என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "tournaments"
- ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 ஆம் தேதி உலக செஸ் தினமாக கொண்டாடப்படுகிறது.
- தமிழ்நாட்டின் செஸ் விளையாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவர் விஸ்வநாதன் ஆனந்த்
இன்று [ஜூலை 20] உலக செஸ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1924 ஆம் ஆண்டு பாரிஸில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) நிறுவப்பட்ட தேதியைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 ஆம் தேதி உலக செஸ் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த தருணத்தில் இந்தியாவில் அதிக அளவில் கிராண்ட் மாஸ்டர்களைக் கொண்ட, உலக செஸ் போட்டிகளில் பெரிதளவில் பங்குபெறும் வீரர்களை உருவாக்கும் மாநிலமாக தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்பது நினைவுகூரத்தக்கது. தமிழக கிராண்ட் மாஸ்டர்களான பிரக்ஞானந்தா, அவரது சகோதரி வைஷாலி, குகேஷ் மற்றும் பல தமிழக வீரர்களின் சாதனைகள் இந்தியாவிற்கு தொடர்ந்து பெருமை சேர்த்து வருகின்றன.
இந்தியாவில் இவர்கள் போன்ற பல சாதனையாளர்களை உருவாக்குவதிலும், தமிழ்நாட்டின் செஸ் விளையாட்டின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிப்பவர் ஐந்து முறை செஸ் உலக சாம்பியனும், மற்றும் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (FIDE) துணைத் தலைவருமான கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்.
உலக செஸ் தினத்தைக் கொண்டாடும் வகையில் நடந்த மாநில அளவிலான செஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு விஸ்வநாதன் ஆனந்த் தனது சொந்த முயற்சியில் செஸ் போர்டுகளை ஆட்டோகிராஃபுடன், அன்பளிப்பாக வழங்கினார்.
அதனுடன் செஸ் விளையாட்டில் தனது அனுபவம் குறித்த கடிதம் ஒன்றையும் அவர் மாணவர்களுக்கு வழங்கினார். அந்த கடிதத்தில் செஸ் விளையாட்டால் ஒருவரின் திறமைகள் எவ்வாறெல்லாம் வளர்கிறது என்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தியுள்ளார்,
விஸ்வநாதன் ஆனந்தின் அயராத உழைப்பும், இது போன்ற பல ஈடுபாடுகளும் மாணவர்களுக்கு செஸ் மீதான ஈடுபாட்டை அதிகரிக்கும். இதன் மூலம் நம் மண்ணில் இன்னும் பல கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகுவார்கள் என்பது நிச்சயம்.
- தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது.
- மாணவிகளுக்கு கூடைப் பந்து, பூப்பந்தாட்டம், கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் உடற்கல்வித்துறை இணைந்து ஹாக்கி வீரர் மேஜர் தியான் சந்த் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ் கான் தலைமை தாங்கினார். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் காளிதாசன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் காஜா நஜ்முதீன் ஆகியோர் உடற்கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதின் முக்கியத்துவம் குறித்து பேசினர். இயற்பியல் துறைத்தலைவர் முஸ்தாக் அஹமது கான் மற்றும் வணிகவியல் துறைத் தலைவர் நைனா முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவி களுக்கு கூடைப் பந்து, பூப்பந்தாட்டம், கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முஹம்மது, அப்ரோஸ், சேக் அப்துல்லா மற்றும் பாத்திமா கனி ஆகியோர் செய்திருந்தனர்.
- முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன.
- மதுரையை சேர்்ந்த மாணவ-மாணவிகள் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
மதுரை
மதுரையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக முதல்-அமைச்சர் பதக்க விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த விளையாட்டு போட்டியில் 1970-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் 45 பரிசுகளில் மூன்றில் ஒரு பங்கு பரிசை இந்தியன் சிலம்பப்பள்ளி மாணவ-மாணவிகள் வென்றனர். இவர்கள் தங்கம், வெள்ளி, வெண்கல பரிசுகளை வென்று சாதனை படைத்தனர். கல்லூரி மாணவர் விஜய ராஜன் சுருள்வாள், ஒற்றைக் கம்பு விளையாட்டில் தங்கமும் வெள்ளி பதக்க மும், ஜெயக்குமார் அலங்காரவீச்சில் தங்கப்பதக்கம் வென்றார்.
அஜீதா இரட்டைக் கம்பு விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றார். பள்ளிகள் அளவில் நடந்த சிலம்பாட்ட போட்டியில் பாலமுருகன் வெள்ளி பதக்கத்தையும், ஜாலினி வெள்ளிப்பதக்கமும், பொது பிரிவில் மாணவி ஏஞ்சலின் ஜெனிபர் வெண்கல பதக்கங்களையும் வென்று சாதனை படைத்தார். இவர்களில் நான்கு பேர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். பரிசு பெற்ற மாணவ மாணவிகளை தலைமை பயிற்சியாளர் மாமல்லன் எஸ்.எம்.மணி, பயிற்சியாளர் வடிவேல், சந்திரா, ஒருங்கி ணைப்பாளர் நிஜாமுதீன், பயிற்சியாளர்கள் கராத்தே கண்ணன், கனிராஜ் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி னர்.
- ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 17-ந்தேதி கபடி, சிலம்பம், இறகுப்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகள்.
- 3-ம் பரிசாக ரூ.1000-ம் வழங்கப்படுகிறது.
தஞ்சாவூா்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2022-2023-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான குழு விளையாட்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் மற்ற பிரிவுகளுக்கான போட்டிகள் நடைபெற உள்ளது.
அதன்படி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் (12 வயது முதல் 19 வயது வரை) நாளை ( வெள்ளிக்கிழமை ) பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.
ம மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு கிடையாது. மாற்றுத்திறனாளிகளுக்கு 50மீட்டர் ஓட்டப்பந்தயம், இறகுப்பந்து, பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தம், எறிபந்து, செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெறுகிறது.
கபடி விளையாட்டு போட்டிகள் இருபாலருக்கும் 13-ந்தேதி அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கான தடகள போட்டிகள் (17 முதல் 25 வயது வரை), 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.
பொதுப்பிரிவினருக்கு (15 முதல் 35 வயது வரை), ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 17-ந்தேதி கபடி, சிலம்பம், இறகுப்பந்து, கையுந்துபந்து ஆகிய விளையாட்டு போட்டிகள் அன்னை சத்யா விளையாட்டு அரங்கிலும், கிரிக்கெட் பூண்டி புஷ்பம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் நடைபெறுகிறது.
அரசு ஊழியர்களுக்கு (வயது வரம்பு இல்லை) கபடி, இறகுப்பந்து, கையுந்துபந்து, செஸ், தடகளம் ஆகிய விளையாட்டு போட்டிகள் இருபாலருக்கும் 25-ந்தேதி (சனிக்கிழமை) அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
மாவட்ட அளவில் தனிநபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு முதல்பரிசாக ரூ.3 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.1000-ம், வழங்கப்படுகிறது.
மேலும் மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிக்குஅழைத்துச்செல்லப்படுவார்கள்.
இந்த விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்ள முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கரூரில் மாநில அளவிலான வளைய பந்து போட்டிகள் நடைபெற்றன
- இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்
கரூர்:
கரூரில் தமிழ்நாடு வளைய பந்து சங்கம் மற்றும் கரூர் புலியூர் நெல்சன் வளைய பந்து குழு சார்பில் 45-வது மாநில அளவிலான மிக இளையோருக்கான வளையபந்து போட்டி கரூர் வெங்கமேடு அன்னை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை தொடங்கியது.இருநாட்கள் நடைபெறும் போட்டிக்கு தமிழ்நாடு வளையபந்து சங்கச் செய–லாளர் டி.சங்கர் தலைமை தாங்கினார். கரூர் அன்னை வித்யாலயா மேல்நிலைப் பள்ளி தாளா–ளர் எம்.கீதா மணிவண்ணன், தமிழ் நாடு வளையபந்து சங்க பொருளாளர் அனந்த–கிருஷ்ணன், இணைச்செய–லாளர்கள் கீர்த்தி–வாசன், உமாபதி ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
போட்டியை கிருஷ்ண–ராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சிவகாமசுந்தரி பங்கேற்று போட்டியை துவக்கி வைத்து பேசி–னார். போட்டியில் கரூர், சேலம், நாமக்கல், தர்ம–புரி, திருநெல்வேலி, திருச்சி, ராமநாதபுரம், தஞ்சை உள்ளிட்ட 22 மாவட்டங்களைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற–னர்.
போட்டியில் வெற்றி–பெறும் மாணவ, மாணவி–களுக்கு இன்று பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட உள்ளன. போட் டிக்கான ஏற்பாடுகளை புலியூர் நெல்சன் வளைய பந்துகுழுவின் தலைவர் கார்த்தி, இணைச் செ–யலா–ளர் ரூசோ உள்ளிட்டோர் செய்துள்ள–னர்.
- நம்பியூர் குமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 2 மற்றும் 3-ந் தேதிகளில் மேற்கு மண்டல அளவிலான சீனியர் (ஆண்கள்) கைப்பந்து போட்டி நடைபெற்ற உள்ளது.
- இத்தகவலை குமுதா பள்ளியின் தாளாளரும், கமிட்டி சேர்மனுமான கே.ஏ.ஜனகரத்தினம் தெரிவித்தார்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் குமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 2 மற்றும் 3-ந் தேதிகளில் மேற்கு மண்டல அளவிலான சீனியர் (ஆண்கள்) கைப்பந்து போட்டி நடைபெற்ற உள்ளது.
தமிழ்நாடு மாநில கைப்பந்து சங்கத்தால் நடத்தப்படும் மேற்கு மண்டல அளவிலான கைப்பந்து சீனியர் (ஆண்கள்) சேம்பியன்ஷிப் போட்டிகள் ஈரோடு, கோவை, தர்மபுரி, கரூர், நீலகிரி, நாமக்கல், சேலம், திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்ற அணிகள் பங்கேற்று விளையாட உள்ளனர் .
ஈரோடு மாவட்ட கைப்பந்து சங்கத்தின் பரிந்துரைப்படி குமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போட்டிகள் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி–க்கான ஏற்பாடுகளை பள்ளியின் செயலாளர் டாக்டர் அரவிந்தன், பள்ளியின் முதல்வர் மஞ்சுளா, துணைமுதல்வர் வசந்தி, உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் செய்து வருகின்றனர்.
இத்தகவலை குமுதா பள்ளியின் தாளாளரும், கமிட்டி சேர்மனுமான கே.ஏ.ஜனகரத்தினம் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்