என் மலர்
நீங்கள் தேடியது "Tollgate"
- கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு இன்று தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
- பேருந்துகள் இயக்கப்படாததால் வேலைக்கு செல்வோர் சிரமம் அடைந்துள்ளனர்.
சிதம்பரம்:
விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் சிதம்பரம் அருகே கொத்தட்டை பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி மையத்திற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த சுங்கச்சாவடி வழியாக செல்லும் தனியார் பேருந்துகளுக்கு 50 முறை சென்று வர ரூ.14,090 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், நெடுஞ்சாலைப் பணிகள் இன்னும் நிறைவு பெறாத நிலையில், கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து, கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு இன்று தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் வேலைக்கு செல்வோர் சிரமம் அடைந்துள்ளனர்.
- ஆத்திரமடைந்த கதிரவன் தனது ஆதரவாளர்களுடன் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
- திடீர் போராட்டத்தால் மதுரை-நத்தம் சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நத்தம்:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவன் (வயது 50). பார்வர்டு பிளாக் கட்சியை சேர்ந்த இவர் தனது காரில் திருச்சியில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். நத்தம் அருகே பரளிபுதூர் சுங்கச்சாவடியில் கார் நின்றது. அப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள் காருக்கு பணம் கேட்டுள்ளனர். அதற்கு கதிரவன் தான் முன்னாள் எம்.எல்.ஏ. என்று கூறியுள்ளார். இதற்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. விற்கு பாஸ் கிடையாது எனவும், பணம் கொடுங்கள் என்றும் கூறியுள்ளனர். இதனால் முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவனுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த கதிரவன் தனது ஆதரவாளர்களுடன் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து தகவலறிந்ததும் நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவனுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சம்பவம் குறித்து சுங்கச்சாவடி ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்படும் என போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள் கோசலபூபதி, மணிகண்டன், அழகர் உள்ளிட்ட 3 பேரை நத்தம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் போராட்டத்தால் மதுரை-நத்தம் சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திருச்சி-சிதம்பரம் இடையே நான்கு வழிச்சாலையாக விரிவாக்கப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சுங்கச்சாவடி திறக்கப்பட்டிருப்பதும், மேலும் ஒரு சுங்கச்சாவடி நாளை மறுநாள் திறக்கப்படவுள்ளதும் அதிர்ச்சியளிக்கின்றன. இந்தியாவிலேயே அதிக சுங்கச்சாவடிகளைக் கொண்ட தமிழ்நாட்டில், கூடுதலாக உள்ள சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், விதிகளுக்கு முரணாக, தேசிய நெடுஞ்சாலைகளில் புதிது புதிதாக சுங்கச்சாவடிகள் திறக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.
இந்தியாவில் அமைக்கப்படும் 4 வழிச்சாலைகளும், இரு வழிச்சாலைகளும் தனியார் மூலமாகத்தான் அமைக்கப்பட வேண்டும்; அதற்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. மக்கள் நலன் கருதி சில சாலைகளை மத்திய அரசே அதன் சொந்த செலவில் அமைத்து, இலவச சாலைகளாக பராமரிக்கலாம். ஒவ்வொரு வாகனம் வாங்கப்படும்போது, அதன் விலையில் ஒரு பகுதி சாலைவரியாக வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, பெட்ரோல், டீசல் விலையில், சாலை மற்றும் கட்டமைப்புத் தீர்வையாக இப்போது முறையே ரூ.5, ரூ.2 வசூலிக்கப்பட்டாலும் கூட, இதற்கு முன் லிட்டருக்கு ரூ.18 வசூலிக்கப்பட்டு வந்தது. அதன் மூலம் கிடைத்த, கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தேசிய நெடுஞ்சாலைகளை மத்திய அரசு அமைக்கலாம். இதுவே மக்களுக்கு பயனளிக்கும்.
தேசிய நெடுஞ்சாலை சுங்கக்கட்டணம் என்பது மக்களை கசக்கிப் பிழிவதாக இருக்கக்கூடாது. எனவே, தமிழ்நாட்டில் புதிய சுங்கச்சாவடிகளை திறக்கும் முடிவை கைவிட வேண்டும். ஏற்கனவே உள்ள சுங்கச்சாவடிகளையும் 60 கி.மீ.க்கு ஒன்று என்ற அளவில் அரசு முறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- டோல்கேட் பணியாளர்கள் போராட்டத்தால் கட்டணமின்றி குஷியாக வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.
- 3-வது நாட்களாக போராட்டம்
பெரம்பலூர்:
பெரம்பலூர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணியாற்றிய 28 பேரை பணிநீக்கம் செய்த ஒப்பந்த தனியார் நிறுவனத்தை கண்டித்து, சுங்கச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்கள் நேற்று முன்தினம் முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2-வது நாளான நேற்று சுங்கச்சாவடி பணியாளர்களில் சிலர் தங்களது குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த தனியார் நிறுவனத்தை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் 3-வது நாளாக அந்த சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படாததாலும், பாஸ்ட் டேக் செயல்படாததாலும், வாகன ஓட்டிகள் கட்டணமின்றி குஷியாக சென்று வருகின்றனர். ஆயுதபூஜை, காலாண்டு விடுமுறை உள்ளிட்ட தொடர் விடுமுறையினால் அந்த சாலை வழியாக அதிகமான வாகனங்கள் கடடணமின்றி செனறு வருவதால் சுங்கச்சாவடி ஒப்பந்த தனியார் நிறுவனத்துக்கு அதிகளவுல் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
- கப்பலூர் டோல்கேட்டை அகற்ற வேண்டும் என கீழக்கோட்டை, மேலக்கோட்டை கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- ஊராட்சி செயலர் குமரேசன், வி.ஏ.ஓ. சுரேந்திரன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
திருமங்கலம்
திருமங்கலம் யூனியனை சேர்ந்த கீழக்கோட்டை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தலைவர் காளம்மாள் தனுஷ்கோடி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சுப்புலட்சுமி, நிர்வாக உதவியாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தனர். கீழக்கோட்டை, லட்சுமிபுரம், மல்லம்பட்டி ஆகிய 3 கிராமங்களை உள்ளடக்கிய கீழக்கோட்டை ஊராட்சியில் சுமார் 529 ரேசன்கார்டுகள் உள்ளன. ஆனால் கிராமமக்கள் ரேசன் பொருள்கள் வாங்க 3 கி.மீ தூரமுள்ள கிரியகவுண்டன்பட்டிக்கு செல்லவேண்டி உள்ளது. 500 கார்டுகளுக்கு மேல் இருந்தாலே புதிய கடை திறக்கவேண்டும் என்ற அரசு உத்தரவுபடி கீழக்கோட்டை கிராமத்தில் புதிய ரேசன்கடை அமைக்கவேண்டும்.விதிமுறைகளை மீறி அமைந்துள்ள கப்பலூர் டோல்கேட்டால் திருமங்கலம் நகரம் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ணஎனவே கப்பலூர் டோல்கேட்டை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சி செயலர் குமரேசன், வி.ஏ.ஓ. சுரேந்திரன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
மேலக்கோட்டை
மேலக்கோட்டை ஊராட்சி கிராமசபை கூட்டம் ஊராட்சி தலைவர் கோபிநாத் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஜெயலட்சுமி, பற்றாளர் முகமதுஇலியாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலக்கோட்டை ரெயில்வேத ரைப்பாலத்தில் மழைகாலங்களில் தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்து பாதிக்கிறது. இதற்கு நிரந்தரதீர்வு காணவேண்டும்.மேலக்கோட்டையில் இருந்து 4 வழிச்சாலையை கடந்து எதிரேயுள்ள ஹவுசிங்போர்டு காலனிக்கு செல்லவேண்டி உள்ளது. 4 வழிச்சாலையில் கடக்கும் போது விபத்துகள் ஏற்படுகிறது.இதனை தடுக்க பேரிகார்டுகள் வைக்கவேண்டும். ஹவுசிங்போர்டு காலனியில் அதிகளவில் வீடுகள் உள்ளன. அங்கு ரோடு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர இல்லை. அவற்றை சரிசெய்யவேண்டும். இல்லையெனில் ஹவுசிங்போர்டுகாலனியை தனி ஊராட்சியாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் விதிமுறைகளை மீறி இயங்கிவரும் கப்பலூர் டோல்கேட்டை அகற்றவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கொ.புளியங்குளம்
திருமங்கலம் ஒன்றியம் கொ.புளியங்குளத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சிவகாமிதர்மர் தலைமை தாங்கினார். திருமங்கலம் யூனியன் ஆணையாளர் சங்கர் கைலாசம் முன்னிலை வகித்தார். கிராமத்தின் தேவைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
வானூர்:
புதுவை- திண்டிவனம் 4 வழிச்சாலையில் மொரட்டாண்டி என்ற இடத்தில் டோல்கேட் உள்ளது. இங்கு வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
புதுவை நகர பகுதியில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த டோல்கேட்டுக்கு புதுவைபகுதியை சேர்ந்த வணிகர்கள், தொழிற்சாலை நிர்வாகிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வானூர் பகுதியை சேர்ந்த வக்கீல்கள் மகேஷ், அய்யப்பன் மற்றும் பரசுராமன், சத்தியராஜ், ஞானமூர்த்தி ஆகியோர் வானூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், புதுவை - திண்டிவனம் சாலையில் மொரட்டாண்டியில் டோல்கேட் உள்ளது. ஆனால் விதிப்படி புதுச்சேரியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில்தான் டோல்கேட் அமைத்திருக்கவேண்டும்.
ஆனால், 10 கிலோ மீட்டர் தொலைவுக்குள் டோல்கேட் அமைத்து வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. எனவே, டோல்கேட்டில் கட்டணம் வசூல் செய்வதை தடை செய்யவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதை விசாரித்த மாஜிஸ்திரேட்டு வெங்கடேசன், வருகிற 20-ந் தேதி வரை அனைத்து வாகனங்களுக்கும் டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்கக் கூடாது. அதை போலீசார் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த இடைக்கால உத்தரவை கோர்ட்டு ஊழியர் கொடுத்த போது, அதனை டோல்கேட் நிர்வாகத்தினர் வாங்க மறுத்துவிட்டனர். இதையடுத்து கோர்ட்டு உத்தரவு, டோல்கேட் அலுவலகத்தில் ஒட்டப்பட்டது. இதையடுத்து டோல்கேட் வழியாக சென்ற வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை.