என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
அபார பந்துவீச்சு.. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 126 ரன்னில் கட்டுப்படுத்தியது லைக்கா கோவை கிங்ஸ்
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் சோபிக்கத் தவறினர்.
- கோவை கிங்ஸ் தரப்பில் வள்ளியப்பன் யுதீஸ்வரன் 3 விக்கெட் கைப்பற்றினார்.
திண்டுக்கல்:
டி.என்.பி.எல். போட்டியின் 9-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் இன்று இரவு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-ஷாருக்கான் தலைமையிலான லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு கோவை பந்துவீச்சாளர்கள் கடும் சவாலாக பந்து வீசினர். முன்னணி பேட்ஸ்மேன்கள்கூட நிலைக்கவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக ஹரிஷ் குமார் 32 ரன்கள் அடித்தார். சசிதேவ் 23 ரன்கள் அடித்தார். கோவை கிங்ஸ் தரப்பில் வள்ளியப்பன் யுதீஸ்வரன் 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கோவை கிங்ஸ் அணி களமிறங்குகிறது.