என் மலர்
நீங்கள் தேடியது "tnpl"
- கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பந்துக்கு இருமுறை ரிவ்யூ கேட்க்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.
- திருச்சி அணி பேட்டிங் செய்த போது அஸ்வின் ஓவரில் ராஜ்குமாருக்கு அவுட் என கள நடுவர் தீர்ப்பு அளித்தார்.
கோவை:
7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - பால்சி திருச்சி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய திருச்சி அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்தது.
திண்டுக்கல் அணியில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட், அஸ்வின், சரவண குமார், சுபோத் பதி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து விளையாடிய திண்டுக்கல் அணி 14.5 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஒரே பந்துக்கு இரு முறை ரிவ்யூ கேட்ட அரிய நிகழ்வு நடந்துள்ளது. திருச்சி அணி பேட்டிங் செய்த போது அஸ்வின் ஓவரில் ராஜ்குமாருக்கு அவுட் என கள நடுவர் தீர்ப்பு அளித்தார். உடனே ராஜ்குமார் ரிவ்யூ எடுத்தார். அதில் அவுட் இல்லை என 3-வது நடுவர் தெரிவித்தார். 3-வது நடுவரின் தீர்ப்பில் அதிருப்தி அடைந்த அஸ்வின் மீண்டும் ரிவ்யூ எடுத்தார். அப்போதும் நாட் அவுட் என தீர்ப்பு வந்தது.
Uno Reverse card in real life! Ashwin reviews a review ?
— FanCode (@FanCode) June 14, 2023
.
.#TNPLonFanCode pic.twitter.com/CkC8FOxKd9
கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பந்துக்கு இருமுறை ரிவ்யூ கேட்க்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.
- சேலம் ஸ்பார்டன்சுக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர்.
- திருப்பூர் தமிழன்ஸ் முதல் ஆட்டத்தில் கோவையிடம் தோல்வி அடைந்தது.
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டம் கோவையில் இன்று இரவு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சாய்கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இது 2-வது போட்டியாகும். டாஸ் வென்ற திருப்பூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
4 முறை டி.என்.பி.எல். கோப்பையை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திருப்பூர் தமிழன்சை வீழ்த்தி தொடர்ந்து 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. சேலம் ஸ்பார்டன்சுக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர்.
அதேசமயம், திருப்பூர் தமிழன்ஸ் முதல் ஆட்டத்தில் கோவையிடம் தோல்வி அடைந்ததால், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற கடுமையாக போராடும்.
- டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் ஹரிஷ் குமார், ரகில் ஷா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டம் கோவையில் இன்று இரவு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சாய்கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணிக்கு, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழக்க, ராதாகிருஷ்ணன் 36 ரன்களும், விஜய் சங்கர் 28 ரன்கள், ராஜேந்திரன் 26 ரன்களும் (நாட்அவுட்) எடுத்து ஆறுதல் அளித்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்தது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் ஹரிஷ் குமார், ரகில் ஷா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்குகிறது.
- முதலில் ஆடிய திருப்பூர் அணி 120 ரன்களை எடுத்தது.
- அடுத்து ஆடிய சேப்பாக் அணி 121 ரன்கள் எடுத்து வென்றது.
கோவை:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டம் கோவையில் இன்று இரவு நடந்தது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது திருப்பூர் அணி.
அதன்படி, முதலில் ஆடிய திருப்பூர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ராதாகிருஷ்ணன் 36 ரன்களும், விஜய் சங்கர் 28 ரன்கள், ராஜேந்திரன் 26 ரன்களும் (நாட்அவுட்) எடுத்தனர்.
சேப்பாக் அணி சார்பில் ஹரிஷ் குமார், ரகில் ஷா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து, 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் 13 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிரதோஷ் பால் 25 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய சஞ்சய் யாதவ் 22 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 15.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 121 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், இந்த தொடரில் 2வது வெற்றியைப் பதிவு செய்தது. பாபா அபராஜித் 46 ரன்னும், ஹரீஷ் குமார் 12 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- மணி பாரதி 33 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அசத்தினார்.
- இறுதியில் 20 ஓவர் முடிவில் திருச்சி அணி 9 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்தது.
7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
தொடரில் இதுவரை 6 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்நிலையில் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
அதன்படி மாலை 3.15 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணி, கங்கா ஸ்ரீதர் ராஜூ தலைமையிலான பால்சி திருச்சி அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பால்சி திருச்சி அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
இந்நிலையில், முதலில் ஜஃபர் ஜமால், கங்கா ஸ்ரீதர் ஆகியோர் களமிறங்கினர். இதில், ஜஃபர் ஜமால் பூஜ்ஜியம் ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து, கங்கா ஸ்ரீதர் 3.6 ஓவரில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக, பிரான்சிஸ் ரோகின்ஸ் 16 ரன்கள் எடுத்தும், அந்தோனி தாஸ் 12 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து, களமிறங்கிய மணி பாரதி 33 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அசத்தினார். ராஜ்குமார் 15 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, 18 ஓவரின் முடிவில் பெராரியோ மற்றும் அக்ஷய் ஸ்ரீநிவாசன் விளையாடி வந்தனர். இதில், பெராரியோ 29 ரன்கள, அக்ஷய் ஸ்ரீநிவாசன் 9 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.
அடுத்ததாக களமிறங்கிய காட்சன் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். பூபாலன் 3 ரன்களில் அவுட்டானார்.
இறுதியில் 20 ஓவர் முடிவில் திருச்சி அணி 9 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில், 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் களமிறங்க உள்ளது.
- கவுசிங் காந்தி 32 பந்துகளில் அரை சதம் எடுத்து 52 ரன்களை குவித்தார்.
- 15.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்து சேலம் அணி அபாரமாக வெற்றி பெற்றது.
7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். தொடரில் இதுவரை 6 ஆட்டங்கள் முடிந்துள்ளன.
இந்நிலையில் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதன்படி மாலை 3.15 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணி, கங்கா ஸ்ரீதர் ராஜூ தலைமையிலான பால்சி திருச்சி அணியை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பால்சி திருச்சி அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்நிலையில், முதலில் ஜஃபர் ஜமால், கங்கா ஸ்ரீதர் ஆகியோர் களமிறங்கினர்.
இதில், ஜஃபர் ஜமால் பூஜ்ஜியம் ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து, கங்கா ஸ்ரீதர் 3.6 ஓவரில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக, பிரான்சிஸ் ரோகின்ஸ் 16 ரன்கள் எடுத்தும், அந்தோனி தாஸ் 12 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து, களமிறங்கிய மணி பாரதி 33 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அசத்தினார். ராஜ்குமார் 15 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, 18 ஓவரின் முடிவில் பெராரியோ மற்றும் அக்ஷய் ஸ்ரீநிவாசன் விளையாடி வந்தனர். இதில், பெராரியோ 29 ரன்கள, அக்ஷய் ஸ்ரீநிவாசன் 9 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். அடுத்ததாக களமிறங்கிய காட்சன் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். பூபாலன் 3 ரன்களில் அவுட்டானார். இறுதியில் 20 ஓவர் முடிவில் திருச்சி அணி 9 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்தது. இந்நிலையில், 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் களமிறங்கின.
முதலில் பேட்டிங் செய்த ஆகாஷ் சும்ரா 10 ரன்கள் மற்றும் அமித் சத்விக் 22 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து, மான் பாஃனா 16 ரன்களும், மோகித் ஹரிஹரன் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அபிஷேக் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதி வரை விளையாடிய கவுசிங் காந்தி 32 பந்துகளில் அரை சதம் எடுத்து 52 ரன்களை குவித்தார். கடைசி பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து சேலம் அணியின் வெற்றி வாகையை சூடினார்.
முகமது அத்னான் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஆட்டத்தின் முடிவில், 15.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்து சேலம் அணி அபாரமாக வெற்றி பெற்றது.
- ஜகதீசன் கவுஷிக் அதிகபட்சமாக 34 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
- 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கள் அணி களமிறங்க உள்ளது.
7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 12-ந்தேதி கோவையில் தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.
'லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளேஆப்' சுற்றுக்கு தகுதிபெறும். கோவையில் 6 'லீக்' போட்டிகள் நடத்தப்பட்டது. நேற்று முன்தினத்தோடு அங்கு போட்டிகள் நிறைவு பெற்றன.
நேற்றைய ஓய்வுக்கு பிறகு டி.என்.பி.எல். போட்டிகள் இன்று முதல் திண்டுக்கலில் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல்லில் 7 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. இதில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் சேலம் அணி திருச்சியை வீழ்த்தியது.
இந்நிலையில் இன்று நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதுகின்றன. இதையடுத்து இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இதனால் மதுரை அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், முதலாவதாக களமிறங்கிய எஸ்.கார்த்திக் மற்றும் ஹரி நிஷாந்த் ஆட்டத்தை தொடங்கினர்.
எஸ்.கார்த்திக் 4 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். ஹரி நிஷாந்த் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ஜகதீசன் கவுஷிக் அதிகபட்சமாக 34 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஸ்வர்ப்நில் சிங் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டத்தை இழந்தார்.
தொடர்ந்து, தீபன் லிங்கேஷ் 9 ரன்களும், சுதன் கந்தீபன் பூஜ்ஜியம் ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 12 ரன்களும், ஸ்ரீ அபிஷேக் ஒரு ரன்னும், முருகன் அஷ்வின் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
19 ஓவர்களில் தேவ் ராகுல் 14 ரன்களில் எடுத்திருந்தார். குரஜ்ப்நீத் சிங் ஆட்டத்தை தொடங்கிய நிலையில் ஒரு ரன்னிலேயே ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி 19.3 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்களை எடுத்தது.
இதன்மூலம், 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கள் அணி களமிறங்க உள்ளது.
- முதலில் ஆடிய மதுரை 123 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய திண்டுக்கல் 124 ரன்கள் எடுத்து வென்றது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற டி.என்.பி.எல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 19.3 ஓவரில் 123 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜெகதீசன் கவுசிக் 45 ரன்கள் எடுத்தார். ஹரி நிஷாந்த் 24 ரன்களில் அவுட்டானார். ஹரி நிஷாந்த் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.
திண்டுக்கல் அணி சார்பில் சரவணகுமார், சுபோத் பதி ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டகாரர்கள் விரைவில் அவுட்டாகினர். 32 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து திணறியது.
அடுத்து இறங்கிய பாபா இந்திரஜித், ஆதித்ய கணேஷ் ஜோடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் நிதானமாக ஆடியது. பாபா இந்திரஜித் அரை சதம் கடந்தார்.
இறுதியில் திண்டுக்கல் அணி 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாபா இந்திரஜித் 48 பந்தில் 78 ரன் குவித்தார்.
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் அபாரமாக வெற்றி பெற்றது.
- கோவை கிங்ஸ் 2-வது வெற்றி வேட்கையில் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 70 ரன் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்சை வென்றது.
திண்டுக்கல்:
7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவையில் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. 16-ந் தேதியுடன் அங்கு போட்டிகள் முடிவடைந்தன. 6 ஆட்டங்கள் கோவையில் நடத்தப்பட்டது.
ஒருநாள் ஓய்வுக்கு பிறகு திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர்.கல்லூரி மைதானத்தில் டி.என்.பி.எல். போட்டிகள் நேற்று தொடங்கியது.
2 ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது. முதல் போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பால்சி திருச்சியை வீழ்த்தியது. சேலம் அணி முதல் வெற்றியை பெற்றது. திருச்சி அணி 2-வது தோல்வியை தழுவியது.
2-வது போட்டியில் ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை தோற்கடித்தது. திண்டுக்கல் அணிக்கு 2-வது வெற்றி கிடைத்தது. மதுரை அணி 2-வது தோல்வியை தழுவியது.
டி.என்.பி.எல். போட்டியின் 9-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
4 முறை டி.என்.பி.எல். கோப்பையை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் அபாரமாக வெற்றி பெற்றது.
முதல் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்சையும் (52 ரன்), 2-வது போட்டியில் திருப்பூர் தமிழன்சையும் (7 விக்கெட்) வீழ்த்தி இருந்தது. இன்றைய ஆட்டத்தில் கோவை கிங்சை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றி பெறும் ஆர்வத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இருக்கிறது.
கோவை கிங்ஸ் 2-வது வெற்றி வேட்கையில் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 70 ரன் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்சை வென்றது. 2-வது போட்டியில் நெல்லை ராயல் கிங்சிடம் 4 விக்கெட்டில் தோற்றது.
- டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
திண்டுக்கல்:
டி.என்.பி.எல். போட்டியின் 9-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் இன்று இரவு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
4 முறை டி.என்.பி.எல். கோப்பையை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, இந்த சீசனில் இதுவரை மோதிய 2 ஆட்டத்திலும் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. முதல் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்சையும், 2-வது போட்டியில் திருப்பூர் தமிழன்சையும் வீழ்த்தியிருக்கிறது.
இதே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்தில் கோவை கிங்சை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றி பெறும் ஆர்வத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இருக்கிறது. கோவை கிங்ஸ் 2-வது வெற்றி வேட்கையில் உள்ளது.
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் சோபிக்கத் தவறினர்.
- கோவை கிங்ஸ் தரப்பில் வள்ளியப்பன் யுதீஸ்வரன் 3 விக்கெட் கைப்பற்றினார்.
திண்டுக்கல்:
டி.என்.பி.எல். போட்டியின் 9-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் இன்று இரவு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-ஷாருக்கான் தலைமையிலான லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு கோவை பந்துவீச்சாளர்கள் கடும் சவாலாக பந்து வீசினர். முன்னணி பேட்ஸ்மேன்கள்கூட நிலைக்கவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக ஹரிஷ் குமார் 32 ரன்கள் அடித்தார். சசிதேவ் 23 ரன்கள் அடித்தார். கோவை கிங்ஸ் தரப்பில் வள்ளியப்பன் யுதீஸ்வரன் 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கோவை கிங்ஸ் அணி களமிறங்குகிறது.
- முதலில் ஆடிய சேப்பாக் 126 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய கோவை 128 ரன்கள் எடுத்து வென்றது.
திண்டுக்கல்:
டி.என்.பி.எல். போட்டியின் 9-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் இன்று இரவு நடந்தது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 126 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக ஹரிஷ் குமார் 32 ரன்கள் அடித்தார். சசிதேவ் 23 ரன்கள் அடித்தார்.
கோவை கிங்ஸ் சார்பில் வள்ளியப்பன் யுதீஸ்வரன் 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கோவை கிங்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டகாரர் சச்சின் 14 ரன்னில் அவுட்டானார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ்குமாருடன் சாய் சுதர்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. அரை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுரேஷ்குமார் 47 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், கோவை அணி 16.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து வென்றது. சாய் சுதர்சன் 64 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.