என் மலர்
நீங்கள் தேடியது "train"
திருவள்ளூர்:
நெடுஞ்சாலைத் துறையினர் சாலைகள் மற்றும் பாலப்பணிகள் முறையாகவும், தரமாகவும் நடைபெறுகிறதா என உறுதி செய்ய உள்தணிக்கை என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கட்டுமான மற்றும் பராமரிப்பு, நபார்டு மற்றும் கிராமச்சாலைகள், தேசிய நெடுஞ்சாலையில் மாநில அரசு நிதியில் செயல்படும் பணிகள் மற்றும் சென்னை பெருநகர திட்ட அலகுகளில் நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டது.
இந்த நிலையில் திருவள்ளூர் அடுத்த புட்லுார் பகுதியில் உள்ள ரெயில்வே கேட் மற்றும் காக்களூர் புட்லுாரை இணைக்கும் வகையில், 18 கோடி ரூபாயில் 620 மீட்டர் நீளம், 22 மீட்டர் அகலம் உடைய மேம்பாலம் கட்டும் பணி, நடந்து வருகிறது. இதில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் வகையில் பணி நிறைவடைந்து விட்டது.
இதேபோல், நெடுஞ்சாலை துறை பகுதியில் உள்ள பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. மின்கம்பங்களால் தாமதமான பணிகள் தற்போது மின்கம்பங்கள் அகற்றப்பட்டு மேம்பால பணிகள் விரைந்து நடந்து வருகின்றன.
இந்த மேம்பால பணிகளை நெடுஞ்சாலைத்துறையைச் சேர்ந்த சென்னை வட்ட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் ப.செந்தில் தலைமையில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப்பொறியாளர் ம.சத்தியசீலன் மற்றும் நான்கு உதவி கோட்டப்பொறியாளர்கள், 8 உதவிப்பொறியாளர்கள் அடங்கிய உள் தணிக்கை குழுவினர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இதேபோல் பட்டாபிராம் பகுதியில் ரெயில்வே கேட்டில் நடந்து வரும் மேம்பால பணிகளையும் ஆய்வு செய்தனர். மேலும், திருவலங்காடு பகுதியில் நடந்து வரும் சாலை மேம்பால பணிகள் உட்பட தமிழகத்தில் நடந்து வரும் சாலைபணிகளை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என்று உள் தணிக்கை குழுவினர் தெரிவித்தனர்.
இந்த ஆய்வின் போது செங்கல்பட்டு கிராம சாலைகள் கோட்டப் பொறியாளர் ராமச்சந்திரன், உதவி கோட்டப் பொறியாளர் இளங்கோ, உதவி பொறியாளர் டில்லிபாபு உடன் இருந்தனர்.
சென்னை:
நமது உரிமை காக்கும் கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் செங்கை பத்மநாபன் விடுத்துள்ள அறிக்கையில், 60 ஆண்டுகள் இந்நாட்டின் வளர்ச்சிக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ காரணமாக இருந்த மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட ரெயில் பயண கட்டண சலுகையை ரத்து செய்த மத்திய அரசுக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.
கொரோனா காலத்தில் இச்சலுகை ரத்து செய்யப்பட்ட காரணத்தால் இரண்டு ஆண்டுகளில் ரூ.3000 கோடி கூடுதல் வருவாய் ரெயில்வே துறைக்கு கிடைத்த காரணத்தால் இந்த ரத்து தொடரும் என்பது பொறுப்பற்ற அறிவிப்பு, இதனை மறுபரிசீலனை செய்து உடனடியாக சலுகை ரத்தை வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
வேலூர்:
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதாக ரெயில்வே துறை ஏற்கனவே அறிவித்தது.
அதன்படி அரக்கோணம் ரெயில்வே யார்டு பகுதியில் பகுதிவாரியாக பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால், கனரக தொழில்நுட்ப எந்திரங்களை கொண்டு, 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பராமரிப்பு பணி நடைபெறும் நாட்களில் சென்னை செல்லும் 3 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. நேற்றும் இன்றும் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவிலிருந்து சென்னை செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ், கோவையிலிருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், பெங்களூரு-சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் காட்பாடியில் நிறுத்தப்பட்டன.
இதனால் பயணிகள் கடுமையாக அவதி அடைந்துள்ளனர். இந்த ரெயில்களில் சென்னைக்கு வரும் பயணிகள் வசதிக்காக காட்பாடி ரெயில் நிலையத்திலிருந்து சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
3 பஸ்கள் மட்டுமே காட்பாடி ரெயில் நிலையத்தில் சென்னை செல்வதற்கு தயார் நிலையில் இருக்கிறது.
உடைமைகளுடன் ரெயிலில் வசதியாக வரும் பயணிகள் காட்பாடியில் இருந்து சென்னைக்கு வர படாத பாடுபடுகின்றனர். அவர்கள் பஸ்களில் உடமைகளை வைக்க இடமில்லாமல் திண்டாடுகின்றனர்.
3 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதால் மற்ற பயணிகள் காட்பாடியில் இருந்து ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வேலூர் புதிய பஸ் நிலையத்திற்கு வருகின்றனர். அங்கிருந்து சென்னைக்கு பஸ்சில் செல்கின்றனர்.
சென்னை வரை ரெயிலில் டிக்கெட் எடுத்திருந்தாலும் பஸ்சில் தனியாக டிக்கெட் எடுக்க வேண்டிய நிலை உள்ளது.
இதேபோல வருகிற 31-ந்தேதி மற்றும் ஜூன் மாதம் 1, 7, 8-ந்தேதிகளில் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அப்போது கோவை இன்டர்சிட்டி, லால்பாக், பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்களில் ரெயில்களை சென்னை வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திண்டிவனம்:
மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு அரக்கோணம், செங்கல்பட்டு வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து ஒன்று நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. இந்த ரெயிலில் பயணிகள் அமர்ந்திருந்த 6-வது மற்றும் 7-வது பெட்டிகளில் உள்ள கழிவறையில் தண்ணீர் இல்லை. இந்தக் கழிவறைகளில் தண்ணீர் நிரப்பும் படி பயணிகள் ஒவ்வொரு ரெயில் நிலையமாக கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் தண்ணீர் நிரப்பவில்லை.
இந்த ரெயில் திண்டிவனம் ரெயில் நிலையத்திற்கு இரவு 9.30 மணிக்கு ரெயில் நிலையம் வந்தது. அங்கும் தண்ணி நிரப்பாமல் வேகமாக ரெயில் புறப்பட்டது.
இதனால் தர்ம சங்கடத்திற்கு உள்ளான பயணிகள் ஆத்திரமடைந்து திண்டிவனம் பாலத்தின் மீது ரெயில் போகும் போது அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினர்.
உடனே ரெயில் கார்டு மற்றும் ரெயில்வே பாதுகாப்பு போலீசார் இறங்கி வந்த பயணிகளிடம் கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே போலீசார் திண்டிவனம் ரெயில் நிலையத்தில் தண்ணீர் நிரப்பும் வசதி இல்லை.
விழுப்புரம் ரெயில் நிலையம் சென்றதும் தண்ணீர் நிரப்புவதாக கூறி பயணிகளை சமாதானப்படுத்தினர். அதன் பின்னர் ரெயில் விழுப்புரம் நோக்கி புறப்பட்டது. இதனால் அந்த ரெயில் அரை மணி நேரம் காலதாமதமாக சென்றது.
பொதுமக்கள் அனைவரும் குறைந்த செலவில் அதிக தூரம் பயணம் செய்யும் போக்குவரத்திற்கு உறுதுணையாக இருக்கும் ரெயில்களில் தண்ணீர் பிரச்சினை போன்ற சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படுவது பொதுமக்களின் மத்தியில் சஞ்சலத்தை ஏற்படுத்தியது. எனவே உரிய அதிகாரிகள் இதில் தலையிட்டு இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
திருப்பூர்:
திருநெல்வேலி மேட்டுப்பாளையம் வாராந்திர ரெயில் (எண்.06030) வருகிற 2-ந் தேதி முதல் சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். அதுபோல் மேட்டுப் பாளையத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் ரெயில் (எண்.06029) வருகிற 3-ந் தேதி முதல் சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
அந்த ரெயில்கள் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கோவை ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
பயணிகள் பாதுகாப்பு கருதி அரக்கோணம் யார்டில் வருகிற 31 மற்றும் 1-ந்தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக சென்ட்ரல்- அரக்கோணம் மார்க்கத்தில் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்ட்ரல்-அரக்கோணம் மார்க்கத்தில் 5 ரெயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளன. 6 மின்சார ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மூர்மார்க்கெட்டில் இருந்து அரக்கோணத்திற்கு காலை 8.20 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கடம்பத்தூர்-அரக்கோணம் இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 9.10 மணிக்கு அரக்கோணம் புறப்படும் ரெயில் திருவள்ளூர்-அரக்கோணம் இடையே ரத்து. மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 9.50 மணிக்கு அரக்கோணம் புறப்படும் மின்சார ரெயில் கடம்பத்தூர்-அரக்கோணம் இடையே ரத்து.
மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 10 மணிக்கு திருத்தணி புறப்பட்டு செல்லும் ரெயில் திருவள்ளூர்-திருத்தணி இடையே ரத்து. காலை 11 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் புறப்படும் ரெயில் கடம்பத்தூர்-அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.
31, 1-ந்தேதிகளில் காலை 10 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து மூர்மார்க்கெட் புறப்படும் மின்சார ரெயில் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 10.15 மணிக்கு புறப்படும் திருத்தணி-மூர்மார்க்கெட் முழுவதும் ரத்து. காலை 11.10 மணிக்கு புறப்படும் அரக்கோணம்-திருத்தணி முழுவதும் ரத்து.
பகல் 12 மணிக்கு அரக்கோணம்-மூர்மார்க்கெட் புறப்படும் ரெயில் முழுவதும் ரத்து. பகல் 12.35 மணிக்கு திருத்தணி-மூர்மார்க்கெட் ரெயில் முழுவதும் ரத்து. பகல் 1.30 மணிகு அரக்கோணம்-மூர்மார்க்கெட் புறப்படும் மின்சார ரெயில் முழுவதும் ரத்து.
மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிறப்பு ரெயில்கள் கடம்பத்தூர்- மூர்மார்க்கெட், திருவள்ளூர், கடம்பத்தூர், அரக்கோணம் இடையே இயக்கப்படுகின்றன.
உடுமலை:
வெளியூர்களுக்கு குடும்பத்துடன் செல்லும் பயணிகள் பெரும்பாலும் ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர். அதனால் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலையை பொறுத்தவரை, பாலக்காடு-திருச்செந்தூர், பாலக்காடு-சென்னை, கோவை-மதுரை, திருவனந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளம், பாலக்காடு, உடுமலை வழியாக மதுரை வரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் உடுமலை வழியாக இயக்கப்பட்டு வருகின்றன.
தினசரி இயக்கப்பட்டு வரும் இந்த ரெயில்கள் மறு மார்க்கத்திலும் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர தற்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, பொள்ளாச்சி, உடுமலை, மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி வழியாக நெல்லை வரை வாராந்திர சிறப்பு ரெயிலாக வாரத்தில் ஒருநாள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.
உடுமலை வழியாக இயக்கப்பட்டு வரும் இந்த ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. அதிலும் தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் இந்த ரெயில்களில் பயணிகள் கூட்டம் முன்பை விட அதிகமாக உள்ளது. இதில் கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, மதுரை, கோவில்பட்டி, நெல்லை வழியாக திருச்செந்தூர் செல்லும் ரெயிலில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் கூட்டம் மிக அதிகமாக உள்ளது.
அதன்படி நேற்று முன்தினம் பாலக்காட்டில் இருந்து வந்த ரெயில் காலை 7.15மணிக்கு உடுமலை ரெயில் நிலையத்திற்கு வந்தது. அந்த ரெயில் உடுமலை ரெயில் நிலையத்திற்கு வரும்போதே ரெயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
அதனால், உடுமலை ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் ஏறிய பயணிகள் பலர் உட்காருவதற்கு இடம் கிடைக்காமல் நின்று கொண்டு சென்றனர். அவர்கள் பழனி உள்ளிட்ட அடுத்தடுத்த ரெயில் நிலையங்களில் பயணிகள் இறங்கும் போது தங்களுக்கு உட்காருவதற்கு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்றனர். இந்த நிலையில்திருச்செந்தூர் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்களை இயக்கவேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.