என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "through"
- கிறிஸ்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சமூகத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்கப்படுகிறது.
- தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களின் கடன்கள் வழங்கப்படுகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சமூகத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களின் கீழ், தனிநபர் கடன், சுய உதவிகுழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்கப்படுகிறது.
தனி நபர் கடனாக திட்டம் 1-ன் கீழ் கடன் பெற விரும்பும் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் ஆண்டு வருமானம் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும், நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்களின் ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்கு மிகாமலும் இருக்கு வேண்டும். திட்டம் 2-ன் கீழ் கடன் பெற விரும்புபவர்களின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். திட்டம் 1-ன் கீழ் ரூ. 20 லட்சமும், திட்டம் 2-ன் கீழ் ரூ. 30 லட்சம் அதிகபட்சமாக கடன் வழங்கப்படும். வட்டி விகிதம் ஆண்டிற்கு 6 முதல் 8 சவீதம் வரை விதிக்கப்படும்.
சுய உதவிக்குழு கடன் ரூ. 1 லட்சம் முதல் 1.50 லட்சம் வரை வழங்கப்படும். இதற்கு 7 முதல் 8 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படும். கல்விக்கடன் ரூ. 20 லட்சம் வரை வழங்கப்படும். இதற்கு 3 முதல் 8 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படும். கைவினைஞர்களுக்கு ரூ. 8 லட்சம் முதல் 10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இதற்கு 4 முதல் 6 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படும்.
விருப்பமுள்ள சிறுபான்மை சமூகத்தினர், அதற்கான விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்பிக்கவேண்டும். கடன் மனுக்களுடன், தாங்கள் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்.
கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது , சலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஜெராக்ஸ் காப்பிகளை சமர்ப்பிக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர் இந்த கடன் உதவியை பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் சமரச மையம் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும்.
- சமரச முறையிலும் தீர்வு காணுமாறு மாவட்ட சமரச மைய முதன்மை மாவட்ட நீதிபதி கேட்டு கொண்டுள்ளார்.
சேலம்:
சேலம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சமரச மையத்தில் வருகிற 16-ந்தேதி சமரச நாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ஏற்கெ னவே நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் சமரச மையம் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும்.
இதில் தனி நபர் தகராறு, பண வசூல் தகராறு, குடும்ப தகராறு, சொத்து தகராறு, காசோலை தகராறு, மின்சார வாரியம், தொழிலா ளர் நலம், உரிமையியல் மற்றும் இதர வழக்குகளுக்கு தீர்வு காணலாம்.
சமரச மையம் மூலம் முடித்துக்கொள்ளும் வழக்கிற்கு மேல் முறையீடு கிடையாது. இந்த வழக்கு களை சமரச மையத்தில் பேச்சு வார்த்தைகள் மூலம் சமரச முறையில் தீர்வு காண்பதால், யார் வென்ற வர்? யார் தோற்றவர்? என்ற பாகுபாடு இன்றியும் உறவு முறைகள் தொடர்ந்து நீடிக்கவும், சமரச மையம் வழிவகை செய்கிறது.
இதற்கு மேலாக சமரச மையம் மூலமாக முடித்துக்கொள்ளும் வழக்கு களுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுமை யாக திருப்பிக்கொ டுக்கப்ப டும். எனவே பொதுமக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் தங்களது வழக்கு களை சமரச மையத்திற்கு அனுப்பி சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீர்வு காணுமாறு மாவட்ட சமரச மைய முதன்மை மாவட்ட நீதிபதி கேட்டு கொண்டுள்ளார்.
- வயது வந்தோர் கல்வி திட்டத்தின் மூலம் எழுத்தறிவு பெற்ற 1 லட்சம் பேர் பெற்றனர்.
- தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வையில் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர், தியாக ராசா தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற 3-ம் கட்ட அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடந்தது. இதனை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் பார்வை யிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் படிக்க மற்றும் எழுதத் தெரியாத அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவை வழங்கிட வேண்டும் என்பதே வயது வந்தோர் கல்வி திட்டத்தின் முதன்மையான இலக்காகும்.
இதனை கருத்தில் கொண்டு "வளர்ச்சியில் முன்னுரிமை பெறும்" விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற சிறப்பு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் திட்ட 3-ம் கட்டத்தின் கீழ் பயின்று வரும் அனைத்து கற்போர்களும் அடிப்படை எழுத்தறிவு தேர்வில் கலந்து கொள்ளும் வகையில் இத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் இத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 25 ஆயிரத்து 15 பேரும், 2-ம் கட்டமாக 45 ஆயிரத்து 792 பேரும் எழுத்தறிவு பெற்றனர்.
தற்போது 3-ம் கட்டமாக ஜூன் 2022 முதல் நவம்பர் 2022 வரை 6 மாதங்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் 749 மையங்க ளில் 29 ஆயிரத்து 941 பயனாளிகளுக்கு படிக்க எழுத கற்று தரப்பட்டு இத் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது.
இந்த 3 கட்ட எழுத்தறிவுத் திட்டத்திற்காக அரசு ரூ.3 கோடியே 29 லட்சத்து 39 ஆயிரத்து 959 செலவு செய்துள்ளது.
தேர்வு விடைத்தாள்கள் வட்டார வளமையத்தில் பாது காப்பாக வைக்கப்பட்டு, ஆசிரிய பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்களால் டிசம்பர் 6-ந் தேதி முதல் 10 ம் தேதி வரை மதிப்பீடு செய்யப்படும். மதிப்பெண்கள் கணினி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு, தேர்வர் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படை யில் 60 சதவீதத்திற்கு மேல் எனில் நன்று என 'ஏ' கிரேடும், 40-60 சதவீதம் எனில் திருப்திகரம் என 'பி' கிரேடும், 40 சதவீதத்திற்கு கீழ் எனில் முன்னேற்றம் தேவை என 'சி' கிரேடும் சான்றிதழ் வழங்கப்படும்.
மாவட்டத்தில் இத் திட்டத் தின் கீழ் 1 லட்சத்து 748 பேருக்கு எழுத்தறிவு கற்றுத்தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது இலக்கை விட கூடுதலாக 1 லட்சத்து 798 பேருக்கு எழுத்தறிவு கற்றுத்தரப்பட்டுள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி உத்தரவின்படி மாவட்டத்தில் 749 மையங்களிலும் இத் தேர்வு மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், மையங்களின் தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வையில் நடைபெற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சேலம் மாவட்டத்தை சேர்ந்த அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
- 156 வகையான இ.எஸ்.ஐ., பி.எப், பிடித்தம் செய்யப்படாத தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்யலாம்.
சேலம்:
சேலம் தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவுதளம் என்ற ஒரு தரவுதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
இந்த தரவு தளத்தல் கட்டுமானத் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டுப்பணியாளர்கள், விவசாய தொழிலாளர்கள், குத்தகைதாரர்கள், பேக்கிங் செய்வோர், தச்சு வேலை செய்வோர், கல் குவாரி தொழிலாளர்கள், மர ஆலைத்தொழிலாளர்கள், உள்ளூர் கூலித் தொழிலாளர்கள், முடிதிருத்துவோர், தெரு வியாபாரிகள், சிறு வியாபாரிகள், அங்கன்வாடிப்பணியாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள், பால் வியாபாரிகள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் உள்ளிட்ட 156 வகையான இ.எஸ்.ஐ., பி.எப், பிடித்தம் செய்யப்படாத அமைப்புச்சாரா தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்யலாம்.
அனைத்து பொது சேவை மையங்களிலும் மற்றும் அனைத்து இ-சேவை மையங்களிலும் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. https://eshram.gov.in என்ற இணைதளத்தில் தொழிலாளர்கள் சுயமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். மாநில அரசின் பல்வேறு வகையான நலத்திட்டங்களின் கீழ் பதிவு செய்துள்ள அனைத்துத் தொழிலாளர்களும் இத்தரவுதளத்தின் கீழ் பதிவு செய்ய வழிவகை உண்டு.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்