என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "threatening"

    • வில்லியனூரில் காவலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.
    • அதே கம்பெனியில் முருகையன் என்பவரும் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று காலை சுப்பிரமணியன் ஜல்லி கம்பெனிக்கு வேலைக்கு சென்றார்.

    புதுச்சேரி:

    வில்லியனூரில் காவலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.

    வானூர் அருகே தாண்டவ மூர்த்திக்குப்பம் ரெயில்வே தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது67). இவர் வில்லியனூர்-கூடப்பாக்கம் ரோட்டில் போக்குவரத்து சிக்னல் அருகே உள்ள ஜல்லி விற்கும் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    அதே கம்பெனியில் முருகையன் என்பவரும் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று காலை சுப்பிரமணியன் ஜல்லி கம்பெனிக்கு வேலைக்கு சென்றார். அப்போது அங்கிருந்த முருகையன் தகாத வார்த்தைகளால் திட்டி ஏன் அடிக்கடி இங்கு வந்து தொல்லை கொடுக்கிறாய்? என கூறி கருங்கல்லால் சுப்பிரமணியை தாக்கினார்.

    மேலும் இங்கேயே உன்னை அடித்து கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். அதோடு அங்கிருந்த முருகையனின் உறவினர் சுகன்யா மற்றும் கடை உரிமையாளர் கோகுல்ராஜ் ஆகியோரும் இனிமேல் இங்கு வரக்கூடாது என மிரட்டல் விடுத்தனர்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த சுப்பிரமணியனை அங்கிருந்தவர்கள் மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சுப்பிரமணியன் அரியூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து அவரது மருமகள் விமலா கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முத்துக்குமார் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
    • இசக்கிபாண்டி, பரமசிவன் ஆகியோர் முத்துக்குமாரை அரிவாளால் வெட்டினர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் மலையடி இந்திரா நகரை சேர்ந்தவர் செல்லபாண்டி மகன் முத்துக்குமார் (வயது 33). இவர் நெல்லையில் உள்ள தனியார் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    முன்விரோதம்

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மலையடியில் உள்ள முப்பிடாதி அம்மன் கோவிலில் கொடை விழா நடந்தது. அப்போது கீழச்சடையமான்குளத்தை சேர்ந்த பரமசிவன் என்ற சிவாவும்(30), அவரது நண்பரான மேலகாடு வெட்டியை சேர்ந்த இசக்கிபாண்டியும் (32) விசில் அடித்து தகராறு செய்தனர். இதை முத்துக்குமார் தட்டிக் கேட்டதால் அவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முத்துக்குமாரின் சகோதரி நதியா மற்றும் அண்ணன் மகள் உமாபிரியா ஆகியோர் காடுவெட்டி அருகே சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பரமசிவன், இசக்கி பாண்டி ஆகியோர் அவர்கள் மீது மோதுவது போல் வந்துள்ளனர்.

    அரிவாள் வெட்டு

    இதையறிந்த நதியா, உமாபிரியாவின் உறவினர்கள் சுபாஷ், செல்வம் ஆகியோர் இசக்கிபாண்டி வீட்டிற்கு சென்று தட்டிக் கேட்டனர். அப்போது முத்துக்குமாரும் சென்றார். இதையடுத்து இசக்கிபாண்டி, பரமசிவன் ஆகியோர் முத்துக்குமாரை அவதூறாக பேசி, அரிவாளால் வெட்டினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர்.

    இதனால் காயமடைந்த அவர் களக்காடு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்ய ப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இதுதொ டர்பாக பரமசிவன், இசக்கிப்பாண்டியை தேடி வருகின்றனர்.

    • காலாவதியான மது பாட்டில்களை விற்பதாக கூறி தகராறு செய்தார்.
    • பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் அடுத்த கன்னியகோயில் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வினோத்குமார். வயது (33). இவர் பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் மதுக்கடையில் கேஷியராக வேலை செய்து வருகிறார்.

    நேற்று இவர் பணியில் இருந்த போது குருவிநத்தம், பெரியார் நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (எ) ஜெகன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் கடைக்கு வந்து மதுபானங்கள் வாங்கினர். அதில் ஒன்றில் காலாவதியான மது பாட்டில் இருந்ததாக கூறி மணிகண்டன் தகராறு செய்தார். பின்னர் ஒரு கட்டத்தில் கடையை மூட முயற்சித்தார்.

    இதனை தடுத்த வசந்தகுமாரை கையால் தாக்கி கடையை இழுத்து மூடி கொளுத்தி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின்பேரில் பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கொலை மிரட்டல் விடுத்த அலி அப்பாஸ் வீட்டு வாசலில் இருந்த பூ , ஜாடி உள்ளிட்டவற்றை உடைத்து சேதப்படுத்தினார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை லப்போர்த் வீதியை சேர்ந்தவர் அலி அப்பாஸ். இவரது மனைவி ரெனி மேரி செசில் (வயது 37).

    திருமணமான 5 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்த ரெனி மேரி பிரச்சனைக்கு தீர்வு காண கோர்ட்டில் விவகாரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 27-ந் தேதி கோட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

    கோர்ட்டி ற்கு வந்த அலி அப்பாஸ் மனைவியிடம் கோர்ட்டிற்கும், போலீஸ் நிலையத்திற்கும் அலைய வைக்கின்றாயா ? என கேட்டு தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.  ரெனி மேரி வீட்டில் இருந்த போது அங்கு வந்த அலி அப்பாஸ் வீட்டு வாசலில் நின்று கத்தி கூச்சலிட்டுள்ளார்.

    ரெனி மேரி வெளியில் சென்று பார்த்த போது சாலையில் கிடந்த கல்லை எடுத்து அவர் மீது வீசியுள்ளார். மேலும் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த அலி அப்பாஸ் வீட்டு வாசலில் இருந்த பூ , ஜாடி உள்ளிட்டவற்றை உடைத்து சேதப்படுத்தினார்.

    உடனே ரெனி மேரி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்கு போலீசார் வந்தனர். அவர்களை பார்த்ததும் அலி அப்பாஸ் அங்கிருந்து ஓடி விட்டார்.

    இதுகுறித்து ரெனி மேரி அளித்த புகாரின் அடிப்படையில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர்.

    • அரசு பஸ்சுக்கு தீ வைப்பதாக மிரட்டல்; வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் கொடுத்த புகாரின்பேரில் அஜித்குமாரை கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் பராசக்தி நகரை சேர்ந்தவர் அஜித்குமார் (23). இவர் சம்பவத்தன்று சின்னபேராலி ரோட்டில் பெட்ரோல் கேனுடன் அரசு பஸ்சுக்கு தீ வைக்கப்போவதாக மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து பாண்டியன் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் கொடுத்த புகாரின்பேரில் அஜித்குமாரை கைது செய்தனர்.

    • கரண்டியால் தாக்கி தங்கள் வீட்டு ஆட்களை கொண்டு தீர்த்து விடுவதாக கொலை மிரட்டல் விட்டு சென்று விட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் அடுத்த கோட்டைமேடு சிவகாமி நகர், சேரன் வீதியை சேர்ந்தவர் இஸ்மாயில் மனைவி பரிதா (39). இவர் சுய உதவி குழுக்கள் மூலம் தனியார் வங்கியில் இருந்து அரியாங்குப்பத்தைச் சேர்ந்த பிரகாஷ் மனைவி சங்கரி (38) என்பவருக்கு தனிநபர் கடனாக ரூ. 1.50 லட்சம் வாங்கிக் கொடுத்துள்ளார்.

    அதில் ரூ.75 ஆயிரம் அவரிடம் கடனாக பெற்று அதற்கான வங்கியில் செலுத்து வதற்கு அவ்வப்போது பணம் சங்கரிடம் கொடுத்து வந்துள்ளார்.

    ஆனால் செலுத்திய பணத்தை சங்கரி முறையாக செலுத்தாமல் விட்டுவிட்டார். இதனால் வங்கி ஊழியர்கள் கடன் பெற்றுத் தந்த பரிதாவை தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். இது சம்பந்தமாக இருதரப்பிடையே பிரச்சனை ஏற்பட்டு இருந்தது.

    புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் பெண்களிடம் சமாதானம் செய்து வைத்து சங்கரியை பணம் செலுத்த கூறினர். இந்த நிலையில் கடந்த 10-ம் தேதி பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில் சாலை யோர கடை வைத்து வியாபாரம் செய்து வந்த பரிதாபை அங்கு வந்த சங்கரி அசிங்கமாக திட்டி மானப ங்கம் படுத்தி இரும்பு கரண்டியால் தாக்கி தங்கள் வீட்டு ஆட்களை கொண்டு தீர்த்து விடுவதாக கொலை மிரட்டல் விட்டு சென்று விட்டார்.

    இது சம்பந்தமாக புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆத்திரம் அடைந்த அவர்கள் அலெக்ஸ், கோகுல் சரணை இரும்பு கம்பி மற்றும் கற்களால் தாக்கினர்.
    • மோட்டார் சைக்கிளில் அதி வேகமாக சென்றனர்.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் ( வயது 23). நெல்லிதோப்பில் உள்ள கோழி இறைச்சி கடையில் வேலை செய்து வருகிறார்.

     இவரும் அதே பகுதியை சேர்ந்த கோகுல் சரண் (18) என்பவரும் வீட்டில் உள்ள பழைய பொருட்களை அனிதாநகரில் உள்ள ஒரு பழைய இரும்பு கடையில் விற்பதற்காக மோட்டர் சைக்கிளில் சென்றனர்.அவர்கள் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது.

    இதை நோட்டமிட்ட அப்பகுதி வாலிபர்கள் அங்குள்ள ெரயில்வே கேட் பகுதியில் 2 பேரையும் வழிமறித்து எங்க ஏரியாவில் எப்படி அதிவேகமாக செல்லலாம் என்று கேட்டனர். இதில் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றியது, ஆத்திரம் அடைந்த அவர்கள் அலெக்ஸ், கோகுல் சரணை இரும்பு கம்பி மற்றும் கற்களால் தாக்கினர்.

    மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. தாக்குதலில் காயம் அடைந்த 2 பேரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதோடு வேலாயுதத்தை கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு முருகன் அங்கிருந்து சென்று விட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான சின்ன கோட்டக்குப்பம் ஐம்பொன் தெருவை சேர்ந்தவர் வேலாயுதம். (வயது 50) இவர் மொபட் மூலம் டீ வியாபாரம் செய்து வருகிறார்.

    அதுபோல் நேற்று காலை வேலாயுதம் வியாபாரத்துக்கு செல்ல முத்தியால் பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்கில் மொபட்டுக்கு பெட்ரோல் நிரப்ப வந்தார். அப்போது முன் விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் தகாத வார்த்தைகளால் திட்டி வேலாயுதத்தை தாக்கினார்.

    மேலும் மொபட்டையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினார். அதோடு வேலாயுதத்தை கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு முருகன் அங்கிருந்து சென்று விட்டார்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த வேலாயுதம் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து வேலாயுதத்தின் மனைவி கிரிஜா கொடுத்த புகாரின் பேரில் முத்தியால் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • லதாவுடன் வந்த அவரது மதுவையும் கொலை செய்து விடுவதாக ஜெயக்குமார் மிரட்டினார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயக்குமாரை தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை வம்பாகீரப் பாளையம் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மது. இவரது மனைவி லதா (வயது36). இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் ஜெயக்குமாரு க்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில்  லதா தனது கணவருடன் அப்பகுதியில் உள்ள தனது தந்தைக்கு சாப்பாடு கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள மீன்மார்க்கெட் அருகே நின்றுக்கொண்டு மது குடித்துக்கொண்டிருந்த ஜெயக்குமார் திடீரென லதாவை வழிமறித்து உன்னை இங்கேயே அடித்து கொலை செய்து விடுவேன்.

    மேலும் வெடிகுண்டும் வீசுவேன் என்று மிரட்டினார். அதோடு லதாவுடன் வந்த அவரது மதுவையும் கொலை செய்து விடுவதாக ஜெயக்குமார் மிரட்டினார்.

    இதுகுறித்து லதா ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயக்குமாரை தேடி வருகிறார்கள்.

    • 2 பேரும் அன்னூர் பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
    • இளம்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை அன்னூரை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு கரூரை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் 2 பேரும் அன்னூர் பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாலிபர் இளம்பெண்ணை பிரிந்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தார். இதனை அறிந்த இளம்பெண் வாலிபரை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்தார். ஆனால் அந்த வாலிபர் வர மறுத்து விட்டார். மேலும் அந்த பெண்ணுடன் அவர் தனிமையில் இருக்கும் போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடு வதாக மிரட்டி உள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் இதுகுறித்து அன்னூர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக வாலிபர் மிரட்டுவதாகவும், தன்னிடம் இருந்து வாலிபர் வாங்கி 6 பவுன் தங்க நகைகளை பறித்து விட்டதாகவும், அதனை மீட்டுத் தர வேண்டும் எனவும் கூறி இருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் 2-வது அக்ரகாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
    • அப்போது அவரது மனைவி அருகில் இருந்து அவரை கவனித்து வந்தார். பின்னர் 2 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் வீடு திரும்பினர்.

    சேலம்:

    சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் 2-வது அக்ரகாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அப்போது அவரது மனைவி அருகில் இருந்து அவரை கவனித்து வந்தார். பின்னர் 2 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் வீடு திரும்பினர்.

    ஆபாச வீடியோ

    இந்த நிலையில் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர் நீ ஆஸ்பத்திரியில் தங்கி இருந்த போது குளித்த வீடியோ என்னிடம் உள்ளது. நான் அழைக்கும் இடத்திற்கு வரவேண்டும் என்று மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கதறினார்.

    இதற்கிடையே அந்த பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அந்த வீடியோவை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    மிரட்டல்

    இந்தநிலையில் மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அந்த நபர் நான் கூப்பிடும் இடத்திற்கு வராவிட்டால் குளிக்கும் வீடியோவை சமூக வலை தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டினார். இதனால் பயந்து போன அந்த பெண் சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது 2 முறையும் வெவ்வெறு செல்போன் எண்களில் இருந்து அந்த நபர் பேசியது தெரிய வந்தது. மேலும் தனது கணவர் சிகிச்சையில் இருந்த போது பக்கத்து படுக்கையில் இருந்த நபர் நான் குளிக்கும் போது வீடியோ எடுத்திருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக அந்த பெண் கூறி உள்ளார்.

    செல்போன் எண்ணை வைத்து விசாரணை

    இதையடுத்து அந்த பெண்ணுக்கு பேசிய செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது அந்த நபர் தலைமறைவானது தெரிய வந்தது.

    அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    • சைபர் கிரைம் போலீசார் அவரை கைதுசெய்தனர்.
    • இல்லா விட்டால் இந்த படங்களை இணைய தளத்தில் வெளி யிட்டு விடுவதாக குறிப்பிடப்பட்டி ருந்தது.

    புதுச்சேரி:

    புதுவையை சேர்ந்த 4 பெண்களுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு படம் வந்திருந்தது.

     அதில் அவர்களின் முகத்தை மார்பிங் செய்து அவர்கள் நிர்வாணமாக இருப்பதுபோல படம் இருந்தது.

    அதற்கு கீழ் ஒரு எண்ணை குறிப்பிட்டு, இந்த எண்ணில் வீடியோகாலில் நிர்வாண மாக வர வேண்டும். இல்லா விட்டால் இந்த படங்களை இணைய தளத்தில் வெளியிட்டு விடுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதையடுத்து 4 பெண்களும் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் அந்த எண்ணை வைத்து விசாரித்தனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தை சேர்ந்த விக்னேஷ் (வயது24) என தெரியவந்தது.

    இவர் மெக்கானிக்கல் என்ஜினியர். இவர் திருமணமாகி மனைவி பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு சென்றுள்ளது தெரியவந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் அவரை கைதுசெய்தனர்.

    ×