாட்களும் இந்த பூஜை நடைபெறுகிறது. 25-ந்தேதி முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம் ஏற்றுதல், மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையின் போது நடைபெறுகிறது. 26-ந்தேதி திருக்கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெறும். 4.30 மணிக்கு விளாபூஜை அதனைத் தொடர்ந்து சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.

    தொடர்ந்து யாகசாலை தீபாராதனையும், மலைக்கோவிலில் 4 மூலைகளிலும் தீபம் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். மாலை 6.15 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றுதல் நடைபெறுகிறது.

    இதனைத் தொடர்ந்து திருவாவினன்குடி கோவில் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவில்களிலும் கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    அண்ணாமலைக்கு அரோகரா கோஷங்கள் விண்ணைப் பிளக்க, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. #AnnamalaiyarTemple #MahaDeepam
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீப விழாவின் சிகர நிகழ்ச்சியாக, 10-வது நாளான இன்று மாலை 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றியதை கண்ட பக்தர்கள், அண்ணாமலைக்கு அரோகரா என கோஷ்ங்கள் எழுப்பி அண்ணாமலையாரை வழிபட்டனர்.
     
    மகா தீபத்தையொட்டி இன்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், கலெக்டர் கந்தசாமி மற்றும் பிரமுகர்கள், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மகா தீபத்தை தரிசனம் செய்தனர்.



    திருவண்ணாமலையில் விட்டு விட்டு மழை கொட்டினாலும் பக்தர்கள் எதையும் பொருட்படுத்தாமல் மகா தீபத்தை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

    மலையுச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் கோவில் கொடி மரம் எதிரேயுள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும். சுமார் 40 கிலோ மீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தை பார்க்க முடியும்.

    திருவண்ணாமலை மகா தீபத்தை காண வேலூர், சென்னை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருச்சி, சேலம் உள்பட தமிழகம் முழுவதும் இருந்தும், அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 20 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள், சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். #AnnamalaiyarTemple #BharaniDeepam
    ×