search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "toss"

    • வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் இந்தியா பந்து வீச்சு தேர்வு செய்தது.
    • இந்திய மண்ணில் 9 ஆண்டுக்கு பிறகு இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று கான்பூரில் நடைபெற்று வருகிறது. கான்பூர் மைதானம் சுழற்பந்து வீச்சு ஏற்ற வகையில் இருக்கும் என்பதால் குல்தீப் யாதவ் அல்லது அக்சர் படேல் அணியில் இடம் பெறுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

    ஆனால் ரோகித் சர்மா அணியில் எந்தவித மாற்றமும் இல்லாமல் முதல் டெஸ்ட்டில் விளையாடிய அதே அணியை வைத்து விளையாடுகிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்மூலம் இந்திய மண்ணில் 9 ஆண்டுக்கு பிறகு இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    2015-ம் ஆண்டு பெங்களூரு மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அப்போது இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டார். அதற்கு பின்பு இப்போதுதான் இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    • டாஸ் வென்ற வங்கதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • இந்திய அணி முதல்நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை 339 ரன்களை குவித்தது.

    இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முதல் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி முதல்நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை 339 ரன்களை குவித்தது.

    பொதுவாக சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 'டாஸ்' ஜெயிக்கும் அணிகள் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும். ஆனால் நேற்றைய டெஸ்டில் வங்காளதேச அணி டாஸ் ஜெயித்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கு 'டாஸ்' ஜெயித்து ஒரு அணி முதலில் பந்து வீசுவது 42 ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்முறையாகும். கடைசியாக 1982-ம் ஆண்டு இந்தியா- இங்கிலாந்து டெஸ்டில் இவ்வாறு நடந்தது. அந்த போட்டி டிராவில் முடிந்தது.

    • சேலத்தில் ஜூலை 11ம் தேதி வரை போட்டி நடைபெறுகிறது.
    • இந்தத் தொடர் தமிழகத்தின் 5 நகரங்களில் நடைபெற உள்ளது.

    சேலம்:

    டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் சேலத்தில் நடந்து வருகிறது. நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் தமிழகத்தின் 5 நகரங்களில் நடைபெற உள்ளது.

    சேலத்தில் ஜூலை 11-ம் தேதி வரையிலும், கோவையில் ஜூலை 13 முதல் ஜூலை 18ம் தேதி வரையிலும், திருநெல்வேலியில் ஜூலை 20 முதல் ஜூலை 24ம் தேதி வரையிலும் லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெறும்.

    இன்றைய முதல் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், அதிக முறை சாம்பியன் சேப்பாக் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், நெல்லை ராயல் கிங்ஸ் அணி டாஸ் வென்றதை தொடர்ந்து பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.

    • சேலத்தில் இன்று முதல் ஜூலை 11ம் தேதி வரையிலும் போட்டி நடைபெறுகிறது.
    • இந்தத் தொடர் தமிழகத்தின் 5 நகரங்களில் நடைபெற உள்ளது.

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 8வது தொடர் சேலத்தில் இன்று தொடங்கியது.

    நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் தமிழகத்தின் 5 நகரங்களில் நடைபெற உள்ளது.

    சேலத்தில் இன்று முதல் ஜூலை 11ம் தேதி வரையிலும், கோவையில் ஜூலை 13 முதல் ஜூலை 18ம் தேதி வரையிலும், திருநெல்வேலியில் ஜூலை 20 முதல் ஜூலை 24ம் தேதி வரையிலும் லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெறும்.

    இன்றைய முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ், அதிக முறை சாம்பியன் சேப்பாக் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், சேப்பாக் கில்லீஸ் அணி டாஸ் வென்றதை தொடர்ந்து பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, கோவை கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.

    • இந்திய அணியில் மாற்றம் ஏதும் இல்லை.
    • தென்ஆப்பிரிக்கா அணி இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குகிறது.

    கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி தொடங்கிவிட்டது. டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    இந்திய அணி:-

    1. ரோகித் சர்மா, 2. விராட் கோலி, 3. ரிஷப் பண்ட், 4. சூர்யகுமார் யாதவ், 5. ஷிவம் துபே, 6. ஹர்திக் பாண்ட்யா, 7. ஜடேஜா, 8. அக்சர் பட்டேல், 9. குல்தீப் யாதவ், 10. பும்ரா, 11. அர்ஷ்தீப் சிங்.

    தென்ஆப்பிரிக்கா அணி:

    1. டி காக், 2. ஹென்ரிக்ஸ், 3. மார்கிராம், 4. ஸ்டப்ஸ், 5. கிளாசன், 6. டேவிட் மில்லர், 7. யான்சன், 8. மகாராஜா, 9. ரபடா, 10. நோர்ஜே, 11. ஷம்சி.

    பிட்சி ரிப்போர்ட் (இயன் பிசப்)- ஆடுகளத்தில் உயிருடன் புற்கள் இல்லை. இதனால் பந்து பேட்டிற்கு எளிதாக வரும்.

    • இந்தியா 2007-ல் நடந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்று பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பை வென்றது.
    • 2014-ல் நடந்த இறுதிப்போட்டியில் டாஸ் தோற்ற இந்தியா இலங்கையிடம் தோல்வி அடைந்தது.

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு பார்படாசில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சம பலத்தில் உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளில் டாஸ் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

    இதுவரை நடந்துள்ள 8 டி20 உலக கோப்பை இறுதிப்போட்டிகளில் 7 முறை டாஸ் வென்ற அணி கோப்பையைக் கைப்பற்றி உள்ளது.

    ஒரே ஒரு முறை டாஸ் தோற்ற அணி உலகக் கோப்பையைக் கைப்பற்றியது.

    இந்தியா 2007ம் ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்று பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இதேபோல், 2014-ல் நடந்த இறுதிப்போட்டியில் டாஸ் தோற்ற இந்திய அணி இலங்கையிடம் தோல்வி அடைந்தது.

    • கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை டாஸ் வென்றது.
    • மற்ற போட்டிகளில் எல்லாம் டாசுக்கு பயன்படுத்திய காசை நேரலையில் காட்டிய நிலையில் இந்த முறை கீழே விழுந்த காசை காட்டவில்லை.

    மும்பை:

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் மும்பை டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணி விளையாடி வருகிறது.

    இந்நிலையில் டாஸ் போடுவதில் மீண்டும் மும்பை அணியால் சர்ச்சை வெடித்துள்ளது. ஏற்கனவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி டாசில் ஏமாற்று வேலை செய்ததாக முன்பே ஒரு முறை சர்ச்சை எழுந்தது.

    அதனையடுத்து ஒவ்வொரு போட்டியிலும் டாஸ் போடும்போது யார் டாஸ் வென்றார்கள் என டாஸ் போட்ட பின் கீழே விழுந்த காசை தொலைக்காட்சியில் காட்டினார்கள்.

    அந்த வகையில் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா காசை சுண்டினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஹெட்ஸ் என கேட்டார். ஆனால் மேட்ச் ரெப்ரீ கீழே விழுந்த காசை உடனடியாக கையில் எடுத்ததோடு, ஹர்திக் பாண்டியா டாசில் வென்றதாக அறிவித்தார்.

    மற்ற போட்டிகளில் எல்லாம் டாசுக்கு பயன்படுத்திய காசை நேரலையில் காட்டிய நிலையில் இந்த முறை கீழே விழுந்த காசை காட்ட வில்லை. இதை அடுத்து சமூக வலை தளங்களில் மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் டாசில் ஏமாற்று வேலை செய்து வெற்றி பெற்று விட்டதாக கூறி வருகிறார்கள்.

    ஒருவேளை உண்மையிலேயே மும்பை இந்தியன்ஸ் அணி டாசில் வென்றிருக்கலாம். ஆனால், மேட்ச் ரெப்ரீ அவசரப்பட்டு கீழே விழுந்த காசை தொலைக்காட்சியில் காட்டும் முன் கையில் எடுத்து விட்டார் என சில ரசிகர்கள் குறிப்பிட்டு மேட்ச் ரெப்ரீ தவறு செய்து விட்டதாக விமர்சித்து வருகிறார்கள்.

    5 முறை சாம்பியனான சென்னை அணி இந்த சீசனில் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 49-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொள்கிறது.

    5 முறை சாம்பியனான சென்னை அணி இந்த சீசனில் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளி பெற்றுள்ளது.

    சென்னையில் நடைபெறும் 6-வது லீக் ஆட்டம் இதுவாகும். இங்கு சென்னை அணி 5 ஆட்டங்களில் ஆடி 4-ல் வெற்றி, ஒன்றில் தோல்வி (லக்னோவுக்கு எதிராக) கண்டுள்ளது.

    இந்நிலையில் டாஸில் வெற்றி பெற பயிற்சி செய்து வருவதாக எஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

    டாஸ் குறித்து பேசிய அவர், "டாஸை உன்னால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், அதை நீ வென்றாக வேண்டும். எனவே, அதற்கு பயிற்சி எடு என டோனி பாய் கூறினார். அப்போதில் இருந்து டாஸ் போடுவதை தொடர்ச்சியாக டக் அவுட்டில் பயிற்சி செய்து வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இதுவரை 9 போட்டிகளில் வழிநடத்தியிருக்கும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், அதில் 8 முறை டாஸில் தோற்றுள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியில் மட்டும் தான் அவர் டாஸ் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐபிஎல் போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
    • லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் அணியை வழிநடத்துகிறார்.

    17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதன்படி, முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் - லக்னோ அணிகள் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மோத உள்ளன.

    கடந்த ஆண்டு 5-வது இடம் பெற்று ஏமாற்றம் அளித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் களம் இறங்குகிறது.

    கடந்த இரண்டு ஆண்டுகளும் தொடர்ச்சியாக 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் அணியை வழிநடத்துகிறார்.

    இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்குகிறது.

    • டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது
    • கருப்பு மண் இரவில் கான்க்ரீட் போலாகி விடும் என பெய்லி தெரிவித்தார்

    நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை 2023 போட்டி தொடர் கடந்த அக்டோபர் 5 அன்று தொடங்கி, நவம்பர் 19 அன்று நிறைவடைந்தது.

    இந்த போட்டி தொடரில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று வந்த இந்தியா, இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. வெற்றி உறுதி என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

    நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா உள்ளிட்ட திறமையான வீரர்கள் இருந்தும் இந்திய அணி தோல்வியுற்றது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    போட்டியின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா டாஸ் வென்றது. அதன் கேப்டன், பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் ஆடிய இந்தியாவை ஆஸ்திரேலிய அணி 240 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. பிறகு ஆடிய அந்த அணி முதலில் 3 விக்கெட்டுகளை இழந்தாலும், டிராவிஸ் ஹெட் அடித்த சதத்தினால் எளிதாக உலக கோப்பையை வென்றது.


    இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து பல முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

    இந்திய அணியின் ஆல்-ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் இது குறித்து கருத்து தெரிவித்தார்.

    அதில் அவர் கூறியதாவது:

    நான் ஆஸ்திரேலிய தேர்வாளர் ஜார்ஜ் பெய்லியை சந்தித்து உரையாடும் போது, எப்போதும் முதலில் ஆடுவதை விரும்பும் ஆஸ்திரேலிய அணியினர், டாஸ் வென்றும் ஏன் பவுலிங்கை தேர்வு செய்தார்கள் என கேட்டேன்.

    அதற்கு பெய்லி, "ஐபிஎல் (IPL) மற்றும் பல இருதரப்பு போட்டிகள் இங்கு நாங்கள் விளையாடி உள்ளோம். சிவந்த மண் நேரம் செல்ல செல்ல தளர்ந்து போகும். ஆனால், கருப்பு மண் அப்படி அல்ல; மாலை விளக்கு ஓளியில் நன்றாக தெரியும். சிவந்த மண்ணில் பனிப்பொழிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. கருப்பு மண் மதிய வேளையில் பந்தை நன்றாக 'டர்ன்' செய்யும். பிறகு இரவு நேரத்தில் கான்க்ரீட் போன்று ஆகி விடும்" என கூறினார்.

    நான் அவர் பதிலால் ஆச்சரியம் அடைந்தேன்.

    இவ்வாறு அஸ்வின் தெரிவித்தார்.

    பவுலிங், பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணியினர், டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை துல்லியமாக திட்டமிட்டு கோப்பையை வென்றதை சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

    பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட்டில் ‘டாஸ்’ போடுவதற்கு நாணயத்துக்கு பதிலாக பேட்டை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமான பேட் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. #BigBashCricket
    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படும் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 8-வது சீசன் வருகிற 19-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இந்த கிரிக்கெட் தொடரில் புதிய முறை ஒன்று புகுத்தப்படுகிறது. வழக்கமாக யார் முதலில் பேட்டிங் அல்லது பந்து வீச்சை தேர்வு செய்வது என்பதை முடிவு செய்ய, நாணயத்தை மேலே சுண்டி விட்டு (டாஸ்), பூவா-தலையா கேட்பார்கள். இதை சரியாக சொல்லும் அணியின் கேப்டன் பேட்டிங்-பந்து வீச்சை தீர்மானிப்பார்.

    ஆனால் இந்த தொடரில் நாணயத்தை வைத்து ‘டாஸ்’ போடுதல் நீக்கப்பட்டு, பேட்டை மேலே தூக்கி போட்டு முடிவு செய்ய இருக்கிறார்கள். அதாவது பேட்டின் அடிப்பாகம் மற்றும் மேல்பாகம் இவற்றில் எது முதலில் தரையில் படுகிறதோ அதன் அடிப்படையில் முடிவு செய்யப்படும். இதற்காக பிரத்யேகமான பேட் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. #BigBashCricket
    டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறையை வழக்கம் போல் தொடரும் என்று ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. #ICC #TestCricket #toss
    மும்பை:

    கிரிக்கெட் போட்டியில் எந்த அணி முதலில் பேட்டிங் செய்வது, யார் முதலில் பந்து வீசுவது என்பது ‘டாஸ்’ போட்டு தீர்மானம் செய்யப்பட்டு வருகிறது. அதாவது உள்நாட்டு அணி கேப்டன் நாணயத்தை மேலே சுண்டி விட்டு பூவா? தலையா? என்று எதிரணி கேப்டனிடம் கேட்பார். அவற்றில் இரண்டில் ஒன்றை எதிரணி கேப்டன் சொல்வார். ‘டாசில்’ எந்த அணி கேப்டன் ஜெயிக்கிறாரோ? அவர் தான் யார் முதலில் பேட்டிங் செய்வது அல்லது யார் முதலில் பவுலிங் செய்வது என்பதை முடிவு செய்வார். டெஸ்ட் போட்டியில் டாஸ் போடும் முறையை ஒழிக்கலாமா? என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆலோசனை செய்து வந்தது. இந்த நிலையில் மும்பையில் கும்பிளே தலைமையில் நேற்று நடந்த ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி கூட்டத்தில், ‘டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறையை வழக்கம் போல் தொடருவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் வீரர்கள் நடத்தை விதிமுறையை மீறினாலோ? பந்தை சேதப்படுத்துதல் போன்ற தவறான செயலில் ஈடுபட்டாலோ? தண்டனையை அதிகப்படுத்த வேண்டும்’ என்றும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.



    அத்துடன் வீரர்கள் நடத்தை விதிமுறையில் சில திருத்தங்கள் கொண்டு வரவும், ஆடுகளம் (பிட்ச்) பந்து வீச்சு மற்றும் பேட்டிங்குக்கு சம அளவில் கைகொடுக்கும் வகையில் தயாரிக்க வேண்டும். போட்டி நடுவர்களுக்கு தண்டனை வழங்குவதில் கூடுதல் அதிகாரங்கள் வழங்குவது என்பது உள்பட பல்வேறு சிபாரிசுகளை கிரிக்கெட் கமிட்டி ஐ.சி.சி.க்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த சிபாரிசுகள் குறித்து ஐ.சி.சி. செயற்குழுவில் விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்படும். #ICC #TestCricket #toss
    ×