என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Town"
- தமிழகம் முழுவதும் பயன்படுத்த 1000 புதிய பஸ்களை வாங்கவும், 500 பழைய பஸ்களை புதுப்பிக்க வும் ரூ.500 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது.
- இதன் மூலம் தமிழகம் முழுவதும் 8 கோட்டங்க ளிலும் சேதம் அடைந்த பஸ்கள் புனரமைக்கப்படு கிறது.
சேலம்:
தமிழகம் முழுவதும் பயன்படுத்த 1000 புதிய பஸ்களை வாங்கவும், 500 பழைய பஸ்களை புதுப்பிக்க வும் ரூ.500 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் 8 கோட்டங்க ளிலும் சேதம் அடைந்த பஸ்கள் புனரமைக்கப்படு கிறது.
வெளிர் மஞ்சள் நிறம்
அதன் ஒரு பகுதியாக பழைய வண்ணம் மாற்றப்பட்டு தற்போது புதிதாக வர உள்ள இந்த பஸ்கள் வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட உள்ளன. விரைவில் இயக்கத்திற்கு வர உள்ள இந்த பஸ்களுக்கு மஞ்சள் நிற பெயிண்ட் அடிக்கப் பட்டு வருகிறது.
இந்த பஸ்கள் சென்ைன, பெங்களூர், கரூரில் தயார் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி எட்டு கோட்டங்க ளிலும் 500 பஸ்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. அதில் சேலம் சரகத்தில் மட்டும் 100 பழைய டவுன் பஸ்கள் புனரமைக்கப்படு கிறது.
நவீன முறையில் வடிவமைப்பு
இது குறித்து அரசு போக்குவரத்து கழக அதி காரிகள் கூறுகையில், சேலம் கோட்டத்தில் 1047 பஸ்களும், தருமபுரி கோட்டத்தில் 853 பஸ்கள் என மொத்தம் 1900 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. இதில் 14 லட்சம் பயணிகள் பயணம் செய்கிறார்கள். தினசரி சாதாரண கட்டண டவுன் பஸ்களில் 6 லட்சம் மகளிர் பயணம் செய்கிறார்கள்.
பழைய பஸ்கள் தற்போ துள்ள பயணிகள் ரச ணைக்கு ஏற்ப நவீன முறை யில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. புனரமைக்கப் பட்ட பஸ்களுக்கு கீழ் பகுதியில் வெளிர் கிரே கலரிலும், மேல் பகுதியில் நீல நிறத்திலும் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது.
பைபர் சீட்
தற்போது பயன்பாட்டில் உள்ள பஸ்களில் இருக்கை கள் இரும்பு ரெக்சினால் உள்ளது . புனரமைக்கப்பட்ட டவுன் பஸ்களில் பைபர் சீட் அைமக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, கும்பகோ ணம் , திருநெல்வேலி கோட்ட டவுன் பஸ்களில் பைபர் இருக்கைகள் உள்ளன.
சேலத்தில் பைபர் சீட் அமைப்பது இதுவே முதல் முறை. இந்த பஸ்கள் விரை வில் மக்கள் பயன்பட்டுக்கு வரும் வகையில் அதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நெல்லை டவுன் பகுதியில் தொண்டர் சன்னதி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
- இந்த கோவிலின் சுற்றுப்புற சுவர் பகுதியை ஒட்டி வண்டிப்பேட்டை தெரு அமைந்துள்ளது. இந்த தெருவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ள நிலையில் கோவில் சுற்று சுவரில் பெரும்பாலானோர் சிறுநீர் கழிக்கின்றனர் என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை டவுன் பகுதியில் தொண்டர் சன்னதி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த கோவிலின் சுற்றுப்புற சுவர் பகுதியை ஒட்டி வண்டிப்பேட்டை தெரு அமைந்துள்ளது. இந்த தெருவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ள நிலையில் கோவில் சுற்று சுவரில் பெரும்பாலானோர் சிறுநீர் கழிக்கின்றனர் என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இரவு நேரங்களில் சிலர் மது அருந்திவிட்டு அந்த பகுதியில் மது பாட்டில்களை வீசி எறிவது உள்ளிட்ட விரும்பத் தகாத நிகழ்வுகள் அங்கு அதிகமாக நடக்கின்றன என்றும் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தது.
இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஆலய சுற்றுசுவர் பகுதியை சுத்தப்படுத்தி அங்கு கிடந்த மது பாட்டில்களை அகற்றினர்.
மேலும் அங்கு யாரும் சிறுநீர் கழிக்காதவாறு கிருமி நாசினி தெளித்து ப்ளீச்சிங் பவுடர் தூவினர். மாநகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு அந்த பகுதிகள் வசிக்கும் இந்து அமைப்பினர் மற்றும் அனைத்து பொதுமக்களும் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.
இரவு நேரங்களில் அந்த தெருவில் செல்ல முடியாத நிலைை இருந்ததாகவும், தற்போது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கையால் நிம்மதியாக செல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் அவர்களது ஏற்பாட்டில் ஆலயத்தின் சுற்றுப்புற சுவர்களில் சுவாமி ஓவியங்கள் வரைவதற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.
- நெல்லை மாநகர பகுதி யில் கழிவு நீர் ஓடைகளை தூர்வாரும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
- டவுன் ஆர்ச் முதல் நெல்லையப்பர் கோவிலுக்கு செல்லும் சாலை பகுதியில் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் கிடந்த கழிவுநீர் ஓடைகள் சிறிய பொக்லைன் எந்திரம் மூலமாக தூர்வாரப்பட்டது.
நெல்லை :
நெல்லை மாநகர பகுதி யில் கழிவு நீர் ஓடைகளை தூர்வாரும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
நெல்லை மண்டலம் 25- வது வார்டுக்கு உட்பட்ட டவுன் நயினார் குளம், எஸ்.என்.ஹைரோடு உள்ளிட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக கழிவு நீர் ஓடைகள் தூர்வாரப்படாமல் கிடப்பதாகவும், தற்போது அய்யப்ப பக்தர்களின் வருகை நெல்லையப்பர் கோவிலுக்கு அதிக அளவில் இருப்பதால் அப்பகுதியில் உள்ள கழிவு நீர் ஓடைகளை சுத்தம் செய்யும்படியும் அந்த வார்டு கவுன்சிலர் ராமகிருஷ்ணன் மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்திக்கு கோரிக்கை விடுத்தார்.
அதன் அடிப்படையில் கடந்த சில நாட்களாக நயினார் குளம் சாலையில் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் அறிவுறுத்தலின் பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் கழிவுநீர் ஓடைகள் தூர்வாரப்பட்டன.
இன்று டவுன் ஆர்ச் முதல் நெல்லையப்பர் கோவிலுக்கு செல்லும் சாலை பகுதியில் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் கிடந்த கழிவுநீர் ஓடைகள் சிறிய பொக்லைன் எந்திரம் மூலமாக தூர்வாரப்பட்டது.
- கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீ லட்சுமி 10-ம் வகுப்பு படித்த வருகிறார்.
- சீன வீராங்கனை சாதனையை 2 நிமிடம் 41 வினாடிகளில் கியூபிக்கினை சரி செய்து அதனை முறியடித்து சாதனை படைத்தார்
நெல்லை:
நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீ லட்சுமி 10-ம் வகுப்பு படித்த வருகிறார். இவர் கியூபிக் கன சதுர போட்டியில் சீன வீராங்கனை எஸ்டென்டியூ 3 நிமிடம் 47 நொடிகள் செய்த கன சதுரத்தை மாணவி ஸ்ரீ லட்சுமி 2 நிமிடம் 41 வினாடிகளில் கியூபிக்கினை சரி செய்து அதனை முறியடித்து சாதனை படைத்தார்.
மேலும் இந்த சாதனையை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறவும் அவர் முயற்சி செய்து வருகிறார். மாணவி ஸ்ரீ லட்சுமியை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராணி உடற்கல்வி ஆசிரியர்கள் பசுங்கிளி, கஸ்தூரி, ஆசிரியர்கள் லில்லி, ஜோஸ்பின் உட்பட பலர் பாராட்டினர்.
- நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த 28- ந்தேதி முதல் 103 பிரிவு அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது
- ஏற்கனவே 4 மண்டலங்களிலும் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த 28- ந்தேதி முதல் 103 பிரிவு அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது.
இதனையொட்டி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாநகர பகுதியில் ஏற்கனவே 4 மண்டலங்களிலும் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது கூடுதலாக ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 5-வது சிறப்பு முகாம் டவுன் பிரிவுக்கு உட்பட்ட நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் கீழ ரதவீதியில் அம்மன் சன்னதி அருகில் இன்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது.
இதில் மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை திறந்து வைத்து மின் நுகர்வோர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தொடங்கி வைத்தார். செயற்பொறியாளர் (நகர்ப்புற கோட்டம்) முத்துக்குட்டி. உதவி செயற்பொறியாளர் சங்கர், செயற்பொறியாளர்( டவுண்) ராஜகோபால் மற்றும் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
- நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனது வார்டான டவுன் 16-வது வார்டில் இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
- அரசன்நகர், லாலுகாபுரம், அமிர் சாகிப்நகர், தொண்டை மான் தெரு, சிக்கந்தர் மேலத்தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களுக்கு சென்று சேதமான வாறுகால்கள், பழுதடைந்த கட்டிடங்களை ஆய்வு செய்தார்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனது வார்டான டவுன் 16-வது வார்டில் இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வார்டுக்கு ட்பட்ட அரசன்நகர், லாலுகாபுரம், அமிர் சாகிப்நகர், தொண்டை மான் தெரு, சிக்கந்தர் மேலத்தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களுக்கு சென்று சேதமான வாறுகால்கள், பழுதடைந்த கட்டிடங்களை ஆய்வு செய்தார்.
அப்போது அப்பகுதி பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்தும், தேவைகள் குறித்தும், குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து அங்குள்ள டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தவாறே வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
ஆய்வின் போது நெல்லை மண்டல உதவிகமிஷனர் வெங்கட்ராமன், உதவி பொறியாளர் பட்டுராஜன், சுதாகர் அலுவலகர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- பக்கத்தில் அமர்ந்திருப்ப வர்களிடம், இந்த ஸ்டாப் வந்ததும் கொஞ்சம் சொல்லுங்கள் அல்லது கண்டக்டரிடம் முன்கூட்டியே சொல்லி விடுகின்றனர்.
- அப்படி இருந்தும் அவர்கள் மனதில் தோன்றுவது எப்போது நாம் இறங்கும் இடம் வரும்? அல்லது கடந்து விட்டோமா? என்ற பதட்டம் வேறு வரும்.
மாநகர, நகராட்சியில் டவுன் பஸ்களில் பயணம் செய்யும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
உள்ளூர் வாசிகள் தங்களின் இருப்பிடத்திற்கு செல்ல டவுன் பஸ்களில் பயணம் செய்யும்போது அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் சுதாரித்துக் கொண்டு யாரையும் எதிர்பார்க்காமல் இறங்கி விடுவார்கள். ஆனால் வெளியூரில் இருந்து வரும் பயணிகள் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு டவுன் பஸ்களில் பயணம் செய்தால், அவர்கள் இறங்க வேண்டிய இடம் எங்கு இருக்கிறது? என தெரியாமல் தடுமாறுவார்கள்.
பக்கத்தில் அமர்ந்திருப்ப வர்களிடம், இந்த ஸ்டாப் வந்ததும் கொஞ்சம் சொல்லுங்கள் அல்லது கண்டக்டரிடம் முன்கூட்டியே சொல்லி விடுகின்றனர். அப்படி இருந்தும் அவர்கள் மனதில் தோன்றுவது எப்போது நாம் இறங்கும் இடம் வரும்? அல்லது கடந்து விட்டோமா? என்ற பதட்டம் வேறு வரும்.
கண்டக்டரை பார்த்து கேட்கனுமா? அவர் வேறு முன்னாடியே நின்னுக்கிட்டு இருக்காரு. இறங்க வேண்டிய நாம் முன்னால் அமர்ந்திருந்தால் கண்டக்டர் பின்னாடி இருப்பார். இந்த படபடப்பு தினந்தோறும் வெளியூரில் இருந்து நகரத்திற்கு வரும் பயணிகளின் மனதில் அன்றாடம் இருக்கத்தான் செய்கிறது.
பஸ்சில் தூக்கம்
மேலும் ஒரு சில டவுன் பஸ்களில் கண்டக்டர் பேருந்து நிற்கும் இடத்தின் பெயரை சொல்வார். ஆனால் அது அவருக்கே கேட்காது. காரணம் பஸ் ஒலிபெருக்கியில் ஒலிக்கும் பாடல்கள் தான்.
ஒரு சிலர் பஸ்சில் ஏறியதும் தூங்கி விடுகிறார்கள். சிலர் பயணத்தின்போது கவனக்குறைவாக இருக்கி றார்கள். இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாமல் இருக்க வேண்டி மெட்ரோ ரெயில்களில் பயணிகளின் நலன் கருதி அடுத்து வரும் நிறுத்தம் குறித்து அறிவிக்கப்படுகிறது. மின்சார ரெயில்கள், பயணிகள் ரெயில்களில் டிஸ்பிளேயில் காண்பிக்கப்ப டுகிறது.
ஜி.பி.எஸ்.கருவி
இந்த நடைமுறையை பின்பற்றி தமிழகத்தில் உள்ள நகர பஸ்களிலும் அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.சென்னை மாநகர போக்குவரத்து கழகம், சேலம், நெல்லை, மதுரை கோட்ட நகர பஸ்களில் முதல் கட்டமாக 100 பஸ்களில் ஸ்பீக்கர் பொறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
தற்போது இது விரிவுப்ப டுத்தப்பட்டு, மேலும் பல டவுன் பஸ்களில் ஸ்பீக்கர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக டவுன் பஸ்களில் ஜி.பி.எஸ் கருவியுடன் கூடிய ஸ்பீக்கர் டிரைவரின் அருகிலும், நடுப்பகுதி, பின் படிக்கட்டின் எதிரில் என 3 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளது.
பஸ்சை இயக்கியவுடன் பஸ் புறப்படும் இடத்தில் இருந்து சேரும் இடம் வரை நிறுத்துமிடம் குறித்து ஒலி பெருக்கியில் தெரிவிக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு நிறுத்தம் நெருங்கும் முன்பாக பஸ் நிறுத்தம் குறித்து அறிவிக்கிறது. குறிப்பாக நாம் இறங்க வேண்டிய இடம் வருவதற்கு முன்பாகவே அடுத்து வருவது அண்ணா பூங்கா என்று, ஒவ்வொரு இடம் வருவதற்கு முன்பாக ஒலி பெருக்கி மூலம் தெரிவிக்கிறது.
15 பஸ்களில்...
சேலம் மாநகரில் சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஜங்சன், ஏற்காடு அடிவாரம் வரை இயங்கும் சுமார் 15 பஸ்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல பஸ்களில் ஸ்பீக்கர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த புதிய வசதி பயணிகள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.
- நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ரத வீதிகளில் வடக்கு ரத வீதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
- தண்ணீர் தேங்குவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து உதவி கமிஷனர் வெங்கட்ராமன் தலைமையில் ஆலோசிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ரத வீதிகளில் வடக்கு ரத வீதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்த ரத வீதியில் லேசான சாரல் மழை பெய்தாலே குளம் போல தண்ணீர் தேங்கி கிடக்கும். இதனால் அந்த பகுதியில் சாலையோர கடை வைத்திருப்பவர்களும், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்களும் மிகவும் சிரமம் அடைந்து வருவதாக தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து அந்த பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க நிரந்தர தீர்வு காணும் படி மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, உதவி கமிஷனர் வெங்கட்ரா மனிடம் அறிவுறுத்தினார். அவரது வழிகாட்டுதலின் பேரில் நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையிலான பணியாளர்கள் இன்று வடக்கு ரத வீதியில் தேங்கி கிடந்த மழைநீரை மாநகராட்சி லாரியை கொண்டு மோட்டார் மூலம் உறிஞ்சி அப்புறப்படுத்தினர்.
தொடர்ந்து அந்த பகுதியில் தண்ணீர் தேங்குவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து உதவி கமிஷனர் வெங்கட்ராமன் தலைமையில் ஆலோசிக்கப்பட்டது.
இது தொடர்பாக அப்பகுதி யில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளிடமும் கருத்து கேட்கப்பட்டது. மேலும் ஒரு சில இடங்களில் தேங்கி கிடந்த மழை நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக அந்த நீரில் மருந்து தெளிக்கும் பணியிலும் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.
- குமாரபாளையம் பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டெருமையை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.
- காட்டெருமை நேற்று மாலை 6 மணியளவில் சமயசங்கிலி தடுப்பணை பகுதியில் உள்ளதாக தகவல் கிடைத்தது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் கத்தேரி பிரிவு அருகே காட்டெருமை மேய்ந்துள்ளது. இதை கண்ட பொதுமக்கள் சிலர் அச்சத்தில் அங்கிருந்து விலகி சென்றனர். இது குறித்து தீயணைப்பு படை யினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தரப்பட்டது.
டீச்சர்ஸ் காலனி, சிவசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் எருமையை பார்த்ததாக பலர் கூறியதால் இந்த பகுதிகளில் சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்ட வனத்துறை அலுவலர்கள், ஊழியர்கள் ஈரோடு மாவட்ட வன அலுவலர் கவுதம் தலைமையில் 40-க்கும் மேற்பட்டோர் தேடி வருகின்றனர்.
இது குறித்து நாமக்கல் மாவட்ட வன சரக அலுவலர் பெருமாள் கூறுகையில், இந்த காட்டெருமை ஏற்காடு பகுதியில் இருந்து மெல்ல மெல்ல இந்த பகுதிக்கு வந்துள்ளது.
ட்ரோன் கேமரா மூலமும் தேடி வருகிறோம். இப்பகுதியில் கரும்பு தோட்டங்கள் அதிகம் உள்ளதால் அதற்குள் புகுந்துள்ளது. விரைவில் பிடித்து விடுவோம் என்றார்.
இதனிடையே காட்டெருமை நேற்று மாலை 6 மணியளவில் சமயசங்கிலி தடுப்பணை பகுதியில் உள்ளதாக தகவல் கிடைத்தது. வனத்துறையினர் அங்கு சென்று காட்டெருமையை மடக்கிப் பிடித்தனர். பின்னர் காட்டெருமை சக்திய மங்கலம் காட்டுப்பகுதியில் விடப்பட்டது.
- விநாயகர் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
- மாநகர் பகுதி முழுவதும் போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் தலைமையில் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
நெல்லை:
விநாயகர் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
இதனையொட்டி நெல்லை மாநகர பகுதிகளில் மட்டும் 120-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.
வருகிற 4-ந்தேதி அனைத்து விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தாமிரபரணி ஆற்றில் விஜர்சனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக மாநகர் பகுதி முழுவதும் போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் தலைமையில் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்ய ஊர்வலமாக எடுத்து செல்லப்படும் சாலைகளில் போலீசார் பாதுகாப்பு கொடி அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி இன்று நெல்லை டவுன் ஆர்ச் முன்பிருந்து போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கவச உடையணிந்து கொடி அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
ஆர்ச் முன்பு தொடங்கிய அணிவகுப்பு பாரதியார் தெரு, வ.உ.சி. தெரு வழியாக 4 ரத வீதிகள் சென்று நெல்லையப்பர் கோவில் முன்பு முடி வடைந்தது.
- நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோடு தொட்டி பாலம் வாய்க்கால் பகுதியில் சமீபத்தில் புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டது.
- தற்போது இந்த பாலம் சேதம் அடைந்து இருப்பதால் புதிதாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
நெல்லை:
நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோடு தொட்டி பாலம் வாய்க்கால் பகுதியில் சமீபத்தில் புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டது.
இந்த பாலத்தில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. தென்காசி மற்றும் கடையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும், ஏராளமான சரக்கு வாகனங்களும் இந்த சாலை வழியாகத்தான் சென்றாக வேண்டும்.
தற்போது இந்த பாலம் சேதம் அடைந்து இருப்பதால் புதிதாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகள் சிரமத்தை போக்கும் விதமாக பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்க தலைவர் முகமது அயூப் கோரிக்கை விடுத்துள்ளார்.
- நெல்லை டவுன் ஜவஹர் தெருவில் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளி இயங்கி வருகிறது.
- இப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
நெல்லை:
நெல்லை டவுன் ஜவஹர் தெருவில் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளி இயங்கி வருகிறது.
இங்கு 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளி இருக்கும் இடம் தனியாருக்கு பாத்தியப்பட்டது ஆகும். இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் ஒரு தரப்பினருக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து வழக்கில் வெற்றி பெற்றவர்கள் இன்று நீதிமன்ற பணியாளர்களுடன் பள்ளிக்கு சீல் வைக்க சென்றனர்.
இதை அறிந்த அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பள்ளியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்